US தோழிகளே, Dollar store குறித்து ஒரு கேள்வி!

இங்குள்ள ‍டாலர் ஸ்டோரில் எல்லாமே மலிவாக கிடைக்குமென்பது பொதுவா எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதே சமயம், எல்லா பொருள்களையும் நம்பி வாங்கலாமா என்பது என் நீண்ட நாளைய சந்தேகம்! அதுபற்றி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணினால் என்ன என்றுதான் இந்த த்ரெட். வாங்க தோழிகளே, இதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதை, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

உணவுக்கான விஷயங்கள் (பாத்திரங்கள், பண்டங்கள்) அங்கு வாங்க வேண்டாம் என்று தான் நினைக்கிறேன்... மற்றபடி சிறு சிறு வீட்டு உபயோக சாமான்கள் வாங்குவது தவறில்லை தான்... என்னுடைய பான்ட் சற்று தையல் விட்டிருந்ததால் அங்கு நூல் வாங்க சென்றேன்... அனைத்து கலரிலும் நூல், ஊசி, கத்தரிக்கோல் உடன் ஒரு pack வாங்கினோம் - ஒரு டாலருக்கு நல்ல உபயோகம்... ஹேர் கிளிப், அடுப்புக்கு போடும் அலுமினியம் பாயில், ஸ்க்ரப் - இது போன்ற சிறிய சாமான்களுக்கு நல்ல இடம்... ஆனால் எலக்ட்ரானிக் சாமான், நீண்ட நாள் உபயோகம் என்றால் வேண்டாம்... ஒரு முறை அலாரம் கிளாக் வாங்கி வந்தோம் - சில நாட்கள் மட்டுமே வந்தது... அலாரம் வைக்கும் திருவி உடைந்து போய் விட்டது..... காசுக்கேத்த தோசை தான் கிடைக்கும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நீங்க சொல்வது ரொம்ப சரி சந்தனா. நானும் பசங்களுக்கு சின்ன சின்ன விளையாட்டு சாமான்கள், கலரிங் ஃபுக்ஸ், கிச்சனுக்கு தேவையான வாஷ் க்ளாத், ஸ்பான்ச், கரண்டி போன்ற பொருட்களை வாங்குவேன். கட்டாயம் உணவு பொருட்கள் மற்றும் உடம்புக்கு போடும் லோஷன், சோப் போன்றவை அங்கு வாங்கவே மாட்டேன்.
சமீபத்தில் என்னுடன் பணி செய்யும் ஒருவர், இதெல்லாம் ப்ராண்ட் நேம்மாக இருந்தால் வாங்குவதில் ஒன்றும் தவறில்லை என்று வாதிட்டார். எனக்கென்னவோ அதில் உடன்பாடில்லை. இந்த ப்ராண்ட் நேம்முடன் விற்க்கப்படும் பொருட்கள் ஒருவேளை போலியா இருக்கலாம் என்பது என் எண்ணம். உதாரணமா, கிட்கேட் ப்ராண்ட் கேன்டீஸ்‍‍ஐ எடுத்துக்கொள்வோம். அதே மாதிரி, லோஷனும் அப்படிதான். பக்கத்துக்கடையில் 2, 3 டாலருக்கு விற்க்கப்படும் அதே லோஷன் ஒரு டாலருக்கு இங்கு கிடைத்தால், அது தரம் குறைந்தது என்றுதானே அர்த்தம்?! அதுதான், மற்ற தோழிகளின் கருத்தை தெரிந்துகொள்ளலாம் என்று. எங்கம்மா எப்பவும் ஒன்று சொல்வார்கள், எல்லாம் ‍"மாவுக்கேத்த பணியாரம்தான்" என்று. நீங்களும் அதே மாதிரி சொல்லி இருக்கிங்க! அட, காலங்கார்த்தால தோசை, பணியாரம் என்று ஒரே டிஃபன் ஐயிட்டம்ஸ்சா பேசவும், இப்பவே பசிக்குதே!! : ) சரி, நான் போய் என் ஓட்ஸ் சாப்பிடுகிறேன்! ஓகே, உங்க உடனடி பதிலுக்கு நன்றி சந்தனா! அப்புற‌ம் பார்க்க‌லாம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டாலர் ஸ்டோரில் எல்லாமே டாலர் என்று தான் போட்டிருப்பார்கள். நானும் அதை நம்பி ஒரு அழகிய பூச் சாடியை கொண்டு போய் லைனில் நின்று பில் போட்டால் $20 என்றார்கள். எனக்கு மயக்கம் வராத குறை தான். திரும்ப வைக்கவும் மனமில்லை. என் கணவர் அதை எனக்காக வாங்கி தந்தார். அதிலிருந்து எப்போதாவது போனால்( என் கணவ்ருக்கு அந்த கடை என்றாலே அலர்ஜி) விலை கேட்டு விட்டு தான் எடுப்பேன். கரண்டிகள், சிறு விளையாட்டு பொருட்கள், பூக்கள் நன்றாக இருக்கும். சில விளையாட்டு பொருட்கள் வீட்டிற்கு வரும் முன்பு உடைந்து விடும்.

