மறைபொருள் ரகசியங்கள் பகுதி-2

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு."
- திருவள்ளுவர்

மறைபொருள் ரகசியங்கள் முதல் பகுதியின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12198

பகுதி ஒன்றின் சில பட விளக்கங்களின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://picasaweb.google.co.in/home?tab=mq

பகுதி இரண்டில் கனவு, கணியம் (சோதிடம்) மற்றும் யோகத்தை பற்றி பகிர்ந்து கொள்வோம்.

கனவுகள்:

யார் கனவு காண்பது? நான் என்று உடனே பதில் வரும். யார் அந்த நான். எல்லோரும் சொல்லும் பதில் இந்த உடல் என்றுதான். அப்படி என்றால் மிகவும் பாசம் வைத்துள்ள ஒருவர் இயற்கை எய்திய உடன் ஏன் அந்த உடலை உறவை சொல்லியோ அல்லது பெயரை சொல்லியோ அழைப்பது இல்லை. பிணம் என்றுதானே சொல்கிறோம். அப்போது இந்த நான் யார்? இந்த உடலா (Body)? மனமா (Mind)? உணர்வா(Emotion=Energy in Motion)? உயிரா(Soul)? ஆன்மாவா(Sprit)? இதில் யார் கனவு காண்பது எது? (Who is the observer of the dream?). இதற்கு விடை நீங்களேதான் உங்களிடம் இருந்து கண்டுபிடித்து கொள்ள வேண்டும். (எனக்கும் தெரியாது !!!!!).

கனவு என்றால் என்ன? கனவு என்பது நமது ஐம்புலன்களும் ஓய்வில் இருக்கும் போது நமது மனதில் நடக்கும் செயல் அல்லது மின்வேதியல் நிகழ்வு, அல்லது வெளியில் இருந்து வரும் மின்காந்த அலைகளின் மொழி பெயர்ப்பு (அதுவும் ஐம்புலன்களை உபயோக படுத்தாமல்- ஐம்புலன்களின் உணர்வுகளை உணர்வது - Antah-Prajna (internal consciousness). கனவுகளின் மூலம் நாம் எதும் புதிய அனுபவங்கள் பெறுவதில்லை, அனைத்துமே நம் ஆழ்மனத்தின் புதைந்துள்ள அனுபவங்களே!

விஞ்ஞானம்

முதன் முதலாக கனவுகளின் ஆராய்ச்சி பற்றிய புத்தக பதிப்பு 1867 வெளியிடப்பட்து. (The Marquisd’Hervey de Saint Denys had investigated dream phenomena and published his findings in 1867 in the book Dreams and How to Guide Them)

1900 இல் டச் மனநல மருத்துவரால் கனவுகளை பற்றி ஆராயப்பட்டு “தெளிந்த அல்லது தெளிவான கனவுகள்” என்ற புது சொல் கண்டுபிடிக்கப்பட்ட்து. (Dutch psychiatrist Van Eeden studied this phenomenon in a systematic fashion and coined the term “lucid dreaming” to describe it.)

1952 இல் கிளித்மேன் மற்றும் அவரது
மாணவர்கள் கனவுகளின் ஆய்வு செய்து தூக்கதின் தீட்டா அலைவரிசையில் ஏற்ப்படும் வேகமான கண் அசைவுகளின் போது கனவு ஏற்படுகிறது என்று கண்டறிந்தனர். ( Kleitman and his students that dreaming is accompanied by rapid eye movements. Other facts about dreaming have emerged through more recent experimentation)

கனவுகளில் வருவன அனைத்தும் சில குறியீடுகள், அந்த குறியீடுகளுக்கு அர்த்தம் உள்ளது, ”Project Gutenberg” என்ற கனவுகளின் அறிவியல் ஆராய்ச்சியில் 10,000 கனவு குறியீடுகளுக்கான மொழி பெயர்ப்பு அல்லது அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

யோகம், வேதாந்தம், கர்மா எனப்படும் வினைபதிவுகள்:

ஒரு அரசன் கனவில் பிச்சைகாரனாக பசியின் கொடுமையை அனுபவிக்கிறான். அதன் மூலம் அவனுடைய தீய ஊழ்வினை பதிவுகளான அதிர்வலைகள் கரைகிறது. அதே போல் ஒர் பிச்சைகாரன் அரசனை போல் கனவில் அரசாள்கிறான். அதில் அவனது நல்ல ஊழ்வினை பதிவுகளான அதிர்வலைகள் கரைகிறது. இந்த இரண்டுக்கும் கோள்களின் அதிர்வலை வீச்சுகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

கனவில் இன்பத்தின் நுகர்ச்சி, துன்பத்தின் நுகர்ச்சியை விட அதிகம் அதற்கு காரணம் மனம் எந்த தடை அல்லது கட்டுபாடு(சமூக) இல்லாமல் இயங்குவதால் தான். தூக்கத்தில் மனம் ஒரு மதம் பிடித்த யானை போல் செயல்பட்டு (கட்டுபாடே இல்லாமல்) தனது முறையற்ற தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் (தவறுதலாக அது இன்ப நுகர்ச்சி என கருதும்).

