கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும்

இந்த கொவத்தா குறைக்கா வழிசொல்லுங்கழென் தொழிகழெ?

அன்பு சகோதரி சுகா,

இதை பயிச்சியை முயற்சி செய்து பாருங்கள்:

ஒருவரிடம் ஒருவாரம் எடுத்துக் கொண்டு அவரிடம் மட்டும் சினம் தவிர்த்தல் பயிற்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். "அவருக்கும் நமக்கும் என்ன உறவு? எத்தகைய உறவு? அவர் நமக்காக, நம் நலனுக்காக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்?" என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பலமுறை, பல நாட்கள் நமது மகிழ்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டினை உற்று நோக்கினால் இத்தகைய அன்பு உருவத்தின் மீது, அன்பு கொண்ட நண்பர்மீது, உறவினர்மீது நான் சினம் கொள்வது தகாது; எனவே, இன்று முதற்கொண்டு அவர்மீது சினம் கொள்ளமாட்டேன் என்ற எண்ணம் உண்டாகும். இந்த எண்ணத்தோடு அவரது உருவத்தை மனத்தில் நினைத்து இம்முடிவை எடுத்துக் கொள்வோம். இன்று முதற்கொண்டு ஏழு நாட்கள் இந்தப் பயிற்சிக்கு ஒதுக்கிக் கொண்டு காலையிலே எழுந்தவுடன் "இன்று இவறோடு தொடர்பு கொண்டு பேசப் போகிறேன். இன்னின்ன வேளையில் செயலில் ஈடுபடப் போகிறேன், அவர் இன்னது சொன்னால் எனக்குச் சினம் எழுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று அவர் என்ன சொன்னாலும் சரி, சினம் எழாது காப்பேன், சினம் வருமேயானால், அந்த இடத்திலே விழிப்பு நிலை கொண்டு என்னைத் தடுத்துக் கொள்வோம், என்று உறுதி கொண்டு, அவர் என்ன சொல்வார் என்று தெரிந்து கொண்டு அதற்கும் நாமே அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும், அல்லது பதில் பேசாமல் இருக்க வேண்டும்" என ஒரு மானசீக நாடகமே தயார் செய்து கொள்ள வேண்டும். "மீண்டும் அந்த நாளிலே அவரோடு பல முறை சந்தித்துப் பேச, செயலாற்ற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் விழிப்போடு இருந்து இவரோடு சினம் கொள்ளாது நாம் இந்த நாளைக் கழிக்க வேண்டும்" எனவும் பழகிக் கொள்ள வேண்டும்.

இடையிடையே அப்போதைக்கப்போது மன வலிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். தவங்களில் அவர்கள் உருவத்தை நன்றாக நிறுத்திக் கனிவோடு வாழ்த்த வேண்டும். சினத்திலிருந்து திருந்தவும் சங்கற்பம் செய்ய வேண்டும்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சுகா,
நல்ல ஒரு கேள்வி.

சகோதரர் ஹைஷ் நன்றாக விளக்கிவிட்டார். முதல் வேலையாக கோபம் வந்தால், வாயை மூடிக்கொள்ளுங்கள் (கொஞ்சநேரத்திற்கு), எதுவும் பேச வேண்டாம். அடுத்ததாக நினையுங்கள், இப்போ பெரிதாக என்ன நடந்துவிட்டது? நான் ஏன் கோபம் கொள்ள வேண்டும், தலையா போய்விட்டது, இது ஒரு பெரிய விஷயமில்லையே.... இப்படி நினையுங்கள்... கோபம் தன்னாலே போய்விடும். ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

எங்கள் அப்பாவின் சகோதரிக்கு என் வயதை ஒத்த இரு பெண்கள் கடைசியாக ஒரு மகன். மகனுக்கு சரியான செல்லம். எவருக்கும் பயப்படுவதில்லை, எங்கள் அப்பாவில் பயம் உண்டு. மாமா என்ற முறையில். பெரிய அக்காவோடு சண்டைக்கு போகமாட்டார், சின்ன அக்காவோடு நெடுகவும் தனகுவார்.(வம்புக்கு இழுப்பார்). சின்னக்கா கொஞ்சம் சொவ்ற். பெரிதாக ஏச மாட்டார். அதனால் தம்பி, இடையிடையே அடித்தும் போடுவார்.

