Miscarriage உதவுங்கள் please

எனக்கு திருமணமாகி 3 1/2 yrs ஆகுது.குழந்தைக்காக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம்.இந்த முறை periods எனக்கு April 8th வந்தது.முழுவதுமே Brown colourல் இருந்தது. Normal periods போல் இல்லை. I think its miscarriage?என்னுடைய கேள்வி,1.தொடர்ந்து இந்த மாதம் முயற்சிக்கலாமா?2.முயற்சி செய்துக்கொண்டு இருக்கும் போதே folic acid tablets எடுத்துக்கொள்ளலாமா?(without doctors prescription)3.நாங்கள் Blood test & sperm test எல்லாம் செய்துவிட்டோம்.எந்த problemமும் இல்லை. everythink o.k பிறகு ஏன் இந்த miscarriage?

If you doubt it's a miscarriage, you need to consult your doc imme coz ur uterus should be cleaned if it really is a miscarriage. If any residue of the dead fetus remains in the uterus, it will cause problems later.

You can take folic acid tabs when u r trying for a baby.

வீணா சகோதரி டிசென் கூறுவதுபோல் நீங்கள் டாக்டரை அணுகி ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கெமிக்கல் பிரக்னன்சி ஆக கூட இருக்கலாம்.[கருக்கொண்டதில் ஏதாவது குறை இருப்பின் அது தானாகவே 3 கிழமைக்குள் அழிந்துவிடும்.]ஆனால் இது ஒன்றும் பாரதூரமான விடயம் கிடையாது.இதையும் பீரியட்போல் எடுத்துக்கொள்ள்லாம் என்று டாக்டர்கள் சொல்வார்கள்.
உங்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை எனும் பட்சத்தில் ஏன் இந்தக்கவலை.
முதலில் டாக்டரிடம் போய் இம்முறை எனக்கு பீரியட் பிந்தியதோடு வித்தியாசமாகவும் இருந்தது மிஸ்கரேஜ் ஆகியிருக்க வாய்ப்பிருக்கா? என்று கேட்டால் அவர் தொடர்ந்து என்ன டெஸ்ட் செய்யவேணூம் எண்டு எழுதித்தருவார்.அப்படி நடந்திருந்தால் சிலவேளை போலிக் அசிட்டின் வீதத்தை [5mg]உங்களுக்கு அதிகரிக்கும்படி எழுதித்தரலாம்.ஆனால் சாதரண 1mg போலிக் அசிட் நீங்கள் இப்போது எடுப்பதில் தப்பில்லை. இவை என் அனுபவத்திலிருந்து.....
டாக்டரிடம் போவதாக இருந்தால் இப்போதே போகவேண்டும்.

சுரேஜினி

உங்கள் இருவருக்கும் நன்றி.எனக்கு 29ஆவது நாள் periods வந்தது.எனக்கு எப்பொழுதும் 25,26 நாட்களில் வந்துவிடும்.அதனால் தான் miscarriage என்று சொன்னேன்.எனக்கு சில symptoms தெரிந்தது.அது மட்டும் இல்லாமல் 2 மாதங்களுக்கு முன்பிருந்து நாங்கள் doctorரிடம் சென்றோம்.எல்லா test செய்துவிட்டு everything o.k என்றார்.சில காரணங்களால் அவரிடம் தொடர்ந்து செல்லமுடியவில்லை.கடைசியாக மார்ச் 14த் சென்றோம்.அப்பொழுது 5tablets கொடுந்தார். (For egg maturation).இதை நான் சொல்லாமல் விட்டுவிட்டேன் மன்னிக்கவும்.நான் இப்பொழுது 400mcg folic acid எடுத்துக்கொண்டிருக்கிறேன்.இந்த மாதம் முயற்சிக்கலாமா?சிரமம் பாராமல் பதில் தாருங்கள் please.
from,veena.

from,veena.

