ஓடிவாங்க! ஓடிவாங்க! யாரோ புதுசா ஒருத்தர் அரட்டை 72 ஆரம்பிச்சிருக்காங்க!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
நலமா? என்னை விசாரித்த அனைவருக்கும் ஒரு சந்தோஷமான ஹாய்!
செல்விக்கா, உங்க செல்லப்பெண் நல்ல படியா வந்து சேர்ந்தது ரொம்ப சந்தோஷம். மெயில் அனுப்பியது பார்த்தீர்களா?
உமா,
செல்விக்கா பாவம், அவங்க பெண் டெலிவரி முடியும்வரையாவது அவங்க முதுகை விட்டு இறங்கி முருங்கை மரத்தில் தொங்குங்க!
மறக்காம அர்ஜுன் குட்டியை அம்மாகிட்ட விட்டுட்டு.
மேனு,
மெயில் அனுப்பினேன் கிடைத்ததா? ஷிவானிக்குட்டி நலமா?
தாமரை,
சந்தோஷ் நலமா? இங்கு பசங்களுக்கு ஸ்கூல் மறுபடியும் ஆரம்பம் ஆய்டிச்சு.
அத்தை, மாமா இருப்பதால் என்னால் அடிக்கடி வந்து ரெஃப்ரெஷ் பண்ணமுடியலை/.அவங்க ளுக்கு அறுசுவை பற்றி எதுவும் தெரியாது.
ஹாய் ஜெயா,
ஹரி, ராதை நலமா? பசங்கலூக்கு எக்ஸாம் முடிந்ததா?
சுகன்யா,
நீங்களும், டெய்லி நீங்க கட்ற சேலையும் நலமா? தேஜுக்குட்டி ஸ்கூல் ஆரம்பம் ஆயாச்சா?
உத்ரா,
ஜெயா உங்களை சின்ன பொண்ணுன்னு சொல்லி, சொல்லி எனக்கு நீங்க சின்ன பெண்ணாவே கற்பனையில் வர்றீங்க. யாராவது சின்ன பொண்ணுன்னு சொன்னா சந்தோசப்படணூம்.
ப்ரபாதாமு,
நலமா? இப்ப உங்க கணவருக்கு எப்பிடி இருக்கு? மறுபடியும் டாக்டர்கிட்ட போனீங்களா? நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் ஆகி, கெட்ட கொலஸ்ட்ரால் குறைஞ்சிருக்கா? கவனமா சாப்பாடு கொடுங்க.
சவூதி செல்வி
இப்பதான் உங்களுக்கு மெயில் அனுப்பிட்டு வர்றேன்.மைதிலி, சஞ்சய் நலமா? சஞ்சையை எப்ப ஸ்கூல் போட்றீங்க?
தனிஷா,
அஃப்ராகுட்டி நலமா? உங்க பதிவுகள் பல இடங்களீல் பார்க்க முடிகிறது. ரொம்ப சந்தோஷம். இங்கு இன்னும் க்ளைமேட் ஒருமாதிரியாத்தா இருக்கு. நேற்றிலிருந்துதான் கொஞ்சம் சூரிய பகவான் எட்டி பார்க்கிறார்.
மிஸஸ்.ஹூசைன்,
நீங்களூம், உங்க மகன் ஹூசைன் நலமா? என் பெயரிலும் இன்ஸ்யூரன்ஸ் எடுப்பது பற்றி என் கணவரிடம் பேசிட்டேன். அவரும் ஒத்துக்கிட்டார்.
வனிதா,
