தனிஷா வந்துட்டேன் அரட்டைக்கு வாங்கோ - பாகம் 76

ஹாய் ப்ரெண்ஸ், அக்காஸ், மேடம்ஸ் அனைவரும் நலமா? பேக்பெயின் ஜாஸ்த்தியாயிடுச்சு. டாக்டர் ஒரு 10 நாள் சிட்டிங் பொஷிசன் கூடாதுனு சொல்லிட்டார். அதனால் சிஸ்டம்ல உக்காரவே இல்லை. அதோட பீவர், த்ரோட் இன்பெக்ஷன். அதான வரல என்னை யாரெல்லாம் தேடுனீங்க. தேடுனவங்க தேடாதவங்க எல்லோருக்கும் ஒரு ஹாய். எல்லோருடைய மெயிலையும் இன்னிக்குத்தான் பார்த்தேன்.

சாதிகா அக்கா எப்படி இருக்கீங்க. காணமல் போன த்ரெட்டில் என்னை கேட்டுருக்கீங்க. நீங்க கூப்பிட்டதும் உடனே ஓடி வந்துட்டேன் பார்த்தீங்களா. ஆமிர் எப்படி இருக்கார். இன்று காலை எழுந்ததுமே உங்களைத்தான் நினைத்தேன்.

செல்விமா எப்படி இருக்கீங்க. உடம்பு உங்களூக்கு பரவாயில்லையா. அக்கா வந்ததிலிருந்து ரொம்ப பிஸியாடீங்க நீங்க. என் ஹஸ் சொன்னார் 3 நாள் முன்னாடி நீங்க பேசியதாக. நேற்று மாலை உங்களிடம் பேச வந்தேன் ஜிடால்க்கில் நீங்க இல்லை.ஷட்டவுன் பண்ணிவிட்டு படுத்து விட்டேன். இப்போது கொஞ்சம் நல்லாகி விட்டது எனக்கு.

ஜெமாமி நலமா? ஸ்ரீ அண்ணா, சந்தியா எல்லோரும் எப்படி இருக்காங்க. இன்னிக்கு உங்க பச்சரிசி இட்லிதான்

சாய்கீதா நலமா. உங்க மெயில் பார்த்தேன். ரிப்ளே போடுறேன். விக்னேஷ், அபி எப்படி இருக்காங்க. ஊருக்கு கிளம்பும் பிஸியில் இருப்பீங்க. அத்தை மாமா, போயாச்சா கீதா.

மேனு எப்படி இருக்கீங்க. நீங்களும் சாட் பண்ணியதை என் ஹஸ் சொன்னார். ஷிவானி குட்டி என்ன பண்ணுறாங்க. விரைவில் ஷிவானி போட்டோவ டெகரேட் பண்ணி அனுப்புறேன்.

ஹாய் கவி எப்படி இருக்கீங்க. ஷாம் குட்டி என்ன பண்ணுறார். உங்க மெயிலும் இன்னிக்குதான் பார்த்தேன் கவி. சமீபத்தில் நீங்களும் திடீர்னு காணமல் போயிடீங்க.

ஹாய் தாமரை எப்படி இருக்கீங்க. சந்தோஷ் எப்படி இருக்கார். நீங்களும் முன்பு போல இல்ல. ரொம்ப பிஸியாயிடீங்க. நான் வரும் நேரம் நீங்க தூங்கிட்டு இருப்பீங்க.

மிஸஸ் உசேன் எப்படி இருக்கீங்க. பிள்ளைகள் நலமா? படபடக்கும் தனிஷாவ காணோம்னு தேடினீங்க. படத்துக் கொண்டே வந்துட்டேன். வீடையெல்லாம் இப்போ மேற்பார்வை இட போகலப்பா. ஒரேடியா கிரஹப்பிரேவசத்திற்குத்தான் போகனும். உசேன் நீங்க கேட்ட அந்த த்ரெட் ஏற்கனவே இருக்கு. மனோகரி மேடம் போட்டுருந்தாங்க. அதில் நிறைய பேர் நிறை, குறை சொல்லியிருக்காங்க

மர்லி எப்படி இருக்கீங்க. மரியம், அஷ்ஃபாக் எப்படி இருக்காங்க. எங்க பார்த்தாலும் மர்லியோட புலம்பலாவே இருக்கே. அஷ்பாக் எப்படி? சாதுவா இருக்காரா இல்லை நல்ல சுட்டிதனம் பண்ணுறாரா. அன்னிக்கு நீங்க சாட்டிங் வந்தப்ப கிச்சனில் இருந்தேன் மர்லி. மர்யம ஸ்கூலில் சேர்த்தாச்சா. குழந்தைய மர்யமிடம் தனியா விட்டு போகாதீங்க. ரொம்ப கவனமா இருங்க மர்லி

