thyroid பற்றி சொல்லுங்கள் தோழிகளே

நான் அறுசுவையில் சேர்ந்து 2 வாரங்கள் ஆகின்றது. இப்போது தான் பதிவு போட ஆரம்பித்துள்ளேன். எனக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. மருத்துவரிடம் சென்றோம். எனக்கு thyroid test செய்த போது எனக்கு hypothyroid இருப்பதாக சொன்னார். Normalஆக 0.270-4.20 mlU/l இருக்க வேண்டுமாம். ஆனால் எனக்கு 7.57 mlU/l இருக்கிறது. இதனால் என்ன பாதிப்பு இருக்கும் என்று சொல்லுங்கள் தோழிகளே. நான் மிகவும் குழம்பி போய் இருக்கிறேன். என்னுடன் திருமணம் ஆன எல்லோருக்கும் வலைகாப்பு நடந்து விட்டது. யாரை பார்த்தாலும் "என்ன விசேசமா" என்று தான் கேட்கிறார்கள். இதனால் நான் அதிகம் வீட்டை விட்டு வெளியே கூட செல்வதில்லை. இதை பற்றி தெரிந்த தோழிகள் என்னுடன் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வீற்கள் என்ற நம்பிக்கையுடன்

உங்கள் அன்பு தோழி

லக்ஷ்மி

தைராஇட் ப்ரச்சனை வந்தால் உடல் எடை கூடுவதும் மாதவிலக்கு ப்ரச்சனை வருவதுமாக இருக்கும் ஆனால் கருத்தரிக்க முடியாது என்று சொல்லிவிடமுடியாது..
தினசரி மருத்துவர் தரும் மாத்திரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால் ப்ரச்சனைகளும் மாறும் மற்றவர்கள் போலவே நீங்களும் சாதாரணமாக இருக்கலாம்..மருந்து எடுக்காமல் கவனிக்காமல் விட்டால் மட்டுமே இது பின்விளைவுகள் தரும்.
என் கசினுக்கு முதல் குழந்தை கருத்தரிப்பதற்கு சில மாதங்கள் முன்பு இது தெரிந்து ஒழுங்காக மாத்திரை சாப்பிட்டதும் சில மாதத்தில் கருத்தரித்தாள்.

நீங்கள் சொல்வது உண்மை தான். எனக்கு உடல் எடை கூடுவதும் மாதவிலக்கு ப்ரச்சனை வருவதுமாக தான் இருக்கிறது. மருத்துவர் சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். அதன் படி சாப்பிட்டு வருகிறேன். உங்கள் கசினை பற்றி சொன்னீர்கள். அது எனக்கு நல்ல ஆறுதலாக இருக்கிறது. நன்றி சகோதரி அவர்களே. உங்கள் பதிவுகளை பல முறை படித்து இருக்கிறேன். அறுசுவை தோழிகளுக்கு பல அறிய ஆலோசனைகளை கூரிய பெருமை உங்களை தான் சேறும். தொடரட்டும் உங்கள் பணி...

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

நன்றி லக்ஷ்மி..கூடவே இன்னொரு தகவல் கசினுக்கு ஒன்னில்ல மூனு குழந்தைக முதல் பிள்ளை தான் இப்படி டென்ஷனில் உருவானது பிறகெல்லாம் 1.5 வருட இடைவெளியில் குட்டி குட்டியா மூனு

அப்படியா... மிக்க மகிழ்ச்சி!!!
அவர்களை விசாரித்ததாக கூறவும்
எனக்காக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்

lakshmi

ஹாய் லக்ஷ்மி நலமாப்பா?

உங்கலுக்கு குழந்தை விரைவில் கிடைக்க நான் ஆண்டவை வேண்டிக் கொள்கிரேன்ப்பா.....

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் லக்ஷ்மி நலமாப்பா? தைராய்டு பயப்புடும் படியா பெரிய விஷயம் இல்லப்பா......

என் தோழிக்கு படிக்கும் போதே இருந்துதுப்பா.... கல்யாணம் ஆனவுடனே அழகா 2 பிள்ளைகள் பிறந்துட்டாங்கப்பா....

கரக்ட்டா மாத்திரி போட்டு லெவல் கரைக்டா இருந்தா கட்டாயம் குழந்தை உண்டுப்பா....

உங்கலுக்கு குழந்தை விரைவில் கிடைக்க நான் ஆண்டவை வேண்டிக் கொள்கிரேன்ப்பா.....

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

nalam nalam nalam...
enakkaga rendu time nalam visarichu irukinga.. romba nandri akka
aangilathil type panraen nu ninaikka vendam... yenna time illa...
unga pathil oru nalla thembai kudukudhu.. eppadiyavathu seekiram oru nalla seithi solraen
ungal prarthanaiku nanri

anbudan
lakshmi

lakshmi

லக்ஷ்மி,
உங்களுக்கு காலையில் பதில் போட்டேன், எரர் வந்தது விட்டுவிட்டேன். மனம் கேட்கவில்லை, அதனால் மீண்டும் வந்துள்ளேன்.

