உல்லன் நூலை கொண்டு நிலைமாலை செய்வது எப்படி?

தேதி: May 7, 2009

4
Average: 3.5 (11 votes)

இந்த அழகிய உல்லன் நிலைமாலை செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

 

உல்லன் நூல் - 2 நிறங்கள் (டார்க், லைட்)
ஸ்ட்ரா
ஊசி
கத்திரிக்கோல்

 

உல்லன் நிலைமாலை செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உல்லன் நூலை மூன்று விரலில் பிடித்துக் கொண்டு 50 சுற்றுகள் சுற்றவும்.
நூல் சுற்றி முடித்த பிறகு அதை அப்படியே கையிலிருந்து உருவி எடுத்து விட்டு அதன் நடுவில் நன்கு இறுக்கமாக சுற்றிவிட்டு பூ தொடுப்பது போல் முடிச்சு போட்டு கொள்ளவும். மீதி நூலை வெட்டி எடுத்து விடவும்.
இதே போல் டார்க் நிற நூல்களில் 20 பூக்களும், லைட் நிற நூல்களில் 20 பூக்களும் செய்து கொள்ளவும்.
முடிச்சு போட்டு வைத்திருக்கும் இந்த நூல்களின் இரண்டு பக்கத்திலும் நடுவில் கத்திரிக்கோலை விட்டு நறுக்கிக் கொள்ளவும்.
இதை இரண்டு நிற நூல்களிலும் செய்து கொள்ளவும். இப்போது பார்ப்பதற்கு பூக்கள் போல இருக்கும்
நிலையில் தொங்கவிடுவதற்கு உல்லன் நூலை கதவு நிலையின் நீளத்திற்கு எடுத்து கொள்ளவும். பிறகு அதை 2 அல்லது 3 நூலாக எடுத்துக் கொண்டு மற்றொரு நிற உல்லன் நூலையும் இதே போல எடுத்து இரண்டையும் முறுக்கிக் கொள்ளவும்.
ஊசியில் நூலை இரட்டையாக கோர்த்துக் கொள்ளவும். முறுக்கி வைத்திருக்கும் இரண்டு கலர் நூலின் நுனியிலிருந்து 4 செ.மீ இடைவெளி விட்டு முடிச்சு போட்டு கொள்ளவும்.
ஸ்ட்ராவை இரண்டாக உடைத்து கொள்ளவும். ஊசியில் நூலை கோர்த்து முடிச்சு போட்டிருக்கும் பகுதியின் வழியாக விட்டு அதில் ஒரு உடைத்த பாதி ஸ்ட்ராவை கோர்க்கவும். பிறகு ஒரு லைட் கலர் பூவை எடுத்து பூவின் நடுப்பகுதியில் விட்டு கோர்க்கவும்.
அடுத்து ஒரு ஸ்ட்ராவை எடுத்து கோர்க்கவும். பிறகு ஒரு டார்க் நிற பூவை எடுத்து இதேப் போல் கோர்த்து கொள்ளவும்.
கடைசியில் முடிக்கும்போது ஊசியை கடைசி பூவினுள் விட்டு ஊசியை பாதி வெளியில் எடுத்து நூலால் ஒரு முறை சுற்றி விட்டு ஊசியை வெளியில் இழுக்கவும். மீதி நூலை வெட்டி விடவும்.
பூக்களை கோர்த்து முடித்தப் பிறகு பூக்கள் ஒரே அளவாக இருக்கும்படி கத்திரிக்கோலால் நறுக்கிக் கொள்ளவும்.
வலது புறத்தில் ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு என்ற கணக்கில் ஒரு ஸ்ட்ரா, ஒரு லைட் நிற பூ, ஒரு ஸ்ட்ரா மற்றும் ஒரு டார்க் நிற பூ என மாறி மாறி வைத்து கோர்த்து கொள்ளவும். இதைப்போல் இடது புறத்திலும் கோர்த்துக் கொள்ளவும்.
எளிமையாக செய்யக்கூடிய அழகிய உல்லன் நிலைமாலை தயார். இதனை நீங்கள் விரும்பிய நிறங்களிலும், ஒவ்வொரு ஸ்ட்ரா கோர்க்கும்பொழுது ஒரு முத்து மணியை கோர்த்தும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

mrs.priyakarthik

மிக அருமையாக உள்ளது.எல்லோரும் எளிமையாக செய்யலாம்.

