அரட்டை இதுதாங்க வாங்க பாகம் 71

எல்லோரும் அரட்டையை இங்கே தொடருங்க

அப்ரா இப்ப எப்படி இருக்காங்க? சாப்பாடு குடுக்கறீங்களா?

சவுதி செல்வி

தனீ எப்படி இருக்கீங்க அப்பாடா எப்படா வருவீங்க,எப்ப வேற அரட்டை பகுதி ஆரம்பிக்கும்னு பார்த்துட்டு இருந்தேன். நான் ஆரம்பிக்கலாம்னு பார்த்துட்டு இருந்தேன்...சரி நீங்க வந்தா யாரது நமக்கு போட்டியா வந்திருக்காங்கனு,நினைச்சுக்குவீனனுதான் ஆரம்பிக்கலை:)

சவுதி செல்வி எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?சமைத்துக்கொண்டு இருக்கிறேன்.பிறகுவருகிறேன்.
அடிக்கடி எரர் வருது.அதனால் பதிவு போடமுடிவதில்லை.

சவுதி செல்வி

ஹாய் செல்வி எப்படி இருக்கீங்க. பிள்ளைகள் நலமா? அப்ரா இப்போதான்ம்ப்பா கொஞ்சம் சாப்பிட ஆரம்பிச்சுருக்கா.

கவி நீங்களே த்ரெட் போட்டுருக்கலாம். நீங்க போட்டுருந்த்தீங்கனா இந்நேரம் இதில் பதிவு போட்டுருப்பேன். இதில் பதிவு போட காலையில் இருந்து முயற்சி பண்ணினேன். சரி ஒரு இழை ஆரபித்து போடலாம்னு ஓபன் பண்ணினேன். அதில் ரிப்ளே போடுவதற்குள் நெட் ஒர்க் எரர். இப்போதான் முடிந்தது. வேலை முடிந்ததா. ஷாம் குட்டி என்ன பண்ணுது

சுகன் என்னப்பா உங்களுக்கும் நெட் ஒர்க் எரரா. மீன் கொஞ்சம் சாப்பிட்டாப்பா அப்ரா. ஆனால் நல்ல சாப்பிட முடியல அவளால். சளி நல்ல இருக்கு அதனால் பிள்ளையால் சாப்பிட முடியல போல இருக்கு

சீதாம்மா, மேனு, வனி, உசேன், ஜலிலாக்கா, அதிரா, செல்விமா, மஹா, ப்ரபா, சோனியா, இமா, சந்தனா, கீதா, தாமரை எல்லோரும் நலமாப்பா எல்லோருக்கும் ஒரு ஹாய்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கவி, தனிஷா, செல்வி... நலமா?? தோழிகள் யாரெல்லாம் என்னை போன பகுதிகளில் விசாரிச்சீங்க??? எனக்கு தெரியல... அதனால் எல்லாருக்கும் ஹாய்... எல்லாரும் நலம்'னு நினைக்கிறேன். :) நான் இன்று சற்று நலமாகவே இருக்கேன். நேற்று முன் தினம் இரவு வெளியே போய் ஒரு ஐஸ் கிரீம் (3 ஸ்கூப்) சாப்பிட்டனா.. நேற்று முழுக்க தும்மல், தலை வலி... பின்ன இருக்காதா... இந்த குளிருல இரவு நேரத்தில் சாப்பிட்டா... ஆசை யாரை விட்டது. இன்று கொஞ்சம் தேவலை. இன்னைக்கும் வெளியே போவனே... ஐஸ்கிரீம் சாப்பிட. ;)

இமா... நலமா? நீங்க பதிவு போட்டிருக்கீங்க போல.... ஏன் ரொம்ப நாளா காணோம்??!!

மிசஸ் சேகர்... இமா... வெறும் ஆசிரியை இல்லை. அவங்க செய்வது சேவைன்னு தான் சொல்லனும்... அப்படி ஒரு சிறப்பான ஆசிரியை பணியில் இருக்காங்க. அவங்க எழுத்தை போலவே அவங்க குணம், மனம் இரண்டும் அழகு. சன்மானம் விஷயத்தில் எனக்கு கை குடுப்பது போல் தெரிந்தது... மிக்க நன்றி. டாமும் ஜெரியும் கை பிடிச்சு நடந்து போய் ஒன்னா உட்கார்ந்து சாபிடுவது போல் இருக்கு... ஆனா இந்த டாம் இருந்தாப்பல இருந்து ஜெரியை அடிச்சு புடும்... அப்பறம் வழக்கம் போல தொரத்திகிட்டே இருக்கும்... அந்த ஜெர்ரி நான் தான்... டாம் யாருன்னு நான் சொல்ல வேண்டாம்... ;) ஹிஹிஹீ.

உத்ரா.... தமிழ் வளர்த்த தாயே... என்ன ரொம்ப நாளைக்கு பின் தலையை காட்டியது போல் இருந்தது... மீண்டும் காணோமே... என்ன ஆச்சு? சுகம் தானே?!

இலா... எங்கப்பா போனீங்க?? என் படம் அனுப்பினனே... பார்த்து பயத்துல காய்ச்சல் ஏதும் வந்துடுச்சா??? ;) என்னாச்சு?? நலமா இருக்கீங்கன்னு வந்து ஒரு பதிவு போட்டுட்டா நாங்களாம் நிம்மதியா இருப்போமே... என்னடா காணோம்'னு மனசு உங்களை பற்றியே யோசிக்கிது இலா.

சோனியா... நலமா? உங்களுக்கு இருக்க எல்ல அக்காவையும் கேட்டீங்க... இந்த தோழியை கேக்கலயே.... நல்லா இருக்கீங்களா??!!

