please help me

என் பையனுக்கு இப்போ 20 மாதம் ஆகுது.அவனுடௌய வெயிட் 10 kg. என் பையன் பிறந்ததிலிருந்து ரீப்ள்க்ஸ் (எப்போதும் எது சாப்பிட்டாலும் வாந்தி,இரவில் தூக்கத்தில் அலுவுதல்)பிரச்சனையால் கஸ்டப்படரான்.எனக்குமே இவனை நினைத்து ஒரெ கவலையா இருக்கு.இந்த ரீப்ளக்ஸ் பிரச்சனை எப்பொ சரியாகும்?உங்கள் குழந்தைக்கு யாருக்காவது இது மாதிரி இருந்த்ததா?ரீப்ளக்ஸ் கொண்டு தெரிந்தால் சொல்லுங்க தோழிகளெ .இதற்கு ஏதாவது மருந்து உண்டா/?நாங்க டாக்டரிடம் கேட்டதற்க்கு வளரவள்ர சரியாகுமென்று சொல்றார்.உங்களுக்கு மருந்து ,கைவைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.என் பையனை என்னால் பாக்கமுடயவில்லை.ரொம்ப குச்சியாட்டம் இருக்கான்.தினம் தினம் இவனை நினைத்தி ஒரெ கவலை.நன்றி.உங்கள்பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.please help me

ரம்பா,
இதுவரை மகனுக்கு பூச்சி மருந்து கொடுத்திராவிட்டால் ஒருதடவை கொடுங்கள். உணவூட்டும் போது ஒரேயடியாக ஊட்டாமல் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுங்கள். இது என் உடனடிப் பதில். இன்னும் அறிய முடிந்தால் கேட்டுச் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் ரம்பா

டிட்டோ, உங்கள் நிலைமைதான் என்னுடையதும்.எனது மகனுக்கு இரண்டு வயதுமுடிந்துவிட்டது.10 கிலோதான் உள்ளான்.எட்டுமாதத்திலிருந்து ஒன்றரைவயது வரை 8கிலோவை தாண்டவே இல்லை.பின் போராடி 10கிலோ ஏற்றினேன்.எதனைகொடுத்தாலும் வாந்தி எடுப்பான்.ஒவ்வொருமுரை சாப்பாடு கொடுக்கும்போதும் வயிற்றில் புளியைக்கரைக்கும்.ஏனெனில் சாப்பாடுகுடுத்துமுடிக்கவும் வாந்தி எடுத்து விடுவான்.அதுபோல் இரவில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை முழித்து அழுவான்.டாக்டரிடம் காட்டினால் mindல் fix பண்ணிக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.பால் மறக்கடித்தபின் இரவு கொஞ்சம் பரவாயில்லை.உங்கள் குறிப்பை பார்த்ததும் என் கவலைபோலவேஇருந்ததால்தான் எழுதினேன்.கவலையை விரட்டி அடிப்போம்.நம்பிக்கையை மனதில் வளர்ப்போம்.take care.

நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் மகனுக்கு தினமும் பெருங்காயம் கட்டியை கல்லில் உரசி குடுத்து பாருங்கள் செரிமானம் நன்ற இருக்கும். ஜின்கோவிட் ட்ராப்ஸ் குடுத்தாலும் நல்லது சாப்பாடு கொஞ்சம் கொஞ்சம் மாக கூட்டவும் ஓவவரு பீடுக்கும் கேப் விடவும் டைம் ஐ கடைபிடித்து பாருங்கள் எல்லாம் சரியாகி விடும்

ஹாய் sukhi,

உங்கள் குறிப்பை பார்த்தேன்.நானும் zincovit 2மாதம் கொடுத்தேன்.காயம் கொடுப்பேன்.நாளடைவில் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.thanks for your kind information.

ஹாய் அதிரா,எப்படி இருக்கீங்க? தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நேற்று கொஞ்ஜ நேரம் பதிலுக்கு வெயிட் பன்னி பாத்தேன் யாரும் பதில் போடலையா.புத்தாண்டு அல்லவா,அதனால் யாரும் பக்கலை போல இருக்கு.நாலைக்கு தான் வருவாங்கன்னு நினைத்தேன் .உங்கள் பதிவை இப்போ தான் பார்த்தேன்.மன்னிக்கவும்.நான் இதுவரை பூச்சி மருந்து கொடுக்கவே இல்லை.இனிமேல் கண்டிப்பாக கொடுத்து பாக்கறேன்.நன்றி அதிரா
வேறு எதாவது மருந்து தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள் அதிரா.
அப்புறம் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தார் எப்படி இருக்கிறீங்க?பூச்சி பருந்து கொடுத்தால் பசி எடுக்குமா?எனக்கு இது கொண்டு எதுவும் தெரியலை அதான் கேட்டேன்.தப்பா நினைக்காதிங்க.