ரூபி எப்படி இருக்க. ரீமாவ ப்ளே ஸ்கூலில் சேர்த்துட்ட போலிருக்கு. நீ போட்ட த்ரெட்டை இப்போதான் படித்தேன். நாம சாட்டிங்கில் பேசுவோம்

ஜலிலாக்கா என்ன ஊருக்கு போறீங்களா கொஞ்ச நாளைக்கு வரமாட்டேனு சொல்லியிருக்கீங்க. நானும் உடம்ப குறைக்க முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன். உங்க டிப்ஸெல்லாம் மெயிலில் காப்பி பண்ணி வச்சிருக்கேன். பிள்ளைகள் இருவரும் நலமா. மகனை ஊரில் சேர்த்து விட்டீர்களா.

சுகன்யா, இலா, என்னப்பா இன்னுமா நீங்க வரல. எனக்கு முன்னாடியே காணமல் போனீங்க. சரி உங்க பிஸி ஒர்க் முடிஞ்சதும் வாங்க.

வானதி எப்படி இருக்கீங்க. பையன், பொண்ணு இருவரும் நலமா? உங்க தோட்டம் எல்லாம் எப்படி இருக்கு. போட்டோ எடுத்து போடுங்க. கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஒரு நகைச்சுவை த்ரெட் போடுங்க வானதி. அந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.

சவுதி செல்வி எப்படி இருக்கீங்க. பிள்ளைகள் எப்படி இருக்காங்க. எக்ஸாம் எல்லாம் முடிந்து விட்டதா. பசங்களுக்கு உங்க மெயிலும் வந்திருக்குப்பா.

அன்பு சகோதரர் ஹைஷ் எப்படி இருக்கீங்க. மனைவி குழந்தைகள் நலமா. உங்களுடைய, மறைபொருள், விமான பயணமெல்லாம் படிக்கனும். ரொம்பநாள் ஆச்சு. கடலூருக்கு போனீங்களா/

மகேஷ்வரி, ப்ரபாதாமு நலமா இருக்கீங்களா? ஹாய் சோனியா நாம ஒரே வயசானு தெரியல. ஏன்னா உங்க வயசபத்தி பெரிய டிஸ்கஷனே நடந்திருக்கு. இருந்தாலும் முதல்லே உங்கள தங்கச்சினு சொல்லிட்டேன். சோனியா தங்கச்சி எப்படி இருக்கீங்க.

சந்தனா நலமா? மஹா உடம்பு இப்போ நல்ல குணமாயிடுச்சா. அர்ஜூன் அம்மா (உமா) எப்படி இருக்கீங்க. அர்ஜூன் சேட்டையை ரசித்தவண்ணம் இருக்கீங்களா?

அதிரா எப்படி இருக்கீங்க. அதிராவையும், ரேணுவையும் இங்க விசாரிக்க கூடாது. சமைத்து அசத்தாலாமில் போய்தான் விசாரிக்கனும். வரேன் இந்த வாரம் சாதிக்கா அக்காவோடது நிறைய செய்யனும்.

தேவா எப்படி இருக்கீங்க. வெங்கி எப்படி இருக்கார். என்ன தேவா இது ரொம்ப நாளா ஆளைக் காணோம்

ரசியா நலமாப்பா நீங்க. உங்களோட மெசேஜ் பார்த்தேன்ப்பா. மெயில் பண்ணுறேன். உங்களுக்கு. பிள்ளைகள் அனைவரும் நலம்தானே. என்ன குட் நியூஸ் இன்னும் சொல்லலியே

வனி என்னப்பா மின்னல் மாதிரி வந்து போறீங்க. யாழினி என்ன பண்ணுறாங்க. சிரியா தொடர் என்னவாயிற்று அதையும் தேடி எடுக்கனும். நீங்கள் நலம்தானே

ஹரிகாயத்திரி எப்படி இருக்கீங்க. நீங்க வந்ததும் நான் பிஸியாயிட்டேன். சென்னையில் வெயில் கொளுத்துதுனு கேள்விபட்டேன்.

ஹாய் ஜெயா நலமா? ஹரி, ராதை நலமா

சீதாஅம்மா எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா?

உத்தமி ஊரில் இருப்பீங்க அம்மா பக்கத்தில். அம்மா நல்லாயிடுவாங்க. கவலை வேண்டாம்

மாலதி அக்கா உங்க சமையல் நிறைய செய்தேன் ஆனால் அதில் இன்னும் போடவில்லை. அதற்குள் முடிந்து விட்டது.
லக்ஷ்மி, உத்ரா, இமா, ரிகா, சுரேஜினி, எல்லோரும் நலமா? இன்னும் யாரெல்லாம் விட்டேன் என்று தெரியல. எல்லோருக்கும் ஒரு ஹாய்.

