தோழிகளே எனக்ககும் பதில் அளியுங்கள்

தோழிகளே எனக்ககும் பதில் அளியுங்கள்.

எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு கால் முட்டியில் நீர்கட்டி கொண்டதாம்,
டாக்டர் இப்ப பெட் ரெஸ்ட் எடுக்க சொல்கிறாராம்.

ஆனால் இப்போதைக்கு அவரால் லீவு போட முடியாது.

sales sil இருக்கிறார்.முட்டியில் டைட்டாக‌ பேண்டேஜ் போட‌ சொல்கிறார்க‌ளாம்.

யாருக்காவ‌து இப்ப‌டி வ‌ந்து கேள்வி ப‌ட்டு இருக்கிறீர்க‌ளா?
அப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ சிகிச்சை,

தோழிகளே எனக்ககும் பதில் அளியுங்கள்.

எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு கால் முட்டியில் நீர்கட்டி கொண்டதாம்,
டாக்டர் இப்ப பெட் ரெஸ்ட் எடுக்க சொல்கிறாராம்.

ஆனால் இப்போதைக்கு அவரால் லீவு போட முடியாது.

sales sil இருக்கிறார்.முட்டியில் டைட்டாக‌ பேண்டேஜ் போட‌ சொல்கிறார்க‌ளாம்.

யாருக்காவ‌து இப்ப‌டி வ‌ந்து கேள்வி ப‌ட்டு இருக்கிறீர்க‌ளா?
அப்ப‌டி இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ சிகிச்சை,

Jaleelakamal

Hai ஜலீலா மேடம்,

கால் முட்டியில் உள்ள ஜாய்ன்ட்-ல் பிரச்சனை என்று நினைக்கிறேன்.அந்த இடங்களில் உள்ள திசு மற்றும் தசைப்பகுதியில் பிரச்சனையென்றால் டாக்டர் சொல்வது போல் ஓய்வு தான் எடுக்கனும்.ஜாயின்ட் பகுதிகள் குணமாக கொஞ்சம் நேர கால அவகாசம் தேவைதான்.பாதிக்கப்பட்ட பகுதியுடன் தொடர்ந்து வேலை செய்தால் கவனிப்பின்றி அது மேலும் பாதிக்கப்படும்.
அதானால் முறையான ஓய்வு எடுக்க சொல்லுங்கள்.

நன்றி
உமா

உடனே பார்த்து பதில் போட்டமைக்கு மிக்க நன்றி உமா, இப்ப இருக்கிற துபாய் நிலைக்கு லீவு போட்டு ரெஸ்ட் எடுப்படுப்பது முடியாத‌ கதை,இதுக்கு வேறு ஏதும் தீர்வு இருக்கா

அவர் என்னேரமும் வண்டி ஓட்டுபவர்

Jaleelakamal

yaaravathu pathil poodavum

Jaleelakamal

அய்யோ அக்கா என்னாச்சு?அக்கா எனக்கும் தெரிஞ்சு ரெஸ்ட்தான் பெட்டர்க்கா...வேலைக்கு போவது சரியா படல

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நம்பிக்கை இருந்தால் மட்டும் செய்து பார்கவும். இரவு தூங்கும் முன், பக்கெட்டில் தாங்க கூடிய சூட்டில் வென்னீர் எடுத்து அதில் அவரின்(வலி உள்ளவர்) ஒரு கைபிடி அளவு கல் உப்பு (கிடைக்கவில்லை என்றால் சமையலுக்கு உபயோகப்படுத்தும் உப்பு) அதில் போட்டு கலக்கி விட்டு கால்கள் இரண்டையும் அதில் 20-30 நிமிடம் வைத்து இருக்கவும். கைகளால் தண்ணீரை அள்ளி இரு முட்டிகளிலும் நனையுமாறு செய்து கொண்டு இருக்கவும். பின் மீண்டும் அதே அளவு வென்னீர் எடுத்து அதில் “லாவண்டர் எசன்ஸ்” ஐந்து சொட்டு போட்டு அதில் கால்களை கழுவிவிட்டு நன்கு துடைத்து விட்டு தூங்க சொல்லவும். மூன்று நாட்களுக்குள் பலன் தெரியும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,முட்டியில் நீர்கட்டி, காலில் இல்லை.

