ஈஸி தட்டை

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

மிக எளிதாக சீக்கிரத்தில் இந்த தட்டையினை செய்து விடலாம். மிகவும் அருமையாக இருக்கும்.

 

அரிசி மாவு – 2 கப்
கறிவேப்பிலை – 6 இலை
காய்ந்த மிளகாய் – 3
பட்டர் – 2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பு, பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசைந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் பேப்பரில் வைத்து அதன் மீது மற்றொரு ப்ளாஸ்டிக் பேப்பரை வைத்து தட்டி கொள்ளவும்.
சூடாக உள்ள எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான தட்டை ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயினை சேர்த்தும் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வொவ் ரொம்பா சுப்ப்ர் . அம் கோகிலா

Hi babuAnna,

Nan password kuduthu ulla poga mudiyalanu solirunthen.Neenga busy irukeenganu therium.Nanae Password mathiten.

userid:ammujan24

Nan ungaluku oru recipe anupirunthen.en perai kootanchoorula serka soli kidaithatha.varavilai endral thirumba anupa kekaren.

Thanks,
Ammu.

அன்புடன்,
அம்மு.

hi geetha madam , it looks great , can i used the shop bought rice flour for this

கீதா ஆச்சல்,உங்க ஈசி தட்டை செய்தேன்.எனக்கு முதல் முறையாதலால் ஓரளவுக்கு சுமாராக வந்தது.

நன்றி
உமா.