10 நாள் காணமல் போனதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா என்று நினைக்க வேண்டாம்.

ஹாய் தனீஷா

நலமா? மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

நானும் வந்துட்டேன் மஹேஸ்வரி லஷ்மி
எல்லோரும் வாங்கப்பா..

ஹாய் தனிஷா, மஹேஸ், பிரமிளா.....
நலமா பா?
மகேஸ்... உங்கள தான் தேடிகிட்டு இருந்தேன். யாரோ காலைல போர் அடிக்குது.. சேட்ல நீங்களாவது வாங்களேன்னு கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க பா... பாவமேனு வந்து உக்காந்திருந்தா... ஆள காணோம்... என்ன செய்யலாம் அவங்கள? சொல்லுங்க மஹீ

lakshmi

ஹாய் தனிஷா, மஹேஸ், பிரமிளா.....
நலமா பா?
மகேஸ்... உங்கள தான் தேடிகிட்டு இருந்தேன். யாரோ காலைல போர் அடிக்குது.. சேட்ல நீங்களாவது வாங்களேன்னு கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க பா... பாவமேனு வந்து உக்காந்திருந்தா... ஆள காணோம்... என்ன செய்யலாம் அவங்கள? சொல்லுங்க மஹீ

lakshmi

தனிஷா,

முதுகுவலிதான் காரணமா? எப்பவும் கவனமாக இருங்கள்.

இரண்டாவது மகன் பிறந்த பிறகு எடை அதிகமானதால் நானும் முதுகுவலியால் அவதிப்பட்டேன். கஷ்டப்பட்டு எடை குறைத்தபின்னும் உடன்பிறவா சகோதரி போல் என்னுடனே இன்னும் இருக்கிறது. ஆனால் முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை.

சந்தனா,

என்னா நீங்களும் டாட்டா சொல்றீங்க? அவ்வப்போது வருவீர்கள் என்பது ஆறுதலளிக்கிறது.

ஹாய் ஹாய் நான் ரொம்ப நலம் பா. அப்புரம் என்ன கேட்ட அனைவரும் நலமா. என்ன கேட்காத அனைவருக்கும் ஒரு ஹாய் மட்டும் தான்.தெரியாம என் வயதை சொல்லி விட்டேன். சொல்லி விட்டு நான் படும் பாட நான் என்னனி சொல்லுவேன் அத எப்படி சொல்லுவேன்.

சோனியா அக்கா அக்கா அக்கா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

லஷ்மி யாரை சொல்றீங்கனு தெரிஞ்சா என்ன பண்ணலாம்னு சொல்றேன்.

அன்புடன்
மகேஸ்வரி

ஆமாம் தனிஷா, எங்கப் பாத்தாலும் மர்ழியாவின் புலம்பல்ஸ்தான். இதுல கிளி வளர்க்கிறது எப்படின்னு வேற கேட்டுருக்காங்க!! அதனால இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம் மர்ழியாவிடமிருந்து ( வேறென்னா, புலம்பல்களைத்தான்!!)

ஒரு வேளை குழந்தைகளை சூப்பர்வைஸ் செய்றதுக்காக கிளி வாங்கப் போறாங்களோ?

ஷாதிகா அக்காவுக்கு என்னா சந்தோஷம் பாருங்க, மர்ழியாவை வார்றதுக்கு கூட ஒரு ஆள் சேந்துடுச்சே!!

மர்ழியா, நோ அதர் வே. வனிதா வர வரைக்கும் நீங்க எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகணும்!!

ஹாய் தனிஷா,
இப்போ உடம்பு எப்படி இருக்கு பா? நீங்க முதல்ல உடம்பை பாத்துக்கோங்க... அறுசுவைக்கு வர முடியலனாலும் பரவாயில்லை...

மிஸஸ் ஹுசெய்ன்... எப்படி இருக்கீங்க? உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது.. வீட்டில் குழந்தைகள் நலமா?

lakshmi

தனிஷா அக்கா எங்க போய்டிங்க. இந்த தங்கச்சியிடம் பேச ஆசை இல்லையா. ஓகே உடம்ப பார்த்துக்கோங்க. சரியா மருந்து சாப்டிங்க. அப்புரம் குட்டி பாப்பாவையும் பத்ரமா பாத்துக்கோங்க. அடிகடி வந்து பேசுங்க. ஓகே வா. இது உங்க அன்பு தங்கையின் வேண்டுகோள்.

சோனியா அக்கா அக்கா அக்கா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்