Fiber Rich Foods

i want to know some fiber rich foods.pls help me friends

எனக்கு தெரிந்ததை சொல்கிறேனே

நாம் உண்ணும் காய்கறிகள் (அதிலும் பச்சை நிறத்தவை), கீரைகள், மற்றும் பழங்கள் (உதாரணத்திற்கு, மாம்பலம் கொய்யா)
- இவைகளில் நிறைய fiber உண்டென்பது அனைவருக்கும் தெரியும்

மேலும் சில - தவிட்டுடன் கூடிய தானிய வகைகள்... இதனை கொண்டு செய்த பொருட்கள்:

உதாரணத்திற்கு, சப்பாத்தி, பூரி வகைகள் செய்வதற்க்கு மைதா மாவிற்கு பதில் முழு கோதுமை மாவு (whole wheat flour) உபயோகிக்கனும்

மேலும், bread வகைகள் வாங்கும் போது, நாம் வெள்ளை நிற bread தான் அதிகம் வாங்குவோம், அதற்க்கு பதிலாக பிரவுன் நிறத்துடைய whole wheat bread அல்லது multi grain bread வாங்கணும். கண்டிப்பாக இதன் taste வித்தியாசமாக தான் இருக்கும், ஆனால் பழகிவிட்டால் பிறகு சுவை பிடித்து விடும்...

அது மட்டுமில்லை, நூடுல்ஸ் வாங்கும் போது ஆட்டா நூடுல்ஸ், pasta வாங்கும் போது whole wheat pasta அல்லது multi grain pasta இப்படி எல்லாவற்றிலும் பார்த்து வாங்க வேண்டும்....

பாசிப்பருப்புக்கு பதில் தோலுடன் கூடிய பச்சைபருப்பு உபயோகிக்கலாம், தால் செய்யும் போது தோலுடன் கூடிய கருப்புளுந்து உபயோகிக்கலாம், அரிசி அரைத்து செய்யும் தோசைக்கு பதிலாக முழு பச்சைபருப்பு கொண்டு செய்யும் பெசரெட் தோசை செய்யலாம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....

மேலும் விவரமறிந்தவர்கள் வந்து உதவுங்க !!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் சந்தனா

ரொம்ப நன்றி. for ur fast reply நீங்க எங்கே இருகீங்க. நான் US ல இருகேன்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

நானும் இங்க தான் இருக்கேன்...

மேலும் நீங்க வாங்கக்கூடிய ஒவ்வொரு உணவிலும் பின்பக்கம் உள்ள label படித்து வாங்கவும்..... அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள். உதாரணத்திற்கு, cookies அல்லது cereal packet வாங்கினீர்கள் என்றால் -
ஒரு cookie சாப்பிட்டால் உங்களுக்கு என்ன சத்துக்கள் கிடைக்கும், உங்களுடைய ஒரு நாளைய சத்து தேவைகளில் எத்தனை சதவிகிதம் அந்த ஒரு cookie பூர்த்தி செய்கிறது என்று அறியலாம். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

எனக்கு இங்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.... கலோரி, கொழுப்பு, விட்டமின்கள், fiber இப்படி பலதரப்பட்ட சத்துக்களையும் தொகுத்து கொடுத்திருப்பார்கள் - நம்ம ஊரிலேயும் இப்படி வந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றும்.....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

priseka

ஹாய் சந்த்னா,
நாணும் Mrs.Sekar தான். நான் பிரெசில் ல இருகேன், நீங்க எங்க இருக்கிங்க....
அப்புறம் நீங்க சொன்ன Bread Name INTEGRAL ன்னு கேட்டு வாங்கனும். நான் நான்கு மாதம் கற்பமாக இருகேன் இததான் காலை சாப்பிடுவேன்.....

Priya Sekar,
Brazil / 09-04-2009.
04.25pm.

priseka

priseka

hai, priya...
Dont worry i will help u...
if u send ur mail id, i will send the fiber contain chart... take my mail id priya_seka@ymail.com
Bye dear....

cool regards
priseka...

priseka

மேலும் சில பதிவுகள்