யாழினிக்குட்டி நலமா? சிரியா பாகம் - 3 இன்னும் படிக்கலை. இனிதான் படிக்கணும். போட்டோஸும் பாகம் - 2ல் பார்க்க நேரம் இல்லை. பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன்.
தாமரை,
சந்தோஷ்குட்டி நலமா? அத்தை, மாமா இருப்பதால் அர்த்த ராத்திரியில் அரட்டை அடிக்க வர முடியலை. செப்டம்பர் மாசம் வரட்டும். ராக்கோழியா வந்திட்றேன்.
ஜலீலா,
நலமா?பெரியம்மா ஆகப்போறீங்களா? வாழ்த்துக்கள்! தக்காளியை பார்த்தாலே அது உங்க அல்வாவா என் கன்ணுக்கு தெரியுது.
பெரியம்மா என்றால் எப்பிடி? தங்கைக்கு குழந்தையா? கணவரின் தம்பி மனைவியா? எந்த முறையில்? முடிந்தால் சொல்லவும்.
இலா,
நலமா? ஒருவழியா ரொம்ப நாளைக்கு அப்பறம் ஹைஹீல்ஸ் வாங்கியாச்சு. ஆனா ஏனோ போட்டுட்டு நடக்க ஒருமாதிரியா இருக்கு. ரொம்ப நாள் ஆனதால் இருக்கும் போல.
இமா,
நலமா?அரட்டைப்பக்கம் வருவீங்களான்னு தெரியலை. உங்க ஸ்டூடண்ஸ் நலமா?
கவி. எஸ்!
கவி, நலமா? உங்க எழுத்துக்களில் இப்பல்லாம் குறும்புத்தனம் கொப்புளிக்குது. ரொம்ப ஜாலியா இருக்கு படிக்கிறப்பவே, நான் அறுசுவைக்கு வரமுடியாட்டாலும் அப்பப்ப அனைவரது பதிவுகளையும் படிச்சிடுவேன்.சாம்குட்டி நலமா?
மஹா,
உங்களை கொஞ்சநாளா காணலியே? லீவ் போட்டுடீங்களா தெரியலை. யுவன் நலமா?
அதிரா,
நீங்களும், ரேணுவும் நலமா? இந்தமுறை சமைத்து அசத்தலாமில் கலந்துக்க முடியலை. ரொம்ப, ரொம்ப சாரி! கண்டிப்பா செப்டம்பர் மாசத்தில் இருந்து வந்திட்றேன்.
ஹரிகாயத்ரி,
நல்லாயிருக்கீங்களா? சில இடங்களீல் விசாரிச்சு இருந்தீங்க? ரொம்ப சந்தோஷம். நானும், குழந்தைகளும் நலம்.
வினு,
நலமா? மீராக்குட்டி நலமா?விமானப்பயணம் பற்றி சகோதரர். ஹைஸ் அவர்களின் பதிவுகளை படித்தீர்களா? நல்ல உபயோகமாய் இருக்கு.
அச்சச்சோ இவ்ளோ பெரிய பதிவா???
நானும் கஷ்டப்பட்டு
ஒரு பதிவை போடுவேன். அடுத்த நிமிடமே புதுசா பாகம் ஆரம்பிச்சு எல்லாரும் வாங்கன்னு நம்ம தனிஷா கூப்பிட்டா எல்லாரும் வாரி சுருட்டிட்டு அங்க ஓடிடுவாங்க. என் பதிவை யாராவது பாத்தாங்களா இல்லியானு கூட தெரியாது. அதான் இப்பிடி?
விசாரணையில் யார் பேராவது விட்டுபோயிருந்தால் மன்னிக்கவும்!

