ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு தேர் செய்வது எப்படி?

தேதி: April 27, 2009

4
Average: 3.5 (4 votes)

இந்த ஐஸ்க்ரீம் குச்சி தேரை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

 

ஐஸ்க்ரீம் குச்சி
கலர் பேப்பர்
சம்கி
பெவிகால்
கத்திரிக்கோல்
பெல்
தூண் போல் வைப்பதற்கு தீர்ந்த நூல்கண்டு குழாய்

 

தேர் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் அடியில் இரண்டு ஐஸ்க்ரீம் குச்சியை நீளவாக்கில் வைக்கவும். அந்த இரண்டு குச்சியின் நடுவில் பெவிகால் தடவி ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை வைக்கவும். அதன் பக்கத்தில் மற்றொரு குச்சியை வைக்கவும். பார்ப்பதற்கு ப்ளஸ் குறி போல் இருக்க வேண்டும்.
மூன்றாவதாக வைக்கும் இரண்டு குச்சிகள் முதல் வரிசையில் நீளவாக்கில் வைத்திருக்கும் இரண்டு குச்சிகளுக்கும் சற்று தள்ளி வைத்து பெவிக்காலால் ஒட்டவும்.
நான்காவதாக வைக்கும் வரிசையில் இரண்டாவதாக வைத்திருக்கும் படிமானமாக இருக்கும் இரண்டு குச்சிகளுக்கும் சற்று தள்ளி வைத்து ஒட்டவும்.
இதே போல் மாற்றி மாற்றி நீளவாக்கில் நான்கு வரிசைகளும், படிமானமாக நான்கு வரிசைகளும் குச்சிகளை வைத்து ஒட்டிக் கொள்ளவும்
அதன் பின்னர் திருப்பி அடிபாகத்தை மேலே வைத்து அதில் பெல் மற்றும் சம்கியை பெவிக்கால் கொண்டு ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
மேலே செய்தது போல் குச்சிகளை வைத்து நீளவாக்கிலும், படிமானமாகவும் நான்கு வரிசைகள் செய்து தேரின் அடிபாகம் தயார் செய்துக் கொள்ளவும். அதில் சம்கியை மட்டும் வைத்து ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
தீர்ந்து போன நூல் கண்டில் கலர் பேப்பரை சுற்றிலும் ஒட்டவும். இதே போல் நான்கு நூல் கண்டிலும் கலர் பேப்பரை ஒட்டி எடுத்துக் கொள்ளவும்
தேரின் அடிபாகத்தில் நான்கு மூலைகளிலும் கலர் பேப்பர் ஒட்டிய தூணை வைத்து பெவிக்காலால் ஒட்டவும்.
காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் தேரின் மேல் பாகத்தில் உள்ள நான்கு மூலைகளிலும் பெவிக்கால் தடவி அதை நான்கு தூண்களில் மேல் வைத்து ஒட்டவும்.
குறைந்த செலவில் அழகிய தேர் ரெடி. தேரின் உள்ளே நீங்கள் விரும்பிய சிறிய சாமி சிலைகள் அல்லது பொம்மைகளை வைத்து அலங்கரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அறுசுவையில் வரும் ஐஸ்க்ரீம் குச்சி கைவினைக் குறிப்புகள் எல்லாம் ஐஸ்க்ரீம் போலவே இருக்கிறது. :-)
அழகான தேர் தனலக்க்ஷ்மி. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்