ஒருநாள் நானும் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தோம். வீட்டு வெளி சண்செற்றிலே, அவர்கள் அப்பாவும் எங்கள் அப்பாவும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். உள் ஹோலிலே நங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போ திடீரென சின்னக்காவுக்கும் தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தம்பி சடாரென்று சின்னக்காவுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டார். சின்னக்காவுக்கு நொந்துவிட்டது, மெதுவாக அழுதார். இதைப்பார்த்த எனக்கும் பெரியக்காவுக்கும் சரியான கோபமாக இருந்தது. பெரியக்கா தம்பியைப் பேசினார்.

சத்தம் கேட்டு வெளியே இருந்த எங்கள் அப்பா எழுந்து உள்ளே வந்து, என்ன நடந்தது எனக் கேட்டார், சொன்னதும், தம்பியை அடிப்பதுபோல் கையை ஓங்கிக்கொண்டு கிட்டப் போய் சொன்னார் "வாயால் கதையுங்கள், ஒருபோதும் அடிக்கக்கூடாதென்று", தம்பி கண்களை உருட்டியபடி நின்றார். அது எங்கள் மூவருக்கும் சரியான சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருந்தது, கைகளால் வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கினோம், சொல்லிவிட்டு திரும்பவும் அப்பா வெளியில் போய்விட்டார்.

சிரிப்பை அடக்க முடியாமல் நாங்கள் பெரிதாகச் சிரித்துவிட்டோம். உடனே தம்பி சொன்னார், எதற்காகச் சிரிக்கிறீங்கள்? ஏன் சிரிக்கிறீங்கள்? மாமா பேசிவிட்டார் என்றோ?,யார் என்னைப் பேசியது? என் மாமா தானே பேசினார், அதனாலென்ன பேசட்டுமே, என்றார். அப்பொழுது அவ் வாக்கியம் என் மனதில் பதிந்து விட்டது. அதாவது, அவர் இப்படிக்கூட சொல்லியிருக்கலாம், என் அப்பாவே பேசாமல் இருக்க, மாமா எப்படி பேசமுடியும் என்றும் கேட்டிருக்கலாமெல்லோ?.

மொத்தத்தில் கோபமென்பது நாம் எடுத்துக்கொள்ளும் விதத்திலேயும் தங்கியுள்ளது. நியாயமான ஒன்றுக்கு கோபப்பட்டால் பறவாயில்லை, தொட்டதற்கெல்லாம் கோபம் கொள்ளலாகாது.

"கோபம் முதற் கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வியடையப் போகிறது என்று பொருள்"

"எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" ..... எங்கேயோ படித்ததில் பொறுக்கியது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி சகொதரர் ஹைஷ்
நிங்கள் சொன்னதை செய்து பர்கிரன்.
நன்றி அதிரா மெடம் எனக்காக கதை எல்லம் சொல்லி விழக்கியதற்க்கு நிங்கள் சொன்னது பொல மவுனம் தன் சரியன வழி அதைதன் நான் முயட்சிசெய்வது.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

வணக்கம்.
நீங்கள் ஓய்வு எடுப்பதே கிடையாதா?இன்று தான் உங்களின் எல்லா பதிவையும் படித்து முடித்தேன்..காலை 11 மணியில் இருந்து (இடையில் குழந்தையை சாப்பிடவைத்து,தூங்க வைத்து)இப்பொழுது வரை.படித்து முடித்து அருசுவை பகுதியை மூட வரும்போது, மறுபடியும் உங்களின் பதிவு..நீங்கள் தூங்குவதே கிடையாதா?