ஹாய் சுஸ்ரீ, எப்படி இரூகிறீர்கள்?ஓட்ஸ் கஞ்சியா.........எல்லாமே மாறியாச்சா?இது பற்றி பேச இது இடமில்லை.

நீங்களும்,சந்தனாவும் சொல்கிற மாதிரி கிச்சன் க்ளாத்ஸ்,சில பொருட்களை மட்டும் வாங்களாம்.நான் இங்கே வந்த புதிதில் அடிக்கடி செல்வதுண்டு.இப்பொழுது சுத்தமாக இல்லை.
நான் இது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லலாம் என நினைக்கிறேன்.நாங்கள் ஜப்பானில் இருந்த பொழுது அங்கேயும் இது போல் கடை(100 yen shop) உண்டு.அங்கே உள்ள அனைத்து பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு தரமானவை.நான் இந்தியா செல்லும் போது கூட அங்கே நிறைய பொருட்கள் வாங்கியதுண்டு.ஜப்பான் மக்கள் எதிலும் தரம் எதிர் பார்ப்பவர்கள்.இதனால் சைனாவிலேயே தயாரிக்கப்பட்ட அனைத்தும் அவ்வளவு தரமானவை.

இங்கே சொல்லவே வேண்டாம்.சைனா...சைனா...சைனா ப்ராடக்ட்ஸ் எங்கே திரும்பினாலும் ஆனால் இங்கேயும் நல்ல தரமான கடைகளில் பொருட்களும் தரமானதாக உள்ளது சைனா தயாரிப்பேயானாலும்.

சில சமயத்தில் Dollar shop ல் கிடைக்கும் USA ல் தயாரித்த பொருட்கள்,சில இந்திய பொருட்கள் கூட,மற்ற நாட்டு பொருட்கள் என பார்த்து தவிர்க்க முடியாத நேரத்தில் வாங்கலாம்.

என்ன!!!ரொம்ப போட்டு தள்ளிட்டேனா?அத ஏங்க கேட்கறீங்க....நான் ஆரம்பத்தில் நிறைய பொருட்கள் வாங்கி,வீணாகிப்போயி ஏமாற்றப்பட்டு,ஏமாந்துவிட்டேன்.

bye
உமா.

சுஸ்ரீ, ஏதேச்சையாக இன்று காலை இந்த ஆர்ட்டிகள் என் கண்ணில் பட்டது. உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் சிறு குழந்தைகளுக்கு அங்கு விளையாட்டு பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

அந்த லின்க்:

http://articles.moneycentral.msn.com/SmartSpending/FindDealsOnline/dollar-store-deals-and-duds.aspx?GT1=33007

ஹாய் வாணி, உமா & வின்னி

முதலில் தாமதமான இந்த பதிவுக்கு மன்னிக்கவும். எப்படியோ விட்டு போயிருக்கு... : (
இன்று எதேச்சையா சமீபத்திய பதிவுகளை ஒரு க்ளான்ஸ் விடவும், இது கண்ணில் பட்டது. மிக்க நன்றி உங்கள் பதில் பதிவுகளுக்கு. வின்னி, மிகவும் பயனுள்ள லிங்க் கொடுத்திருக்கிங்க. தேங்ஸ். மீண்டும் ரொம்ப ஸாரி, லேட்டாக பார்த்ததற்கு!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்