கீதா என்னப்பா உங்களை ரொம்ப நாளா காணோம். அபிகுட்டிக்கு சரியாகி விட்டதா. உங்க குரல் தூங்கி கொண்டிருந்த என் காதில் கேட்டு ஓடி வந்துட்டேன். அப்புறம் தனிஷாகூப்பிட்டா வருவீங்கனு சொல்லியிருக்கீங்க. யார் கூப்பிட்டாலும் வருவாங்க நம்ம தோழிங்க.

பாபு அண்ணாவின் பதிலை படிச்சி கொண்டு இருந்தேன் அறுசுவை அறிந்த த்ரெட்டில் இப்போதான் இதை பார்த்தேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கீங்க?

சஞ்சய் 2வது போறான்.அனைவரும் நலம்.யாரது ஓடியாங்க என்று போட்டிருக்காங்க என்று ஓடிவந்து பார்த்தால் நம்ம கீதாவாலு.

சவுதி செல்வி

ஹாய் சாய் கீதா வந்துட்டேன்.என்ன பா எல்லோரும் அதிரா ஸ்டைலில் ஓடியாங்கோ ஓடியாங்கோன்னு கூப்பிட ஆரப்பித்து விட்டீர்கள்.

எல்லாம் நலம். தக்காளி ஹல்வா என் கிராம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும், எனக்கும் பேவரிட் ஆகி விட்டது.

மாமியார் வீட்டில் அடிக்கடி விஷேஷங்களில் தக்காளி ஹல்வா செய்வார்கள்.
நிறைய பேர், சமையல் எல்லாம் ஆளுக்கொன்னா செய்து கொன்டு இருக்கும் போது என்னை தக்காளி ஹல்வா செய்ய சொன்னார்கள். மற்ற சமையல் வேலைக்கு எல்லாம் முடிந்த வரை கூட மாட அரிந்து கொடுத்து விட்டு இத செய்தேன்.
வந்த சின்ன மாமியாரும், மற்றவர்களும்
சாப்பிட்டவர்கள் எல்லோரும் துபாய் தக்காளி ஹல்வா ஏதே ஒரு விஃபெரெண்டான டேஸ்டில் இருக்கு
எல்லாம் வந்து விட்டார்கல் இதில் என்ன சேர்த்தாய் என்று.
நான் சொன்னேன்,நட்ஸ் வகைகளையும் பெருசு பெருசா போட கூடாது, பாதம் கர கரப்பாக பொடித்து போட்டேன். அது ஒரு தனி சுவை கொடுத்தது , இன்னும் ஒன்று முந்திரி பாதம் பிஸ்தாவை பொடிப்பொடியாக அரிந்து நெய்யில் வருத்து கடைசியாக சேர்த்தேன்,
சுவை சூப்பரோ சூப்பர், எப்படியும் 40 பேர் சாப்பிட்டு இருபார்கள் ஒன்றும் மிஞ்சலை தக்காளியை கண்டாலே என் பையன் அதை தனியா எடுத்து எடுத்து வைப்பான் ஆகைஅயல் எல்லாத்தையும் அரைத்து உள்ளே தள்ளிவிடுவது, தக்காளி ரசம், தக்காளி சார், தக்காளி சூப், சாம்பாரிலும் அரிஅத்தே ஊற்றிடுவேன்.

எப்ப சாஇ கீதா அடுத்த முறை தப்பி தவறி கூட தக்காளின்னு பேச்சை எடுக்க மாடீர்கள் என்று நினைக்கிறேன். பினாடியே ப்ரிய கதையெல்லாம் வந்து விடும், இன்னும் இருக்கு அபப்ரம் ரொம்பவே போரடித்து விடுவேன்.

ஜலீலா

Jaleelakamal

உமா அர்ஜூன் எப்படி இருக்கார். இது என்ன புதுகதை மேனுவும், தாமரையும் சம்பந்தி ஆனகதைதான் தெரியும். நீங்களும் ஜெயாவும் எப்படி. சீக்கிரம் சொல்லுங்க. ஹேமா சொல்வது போல் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.

சந்தனா உங்களைப் பத்தி சொல்லுங்கப்பா. உங்களை மிஸஸ் சேகர்னு கூப்பிடுவத்தை விட சந்தனானு கூப்பிடூவதுதான் ரொம்ப நெருங்கி வந்துட்ட மாதிரி இருக்கு (உற்ற தோழியை அழைப்பது போல்). அப்புறம் கவிக்கு கொடுத்த் பதிலை படிச்சேன் சூப்பர். அந்த த்ரெட்டில் இன்னும் கவி பார்க்கலனு நினைக்கிறேன். கேர்புல்லா இருங்க

வானதி நல்லாயிருக்கோம்ப்பா. இப்போ அவளுக்கு முழுவதும் சரியாகி விட்டது. சந்தோஷம்ப்பா. அப்புறம் உங்களை அறுவை அறிந்த த்ரெட்டில் பதிவு போட சொல்லியிருக்கேன் பார்க்கலியா நீங்க. உங்க பதிவையும் போடுங்க

