இனிப்பு உருளை சிப்ஸ்

தேதி: April 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சர்க்கரை - 1 கப்
எண்ணெய் - 2 கப்
திராட்சை - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 10
பிஸ்தா - 10
ஏலப்பொடி - 1 பின்ச்
உப்பு - 1 பின்ச்


 

சர்க்கரையை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
உருளையை தோல் சீவி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.
துருவிய உருளையை வடிதட்டில் போட்டு கையால் அழுத்தி நீரை பிழிந்து விட்டு எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரிக்கவும்.
முந்திரி, திராட்சையை வறுக்கவும். அனைத்துப்பொருட்களையும் கலந்து கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணவும்.
சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்வீட் சிப்ஸ் இது.


மேலும் சில குறிப்புகள்