எவையெல்லாம் இங்கு இடம் பெறும்?

தெரியாத உணவுப் பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் எவற்றைப் பற்றியெல்லாம் இங்கு கேள்விகள் கேட்கலாம்?

நேயர்கள் தாங்கள் அறிந்திராத உணவுப் பொருட்களைப் பற்றி இங்கு கேள்விகள் எழுப்பலாம். அறுசுவையில் இடம்பெறும் குறிப்புகளில் உள்ள தேவையானப் பொருட்களில் சிலப் பொருட்களின் பெயர்கள் நீங்கள் கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்த கேள்விகளை இங்கே பதியலாம்.

சிலப் பொருட்களின் பெயர்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். குறிப்புகள் கொடுப்பவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பகுதியில் வழக்கில் என்ன பெயர் உள்ளதோ அதனைத்தான் பயன்படுத்துவர். அந்தப் பகுதியைச் சேராதவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் போக வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இந்த பகுதி மிகவும் உதவியாய் இருக்கும்.

ஹாய் எவ்ரிபடி
எனக்கு பானிபூரில் சிறிய பூரிக்களை எப்படி செய்வது என்று சொல்லவும்

உப்பில்லா பண்டம் குப்பையிலே

"hingpowder" என்பது என்ன?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நலமா? hing powder என்பது பெருங்காயத்தூள் ஆகும்...
நன்றி...

நன்றி...

Thank You Mrs.VaniRamesh.
please clear my doubt
அவரை கொட்டையும் மொச்சையும் ஒன்றா?
அவரை கொட்டை ரெசிபி ஏதாவது சொல்லுங்கள்.

நன்றி
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அவரை கொட்டையும் மொச்சையும் ஒன்றல்ல...அவரை கொடியில் காய்க்கும்...மொச்சை செடியில் காய்க்கும்...
அவரை - Garden Lab Lab
மொச்சை - Field Lab Lab

அவரைக்காய் உபயோகித்து நாம் செய்யும் ரெசிபி போலவே அவரை கொட்டை உபயோகித்தும் செய்யலாம்...
சுண்டல் செய்வது போலவும் செய்யலாம்(அவரை கொட்டையை வேகவைக்காமல் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துவிட்டு அதில் அவரைக்கொட்டையை போட்டு சிம்மில் சிறிது நேரம் வேகவிட்டு, தேவையான அளவு உப்பு தூவிவிட்டு ஓரிரு நிமிடம் வதக்கிவிட்டு, கொத்துமல்லி தூவி செய்யலாம்)...

நன்றி...

நன்றி...

Thank U Madam

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்