சுகன்யா என்னப்பா பிஸியா அல்லது உங்களுக்கு நெட் ப்ராப்ளமா. உங்களை எத்தனைநாள் தேடுகிறேன்

பரபா, தங்கை சோனியா, கவி, மேனு, தாமரை, ஜெயா, வனி எல்லோருக்கும் ஒரு ஹாய்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய்
தனிஷா, அபிக்கு சரியாய்டுச்சு.ஆமா, கஷ்டப்பட்டு ஒரு பதிவு போட்டு வந்தா மறுபடியும் புது பாகம் ஆரம்பம் ஆய்டுது. பழைய பதிவுகளை பார்ப்பார்களா தெரியலை. அதான் கஷ்டப்பட்டு நானே 72 ஆரம்பிச்சிட்டேன். எப்பிடியோ உங்களுக்கு வேலை மிச்சம் இல்லியா?
சவுதி செல்வி,
ஃப்ரீயா இருப்பீங்க போல தெரியுது. சஞ்சய் 2 வது போறாரா? ரொம்ப சந்தோஷம்.நீங்க கேட்ட மெயில் ஐடி அனுப்பியிருக்கேன்.
ஜலீலா,
சும்மா போட்றதைவிட ஓடிவாங்கன்னு கூப்பிட்றப்ப இருக்க சந்தோஷமே தனி,படிக்கிறப்பவே உற்சாகம் எல்லாருக்கும் வந்திடும்.பார்தீங்களா, தூங்கிட்டிருந்த தனிஷாகூட உற்சாகமாய் ஓடி வந்திட்டாங்க.
தக்காளி அல்வா ரெஸிப்பி சூப்பர். ஆனா, நான் கேட்ட பெரியம்மா போஸ்ட் பற்றி சொல்லலை.பரவாயில்லை. நேரம் இருக்கப்ப சொல்லுங்க.இல்ல, அதுக்கு பின்னாடியும் பெரிய கதை இருக்கா, நேரம் இல்லேன்னு விட்டுடீங்களா?

நான் நல்லா இருக்கேன் கீதா அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? அபி எப்படி இருக்கா? அத்தை மாமா நல்லா இருக்காங்களா? என்ன சமையல் எல்லாம் வெரைட்டியா செய்து தர்றீங்களா அக்கா அவங்களுக்கு. அபிக்கு உடம்புக்கு பரவாயீல்லையா இப்போ? விக்னேஷ் எப்படி இருக்காரு?
தனிஷா நான் நலம் நீங்க நலமா? குட்டி அப்ரா எப்படி இருக்காங்க? சாப்பிடுறாங்களா? சேட்டை ஆரம்பம் ஆகியாச்சா? தனி சிங்கார சென்னையில் விசேஷம் எதுவும் இல்லை வெயில் தான் நல்லா பல்ல காமிச்சுகிட்டு அடிக்குது. தாங்கல வீட்டில் இருக்கிறதுனால எதோ கொஞ்சம் பரவாயில்லை. வெளியில் போறவங்களுக்கு தான் தெரியும் அதன் அவஸ்தை அதுவும் இந்த ஆபிஸ் போறவங்களுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டம் ரொம்பவே பாவம். சம்மர் முடியும் வரை அப்படி தான்.
உமா என்னது டூவா அட பாவமே, நான் தான் உங்கள அரட்டை த்ரெட் 71ல்(61 - 70) விசாரிச்சு கேட்டு இருக்கேனே நீங்க பார்க்கலயா. அர்ஜூன் அம்மா இது எல்லாம் கொஞ்சம் டூ மச்சு பா நீங்க நிறைய கேரட் சாப்பிடனும் தெரியுதா. மேல இருக்குற போஸ்டிங்க படிக்காமல் தான என் கூட டூ விட்டீங்க எனக்கு தெரியும்.

