ஸ்பினாக் கீரைக்கறி

தேதி: April 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

ஸ்பினாக் இலைகள் - 250 கிராம்
புரோக்கோலி -100 கிராம்
பூண்டு - 3 பற்கள்
பால் - 75 மி.லி
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேசிக்காய் - 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
வெங்காயம் - 50 கிராம்
செத்தல் மிளகாய் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டு


 

புரோக்கோலி மற்றும் ஸ்பினாக் கீரை இலைகளைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
கீரைக்கறி செய்ய தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புரோக்கோலியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
அதன்மேல் ஸ்பினாக் இலைகளை நறுக்கிப் போட்டு, பூண்டையும் தோல் நீக்கி அதில் போடவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர்(25ml) ஊற்றி மூடி, மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
நன்கு வெந்ததும் கீழே இறக்கி வைத்து கீரை மசிக்கும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்.
நன்கு மசிந்ததும், பால், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பிரட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, சூடானதும் இறக்கி விடவும்.
வெங்காயம், பூண்டு, மிளகாய்வற்றல் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கீரைக்கறியின் மேல் கொட்டி அதில் தேசிக்காய் பிழிந்து பிரட்டி விடவும்.
சுவையான சத்தான கீரைக்கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா சின்ன குறிப்பாக இருந்தாலும் அதனை தெளிவாக் நீட்டாக செய்யும் விதம் ரொம்ப அருமை...அழகாக ஒரே அள்வில் நறுக்கி அடுக்கி செய்வது கண்டாகே சாப்பிட தோன்றும்

அதிரா இந்த குறிப்பை பார்த்ததும், இது அநேகமா நீங்க செய்ததாதான் இருக்கும்னு நினைச்சேன்,அதே மாதிரி நீங்க செய்ததுதான்,நல்ல அழகான சத்தான பொரியல் கொடுத்திருக்கீங்க நன்றி.

நன்றாக இருக்கின்றது… நான் இதுவரை புரோக்கலி மற்றும் ஸ்பினாச்சினை சேர்த்து சமைத்தது இல்லை…செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்…கண்டிப்பாக பால் ஊற்றி செய்ய வேண்டுமாக அல்லது அதற்கு பதில் தண்ணீர் சேர்க்கலாமா...
குறிப்பினை பார்க்கும் பொழுதே அதில் மி.லி அளவில் கொடுத்த உடனே நினைத்தேன் இது அதிராவின் குறிப்பு என்று..
அன்புடன்,
கீதா ஆச்சல்

ரொம்ப நன்றாக இருக்கு. நான் அவசியம் செய்துவிட்டு
சொல்கிறே. கீரையும், ப்ரோக்கலியும் உள்ளது, நாளை மறுநாள் செய்கிறேன். என் குட்டிஸுக்கு ப்ரோக்கலி ரொம்ப பிடிக்கும். ப்ரச்ண்டேசன் நன்றாக
இருக்கு.

நல்ல சத்தான உணவு.செய்முறையும் சூப்பர்.லைம் ஜூஸ் இதுவரை கீரை சமையலில் சேர்த்ததில்லை.செய்துபார்த்து விட்டு சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப நன்றாக இருக்கு
இது தெங்கப்பூ பொடமலும் செய்யலம நன்றாக இருக்குமா?

suga

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ரொம்ப நன்றாக இருக்கு
இது தெங்கப்பூ பொடமலும் செய்யலம நன்றாக இருக்குமா?

suga

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

தளிகா மிக்க நன்றி. உண்மைதான் நான்கூட பலதடவை நினைத்தேன், இது சிறிய குறிப்புத்தானே, படங்கள் நிறைய வராதே என்று, ஆனால் எடுக்க எடுக்க வந்துவிட்டது.

கவிஎஸ் மிக்க நன்றி. இந்தக் கீரை தண்ணி மாதிரி இப்படி ஏதாவது சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். சிலர் புரோக்கோலிக்குப் பதில் கத்தரிக்காயும் சேர்ப்பார்கள். ஆனால் இப்படி குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சத்து அதிகம்தானே.

கீதாச்சல் மிக்க நன்றி. பால் சேர்த்தால்தான் சுவை நன்றாக இருக்கும், விருப்பமில்லாவிட்டால், எதுவும் விடவேண்டாம் அப்படியே சாப்பிடுங்கள். தண்ணி சேர்த்தால் சுவையிருக்காது, நான் சொன்ன அளவுக்கு மேலே தண்ணி விட்டாலே சுவை போய் விடும், சிலர் கீரையை, தண்ணியோடு சேர்த்துப் போடுவார்கள் அப்படியென்றால், நான் குறிப்பிட்ட 25 மி.ல்ல் கூட சேர்க்க வேண்டாம். கறி இறுக்கமாக இருந்தால்தான் சாப்பிடலாம்.