உங்களுக்கு ஹைபோ தைரோயிட் தானே?. இதைப்பற்றி அதிகம் கவலைகொள்ளவேண்டாம். சிலபேருக்கு இது இருப்பது தெரியாது, கண்டுபிடிக்கும்வரைதான் பிரச்சனை, கண்டுபிடித்துவிட்டால் மருந்து ஒழுங்காக எடுப்பதன்மூலம் கன்றோலுக்கு கொண்டு வந்திடலாம். கன்றோலில் இல்லாதிருக்கும்போது தான் குழந்தை தங்குவதில், இதனாலும் பிரச்சனைகள் வரும். இக் ஹைபோதைரோயிட் உடம்பில் கொழுப்பை அதிகமாக்கும், சில ஹோமோன்களை தடைப்பண்ணும்/ குழப்பிக்கொண்டிருக்கும் இதனால் கருத்தரிக்கும் வாய்ப்புக் குறையலாம். ஆனால் ஒழுங்காக மருந்தெடுக்கத் தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இப்போ மருந்து எடுக்கிறீங்கள்தானே? இனிமேல் கவலை வேண்டாம், 3 மாதங்களுக்கொருமுறை செக் பண்ணிக்கொள்ளுங்கள்.

இன்னுமொன்று நான் சொல்கிறேன், முடிந்தால் கடைப்பிடியுங்கள், கொஞ்சக் காலத்துக்கு(குழந்தை தங்கும் வரை) நீங்கள் அசைவம் உண்பவராயின் சைவமாக இருங்கள். நிறைய இலை வகைகள் உண்ணுங்கள். நெய் எடுக்க வேண்டாம். முடியாதெனில், இறைச்சி, முட்டை, தவிர்த்து சிறிய மீன் வகைகளை மட்டும் எடுத்து, அதிகம் மரக்கறிகளை எடுங்கள். இதிலும் நிறைய விஷயங்கள் தங்கியிருக்கிறது. வேறு ஏதும் கோழாறுகள் இல்லையெனில் இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமும் சீக்கிரத்தில் குழந்தை கிடைக்கும்,,,, கிடைக்க என் வாழ்த்துக்கள். வீணான கவலை வேண்டாம். கவலைப்பட்டு மனதை டென்ஷனாக்குவதும் கூடாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். லேட் ரிப்லெக்கு வருந்துகிறேன். எனக்காக சிரமம் பார்க்காமல் பதில் போட்டதற்கு நன்றி...
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். என் உடல் எடை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது... இப்போது மருந்து எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. நல்ல பலனை தரும் என்று நம்புகிறேன்.

இனிமேல் இறைச்சி, முட்டை உணவை தவிர்த்துக் கொள்கிறேன். இப்போது கூட ஒமேகா எக்ஸ்(0% கொலஸ்ட்ரால்) தான் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்... மீன் சேர்த்துக் கொண்டு தான் இருக்கேன்..
இனிமேல் கீரை நிறைய சேர்த்துக் கொள்கிறேன்...

உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக இருக்கிறது... உங்கள்
என்ற கருத்து மிகவும் பிரமாதம்

அன்புடன்,
லக்ஷ்மி

lakshmi

குழந்தையின்மைக்கு நிச்சய தீர்வு…
நாட்கனக்கில் மருந்து உட்கொல்லத் தேவை இல்லை, ஆயிரக்கனக்கில் செலவு செய்யத் தேவை இல்லை.5 நாள்,15 வேலை மருந்து, RS,900/ ONLY (MONEY BACK GARENTY)
முதன்மையாக, சிகிச்சை மேற்கொள்ளு முன், விரிவான துயரர் ஆய்வு (Case taking), மாதவிடாய் முறைகள், முதல் மாதவிடாய், உடலுறவில் நாட்டம், நாட்டமின்மை, உடலுறவின் போது வலி?, உடலுறவு கொள்ளும்முறைகள், நாட்கள், நேரங்கள். எல்லாம் சேகரித்துக் கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கப் படுகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல் உணவு முறை உட்பட தம்பதியருக்கு தக்க ஆலோ சனைகளும் சேர்த்து வழங்கப்படுகிறது.அப்பொழுதுதான் குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வுகாணமுடியும்…
தொடர்புகொள்ள: Kasthuri natural herbal research center,
Thiruvannamalai, cell: 09952151652, 07200126522,
E-mail: irpds_2004@yahoo.com, kasthuriexport@gmai

மேலும் சில பதிவுகள்