அன்பு சகோதரி கவி,

நீங்கள் காட்டிய அன்பு கலந்த அக்கறைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. உங்களின் குழந்தையின் தேவைகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி இரு இழையையும் படித்து பின் ஊக்கம் கொடுத்தமைக்கும் நன்றி. பொழுது போக்கு என்பது மனம் சந்தோஷபடும் ஒரு விஷயம் அது போல்தான் அருசுவையும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

கோபத்தை குறைக்க கோபம் வரும் போது இந்துவாக இருந்தால் மனதில் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுங்க, கிறிஸ்டின்னாக இருந்தால் மனதில் இறைவனுக்கு புகழ் இறைவனுக்கு நன்றி, என சொல்லுங்கள், முஸ்ஸீம்க்கு எனக்கு தெரியாது. டிரை பன்னி பாருங்கள். அல்லது நோட்டில் எழுதவும் செய்யலாம்.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நன்றி சோனியா
நிங்கள் சொன்னதை செய்து பர்கிரன்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சகோதரரே,உங்கள் பதிவுகளை அவ்வப்பொழுது படித்து வருகின்றேன்.இந்த கோபத்தை குறைத்துக்கொள்வது எப்படி என்ற வினாவுக்கு தங்கள் விளக்கத்தின் தாக்கத்தால் இந்த பதிவைப்போடுகின்றேன்.எனக்கு கோபம் வரும் பொழுது "குற்றம் பார்க்கின் சுற்றம் போகும்" என்ற முது மொழியை அடிக்கடி சொல்லிக்கொண்டு கோபத்தைக்குறைத்துக்கொள்வேன்.உங்கள் ஆலோசனை மேலும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.இன்னும் உபயோகமான தகவல்கள் அறுசுவை குடும்பத்திற்கு தருவீர்கள் என் நம்புகின்றேன்.நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தங்களின் பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிவுகள் போடுகிறேன்

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வெறுப்பு என்பது சினம் என்னும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு ஆகும். வெறுப்புணர்ச்சியென்பது, பிறரை, பிறபொருளை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும். இது வெறுப்புணர்ச்சியின் இளநிலையென்று கூறலாம். அதன் முதுநிலையானது பிறரை அல்லது பிறபொருளை துன்புறுத்தல் அல்லது அழித்தல் ஆகும்.

இவ்விரண்டு நிலைகளுமே மனித வாழ்வின் நலத்தையும், வளத்தையும் அழிக்க வல்லவை. இதனால் வெறுப்புணர்ச்சியற்ற மனநிலையை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும். இது தானக வராது. வெறுப்பு ஒழிந்தால் மிச்சமிருப்பது என்ன நட்பு, அன்பு, கருணை இவைதானே.

வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும், குடும்ப உறுப்பினரையும் மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாமும் ஒதுங்கி விடுகிறோம். நாம் வாழ்வதற்கு உலகம், சமுதாயம், உறவினர்கள், நண்பர்கள் குறைந்துவிடும். வாழ்வின் இன்பம் இழந்து, அமைதியிழந்து தனித்து நின்று துன்புற வேண்டியதே, அதனால் விருப்பத்தை ஒழித்துவிட முயலவேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே இனிமை நல்கும் என்பதாகும்.

ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்களுக்கு எந்த மனிதர் பேரில் எந்தப் பொருள் பேரில் வெறுப்பு இருக்கிறது என்று கண்டு அதைப் போக்கிக் கொள்ளுங்கள். துன்பம் தருவனவற்றை விட்டு ஒதுங்கியிருக்கலாம். உணர்ந்து தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவையே இல்லை. நீங்கள் சிந்திக்க சிந்திக்க இக்கருத்து உங்கள் மன ஆழத்திற்குப் போய் ஒரு மதிப்புடைய நல் விளைவை வாழ்வில் உண்டாக்கும்.

வெறுப்பின்மைதான் சிரித்த முகத்தைக் கொடுக்கும். அந்த முகமே அன்பு ஒளிரும் விளக்காகும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்