விஜி மிக்க நன்றி. கீரை தனியாக சமைத்தால் சாப்பிட மாட்டார்கள் அதனால்தான் இப்படிச் செய்வேன்.

ஆசியா மிக்க நன்றி. நாங்கள் லைம் ஜூஸ் விடாமல் கீரை சமைத்ததில்லை. செய்து பாருங்கள். அளவின்படி/ சுவைத்துப்பார்த்து விடுங்கள், அதிகம் சேர்த்தாலும் சுவை மாறிவிடும்.

சுகா, தேங்காய்ப்பூ போடாமலும் செய்யலாம், சுவையைக் கூட்டவே இந்த தேங்காய்ப்பூ. அத்தோடு தண்ணியை உறிஞ்சி, கறியைப் பிரட்டலாக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இது ரொம்ப சுவையாக இருக்கு..பாலும் தேசிக்காயுமம் சேர்ந்தால் என்னவாகுமோ என்று நினைத்தேன் ஆனால் கடைசியில் நல்லதொரு பொரியலாக வந்துவிட்டது.தேசிக்காயும் 1 ஸ்பூன் தான் விட்டேன் இன்று ப்ரேக்ஃபாஸ்ட் ப்ரெட்டும் கீரை கறியும்

தளிகா சுவையாக இருந்தது எனக் கேட்க சந்தோஷமாக இருக்கு. இக்கறி, இந்த நேரம் நீங்கள் அடிக்கடி சாப்பிடுவது, உங்களுக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா ரொம்ப அருமையான பாலக் கீரை குறிப்பு,
ஆனால் பாலும் எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து விடாதா?

இங்கு வந்த நாள் முதல் பாலக் தான்.

இப்ப தான் எல்லாவகையான கீரைகலும் கிடைக்கிறது வல்லாரையை தவிர..

அது சாலட் செய்து சாப்பிட்டால் நல்ல ஞாபக சக்தி வருமா.
பெரியவருக்கு சின்ன வயதில் ஊரிலிருந்து கேட்டு விட்டு செய்து கொடுத்தேன்.
பிறகு விட்டாச்சு...

அடுத்த முறை வாங்கும் போது செய்து பார்க்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, இந்த ஸ்பினாஜ் கீரையைத்தான் பாலக்கிரை என்பீர்களா? நான் இவ்வளவு நாளும் என்னவோ ஏதோ என நினைத்துக்கொண்டிருந்தேன்.

பால் கொதித்தபின் தேசிக்காய் சேர்த்தால் திரையாது ஜலீலாக்கா. வல்லாரை ஞாபகசக்தியை அதிகப் படுத்தும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு இங்கு, இந்த ஸ்பினாஜ், சில சைனீஷ் கீரை தவிர வேறு கிடைப்பதில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா மெடம் உங்கள் கிரைகறி செய்து பர்தென் நல்ல சுவையக இருந்தது உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி..........

சுகா

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மிக்க நன்றி அதிரா மெடம்
உங்கள் கிரை கறி செய்துபார்த்தென் ரொம்ப நல்ல இருந்தது.

சுகா

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

hi
i tried ur recipe today,it turnedout really good.but for my taste level i add little chilly powder.
thanks.

சுகா மிக்க நன்றி.

ஜெயந்தி மிக்க நன்றி. இது குழந்தைகளுக்கும் கொடுக்கவே இப்படிச் செய்துள்ளேன். உறைப்பை விரும்புபவர்கள், கீரை அவியும்போது 2/3 பச்சை மிளகாய் போட்டு, மசித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

னான் இலங்கையை சேர்ந்தவள், உங்கள் இந்த்த குறிப்புக்கு னன்றி, உடனே செய்தேன் ,மிக அருமையாக இருந்தது,அவருக்கு னல்ல விருப்பமாய் இருந்தது,னான் இதுவரை இரண்டையும் தனியதான் செய்திருக்கிறன்,ஆனா இது னல்ல ருசியாக இருந்த்தது, உரில இருக்கிற அம்மாட்டையும் சொல்லினான்,

பூஜா, மிக்க நன்றி.
நீங்கள் சொல்வதைக் கேட்க சந்தோஷமாக இருக்கு. நானும் புதிதில், தனியே கீரையை சமைத்து சாப்பிடமுடியாமல் அவதிப்பட்டேன்... பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Today I tried keerai Kari it comes very tasty