என் மகன் பேச

என் மகன் வயது 4. அவன் இப்பதான் அம்மா,அப்பா,தாத்தா,அக்கா சொல்கிறான். பசி என்றால் புவ்வா,பால்,தண்ணி என்று கேட்கிறான்.என் மகன் பேச வழி சொல்லுங்கள்

அன்பு சகோதரி கிருத்திகா,

முதலில் ஆங்கில மருவரிடம் காண்பித்தற்க்கு என்ன சொன்னார்?. அந்த வைத்தியத்தை நிறுத்தாமல் இதையும் முயற்சி செய்து பார்க்கவும்,

மனித உடலில் பிராணவாயு செய்யும் தொழிலுக்கு ஏற்ப அதன் பெயர் மாறுபடும் (மொத்தம் 10 வாயுக்கள் உள்ளது) அதில் ”உதானன்” என்பது தான் பேசுவதற்க்கு ஆதாரமான வாயு. அது தான் நாபி கமலத்தில் இருந்து வருவது. இந்த உதானன் ஓட்டம் தடைப் பட்டால் பேச்சு சரியாக வாராது அதே போல் இந்த வாயுவின் ஓட்டம் வீரியமாக இருதால் வாய் ஓயாமல் பேசுவார்கள். நீஙகள் இருக்குமிட்திற்கு அருகாமையில் வர்ம வைத்தியம் இருந்தால் அவர்களால் இதை கண்டிப்பாக சரி செய்ய முடியும் (100%). நம்பிக்கையோடு சென்று பாருங்கள். பலன் நிச்சயம் கிடைக்கும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எனக்கு பதில் அனுப்பியதுக்கு மிக்க நன்றி சார். நான் 4 மாதமாக வர்மம் என் மகனுக்கு தருகிறேன்.speech thearpyயும் 1 year தந்தேன்

be happy

ஹாய்
எனக்கு இதற்கான ஆலோசனை சொல்ல தெரியவில்லை.ஆனால் உங்கள் ஆறுதலுக்காக ஒரு விஷயம் சொல்லிவிட்டு போகிறேன்
என் அம்மாவின் மாமா 5 வயது வரை பேசவில்லை ஏதோ ஐந்தாறு வார்த்தைகள் பேசுவாராம் மற்றதெல்லாம் செய்கை தான் கடை குட்டி வேறு...அன்று எதெதுவோ வைத்தியம் செய்து பேச தொடங்கினாராம்.
பிறகு அவர் வாயை மூட யாராலும் முடியவில்லை...இன்றும் அவரை எல்லோருக்கும் பயம் அப்படி பேசுவார் அவர் வேலையும் அது சம்மந்தப்பட்டது சரியான வாய் சாமர்த்தியம்
தைரியமாக இருங்கள் பேச்சு கொடுத்து கொண்டே இருங்கள்...சும்மா பேச வைப்பதற்காக நாம் வளவளவென்று கஷ்டபடுத்தாமல் குழந்தைக்கு விருப்பமானவைகளை பற்றி பேச வைக்க முயலுங்கள்..வாழ்த்துக்கள்

அன்பு சகோதரி,

எந்த வைத்தியமானாலும் நம்பிக்கைதான் மிக முக்கியம். எனக்கு தெரிந்து 20 குழந்தைகளுக்கு மேல் பேச்சு மற்றும், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலமானதை நேரில் பார்த்தும் இருக்கிறேன், வைத்தியமும் செய்து இருக்கிறேன். அதனால் கவலை படவேண்டாம். உதானன் ஓட்டம் சரியாக சில காலம் பிடிக்கலாம்.