ஹாய் உமா!
எப்பிடியிருக்கீங்க? அர்ஜூன்குட்டி நலமா? நீங்க மேத்ஸ் டீச்சர்னு தெரியும். ஆனா அடிப்பீங்கன்னு தெரியாது.
தெரிஞ்சிருந்தா முருங்கைமரம் பற்றி பேசாமல் இருந்திருப்பேன். உங்க ஊர் எதுன்னு தெரியலை. (இந்தியா வர்றப்ப அந்த ஏரியாப்பக்கம் வராம தப்பிக்கத்தான்)
குழந்தை வந்திட்டாலே நாம ராத்திரி தூக்கத்தை தியாகம் பண்ணிடனும்.சில வருடங்களுக்கு இந்த நிலை நீடிக்க்கும்.
அப்பறம், சரியாகிடுமான்னு கேட்காதீங்க,
அடுத்த குழந்தைக்கு கண்விழிக்கனும்.அது, ஏற்கெனவே அனுபவம் இருப்பதால் ரொம்ப கக்ஷ்டமா தோணாது.
எனக்கு என் அம்மாமேல் ரொம்ப பாசம் இருந்தது. என் குழந்தைகள் வந்தபிறகு அந்த பாசம் பல ஆயிரம் மடங்கு அதிகம் ஆய்டிச்சு. அவர்களும் இப்பிடிதானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள்னு தோணுது!

எல்லாரும் நலமா(செல்விமா டுயூட்டிய இப்ப நான் எடுத்துக்கிட்டேன், அவங்க திரும்ப வந்ததும்,அவங்ககிட்டையே திரும்ப கொடுத்தறேன்...)

ஹாய் லஷ்மி வந்தவுடனேவா என்கிட்ட.....:)
அப்புறம் என்ன பற்றி எங்க ஊர்ல வந்து கேட்டு பாருங்க....யாருக்குமே தெரியாது,ஏன்னா நான் ரொம்ப அமைதியான பொண்ணு,அதனால இருக்கற இடம் தெரியாது:)

சந்தனா \\ சில விஷயங்கள எப்பவுமே பண்ணிக்கிட்டு இருப்பதால அது செய்யரோம்ன்ர உணர்வே இருக்காது.\\ அந்த அளவுக்கு எல்லாரையும் ஓட்டுவீங்களா:) இந்த விளக்கம் போதாது:)

அப்புற‌ம் என்னை ப‌த்தி த‌னிஷாகிட்ட‌ கேட்டிருந்தீங்க‌ ,த‌னிஷாகிட்ட‌ கேட்காதிங்க‌ அவ‌ங்க‌ எப்பையும் என்னை ப‌த்தி பொய்தான் சொல்லுவாங்க‌ என்னை ப‌த்தி நானே சொல்லக்கூடாது,இருந்தாலும் வேண்டாத‌ வ‌த‌ந்திக‌ள் ப‌ர‌வாம‌ல் இருக்க‌ நானே சொல்றேன் என்னைப்ப‌த்தி..நான், அன்பான‌, அட‌க்க‌மான‌, ப‌ண்பான‌,ப‌ணிவான பொண்ணு:)
பி.கு.இது த‌னிஷாவுக்கு ம‌ட்டும்,த‌னீ நீங்க‌தான் என் செல்ல‌ம்.ஹி ஹி.

காயத்ரி சாம் தூங்கும்போது நான் ஃப்ரீயோ ஃப்ரீ.

தனீ வர வர உங்க குசும்பு தாங்கவே முடியலையே,என்னை பத்தி எல்லார்கிட்டையும் தப்பு தப்பா சொல்றீங்க, நீங்க சொல்றத யாரும் நம்ப மாட்டாங்க, ஏன்னா அறுசுவையில வரவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.அப்புற‌ம் இது உங்க‌ளுக்கே நியாய‌மா இருக்கா? நானெங்க‌ புதுசா வ‌ந்த‌வ‌ங்க‌ளை க‌லாச்சேன் அவ‌ங்க‌தான் என்னை... நான் அறுசுவையோட‌ அருமை பெருமைய‌த்தானே சொன்னேன்:( sooooooo bad.
உமா நீங்க‌ளும் ஜெய‌ல‌ஷ்மியும் ச‌ம்ம‌ந்திங்க‌ளா எப்ப‌டி? அதுக்குள்ள‌ அடுத்த‌ பிளானா:)உமா யாஹூ மெசஞ்சர் ஓப்பன் பன்றதேயில்லையா?அதுசரி உங்களுக்கு தொங்கவே நேரம் பத்தாது இதுல எங்க:)

வான‌தி உங்க‌ ந‌ல‌த்தை அறிந்து ச‌ந்தோஷ‌ம்,சாம் இப்ப‌தான் எல்லா பொருளோட‌ முத‌ல் எழுத்தை ம‌ட்டும் சொல்ல‌ ஆர‌ம்பிச்சிருக்கிறார்.