Hai sisters,நான் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.அந்த tabletsஎடுத்த பிறகு நாங்கள் doctorரிடம் செல்லமுடியவில்லை.இந்த மாதம் முயற்சிக்க உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.plz.
from,veena.

from,veena.

ஹாய் விணா
என்க்கு தெரிந்து இதில் ஒன்றும் problem இல்லை எனக்கு இது பொல் ஆனது ஆனால்
நாங்கள் தொடர்ந்து அடுத்த மாதம் முயர்சி செய்தோம் so no problem
take care

நன்றி ராஜி,இப்பொழுது தான் எனக்கு குழப்பம் தீர்ந்தது.Thank you very much.
from,veena.

from,veena.

இந்த மாதம் என்ன முயற்சிக்கலாமா என்று கேட்டுள்ளீர்கள்? 5 டாப்லெட் பெயர் என்ன? போலிக் ஆசிட் தொடர்ந்து எடுக்கலாம். அதை நிறுத்தவே வேண்டாம். திருமணமான உடனே இருந்து போலிக் ஆசிட் எடுத்துக் கொள்வது ரொம்ப பயன் தரும் கருத்தரித்தலின் போது. அந்த 5 டாப்லெட் எக் பார்மேஷனுக்காக தரப்படும் டாப்லட் என நினைக்கிறேன்

எனக்கு clome-100 mg கொடுத்தார்கள். இதை பீரியட் ஆன 2 ஆம் நாள் தொடங்கினேன். 11 த் டேயிலிருந்து Premarin -10 டாப்லெட் கொடுத்தார்கள். 13 வது நாள் ஸ்கேன் பார்த்து எக் நிறைய பார்ம் ஆகி இருப்பதாக சொன்னார்கள். அன்றே இன் ஜெக்ஷன் போட்டார்கள். 15 த் டேவிலிருந்து Duphaston கொடுத்தார்கள். அந்த மாததிலே இறைவனில் அருளால் கன்சீவ் ஆகிவிட்டேன்.

நீங்கள் டாக்டரை தொடர்ந்து கன்சல்ட் செய்யுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா அக்கா,நான் டாக்டரிடம் பீரியட் 4வது நாள் சென்றேன்.அந்த tabletsபெயர் மறந்துவிட்டேன்.(March)பீரியட்4வது நாளில் இருந்து தினமும் 5நாள் இரவில் எடுத்துக்கொண்டேன்.பிறகு 11வது நாள் doctorரிடம் சென்றோம். Scanசெய்துவிட்டு எக் நிறைய பார்ம் ஆகியுள்ளது,இன்னும் matureஆக வில்லை.இரு நாட்கள் கழித்து வரசொன்னார்.நீங்கள் சொல்வது போல் இன் ஜெக்ஷன் போடுவோம் என்றார். பிறகு தான் செல்லமுடியாமல் போய்விட்டது.இந்தமாதம் பீரியட் தான் வித்தியாசமாக இருந்தது.இந்த மாதம் (during fertility days) நாங்கள் ஒன்றாக இருந்தால் எதெனும் பாதிப்பா?பீரியட் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்.
from,veena.

from,veena.

வீணா இது நிறையப்பேர் செய்யும் தவறு.தாங்கள் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் ஊசிகள் என்ன?அதன் பின்விளைவுகள் என்ன என்று தெரியாமல் இருப்பது.
இனிமேலும் இந்த தவறை செய்யாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே மாத்திரை பாவித்தவர்களின் அனுபவங்களைக்கேட்டு நீங்கள் சந்தேகங்களைத்தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அறுசுவையில் நிறைய சகோதரிகள் தயங்காமல் வந்து பதில் சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.கருமுட்டை என்ன நாளில் என்ன அளவுக்கு வளர்ந்திருக்கிறது
என்றுகூட நீங்கள் டாக்டரை கேட்டு தெரிந்துவைத்துக்கொள்ளலாம்.

