இலங்கை தோழிகள் யாராவது

யாழ்பாணத்தை சேர்ந்தவள், உங்களுக்கு னாபகம் இருக்கிறதா மிதிவெடி என்ற சிற்றுண்டியை, அனேகமாக 2000 ஆம் ஆண்டளவில் femous ஆக இருந்தது. ரோல் போன்று ஆனால் சற்று அகலமாக இருக்கும், உள்ளுக்குள் முட்டை பாதியும் வைத்திருப்பார்கள், மிதிவெடி எனக்கு விருப்பம், யாராவது எப்படி செய்வது என தெரிந்தால் pls சொல்லவும்,அதிரா உங்கள் சமையல் எல்லாம் பார்த்து செய்துள்ளேன்,but பதில் போடுவதில்லை, அருமை,னன்றி, மிதிவெடி தருவீர்களா,pls

பூஜா நான் நினைத்தேன் எங்கட நாட்டில மலிஞ்சுபோய் கிடக்கிற காலைத்துண்டிக்க வக்கும் மிதிவெடி எண்டு .நல்லகாலம் அதுல்ல .

ஓ இது 2000 ஆண்டளவில் பிரபலமோ நான் சின்னவயதில் 92ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடையின் பேரும் மறந்துட்டுது சாப்பிட்டிருக்கிறேன்.நிறையத்தடவை டேஸ்ட் இன்னும் ஜாபகம் இருக்கு.ஒரு தடவை செய்து பார்த்தேன்.சரியாகத்தான் வந்தது பூஜா.ஆனால் அதே அதீத சுவையை இங்கு செய்து சாப்பிடும் போது உணரமுடியாது.ஏனென்றால் நிறைய விதம்விதமான பலநாட்டு சுவைகளையெல்லாம் எங்கள் நாக்கு கண்டுபித்துவிட்டதுதான் காரணமா இருக்கும் எண்டு நான் நினைக்கிறேன்.இந்த உருளைக்கிழங்கு அங்கு எவ்வளவு விரும்பி சாப்பிடுவோம்.இங்கு இறைச்சிக்குள் போட்டுவிட்டு யாரும் கண்டு கொள்வதில்லை.பாவம்.

ஆனாலும் உங்களுக்கு சொல்லித்தாறன்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு
முட்டை
வெங்காயம்
கருவேப்பிலை
கடுகு ,பெருஞ்சீரகம்
மிளகாயத்தூள்
இஞ்சி
தேசிக்காய்
மா
உப்பு
தண்ணி
எண்ணெய்

1..முட்டையை நன்கு அவித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
2..உருளைக்கிழங்கி அவிக்கவும்.நன்கு கரைக்கவேண்டாம்.பிறகு ஓரளவு சதுரமான துண்டுகளா வெட்டவும்.

3.வெங்காயம் மிளகாய் அரிந்து வைக்கவும்.
4.உப்பு மட்டும் போட்டு தண்ணிவிட்டு தோசைபோல ரொட்டி சுடக்கூடிய பதத்துக்கு மாவை கரைத்து வக்கவும் ஆகலும் தண்ணிப்பதமா வேண்டாம்.இந்த ரொட்டியும் கொஞ்சம் தடிப்பானதா இருக்கும்.

இப்போ சட்டியை அடுப்பில வையுங்கோ.வச்சு கொஞ்ச எண்ணெய் விட்டு கடுகு பெருஞ்சீரகம்,கருவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் எல்லாம் போட்டு தாளியுங்கோ
கொஞ்சம் தாளிச்சதும் தூள்,உப்பு போட்டு கிளறீவிட்டு
பிறகு வெட்டி வச்சிருக்கிற உருளையை அதுக்குள்ள போடுங்கோ.இது கறிப்பதம் வந்து நல்லா தூளோட சேர்ந்தாப்பிறகு அடுப்பில இருந்து இறக்கி தேசிக்காய் விட்டு இன்னொருமுறை கிளறி ஆற வையுங்கோ.

பிறகு ரொட்டிய செய்து ரொட்டி சூடா இருக்கேக்குள்ளயே உள்ள இந்த உருளைப்பிரட்டலை வச்சு நடுவில வெட்டின முட்டைப்பாதியையும் வச்சு ஓரளவு நீள்சதுரமா வரக்கூடியதா கொஞ்சம் அகலமாயும் கொஞ்சம் உயரமாயும் வரக்கூடியதா வடிவா மடியுங்கோ .
இப்பிடி எல்லாத்தையும் செய்து வச்சுட்டீங்களோ
பிறகு சட்டில எண்ணெயை பூசி [சிலனேரம் தோசை ஒட்டினா பூசுவமே அவ்ளோ எண்ணெய்]
அடுப்பை நல்லாக்குறைச்சு இந்த வெடியை இரண்டு பக்கமும் திருப்பி விட்டுட்டு எடுத்து வடிவா எல்லாத்தையும் ஒரு தட்டுல வச்சுட்டு அதுக்குப்பிறகும் நீங்கள் கஸ்டப்படவேண்டாம் பாவம் எனக்குத்தாங்கோ.

சுரேஜினி

சிலபேர் இதுக்குள்ள இரால் மரவள்ளி அப்பிடி தங்களுக்கு விரும்பின சிலதை சேர்ப்பினமாம்.