mrs.priyakarthik

ஹாய் கவிப்ப்ரியா, ரொம்ப அழகா எளிமையா எல்லாருக்கும் புரியற மாதிரி இந்த நிலைமாலையை செஞ்சுக் காண்பிச்சிருக்கீங்க. ரொம்ப ஈசியா தெரியற மற்ற ஆர்ட் ஒர்க்கையெல்லாம் ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்த்தாலும் கூட எனக்கு சரியா புரியாது. ஆனால் இந்த நிலைமாலையை செஞ்சுக் காண்பிச்சிருக்கற விதம் எனக்கு நல்லா புரியறதோட மட்டுமில்லாமல் செஞ்சுப் பாக்கணும்னு ஆசையாவும் இருக்கு. இன்னைக்குதான் மற்ற எல்லா செய்முறைகளையும் பொறுமையா படிச்சுப் பார்க்கிறேன். குரோசே, தோடு, வளையல், வாழ்த்து அட்டைனு எல்லாமே பாக்க சூப்பரா இருக்கு. ஆனால் அதையெல்லாம் செஞ்சுப் பாக்கற அளவுக்கு எனக்கு வருமான்னு டவுட்டா இருந்துச்சு. பேப்பர் பேக் கட்டிங்கிலேயே எனக்கு ஏகப்பட்ட டவுட். கிளாஸ் பெயிண்டிங்கும் ( இத்தனை நாளா இதுக்கு ரொம்ப சூப்பரா வரைய தெரிஞ்சிருக்கணும்னு நினைச்சிருந்தேன் . ட்ரேசிங் பண்ற விஷயம் ஜாலி) , இந்த நிலை மாலையும்தான் எனக்கு உடனே செஞ்சுப் பாக்கணும்னு தோணுது. இத்தனை அழகா இதை எங்களுக்காக செஞ்சுக் காண்பிச்சதுக்கு உங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள். இமா, நர்மதா, விசா, ஸ்ரீகீதா மகேந்திரன், சிந்து, எஸ்தர், தனலெக்ஷ்மி, சாந்தி முத்துராமலிங்கம், திவ்யா, சரோஜினி பன்னீர்செல்வம், சுபா, ஜீவா மோகன், சாந்தி மோகனசுந்தரம், வைஷ்ணவி, கீதா ஆச்சல், செபா மற்றும் அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

'நிலைமாலை' என்று அழகான தமிழில் சொல்லியிருக்கிறீர்கள் கவிப்ரியா. :-) செய்முறை விளக்கமும் நன்றாக இருக்கிறது. நிலைமாலை அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
கவிப்ரியாவைப் பாராட்டத்தான் வந்தேன். சகோதரி தேவா அவர்களின் பதிவும் கண்ணில் பட்டது. சந்தோஷமாக இருக்கிறது தேவா. ஆனால், அதெப்படி உங்களுக்கு கைவேலை வராமல் இருக்கும்? :-) நிச்சயம் நீங்கள் எது செய்தாலும் அழகாகவே செய்வீர்கள்.
என் செய்முறைகள் தெளிவாக இல்லை என்றால் கட்டாயம் அந்தந்தக் குறிப்புகளின் கீழ் கேளுங்கள். முடிந்த வரை உதவுவேன். எனக்கு ஒரு பொழுதும் நான் எழுதும் குறிப்புகள் திருப்தியாக வருவதில்லை. யாராவது சந்தேகம் கேட்டால் சந்தோஷமாக இருக்கும். :-)
பாராட்டுக்கு மிக்க நன்றி தேவா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கவிப்ப்ரியா,
மிகப் பொறுமையுடன் அழகாக நிலைமாலையைச் செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
தேவா உங்கள் பதிவு பார்த்தேன். மிக்க நன்றி.
அன்புடன்,
செபா.

அச்சச்சோ, எனக்கு எப்படி ஈசியா சொன்னாலுமே புரியறது கஷ்டம். ஏன்னா அந்த அளவு ஆர்ட் ஒர்க் பண்றதுல எனக்கு அறிவு, ஆர்வம் குறைவு. இதுக்குலாம் முதல்ல தேவை பொறுமை. அதுதான் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கம்மி. உங்களோட குறிப்புகளெல்லாமே நல்லா இருக்கு. விளக்கமும் தெளிவா இருக்கு. நான் எனக்கு வராதுன்னு சொன்னதால உங்கள் விளக்கம் சரியாயில்லன்னு தயவுசெஞ்சு நினைச்சுடாதீங்க. இந்த விஷயத்தில் எனக்கு உங்க எல்லாரையும் பார்த்து ஆச்சரியமா இருக்கு. எப்படி இத்தனை பொறுமை இவங்களுக்கெல்லாம் இருக்குன்னு. எனக்குப் பிடிச்சதெல்லாம் Interior decoration ( அடுத்தவங்க பண்ணதை, கடையில் விக்கறதை வீட்டில் வாங்கி மாட்டறது என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஈசிதானே), Cleaning, Beauty routines, சமையல். இதையெல்லாம் விட ரொம்ப ஆசைப்பட்டு செய்யறது படிக்கறது. படிக்கறது. படிச்சுக்கிட்டே இருக்கறது.