மிக்க நன்றி பதில் அளித்தமைக்கு நீங்கள் குறிப்பிட்டவாறு சொல்கிறேன்.
வேறு யாருக்கும் இது போல் இருந்து கேள்வி பட்டு இருக்கிறீகளா?
இதுக்கு எதுவும் டயட் செய்யனுமா?, அவர் வேலை சேல்ஸ் என்பதால் என்னேரமும் வண்டி ஓட்டி கொண்டு தான் இருக்கும் மெயின் ஆபிஸ் துபாயில் அவ்ர் இருக்கும் இடத்தில் இருந்து 2 மணி நேரம் வாரம் முன்று முறை இங்கு வரனும் இரவு கூட லேட்டா போய் சேருவார்,
இதற்கு ரெஸ்ட் தேவையா? ஒரு வேளை என்னேரமும் காலை தொங்க போட்டு ஓட்டி கொண்டே இருப்பதால் இப்படியா?
இன்னும் ஒரு மாததிற்கு தினம் கூட துபாய் வந்து போக வேண்டி வரும்.

சாப்பாடு ஏதும் தவிர்கனுமா

Jaleelakamal

//கலக்கி விட்டு கால்கள் இரண்டையும் அதில் 20-30 நிமிடம் வைத்து இருக்கவும். ///கைகளால் தண்ணீரை அள்ளி இரு முட்டிகளிலும் நனையுமாறு செய்து கொண்டு இருக்கவும்///. பின் மீண்டும் அதே அளவு வென்னீர் எடுத்து அதில் “லாவண்டர் எசன்ஸ்” ஐந்து சொட்டு போட்டு அதில் கால்களை கழுவிவிட்டு நன்கு துடைத்து விட்டு தூங்க சொல்லவும். மூன்று நாட்களுக்குள் பலன் தெரியும்//.

இது எனர்ஜி கான்சப்ட் (நுண் ஆற்றல்) வைத்தியம்.

1. கால் பாதங்களில் உள்ள ”சோல்-Soul” சென்டரில் உள்ள அசுத்தமான அவுரா-Aura சுத்தமாக வேண்டும்.

2. மேலும் கைகளால் அள்ளி முட்டியில் தெளிக்க/நனைக்க வேண்டும்.

3. லாவண்டர் அசுத்தமான அவுரா மறுமடியும் சேராதவாறு பாதுகாக்கும்.

4. உணவில் உப்புமும், புளியும் குறைக்க வேண்டும். காரம் சிறிது அதிகமாக சேர்த்து கொள்ளாம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

I just want to share the information with you as I am physiotherapist.
First of all if there is swelling it can be due to various reasons. from your mentioned symptoms it is joint effusion. it can be caused by either arthritic problems or trauma or due to infections.
First of all if it is infected or inflammed that means it is hot to touch or look red it is acute in nature. Only thing we can do is take Nonsteriodal antiinflammtory drugs which is prescribed by doctor.
And I would suggest keep ice for 10 minutes.also donot apply heat in acute stage after six weeks only he can have heat therapy. For ice application you can take ice packs from freezer and break into pieces and put in kandkerchief or towel and keep it on the spot. every few minutes he can observe skin condition just in case. It is very safe method to try home.
if he can walk 20 minutes also daily that will have effect on this by maintaing the level of severity.
I think doctor has given bandage like we call crepe bandage to give compression to that area so that fluid is drained into cavity. In the joint there will be joint cavity. Gentle massage can help.give strokes upwards and backwards so that fluid drain into popliteal fossa that is back side of the knee. I would not recommend placing a towel underneath the joiint while at bed time as it may worsen the condition in the long run though it gives relief to the joint.Another treatment can be aspirating the fluid which is done only by the doctor using a aspectic needle.
WE call the therpay as RICE that is R-rest and I for ice treatment, C for compression like doctor said compression bandage, E-elevation of the leg that is keeping the leg elevated as gravity assists drainge of the fluid. Rest is the option but he can still try to do these things to control his pain and continue his work as Holidays are not possible for all people.I hope this information helps you. There is nothing to worry and ya it needs long term treatment. As for the food avoid Brinjal and eat lot of MURUKAI KEERAI if he can. Food choice is personally my experience with patients. So you cannot count on my words.

சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,

மிக்க நன்றி, சிரமம் பாராமல் பிஸியான உங்கள் வேலைகளுக்கிடையில் பதில் அளித்ததற்கு,

நீங்கள் சொன்ன மெசேஜை அவருக்கு சொல்லி விடுகிறேன்.

இப்ப தொடர்ந்து வண்டி ஓட்டலாமா?

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்