சுரேஜினி

மிக்க மிக்க னன்றி, உடனே செய்யப்போறன், எனக்காக விரிவாக பதில் தந்தமைக்கு ரொம்ப னன்றி,மற்ற னனா வரமாட்டேங்குது, னான் 2000 இல் தான் முதல் முதல் சப்பிடன் போல,அதுதான் அப்படி சொன்னான்,செய்துட்டு எப்படி இருந்தது என பதில் போடுரன்,னன்றி,ஆனால் வெளியில ராஸ்க் இருந்த னாபகமே

பூஜா, தலைப்பைப் பார்த்ததும் நானும் என்னவோ ஏதோ என்று பதறிப்போயிட்டேன்.

மட்டின் றோல் தான், அதற்குள் பாதி முட்டை இருக்கும். அதுதானே மிதிவெடி. நான் ஊரில் சாப்பிட்டதில்லை. கனடா, ரொரன்ரோ அபிராமி சாப்பாட்டுக் கடையில்தான் முதன்முதலில் சாப்பிட்டேன், அப்படியே சுவை வாயில் ஒட்டிக்கொண்டது. எந்தப் பெரிய சைஷ்?, ஒன்றுக்கு மேல் ஒராள் சாப்பிட முடியாது.

மட்டின் ரோல் செய்து அறுசுவைக்கு அனுப்பலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன் முடிந்தால்....

சுரேஜினி சொல்லிட்டா... செய்து எனக்கும் ஒரு பார்ஷல் அனுப்புங்கோ பூஜா.

பூஜா, சுரேஜினி மறந்திட்டா, இறுதியில் மெல்லிய பச்சை மாவில் தோய்த்து, ரஸ்க் தூள் பிரட்டித்தான் பொரிக்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன செய்ற அதிரா னம்ம ஊருக்கும் மிதிவெடிக்கும் அவ்வளவு னெருக்கம், கட்டாயம் இதன் ரெசிப்பி போடுங்க, எல்லோருக்கும் உதவும்.அட னீங்களாவது கனடால சாபிட்டிங்க, இத்தாலில இல்ல, வாயுறவைத்துட்டிங்க, ஆமா ரொம்ப பெரிது,ஒன்ரே போதும்,ஓகே னீங்க கடைசில சொன்னதுதான் னானும் யோசிதன்.சனிக்கிழமைதான் செய்யபோறன்,மிக்க னன்றி அதிரா,செய்து னல்லா வந்தா சாரி னல்லா வராட்டி கட்டாயம் அனுப்புறன( சும்மா சொன்னன்(, சுரேஜினி,அதிரா சொல்லிபுட்டா னல்லா வராமலா__

மிதிவெடி வாங்க டொரொண்டோ வந்த அதிராக்கு அதிலிருந்து5 நிமிடத்தில் இருக்கும் என்னைத்தெரியாமல் போனதால் நான் கோவம்போட்டு வீட்டில் சமைப்பதை நிறுத்திவிட்டேன்.நன்றி வணக்கம்.

பூஜா அதிரா சொன்னமாதிரி ரஸ்க் போடுங்கோ.ஆனால் இங்கே முட்டையின் 2 பாதியையும் உள்ளே வைத்திருக்கிறார்கள்.
பூஜா டபள்யூ எ [wa] ல் இருக்கு ந.ஏற்கனவே இங்கே ஏராளமான மழலை பேசும் தமிழ்ஸ் இருக்கினம்.நீங்க வேற னல்ல
னன்றி எண்டெல்லாம் எழுதி எங்களை கொல்லாதீங்கோ.

பூஜா கனடாவில் தமிழ் கடைகள் அதிகம்.தமிழ் பேக்கரிகளில் சடச்சுட ரோஸ்பாண் அதேடேஸ்ட் வாங்கலாம்.நானும் ஈரோப்பில் இருந்து வந்ததால் இங்கு வந்ததும் எங்கள் நாட்டுக்கு வந்த மாதிரி இருந்திச்சு.நேற்றுக்கூட 4 செவ்விளனீர் வாங்கிவந்து [குலையுடன்]குடிக்காமல் அதன் வடிவையே பாத்திட்டு இருந்தேன்.கொஞ்சநாள் அக்காக்கள் போன் பண்ணினா இதையே சொல்லிப்புலம்புவேன்.இப்போ உங்களுக்கு வ்யித்தெரிச்சலா இருந்தா நான் பொறூப்பல்ல.

சுரேஜினி

நான் தமிழை கொல்லவிலை,எனது கீபோட்டில் அடிக்க ந முதலில் வந்தது,இப்ப வரவில்லை அதுதான், அடிக்க இதோ வந்துட்டு,தகவல் கொடுத்ததற்கு நன்றி, வயிற்றை எரியப்பன்னிட்டு பொறுப்பல்ல எண்டால் எப்படி,இத்தாலிக்கு ஒரு பாசல் போடுங்க சுரேஜினி,மிதிவெடி சாப்பாடாக இருந்தாலும் தனது பெயரின் வேலைய காட்டுது, உங்கள் சண்டைக்கு மிதிவெடி சாரி நான் பொறுப்பல்ல,அந்த இளனீர் குலையை அப்படியே அனுபிவிடுங்கப்பா,ஆஆ குடித்து எவ்வளவோ நாளாயிட்டு.... புகை புகையா வருது என்னிடம் இருந்து அல்ல அதிரா வீட்டுப்பக்கமாய்

அப்பாடா எனக்கு செய்து சாப்பிட்ட மாதிரி இருக்கு சுரேஜினி. வாசிக்கும் போதே வாயில உமிழ்நீர் சுரந்துட்டப்பா....
ம்ம்ம்ம் ..............

அன்புடன் அதி

மேலும் சில பதிவுகள்