பூஜா நீங்க ந‌ல‌மா இருப்ப‌தை அறிந்து ம‌கிழ்ச்சி.

பிர‌பா நாங்க‌ ந‌ல‌ம்.

சாய்கீதா ஒடியாங்க‌ யாரோ அர‌ட்டை ஆரம்பிச்சிருக்காங்க‌ சொல்லியிருக்கீங்க‌,உங்க‌ளுக்கு நீங்க‌ளே யாரோவாயிட்டிங்க‌. அபியோட‌ ந‌ல‌த்தை அறிந்து ம‌கிழ்ச்சி(இப்ப‌டிதானே செல்விமா எழுதுவாங்க‌)அதென்ன‌ தாம‌ரைய‌ ம‌ட்டும் 2 த‌ட‌வை விசாரிச்சிருக்கீங்க‌:)

ஜ‌லீல‌க்கா உங்க‌ த‌க்க‌ளி அல்வா மேட்ட‌ர் சூப்ப‌ர்.

மேன‌கா எப்ப‌டி இருக்கீங்க‌.
வ‌னிதா உட‌ம்பு இப்ப‌ ப‌ர‌வாயில்லையா?
சீத‌ல‌ஷ்மி மேட‌ம் எப்ப‌டி இருக்கீங்க‌.
ஸாதிகா மேட‌ம் உங்க‌ளுக்கு க‌லாய்க்க‌ இங்க‌ நிறைய‌ ஆள் இருக்காங்க‌, வ‌ந்து இங்க‌ க‌லாய்ங்க‌,பாவ‌ம் செல்விமாவை விட்டிடுங்க‌.

செல்விமா உங்க‌ பொண்ணு ந‌ல்ல‌ ப‌டியா வ‌ந்து சேர்ந்த‌து ம‌கிழ்ச்சி,ந‌ல்லா க‌வ‌னிச்சுக்கோங்க‌(உங்க‌கிட்ட‌ அதை சொல்ல‌ணுமா).

சுக‌ன்யா,இலா வாங்க‌ நீங்க‌ இல்லாம‌ என்னொவா மாதிரி இருக்கு.
விடுப‌ட்ட‌ அனைவ‌ருக்கும் ஒரு ஹாய்.

வாங்க வாங்க... சாய் கீதா வாங்க... ஜலீலா சொன்ன மாதிரி நான் கூட அதிரா வாலுன்னு நினைச்சு வந்தேன்... பார்த்தா இது சின்ன வாலு நம்ம சாய் கீதா.. ;) ஹிஹிஹீ. யாழினி நலம். நானும் நலம். என்ன பிசியா மேடம்? எங்களை எல்லாம் கொஞ்சம் மறந்துட்ட மாதிரி தெரியுது?? பொண்ணு நல்லா இருக்களா??

கவி... நலமா?? சாம் எப்படி இருக்கான்? எங்க இப்போலாம் என்னை ஓட்ட நேரம் இல்லை போலும்?? ;)

ஜலீலா... நல்லா இருக்கீங்களா?? எதாச்சும் ஒரு சிம்பில் சூப்பர் முட்டை ரெசிப்பி சொல்லுங்கோ ப்ளீஸ். நாளைக்கு ஒரு லன்ச் இருக்கு.. அதுக்கு செய்ய தான். :)

மிசஸ் சேகர் நலமா?? என்னை எங்கயோ வாலை பிடிச்சிகிட்டே வந்து ஓட்டிட்டு போன மாதிரி இருக்கு.... ;) ஹிஹிஹிஹீ.... நான் பதிவு போட்டாலே அங்க நீங்க அடுத்த பதிவு போட்டு இருக்கீங்களான்னு தான் பார்க்கிறேன் இப்பலாம்.

