காலிஃப்ளவர் பஜ்ஜி

தேதி: April 10, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காலிஃப்ளவர் - ஒன்று
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு


 

மாவுடன் கார்னஃப்ளார், இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய்தூள்,உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவைவிட சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி,அலசி,உப்பு கலந்த கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுங்கள்.
எண்ணெயைக் காயவையுங்கள் காலிஃப்ளவரை சிறிது சிறிதாக மாவில் போட்டெடுத்து எண்ணெயில் தூவினாற்போல் போட்டு,வேகவிட்டு எடுங்கள்.
இதோ சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி ரெடி.


மேலும் சில குறிப்புகள்