ramba

ஹாய் pushpa,எப்படி இருக்கீங்க?நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மங்க நானும் சாப்படு முடிந்து தட்டை சிங்கில் போட போவேன் .இங்கு வந்து ஆத்தா அனைத்தும் வாந்தி எடுத்த் முடித்திருப்பான்.என்ன செய்ய முடியும்?நான் உக்காந்து அழுவேன்.என்னவர் கேட்பார்,அவன் வாந்தி எடுத்தால் நீ ஏன் அழுவுறேன்னு எப்பதான் சரியாகுன்னு தெரியலை.உங், கள் பையனுக்கும் ரிப்ளஸ் பிரச்சனைஇருக்கா?எப்போ கண்டு பிடித்தீங்க?இப்போ வாந்தி எடுப்பது குறைந்துள்ளதா
பையனுக்கு ராத்திரி தயிர் சாதம் கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க.நீங்க என்ன சாப்பாடு நைட்டு பையனுக்கு கொடுக்கிறிங்க

ramba

ஹாய் sukhi,நான் இது வரை ஒரு மருந்துமே குடுத்ததிலை.ஜிங்கோவிட் பசி எடுக்கும் மருந்தா?இல்லை கெல்ல்த் டானிக்கா?எனக்கு பேர் கெள்வி பட்டதில்லை.அதான் கேட்டேன்.நன்றிங்கஎன்னிடம் பெருங்காய பொடி தான் இருக்கு.இதை ஹாட் வாட்ட்ரிலயா கொடுக்கனும்? காலையில் வெறும் வயிற்றிலா கொடுக்கனும்?thanks

ramba

நல்ல இருக்கீங்களா காய கட்டி தான் நல்லது சாப்பாடு ரொம்ப கம்மியா நெறையா தடவையா பிரிச்சு குடுங்க எப்பவேனல்லும் காயம் குடுக்கல்லாம் ஜின்க் ஜீரண சக்தி கொண்டது அதுனால தான் குடுக்க சொன்னேன் உங்கள் மகன் ஆசிய சாபிடுரான இல்ல நீங்க வம்பா ஊட்டி விடுரீங்கள தெரியல அவனா சாப்பிட்டா வாந்தி எடுதல்லும் ஒன்னும் இல்ல நல்ல பசி வந்த பிறகு உட்டுங்க எல்லாம் சரியாகிடும் பசி இல்லாம வயிறு திம்முன்னு இருக்கா டாக்டர் கிட்ட கேட்டு பூச்சி மருந்து கொடுங்க

ஹாய் ரம்பா,

நானும் உங்களைமாதிரி அழுவேன்.என் கணவர் ஆறுதல் கூறுவார்.zincovitஎன்பது multi vitamin tonic. குழந்தை பிறந்து 2,3 மாதங்களில் கொடுப்பார்கள்.இப்பொழுதும் கொடுக்கலாம்.பால் மறக்கடித்தால்தான் சாப்பாட்டில் intrest வரும்.ஏனெனில் நடைபால்taste ஆக இருக்கும் என்பார்கள்.அதனால் சாப்பாட்டில் intrest வராது என்பார்கள்.இரவில் தயிர் சாதம் கொடுத்ததில்லை.இட்லி,சாதம்,சப்பாத்தி கொடுப்பேன்.சப்பாத்தி பாலில் ஊறவைத்து கொடுப்பேன்.காயம் வயிறு வலியின்போதும் நன்றாக கேட்கும்.

என்னை கொஞ்சம் மன்னியுங்கோ. நான் வயதை சரியாகக் கவனிக்கவில்லை. பொதுவாக 24 மாதம் முடிந்தபின்னர்தான் எந்த மருந்தும் கொடுப்பது நல்லதாம். பின்னர்தான் உங்கள் மகனின் வயதைப் பார்த்தேன்.

கிரைப் வோட்டர் குளிக்க வார்த்தபின் ஒருநாளுக்கு ஒரு தடவை, அதிலுள்ள அளவின்படி கொடுங்கள். அது என் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறேன். இரவில் அழும்போதும் கொடுக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்