தனிஷா... குழந்தை நலமா? இப்போ வழக்கம்போல சேட்டை, வழக்கம் போல சாப்படு எல்லாம் சரியா ஆயிடுச்சா??

சீதாலக்ஷ்மி... நலமா?? எங்க உங்க பதிவுகள் கண்ணில் படல?? பிசியா?? வாங்க இங்க... நாங்களாம் தேடுறோம்ல.

உமாராஜ்.... பையன் எப்படி இருக்கான்? நீங்க சொன்ன மாதிரி தான் என் பொண்ணும் பார்க்கறா.... சில நேரத்தில் அடி கூட வாங்கறேன் அவகிட்ட. :( ஆமா... உங்களை நாங்க தேடலைன்னு யார் சொன்னது? கா விட அறுசுவையில் எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்குன்னு எத்தனை முறை சொல்றது?? இனி எப்பவும் பழம் மட்டும் தான். சரியா??

ஹரிகாயத்றி... நல்லா இருக்கீங்களா?? எனக்கு இப்போ உடம்பு பரவாயில்லை. நான் வெச்ச மிச்ச கசாட்டாவை என்னவர் தான் முழுங்கினார். :( என்னால அந்த சோகத்தை தாங்கவே முடியல.

பிரபா.... ரொம்ப நாளைக்கு பின் பார்ப்பது போல் இருக்கு.... நல்லா இருக்கீங்களா?? நாங்க நலம்.

பிரதீபா, சோனியா... எங்க சின்ன பிள்ளைகள்'னு ஏமாத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கீங்க அறுசுவைகுள்ள.... பாவம் நீங்க சொன்ன பொய்யை எல்லாரும் நம்பிட்டாங்க. ;) நல்லா இருக்கீங்களா??

செந்தமிழ் செல்வி.... யாரது.... எனக்கு நியாபகமே இல்லை.... உங்கள்க்கு யாருக்காது நியாபகம் இருக்கா??? லொல்லு தானே இதெல்லாம்??? பின்ன... நேற்று கூட அவங்க குறிப்பு ஒன்றை சமைச்சு வயிரு முட்ட தின்னேன்... எப்படி மறப்பேன்??? கேக்கலன்னு வருத்தம் வேற.... முதல்ல பொண்ணை பாருங்கோ.... நாங்க கேட்டதா சொன்னீங்களா?? நீங்க இதை எப்போ பார்க்கறீங்களோ... பார்த்தா சரி. :) கால் வீக்கத்துக்கு நடக்க சொல்லுங்கோ.... காலை தொங்க போட வேணாம்'னு சொல்லுங்கோ. சரியா போகும். ட்ராவல் பண்ணா 2 நாள் அப்படி இருக்கும், தானா சரியா போகும். எனக்கும் அப்படி தான் இருந்தது. கவலை படாதிங்க.

மேனகா... நல்லா இருக்கீங்களா?? பொண்ணு நலமா?

சந்தோ.. நலமா?? சந்தோ அம்மா நலமா?? ;)

ஸாதிகா, சவுதி செல்வி, தளிகா, ஆசியா, மகேஷ்வரி, அர்ச்சனா, அதிரா, மிசஸ் ஹுஸைன், உத்தமி, ஸ்ரீ ... எல்லாரும் நலமா?

உத்ரா, இலா.. எங்கப்பா உங்க இரண்டு பேரையும் பார்க்கவே முடியல??? ரொம்ப பிசியா? நல்லா இருக்கீங்களா?

இமா.... எங்க எப்பவாது வந்துகிட்டு இருந்தீங்க... இப்போ அதையும் காணோம்?? வாங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுகன்யா... யாராவது யாரையாவது வெளி நடப்பு செய்தா தான் வரனுமா??? வாங்க இங்க. நல்லா இருக்கீங்களான்னு சொல்லிட்டு போவீங்க.

தனு... நல்லா இருக்கீங்களா?? பதிவுகளை காணோமே... வருவதில்லையா இப்போ முன்னமாதிரி?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்