முயற்சி திருவினையாக்கும்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க மகிழ்ச்சி haish sir& thalika medam. என் மகனிடம் பேசிகிட்டுதான் இருப்பேன்.100 english &tamil pictureகான்பித்து 1 எடுக்க சொன்னால் சரியாக எடுப்பான்.30 Rhymesக்கு action சரியாக செய்வான் 1 வயதில் இருந்து.ஆனால் பேசவில்லை.

be happy

கவலை படவேண்டாம் சில குழந்தைகளுக்கு கொஞ்சம் லேட்டாக பேச்சு வரும், ஒரு சில வார்த்தைகள் சொல்கிறான் இல்லை யா அபப் கவலை வேண்டாம், அடிக்கடி பார், பிள்ளைகள் நிறிஅய இருக்கும் இடங்களுக்கு கூப்பிட்டு செல்லுங்கள்.
இல்லை நர்சரியில் சேர்த்து பாருஙக்ள், அங்குள்ள பிள்லைகளை பார்த்து சீக்கிரம் பேச ஆரம்பிக்கலாம், எஅதற்குமே சகோதரர் ஹைஷ் சொன்ன மாதிரி நம்பிக்கையோடு இருங்கள்.

Jaleelakamal

சகோதரர் ஹைஷ் எப்படி இருக்கீங்க? எங்க வீட்டிற்கு அருகில் எங்க neighbour குழந்தைக்கும் இப்படி தான் இருந்தது அவனுக்கு இப்ப 4 வயது. அவங்களுக்கு காண்பிக்காத டாக்டர்கள் இல்லை. எல்லா டாக்டர்களுமே அவனுக்கு ஒன்றும் இல்லை போக போக சரியாகிடும்னு சொல்றாங்க. ஆனா அவன் 2 1/2 வயது வரை ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை, அவங்க அம்மா அப்பாவுக்கு அப்படி ஒரு கவலை 3 வயது முடிந்ததும் ஸ்கூலில் சேர்த்தார்கள், அங்கு போனதிலிருந்து அவன் நிறைய வார்த்தைகள் பேச ஆரம்பித்து விட்டான். நிச்சயம் நீங்க சொன்னது போல வர்ம வைத்தியம் செய்ய சொல்லி அவர்களுக்கு சொல்லாம்னு இருக்கேன். ஆனால் அவனுக்கு இப்போ என்ன பிரச்சனை என்றால் நாம என்ன வார்த்தை சொல்றோமோ அதை தான் அவன் சொல்கிறானே தவிர அவனுக்கு நாம் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை, இப்போ சாப்பிட்டியா தம்பின்னு கேட்ட கொஞ்ச மழலையில் அவனும் அதையே கேட்கிறான் நிறைய நேரங்களில் பதில் சொல்லவே தெரிவதில்லை. இன்னும் ஒரு வேதனை என்னவென்றால் அவனுக்கு எதுவும் கேட்க தெரியவில்லை என்றால் பேச முடியவில்லை என்றால் அது கோபமாக(ஆக்ரோஷமாக) தான் வெளி வருகிறது. இந்த நிலையை மாற்ற முடியுமா இல்லை இதற்கும் வர்ம வைத்தியத்தில் சரி செய்ய வழி இருக்கிறதா?.
கிருத்திகா நிச்சயம் உங்க பையன் சீக்கிரம் பேசுவான் கவலை வேண்டாம். ஜலீலா மேடம் சொன்னது போல் நர்சரியில் சேர்த்து பாருங்கள், அங்க உள்ள atmosphere, பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து உங்க மகனை சீக்கிரத்தில் பேச வைக்க வாய்ப்பு உண்டு. நம்பிக்கையுடன் இருங்கள். உங்க மகனிடம் பேசிக் கொண்டே இருங்கள் அவன் உங்களிடம் எதுவும் கேட்கும்படி interact செய்யுங்கள்.

இங்கு அதைப் பற்றி எழுத சிறிது மனது கஷ்டமாக இருந்த்து. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை கூட வர்மத்தால் மட்டுமே சரி செய்யமுடியும். செய்து இருக்கிறார்கள். தேவைப்பட்டால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் என் குருவின் முகவரி தருகிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு. ஹைஷ்,

மூளை வள‌ர்ச்சி குன்றிய, நடக்க, உட்கார, பேச முடியாத பிள்ளைகளை வர்ம சிகிச்சையின் மூலம் குணமாக்க முடியுமா? முடியுமெனில் அதைக் குறித்து விவரமாகக் கூற இயலுமா? தொடர்புக்கான விவரங்கள் தரமுடியுமா?

நன்றி!!

ரொம்ப நன்றி ஹைஷ் அண்ணா நான் உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்