இப்போதுதான் எனக்கு உங்கள் பிரச்சனை ஓரளவு விளங்கியது வீணா.
இஞ்ஞெக்‌ஷன் எடுக்க நீங்கள் டாக்டரிடம் செல்லவில்லையா?
தவறு.
காரணம் நீங்கள் குழந்தை கிடைப்பதற்காக பாவிக்கும் மருந்து மாத்திரை ஊசிகள் எல்லாமே ஓரளவுக்காவது பக்கவிளைவுகள் கொண்டவை.
அவற்றை எடுக்காமல் விடுவதை தவிர்க்க முடியாவிட்டாலும்
இயன்றவரை திருப்பிதிருப்பி அதாவது நீண்ட காலத்துக்கு எடுக்கும் சந்தர்ப்பத்தை நாமாக ஏற்படுத்தக்கூடாது.
உங்கள் டாக்டர் எடுத்துக்கொண்ட படிமுறைகளின்படி 13வது நாள் இஞ்ஞெக்‌ஷன் எடுத்திருந்தால் [hcg ]
14வதுநாள் அதாவது 24மணித்தியாலங்களின் பின் சேர்ந்திருக்கச்சொல்லி இருப்பார்.
இந்த முறையில் உங்களுக்கு குழந்தைக்காக வாய்ப்பு அதிகம்.உங்களுக்குத்தந்த மாத்திரைகள் மூலம்18mm க்கு மேல்
கருமுட்டை வளந்த பின் இந்த ஊசி கொடுக்கப்படும்போது சரியான அளவுக்கு எக் வளர்ந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வெளியேறும்.
டாக்டர் சொல்லும் நாளில் உறவு கொள்ளும்போது கருமுட்டை ஸ்பேம் உடன் சேரும்.
உங்கள் பீரியட் வித்தியாசத்திற்கான காரணம் இந்த மாத்திரைகளாகக்கூட இருக்கலாம்.இவை எக் வளர்ச்சியை
தூண்டும் டாப்ளட்ஸ் ஆகையால் உங்கள் சாதரண பீரியட் டேட் தள்ளிப்போவதோ முந்துவதோ மிகச்சாதாரணம்.
ஆனால் மிஸ்கரேஜ் ஆகியிருக்குமோ என்ற உங்கள் கேள்விக்கு ஸ்கான் ரிப்போட் மூலம் மட்டும்தான் பதில் கண்டுபிடிக்க முடியும் .
இப்போ தற்போதைய பிரச்சனைக்கு வருகிறேன்.
இந்த மாதம் நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்வதற்குஎந்தத்தடையும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.முடிந்தால் உங்கள் கருமுட்டை
தேவையான வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்று டெஸ்ட் பண்ணிவிட்டும் முயற்சி செய்யலாம்.
குழப்பத்தை வளர்ப்பது நல்லதல்ல .தெளிவாகி தெளிவான மனதுடன் முயற்சித்து நம்பிக்கையோடு இருக்கவும்.

சுரேஜினி

ஹாய் சுரேஜினி அக்கா,எனக்கு இதை பற்றிய சந்தேகங்கள் யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை.உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.நான் செய்த தவறு டப்லெட் பெயர் தெரியாமல் விட்டது,2வது treatmentதொடறாமல் விட்டது.என் கணவரின் வேலை அப்படி,காலையில் போய்விட்டு இரவு 10மணி ஆகும்.நாங்கள் treatmentஎடுத்த கிளினிக்(working hours Mon-fri 9.00am-5.00pm)கிளினிக் (very far from my place)இந்தியன் டாக்டர் என்பதால் சென்றோம்.அதுமட்டும் இல்லாமல் அந்த டாக்டர் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லமாட்டார்.நான் மலேசியாவிற்கு புதிது என்பதால் தூரமானா இடங்களுக்கு தனியாக சென்றது கிடையாது.இனிமேல் டப்லெட் பெயர் தெரியாமல் எடுத்துக்கொள்ளமாட்டேன்.உங்கள் பதிலுக்கு நன்றி அக்கா.

from,veena.

from,veena.

மேலும் சில பதிவுகள்