மீதம் அடுத்த பதிவில்;

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன்
23ம் திகதிதான் வருவீங்கள் என்று நினைத்தேன். வேளைக்கே வந்துவிட்டீங்கள். சந்தோஷமே.

நடிகர் சோ அவர்கள் சொன்னார், நீ என்றால் யார் என்று, மற்றவர் சொன்னார், அது நான், என் உயிர் என்று. அதற்கு இவர் திரும்ப கேட்டார் உயிர் எங்கே இருக்கிறதென்று, இவர் சொன்னார் இதயத்திலே என்று. அதற்கு சோ கேட்டார், அப்போ இதயச் சிகிச்சை செய்து இன்னொருவரின் இதயத்தை மாற்றினால் நீங்கள் யார் என்று? இவர் விழிகள் பிதுங்க விழித்தார்.

நான் என்றால் யார் என்பதே குழப்பமாக இருக்கு. சரி அதை விடுவோம். சில கனவுகள், நினைக்காத விஷயமெல்லாம் கனவில் வந்து அது பலித்தும் விடுகிறதே? இது எதனால்? இப்போ நேரமில்லை பின்னர் வருகிறேன். நல்ல தலைப்பை ஆரம்பித்துள்ள உங்களுக்கு என் நன்றிகள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா

நடுவில் கிடைத்த நேரத்தில்தான் இந்த பதிவு, தினமும் வர மே 23 மேல்தான்.

குழப்பம்: என்ன செய்வது என்றே தெரியாமல் பரிதவிப்பது! (Unable to see the Options available clearly)

பிரச்சனை: எப்படி செய்வது என்று தெரியாமல் விழிப்பது! (After selecting the Options, don’t know how to execute it)

மூன்று முத்துகள்:

சிவப்பு முத்து: இந்த சிவப்பு நிறமான முத்து இதயத்தில் உள்ளது. ஒரு கரு உருவாகும் போது 30 நாட்களுக்குள் இது இறையாறலில் இருந்து வந்து கருவில் பதியும். இதில் அந்த உடலின் உயரம், பருமன், நிறம், உடல் சம்பந்தபட்ட அனைத்து பதிவுகளும் இருக்கும். (The whole Algorithm of the Physical Attributes – DNA & RNA instructions) அதே போல் ஒருவர் இறப்பதற்கு 30 நாட்களுக்கு முன் இந்த சிவப்பு முத்து இதயத்தில் இருந்து மேல் ஏழும்பி வந்த இடத்திற்கே மெதுவாக நகர்ந்து செல்லும். (Return to the Source).

பச்சை முத்து: இது கல்லீரலில் இருக்கும். இது உணர்வுகளின் மையம் The whole Range of Emotional Algorithm). கோபத்தில் சொல்வார்களே என் வயிறு எரிகிறது என்று அல்லது என் குலை நடுங்குகிறது என்று அதன் கராணம் இதுதான்.

நீல முத்து: இது பீனியல் சுரப்பியில் உள்ளது. இது தான் நமது ”கான்ஷியஸ்னஸ்- “I ” நான் என்ற உணர்வின் உறைவிடம்.

இந்த முத்துகளின் பரிமாணம்: பசுவின் ஒர் வால் முடியின் பருமனை, 1,00,000 பகுதிகளாக பிரித்தால் அதன் ஒரு பகுதியே என்கிறார், திருமூலர்.

இந்த முத்துகளின் அசைவை “கிளயர்வொயன்ஸ் – Clairvoyance ” மூலமாக அறியலாம் என்கிறது திபெத்திய மறைபொருள் ரகசியம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு ஹைஷ் அவர்கள்,

வணக்கம்.

