போளி

தேதி: April 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

மைதா மாவு – ஒரு கப்
கடலை பருப்பு – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – 3
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
மஞ்சள் கலர் – சிறிதளவு(தேவையானால்)
நெய் – ஒரு மேசைக்கரண்டி + ஒரு மேசைக்கரண்டி


 

வெல்லத்தினை தூளக்கி கொள்ளவும். ஏலக்காயினை சர்க்கரையுடன் சேர்த்து பொடித்து வைக்கவும்.
கடலை பருப்பினை 15 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
கடலை பருப்பு நன்றாக வெந்த பிறகு தண்ணீரினை வடித்து சிறிது நேரம் காய விடவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் வெல்லத்தினை போட்டு 3 நிமிடம் வைத்திருக்கவும்.
தண்ணீர் வடித்து ஆற வைத்துள்ள கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற கூடாது) இந்த அரைத்த கடலை பருப்பை வெல்லத்துடன் சேர்த்து கிளறவும்.
அதில் சிறிது சிறிதாக நெய்(ஒரு மேசைக்கரண்டி) சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும். கடைசியில் பொடித்து வைத்துள்ள ஏலக்காயினை சேர்த்து கிளறவும்.
போளியின் உள்ளே வைக்கும் பூரணம் ரெடி.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் கலர் மற்றும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் செய்து வைத்திருக்கும் பூரணத்தை கையில் நெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதைப் போல் பிசைந்து வைத்த மைதா மாவிலும் உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடி மீண்டும் தேய்க்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் செய்து வைத்துள்ள போளியை போட்டு வேக விடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு மற்றொரு பக்கம் திருப்பி போட்டு சிறிது நெய் ஊற்றி வேக விடவும்.
சுவையான போளி ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு பிடித்தமான குறிப்பு.சூப்பரா இருக்கு கீதா.

வனக்கம் கீதா மெடம்
எனக்கு இந்த பொலி ரொம்ப பிடிக்கும் நிங்கள் இந்தா குறிப்பு குடுத்ததுக்கு நன்றி.கட்டயம் செய்து பார்கிறன்.

சுகா

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

போளி இரயில் பயணம் அப்ப மட்டும் தவறாமல் மாமா வாங்கி தருவாங்க,அது தாங்க கடம்பூர் போளி.கீதா நீங்க ஆல் இன் ஆல் ஆக இருக்கீங்களே.பாராட்டுக்கள்.நல்ல ப்ரசண்டேஷன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹய்.. போளி, என் பொண்ணுக்கு ரொம்ப பிடித்தது. எங்களுக்கும்தான்! செய்முறையை படித்துக்கொண்டே வரும்போதே இது உங்க குறிப்பாதான் இருக்குமென்று தோன்றியது, பார்த்தா உங்களோடதுதான்!.

எக்ஸலெண்ட் கீதா ஆச்சல்! ரொம்ப அழகா பிரஸெண்ட் பண்ணி இருக்கிங்க. பிள்ளைகளுக்கு இப்ப ஸ்பிரிங் ப்ரேக் விடுமுறை, அதனால் அவங்களுக்கு பிடித்தமாதிரி ஐயிட்டம்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாக செய்திட்டு வரேன். இப்ப உங்க போளி கரக்ட்டா வந்திருக்கு.. : ) இந்த வீக்கெண்ட் செய்திட வேண்டியதுதான். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எனக்கு இது ரொம்ம்ப இஷ்டம் ..ஆனால் ஒருக்க சமைச்சு அந்த பருப்பு வெளிய லேசா வர்ர மாதிரி இருந்தது..சிலர் ரொம்ப மெல்லியதா அதே சமயம் உள்ள கரெக்டா ஸ்டஃப் பன்னினமாதிரி செஞ்சிருப்பாங்க.அருமையான குறிப்பு

very nice recipe. i like this sweet very much. presentation also very good. Thanks.

Friendly

மிகவும் நன்றி மேனகா. செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி சுகா. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிரியம்.

என்னுடைய பொண்ணு வெறும் பூரணத்தினை மட்டுமே தனியாக எடுத்து சாப்பிடுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி சுகா. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிரியம்.