4 வருஷம் முன்னாடி வீட்டில் உள்ள பர்னிச்சரையே வித விதமான டிசைன்ல எப்படி மாத்தறதுன்னு யோசிச்சு நானே செய்வேன். பேப்ரிக் பர்னிச்சரில், ஹால் கலருக்கு தகுந்த மாதிரி நானே அப்பப்ப மாத்துவேன். இப்பவும் Bunnings ல DYI Workshop போகலாம்னு இருக்கேன். அசெம்பிள் பண்றது, பெயிண்டிங், கார்டனிங், கார்பண்ட்ரி ஒர்க்னு இதுல இருக்கற ஆர்வம் நுணுக்கமான குரோஷே, பின்னல், தோடு விஷயங்களில் இல்லை. வீட்டில் உடைஞ்சதை சரி பண்ணறது, எலக்ட்ரிக் ரிப்பேர் பாக்கறது, ஃபேன் மாட்டறதுன்னு ன்னு பசங்க பாக்கற வேலையை சட்டுனு பண்ணிடுவேன். நான் ரொம்ப ரசிச்சு செய்யறது சம்கி ஒட்டி செய்யற வேலைப்பாடுதான். ஆர்ட்னா அது ஒண்ணு எனக்கு தெரியும்னு வேணா சொல்லிக்கலாம். நீங்க நியூசிலாந்தில்தானே இருக்கீங்க? எப்படி இருக்கு குளிர்? நான் கிறிஸ்துமஸ் நேரத்தில் அங்கே வரலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் பார்ப்போம். ஒரு கேள்வி, எப்படி இப்படி சின்னப் பொண்ணாட்டம் க்யூட்டா இருக்கீங்கன்னு உங்க சீக்ரட்டை சொல்லுங்களேன். இளமையின் ரகசியம் உணவா, உடற்பயிற்சியா அல்லது இயற்கையா? உங்க போட்டோ பார்த்ததிலிருந்து நான் கேக்கணும்னு நினைச்ச கேள்வி இது. உங்க பதிலுக்காக வெயிட்டிங் (இன்னைக்கு ஆபிசில் ப்ராஜெக்டில் ஒரு விஷயத்துக்காக எல்லாரும் மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கோம். நடுவில் அறுசுவையில் உங்க பதிவைப் பார்த்ததும் உடனே பதில் அடிச்சுட்டேன்).

சும்மா சொல்கிறீர்கள் தேவா. சரி, நம்புகிறேன். :))

இவ்வளவு வேலை செய்யத் தெரிந்து வைத்து இருக்கிறீங்க. பாராட்டுக்கள். DIY வகுப்புகள் போய் வந்து கற்றவற்றை எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நானும் ஃபர்னிச்சர் துணி எல்லாம் மாட்சிங்காய் மாற்றி வைப்பேன். எங்கள் வீட்டில் தச்சுவேலை விரும்பிகள் இருவர் இருக்கிறாங்க. அதனால் எனக்கு அந்த வேலை எல்லாம் கிடைக்காது. அவங்க டூல்ஸை எல்லாம் தொடவே விட மாட்டாங்க. :( ஆனால் டிசைனிங் அட்வைஸ் கேட்பாங்க.

இப்ப ரெண்டும் கெட்டான் ஸீசனாக இருக்கு. குளிர்தான். குளிரும் மழையும். மார்கழி நல்ல ஸீஸன். கட்டாயம் வாங்க. இங்க அப்போது எல்லா இடமும் போஹுடுகாவா (Pōhutukawa - New Zealand Christmas Tree) நிறையப் பூத்து இருக்கும்.

நீங்களும் பார்த்தாச்சா? :) ஒரு வேளை ஏழு வயசில எடுத்த படத்தைப் பார்த்து சொல்றீங்களோ!! :)) சந்தோஷம் தேவா. ஆனால் வெறுமே இமா என்று அழைத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன். :) ரகசியம் எதுவும் கிடையாது. என்னை போட்டோ எடுப்பவர் திறமை. இங்க அப்பிடித்தான் சொல்றாங்க. :)
மீண்டும் நன்றிகள்.

கவிப்ரியா, இங்கு இந்தப் பதிவு போட்டதற்காக மன்னிக்க வேண்டும்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்து காண்பித்திருக்கும் உல்லன் நிலைமாலையின் படம்

<img src="files/pictures/wall-hanging.jpg" alt="picture" />

அழகாக இருக்கிறது தாஹிரா பானு.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா, உங்கள் செய்முறைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இதை செய்து சில மாதங்கள் ஆகிவிட்டன. படமெடுத்து அனுப்ப இத்தனை நாட்களாகிவிட்டன. மீண்டும் சந்திப்போம் இமா.

படத்தை வெளியிட்டதற்கு நன்றி அட்மின்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

??? :)

‍- இமா க்றிஸ்

அதாவது நான் அந்தளவு சுறுசுறுப்புன்னு சொல்ல வந்தேன்...ஹி..ஹி...

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

கவிப்ரியா உங்கள் உல்லன் நிலைமாலை இன்றுதான் செய்து முடித்தேன். என்னோட கலர் காமினேஷன் ரெட்& யெல்லோ. தங்கள் குறிப்புக்கு நன்றி.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta