அவசரமா உதவி பண்ணுங்க பீளீஸ்

அவசரமா உதவி பண்ணுங்க பீளீஸ் என் 3 yrs குழந்தைக்கு அம்மை இன்று வந்து விட்ட்து எனக்கு என்ன ப்ண்றதுனு தெரிய்லை நான் இங்கு dubaila தனியா இருக்கேன் ரொம்ப ப்யமா இருக்கு pls help me

பர்வீன் பயப்பட வேண்டாம்

நல்ல சுத்தமான வெள்ளை துணியில் படுக்க வையுங்கள்
வெஜ் அயிட்டம் மட்டும் கொடுங்கள்
சொரியாமல் பார்த்து கொள்ளுஙக்ள்.சொரிந்து விட்டால் அந்த‌ த‌ழும்பு போகாது,
இங்கு வெயில் ஆர‌ம்பித்து விட்ட‌தால் எல்லா பிள்ளைக‌லுகும் வ‌ருது
இங்கு தான் நிறைய வேப்ப்பிலை மரம் இருக்கு

நல்ல சுத்தமா சின்ன சின்ன கட்டா கட்டி அதை கொண்டு வருடி விடுங்கள்.

தினம் பெட்சீட் மாற்றவும்.நாளைக்கு மீதி ஞாபகம் வரதை எழுதுகிறேன்.
அனுபவமிக்க தோழிகளும் வந்து ஆலோசனை சொல்வார்கள் வெயிட் பண்ணுங்கள்.

லாக்டோ கலமின் பார்மஸியில் இருக்கும் வாங்கி பஞ்சை வைத்து மேலே தடவி விடுங்கள்.
இளநீர் வாங்கி கொடுக்கலாம்

Jaleelakamal

யாரவது பதில் போடுங்கல் பர்வீனுக்கு

Jaleelakamal

பர்வீன்

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். இந்த சமயத்தில் பனங்கல்கண்டை தண்ணிரில் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடிக்க கொடுக்கலாம். இதனால் உடம்பு சூடு குறையும்.

அன்புடன்
மகேஸ்வரி

பயப்படாதீங்க.ஜலீலா சொன்னது போல் சொரியாமல் பார்த்து கொள்ளுங்கள்.உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு(இளநீர், பழங்கள்) கொடுங்கள். சொரியாமல் பார்ப்பது தான் கஷ்டம். மருத்துவரிடம் கலந்தலோசித்து லோஷன் பயன்படுத்தவும்.

Save the Energy for the future generation

Save the Energy for the future generation

ரொம்ப் நன்றி எல்லாருக்கும் என்ன் சாப்பாடு கொடுக்குறது Dr இட்ம் காமிக்கலாமா

பயப்பட தேவையில்லை ஜலிலா சொன்னது போல் செய்யவும் , நல்ல குளிர்சியான பானங்கள் கொடுக்கவும். தினமும் வெள்ளை துணியை மாத்தவும். முக்கியமாக நாம் சமைக்கும் போது குழந்தைக்கு நெடி அடிக்காமல் பார்த்துகொள்ளவும்

Endrum anbudan

Endrum anbudan

ஹாய் பர்வீன்,
துபாயில் நிறைய வேப்பமரங்கள் உண்டு..
மஞ்சளும், வேப்பிலையையும் சேர்த்து அரைக்கவும்.
அதை கொப்பளங்கள் உள்ள இடங்களில் தடவவும்.
இது சரியாக்கும். மேலும் இளநீர் மற்றும் சுவையான பழ பானங்கள் தரவும்...
சிறிய குழந்தையாய் இருப்பதால் இடுப்பில் மட்டும் ஒரு துண்டை இருக்காமல் கட்டவும்... மற்ற கஷ்டமான உடைகளை அணியவேண்டாம்...
காரம் அதிகம் தரவேண்டாம்

ஃபர்வின் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டாம் மற்ற பிள்ளைகளுக்கும் வரும்..ஃபோன் பன்னி கேட்கவோ அல்லது கணவரை அனுப்பியோ டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்...எல்லோரும் ஆலோசனை சொல்லிவிட்டார்கள்..இளநீர் நல்லது..
சொரிந்து புண் ஆகிவிடாமல் இருக்க ஃபார்மசியில் இருந்து காலமின் லோஷன் வாங்கி பஞ்சில் முக்கி கொப்பளத்தின் மேல் தடவி விடுங்கள் லேசாக பிறகு அரிக்காது...அப்படியே சொரிந்தால் வேப்பிலையால் மெல்ல வருடி விடவும்..நகத்தை நங்கு வெட்டி விடவும்..தினம் சோப் இல்லாமல் குளிக்க வைக்கவும் வெதுவெதுப்பான நீரால் துடைக்காமல் ஒப்பி எடுக்கவும் உடனே அந்த டவலை சுடுநீரில் துவைத்து விடவும்..2 நாளுக்கொருமுறையேனும் பெட்ஷீட் போர்வைகளை வாஷிங் மெஷினில் சுடு நீர் ஆப்ஷனில் போட்டு துவைத்து விடவும்...சுத்தமாக கிருமிகள் பெரிகாமல் பார்த்துக் கொண்டால் அவ்வளவுக்கும் சீக்கிரம் மாறும்..வாயில் தொண்டையில் புண்ணாக இருப்பதால் சப்பிட கஷ்டப்படும்..அதற்கு மருத்துவரிடம் கேட்டால் சிலர் குழந்தைக்கு தக்க மருந்து தருவார்கள்.கவலை வேண்டம் சிறு வயதில் வந்து போவது நல்லது தானாம்
பெட்டில் பரவலாக வேப்பிலையை பரப்பி அதன் மேல் இருமடங்காக பருத்தி விரிப்பை விரித்து அதன் மேல் இலை குத்தாத அளவுக்கு குழந்தையை படுக்க வைய்யுங்கள்
சிலர் அம்மை போட்டால் அது மாறும் வரை குளிக்க வைக்க மாட்டார்கள் அதனால் கொப்பளம் வருவதும் சீழ்பிடிப்பதும் அதிகரிக்கும் தினசரி குளிக்க வைத்து விடுங்கள் அல்லது அட்லீஸ்ட் பருத்தி துணியால் வெதுவெதுப்பான நீர் முக்கி துடைத்து விடுங்கள்..அந்த நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்திருந்தால் நல்லது
குழந்தைகள் துணி விற்கும் பகுதியில் போனால் அங்கு நேப்பி துணி விற்கும் அது நல்ல பருத்தியால் ஆனது அதனை கொண்டு குளித்து துடைத்தால் போதும்

சுதா சரசு தாளிகா எல்லாருக்கும் ரொம்ப் நன்றி நீங்க சொன்னது போல செய்றேன் என்ன சாப்பாடு கொடுக்குறதுனு சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஹாய் பர்வீன், எதுவும் பயப்பட வேண்டாம் பா. ஜலீலா மேடம் சொன்னது போல நல்ல சுத்தமான வெள்ளை காட்டன் துணி அல்லது பட் ஷீட்டில் படுக்க வைக்கவும். வேப்பிலையால் வருடி விடுவது போல் செய்யவும். கையை வைத்து சொரியக் கூடாது. தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது தலை வாரக் கூடாது. non veg சாப்பிட்ட கூடாது. சுத்தமாக இருக்க வேண்டும். பழ ஜூஸ் நிறைய கொடுக்கலாம், இளநீர் நல்லது, உங்க குழந்தைக்கு தயிர் சாதம் பிடிக்கும்னா கெட்டி தயிர் சேர்த்து குழைவாக பிசைந்து அதில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு பிசைந்துக் கொடுக்கவும். சின்ன வெங்காயம் குளிர்ச்சியை தரும். தளிகா இன்னும் மற்ற சகோதரிகள் எல்லாரும் சொல்லி இருக்காங்க, இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன். தூய்மை ரொம்ப அவசியம் பர்வீன், குழந்தைய நல்லா பார்த்துக்கோங்க.

மேலும் சில பதிவுகள்