என்னுடைய பொண்ணு வெறும் பூரணத்தினை மட்டுமே தனியாக எடுத்து சாப்பிடுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி ஆசியா அக்கா. அது எல்லாம் ஒன்று இல்லை அக்கா..எதே எனக்கு தெரிந்த்த்தினை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி..
ஆமாம் இது மிகவும் சுவையாக இருக்கும்.. எங்கள் வீட்டிலும் அம்மா செய்வாங்க…
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி தளிகா.
நீங்கள் மாவினை பிசையும் பொழுது சிறிது தளர்வாக பிசையுங்கள். கையினால் வட்டம வடிவாக இழுக்க முடிய வேண்டும். அப்படி பிசைந்து கொள்ளுங்கள்..(சப்பாத்தி மாவு பத்த்திற்கு இல்லாமல் இன்னும் சிறிது தளர்வாக இருக்க வேண்டும்)
அதே போல பூரணத்தின் அளவும் மைதாமாவின் அளவும் ஒரே எலுமிச்சை அளவு எடுத்து கொண்டு செய்து பாருங்கள்.
நான் இதனை கையினாலேயே தான் தட்டினேன்..

மிகவும் பெரியதாக இல்லாமல் சிறிய சிறிய போளிகளாக செய்து பாருங்கள். கண்டிப்பாக பூரணம் வெளியில் வராது.. அதே போல மிகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிகவும் நன்றி ராஜி. செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா இதை உடனே செய்து விட்டேன் நன்றாக இருந்தது..ஒரு ஐடியா பன்னி பெரிய அப்பளம் போல் தேய்த்து உள்ளே பூரணம் வைத்து மடக்கி சோம்ஸ் ஷேப்பில் சுட்டேன் அதனால் உடையாமல் நல்ல வந்தது..இனிப்பு வாசனை எல்லாம் நல்லா இருந்தது.நன்றி.இதனை ஒப்பிட்டு என்றும் சொல்லுவார்கள் என நினைக்கிறேன்

பார்க்கும் போதே தெரியுது ரொம்ப சுவையா இருக்கும்னு. நான் ஒருதடவை வீட்டில் செய்து இருக்கேன். ஆனால் எனக்கும் பூரணம் வெளியே வந்தது. நீங்க தெளிவா கொடுத்திருக்கீங்க. செய்து பார்ப்பேன். நான் பஸ்ஸில், ட்ரெயினில் சாப்பிட்டு இருக்கேன். உங்க ஸ்டெப்பை படிக்கும் போது சாப்பிடும் ஆசை அதிகமாயிட்டு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சூப்பரா இருக்கு.எங்கள் ஊரில் இரண்டுவிதமாக செய்வோம்.இதுபோல்,மற்றும் மைதா மாவை கரைத்து அதில் பூரணத்தை முக்கி தோசைகல்லில் போட்டு கையால் தட்டி செய்வோம்.இரண்டு விதத்திலும் சூப்பராக இருக்கும். அடுத்தவாரம் செய்ய வேண்டும்.
நான் பூரணத்தைதான் விரும்பி சாப்பிடுவேன்.

தளிகா கோயம்புத்தூர் சைடில் ஒப்பிட்டு என்றுதான் சொல்வார்கள்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

போளி ரொம்ப நல்ல இருக்கு கீதா.
ஒரே கல்லில் நாலு போளியா? நிறைய பேருக்கு சுடுவதா இருந்தால் நிமிஷத்தில் முடிந்து விடும் வேலை ரொட்டி, பரோட்டா, தோசை, முட்டை ரொட்டி)
ஜலீலா

Jaleelakamal

ஹாய் கீதா அக்கா,

இன்று தமிழ் வருட பிறப்பு....இன்று நான் போளீ செய்தேன்....15 போளீ கு முதலில் மாவு செய்தேன்.....பூரணம் நன்றாக வந்தது...நான் ரொம்ப குஸி ஆயிட்டேன்....பிறகு 3 போளீ மட்டும் முதலில் செய்தேன்....ரொம்ப ரொம்ப நன்றாக வந்தது....அதுதான் gas off செய்திடு, முதலில் உங்களுக்கு கருத்து அணிபிட்டு,பிறகு போயி மிதீ போளீ ய செய்யலாம் என வந்தேன்....மிகவும் நன்றி......இது போல் பல குறிப்புகளை தருமாறு கேட்டுகொள்கிறேன்,.....சரி அக்கா...நான் போயீ மீதி போளீ யும் சுட்டு சாபிடுகிறேன்.....நீங்கள் கண்டிப்பாக ஒரு முறை சிங்கப்பூர் வரவும்.....வந்து என வீட்டில் தங்கவேண்டும்.......