"சிவப்பு முத்து: இந்த சிவப்பு நிறமான முத்து இதயத்தில் உள்ளது. ஒரு கரு உருவாகும் போது 30 நாட்களுக்குள் இது இறையாறலில் இருந்து வந்து கருவில் பதியும். இதில் அந்த உடலின் உயரம், பருமன், நிறம், உடல் சம்பந்தபட்ட அனைத்து பதிவுகளும் இருக்கும். (The whole Algorithm of the Physical Attributes – DNA & RNA instructions) அதே போல் ஒருவர் இறப்பதற்கு 30 நாட்களுக்கு முன் இந்த சிவப்பு முத்து இதயத்தில் இருந்து மேல் ஏழும்பி வந்த இடத்திற்கே மெதுவாக நகர்ந்து செல்லும். (Return to the Source)."

இதில் எனக்கு ஒரு சந்தேகம்

ஒருவருக்கு சிவப்பு முத்து தாயிடம் இருந்து வருகிறது என்றால் அவர் இறக்கும் பொழுது அது எங்கே செல்கிறது?

கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்

இன்னும் ஒரு கேள்வி

இறந்த பிறகு ஆன்மாவின் நிலை என்ன?

மறுபிறப்பு பற்றி தெரிந்து கொள்ள விருப்பம்

நன்றி

BE HAPPY ALWAYS

ஹைஸ்,

//நீல முத்து: இது பீனியல் சுரப்பியில் உள்ளது. இது தான் நமது ”கான்ஷியஸ்னஸ்- “I ” நான் என்ற உணர்வின் உறைவிடம்//

அப்படிஎன்றால், pineal gland ஒருவருக்கு ஏதாவது நோயின் காரணமாக அகற்றிவிட்டால் அவருக்கு நான் என்ற எண்ணம் இருக்காதா? ம்ம் இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உங்கள் கனவின் விளக்கம் - எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது - நமது மேல்மனம் உறங்கும் போது கீழ்மனம் கட்டுப்பாடில்லாமல் சுற்றி கொண்டிருப்பதாக !!

எனக்கும் இந்த மறுபிறவி பற்றிய குழப்பம் உண்டு.... முடிந்தால் சொல்லுங்கள் !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//சிவப்பு முத்து: இந்த சிவப்பு நிறமான முத்து இதயத்தில் உள்ளது. ஒரு கரு உருவாகும் போது 30 நாட்களுக்குள் இது இறையாறலில் இருந்து வந்து கருவில் பதியும்.//

தாயிடமிருந்து வருவதாக சொல்லவில்லை.இறையாறலில் இருந்து வந்து கருவில் பதியும் என்று கூறியிருக்கிறார்.

ஆன்மா பற்றி அறிந்து கொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது.பதிலுக்காக காத்திருப்போம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

mrs.sekar,

பீனியல் சுரப்பி என்பது நாளமில்லா சுரப்பி. அதை எப்படி அகற்ற முடியும்? ஆகவே அச்சுரப்பி இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது.

இல்லை கவின், நான் நார்மல் மனிதர்களுக்குச் சொல்லவில்லை - pineal gland ல் ஏதாவது நோய் ஏற்பட்டிருந்தால் (உதாரணத்துக்கு tumors) அகற்றித்தானே ஆக வேண்டும்... அப்படிப்பட்ட நிலையில் மூளையின் மற்ற பகுதிகள் செவ்வனே செயல்பட்டால், அவருக்கு நான் என்ற உணர்வு இருந்தாகவேண்டும் அல்லவா, அவர்களால் மற்றவர்களைப் போல செயல்படமுடியாதா என்ன? அந்த நிலையைத் தான் கேட்டேன்....

pineal gland நாளமில்லாச் சுரப்பி என்பதால் அகற்றினால் அதில் இருந்து வரும் ஹார்மோன்கள் கண்டிப்பாக பாதிக்கப்படும், என்றாலும், நான் என்ற உணர்வு பாதிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்... மற்ற நாளமில்லாச் சுரப்பி(thyroid, pituitary) புற்றுநோயுற்றிருந்தால் எடுத்த பின் அதனதன் hormones மருந்தாக தருவார்கள். pineal gland க்கு மெலடோனின் தருவார்களா என்று தெரியவில்லை...

பார்ப்போம் தலைவர் என்ன சொல்லப்போகிறார் என்று. மறுபடியும் வருவதற்கு நாளாகும் என்றே தோன்றுகிறது. இந்தத்துறை நிபுணர்கள் (நரம்பியல் அறுவை சிகிச்சை) யாரையாவது சந்தித்தால் (!!??) அவர்களையும் கேட்டுப்பார்க்கிறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நன்றி திவ்யா அருண்

BE HAPPY ALWAYS

முதலில் மிக்க நன்றி. தாமததிற்கு காரணம் இரண்டு நாள் சுற்றுலா (கொனார்க்) முடிந்து இன்றுதான் வந்தேன்.