பிரபா, பிரதீபா... இருவரும் நலமா?

சுகன்யா... எங்க உங்க பதிவு கண்ணில் படல... வேறு ஏதும் பகுதியில் இருந்தீங்களா?? நலமா?

சாய் கீதா... என்னாச்சு? வரலயா இரண்டு நாளா?? அபி எப்படி இருக்கா?? வேலை அதிகமா?

சீதாலக்ஷ்மி... நல்லா இருக்கீங்களா??? என்னங்க இரண்டு நாளா சத்தமே இல்லை உங்க கிட்ட இருந்து.... நான் உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன்... பதிலே இல்லை. :(

அருண்... என்னை பற்றி ஒன்னு சொல்ல தோனுச்சு... சொல்றேன்... நான் கொஞ்ச நாள் யாருடைய பேச்சாவது அதிகமா கவனிக்க ஆரம்பிச்சா அந்த பேச்சோட சாயல் என்கிட்ட இருக்கும்... பல ஊர்கள் போனதால் கூட இந்த பழக்கம் இருக்கலாம். என் பதிவுகள் பல அதிரா'வின் சாயலில் இருக்கும், அதற்காக நான் அதிராவை கேளி செய்வதாக அர்த்தம் ஆகிவிடாது.... எனக்கு அவர் பேச்சும் அதில் சில வார்த்தைகளும் பிடிக்கும்.. பழகி விட்டது, என் பேச்சு வழக்கில் அதை பயன்படுத்துவேன். அவ்வளவே. நான் எதை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். எதையும் வேண்டுமென செய்யவில்லை... தவராக இருந்தால் மன்னிக்கவும். இனி அந்த வார்த்தைகள் தவறியும் வராது. உங்கள் பதிவை கண்ட நாள் முதல் எதை சொல்கிறார் என்று புரியாமல் தேடிய எனக்கு புரிந்த போது வேதனை தான் மிச்சம். அறுசுவையில் எல்லோரோடும் பிரெச்சனைகளை மறந்து சிரிக்கவே வருகிறேன், யாரையும் காயப்படுத்த அல்ல. :) உங்கள் மீது வருத்தமும் இல்லை... காரணம் உங்களுக்கு என்னை பற்றி புரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் ஒருவர் நம்மை தவறாக புரிந்து கொண்டால் விளக்கம் தர வேண்டியது அவசியம் ஆகிறதே. அதான் இந்த பதிவு.

ஜெயா.... நலமா??? குழந்தைங்க நல்லா இருக்காங்களா??

எல்லா தோழிகளும் நல்லா இருக்கீங்களா??? தனி தனியா பதிவு போட நேரம் இல்லை... குழந்தை கையில் அழுதுகிட்டே இருக்கா... நேரம் கிடைக்கும்போது வற்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா அக்கா இப்படி சொல்ரிங்க, நான் அப்படி செய்வேன்னா.அதான் பெயர் விட்டு போனவங்களையும் கேட்டு இருக்கேன்னே.அப்புரம் என்ன்.ஓகே எப்படி ஒருகிங்க. குட்டி பாப்பா எப்படி இருக்குது.பத்ரமா பாதுகோங்க,இனி எந்த் பதிவு போடலும் உங்க பெயர் முதலில் போதும்மா.

அன்பு தங்கை

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க? மழையா இருக்கும் போது ஐஸ்க்ரீமா? ஆனா அந்த குளிர்ல சாப்பிட நல்லா தான் இருக்கும். ஆனா உங்களுக்கு முடியலன பாப்பாவ யார் பார்த்துப்பாங்க ம். so no icecream. இனி ஐஸ்க்ரீம் சாப்பிட வேற போகனும்னு சொல்றீங்க அப்பறம் நீங்க எல்லாருக்கும் கொடுக்குற பனிஷ்மெண்ட நான் உங்களுக்கு கொடுப்பேன்.

சோனியா... இது சமத்து. இது வரை நான் உங்களுக்காக போட்ட பதிவில் இப்ப தான் முதல் முறையா பதில் வருது. :)

ஹரிகாயதிரி... நலமா? நீங்க சொன்னதை நான் ஒத்துக்கறேன். இன்னைக்கு பிரிஜ்ஜில் இருக்கும் கசட்டா மட்டும் சாப்பிட்டுக்கவா??? :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நல்லா இருக்கேன் வனி. ஓகே வனி போனா போகுது பொளச்சி போங்க இந்த கஸாட்டா மட்டும் தான் சாப்பிடனும் ஓகே. (மொறைக்கிறீங்களா என்னடா இது நம்ம ஐஸ்க்ரீம் சாப்பிட்ட இவகிட்ட பர்மிஷன் கேட்டவேண்டியதா இருக்கேன்னு) இது அன்பு கட்டளை அதனால் மீறக் கூடாது சொல்லிட்டேன் ஆமாம். யாழினி தூங்கியாச்சா இல்ல இன்னும் மடியில வச்சிகிட்டு தான் டைப் பண்றீங்களா? tablet எடுத்துக்கிட்டீங்களா இல்லையா?

ஹாய் தனிஷா எப்படி இருக்கீங்க? அப்ரா எப்படி இருக்காங்க? அப்ரா அப்பா கீழ விழுததா சொன்னீங்க சாரி பா அத கவனிக்கவே இல்ல அவங்களுக்கு இப்ப எப்படி இருக்கு. அப்ரா இப்ப சாப்பிடுறாளா? சுகன் சொன்ன மாதிரி மீன் கொடுத்தீங்களா? சளி இருந்தாலே சாப்பிட முடியாது பா.

அன்பு சகோதரிகள் அனைவருக்கும் மாலை வணக்கம்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்