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் கீதா நலமா இருக்கீங்களா? உங்க போளி குறிப்பு செய்துபார்த்தேன்.ரெம்ப நல்லா வந்திருக்கு.டேஸ்டியாகவும் இருந்தது. என் ஹஸ்ஸு ரெம்ப பிடித்த உணவு. படம் எடுத்து அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். உங்க குறிப்புக்கள் அனைத்தும் ரெம்ப ஈசி கீதா. ரெம்ப நன்றி.அன்புடன் அம்முலு.

தளிகா,
மிகவும் நன்றி.
ஒ அப்படியா..எனக்கு இதனுடைய வேறு பெயர் எனக்கு தெரியாது பா.
நீங்கள் எப்படி இருக்கிங்க? மகள் எப்படி இருக்காங்க?
அன்புடன்,
கீதா ஆச்சல்

தனிஷா,
மிகவும் நன்றி.
கண்டிப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை செய்துவிட்டால் அடிக்கடி செய்வோம். செய்வது மிகவும் சுலபம்.
நீங்கள் எப்படி இருக்கிங்க? குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க?
அன்புடன்,
கீதா ஆச்சல்

செல்வி,
மிகவும் நன்றி.
வித்தியசமாக இருக்கின்றது கண்டிப்பாக தோசைகல்லில் அது போல செய்து பார்க்க வேண்டும்.
இதுவரையில் மைதா மாவில் அப்படி கரைத்து எண்ணெயில் சுட்டு தான் எங்கள் வீட்டில் எடுப்போம்( அதனை சூழியன் என்று சொல்வார்கள்..)
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஜலிலா அக்கா,
மிகவும் நன்றி.
ஆமாம் பெரிய தோசை கல்லினை வைத்து இப்படி சுடுவதால் டைம் மிச்சம்..நமக்கும் நிறைய நேரம் சமையல் அறையில் நிற்பது போல இருக்காது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அன்புள்ள ஸ்ரீ,
மிகவும் நன்றி.
கேட்கவே மிகவும் சந்தோசம் பா. நன்றாக இருந்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதுவும் புத்தாண்டு அன்று செய்துவிட்டு உடனே பதில் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

கண்டிப்பாக இந்தியா வரும் பொழுது எனக்கும் சிங்கபூரினை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை. அப்படி வந்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன். அன்போடு அழைத்ததற்கு மிகவும் நன்றி.

இப்படி பல உறவுகளினை எனக்கு அறிமுகம் செய்கின்ற அருசுவையிற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அம்முலு,
மிகவும் நன்றி. எப்படி இருக்கிங்க? உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
படம் எடுத்து அனுப்பியதற்கு மிகவும் நன்றி. உங்கள் படத்தினை காண மிகவும் ஆவலாக இருக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அம்முலு அவர்கள் தயாரித்த போளியின் படம்

<img src="files/pictures/aa180.jpg" alt="picture" />

Hai Geetha,

I tried your receipe, came very well. Thanks for nice instructions.

Christy catherine.J
South Korea.

Christy catherine.J
PhD student,
POSTECH, Pohang,
South Korea.

அன்பு கீதா,
கடலைப்பருப்பை வேகவைக்க தேவை இல்லையா? வேகவைக்கனும்னா எத்தனை நிமிடம் வைக்கனும்?
வெல்லத்தை 3 நிமிடம் சூடுபடுத்தனுமா? வெல்லத்துடன் பருப்பை சேர்த்த பின் சூடுபடுத்தனுமா?
சந்தேகங்களை தீர்த்து வைப்பீங்களா?

நான் போளி குறிப்பு செய்துபார்த்தேன்.பூரனம் பயாசம் பொல நிர்துவிடது. என்ன செஇவது என்ரு தரியவில்லை யாராவது ஹெல்ப் பண்ணுக்கப்பா?

உண்மையாய் இரு.

போளி பூரணம் நீர்த்து விட்டால் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறினால் சுருண்டு வரும். பின்னர் போளி செய்யலாம். மிகவும் நீர்த்துப் போயிருந்தால் அதில் முதலில் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஓரளவு வற்றியதும் முதல் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பாயாசமாக்கி விடலாம் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிகவும் நன்றி கவி. உடன் பதில் தந்தமைக்கு.நான் செய்து பார்த்துவிட்டு பதில் தருகிரெஇன்.
அன்புடன்
வள்ளி.

உண்மையாய் இரு.

போளி பிடிக்காதவாளும் உண்டோ? நல்ல குறிப்பு. நன்றாக இருக்கு.