அன்பு சகோதரி அனாமிகா: உங்களின் முதல் கேள்விக்கு அன்பு சகோதரி திவ்யா அருண் அவர்கள் பதில் மிக சரியானது. நன்றி அன்பு சகோதரி திவ்யா அருண்.
இரண்டாவது கேள்வி – மறு பிறப்பு, இறந்த பின் ஆன்மாவின் நிலை

நீங்களும் உங்கள் நண்பிகள் இருவர் அருகருகில் உட்கார்ந்து ஏதோ ஒரு ”ஹாலோகிராபிக் ஸ்டிக்கர் – Holographic Sticker” பார்த்தால் மூவரும் ஓரே நிறத்தையா பார்ப்பீர்கள்? மூவருக்கும் அவர் அவர் பார்க்கும் கோணத்திற்கு ஏற்றவாறு நிறங்கள் தெரியும் அல்லவா( It is With Respect To the angle observation- w.r.t the frame or place or experience of the observer) ? அதே போல் மறைபொருளின் ரகசியங்கள் பெரும்பாலும் பரிபாஷையில் தான் எழுதப்பட்டு இருக்கும், அதனால் அதை படிப்பவர் சரியாகதான் உணர்ந்து கொண்டார என்று அறிவது சிறிது அல்ல ரொம்பவே கடினம்தான். என்னதான் ”எபிஸ்டமாலஜி - Epistemology” நன்கு படித்து இருந்தாலும் உண்மையை உணர்வது கடினமே. இழை முடிவில் அதைப்பற்றி நான் உணர்ந்த்தை மற்றும் புரிந்து கொண்டதை பற்றி சொல்கிறேன், அதை படிப்பவர் சரியாக புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

அன்பு சகோதரி திருமதி சேகர், உங்களுக்கு மிகவும் நன்றி, ஆரம்பதில் இருந்தே இடையராது இதுவரை ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பதற்கு,

“ரொம்ப ஜலதோஷம் பிடிச்சுபோச்சு” –தலை என்றதும்!!! சாதாரண மனிதனாக இருந்து விடுகிறேனே!!!

மூன்று முத்துகளுமே, முதலில் அது ஒரு பொருள் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது ஓர் ஆற்றல்( It is not matter or Space it is Energy and it does not have any form so there is no permanent location shall we say it stays most of the time there), எப்படி சூரியனின் ஒளியில் 7 நிறம் வருகிறதோ (அதுவும் மின்காந்த அலைகள்தானே ஆனால் கண்கள் மட்டுமே அந்த மின்காந்த அலைவரிசையை நிறமாக நமக்கு உணர்விக்கிறது) அது போல்தான் இந்த முத்துகள் மின்காந்த அலைகளின் செறிவடைந்த இடம்(High density Bio Electro Magnetic Field, it is dynamic and oscillating). மேலும் நிரந்திரமாக இடம் இருக்காது. அதனால் தான் வர்ம வைத்தியத்தில் “அடங்கல்” என்று ஒரு வைத்திய முறை இருக்கிறது. அதில் வர்ம வைத்தியர் உடலில் உள்ள உயிர் துகள் எங்கு அடங்கி இருக்கிறது என்று கண்டு மயங்கியவரை அந்த உயிர் துகளை ஓடவிட்டு எழுப்பிவிடுவார். இது இப்போதைக்கு போதும் என நினைக்கிறேன். மேலும் சில மருத்துவ விளக்க படங்கள் உங்களுக்காக சேர்த்து இருக்கிறேன்,

http://picasaweb.google.co.in/haish12/hvLWwI#
http://www.wayfinding.net/pineal.htm
http://www.customhps.com/Pres_Foc_Pineal.htm

*** இது வரை ஓரே ஒரு தடவைதான் என்னால் சிவப்பு முத்துவை பார்க்க முடிந்து. மிக நெருங்கிய நண்பரின் தந்தை!!!

அன்பு சகோதரி கவின்: இந்த சுரப்பியில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக அதை அப்புற படுத்த மாட்டார்கள் என்பது உண்மை (It is one of the extreme and last decision is surgical removal of Pineal gland), ஆனால் சில நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்கள், அதன் பின் விளைவுகளை பற்றி ஏது சொல்லவில்லை, கேட்டாலும் சொல்ல மறுக்கிறார்கள்( There are proof for the surgical removal but after effects are not available for public)!!!

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்