9வது மாதம்

அன்புத்தோழிகளே எனக்கு இது ஒன்பதாவது மாதம், இரண்டு நாட்களாக கால் வீக்கமாக உள்ளது. இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது உள்ளதா? சொல்லுங்கல் ப்ளீஸ்.

எப்படி இருக்கீங்க?வாவ் 9 மாசமாகிட்டா கூடிய சீக்கிரம் சுகமான முறையில் அழகான குழந்தையை ஈன்றெடுக்க என் வாழ்த்துகள்..

இது இயர்கைதான் சாப்பாட்டிற்க்கு உப்பை வறுத்து அப்புறமா யூஸ் பண்ணுங்க..பார்லி தண்ணீர் குடிங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்கும் அப்படி தான் இருந்தது. எந்த வீட்டு வைத்தியமும் எனக்கு சரி வரவில்லை. பிள்ளை பிறந்த பிறகு தானாகவே போய் விட்டது. முடிந்த வரை கால்களை தொங்க போடாமல் சோஃபாவின் மேலே தூக்கி வைத்திருங்கள். யூரின் நல்லா போவதற்கு பார்லி கஞ்சி செய்து குடியுங்கள். முள்ளங்கி உம் நல்லது என்று சொல்வார்கள். வேறு தோழிகளும் ஏதாவது வைத்தியங்கள் சொல்வார்கள்.
vaany

வாக்கிங் போனா கால் வீக்கம் குறையும்.வாக்கிங் ரொம்ப நல்லது.ஆனா உங்களால முடிந்த வரை நடங்க. கஷ்டப்பட்டு நடக்க வேண்டாம்.நடக்கும் போது சிரமமா இருந்தா கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துக்கோங்க.வேகமாவும் நடக்க வேண்டாம். சுரைக்கா, முள்ளங்கி, பார்லி கஞ்சி எல்லாம் சேர்த்துக்கோங்க. வாணி அக்கா சொன்ன மாதிரி காலை முடிந்த வரை தொங்க போடாமா இருப்பது நல்லது. உப்பு குறைச்சிருங்க. என்ன செய்தாலும் வீக்கம் குறையும் மீண்டும் வரும். டெலிவரிக்கு அப்புறம் தன்னால சரியாகிடும்.

நார்மல் டெலிவரில குழந்தை பெற்றிட வாழ்த்துக்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

சும்மா ஒரு விசிட் வந்த எனக்கு இதைப் பார்த்துட்டு போக மனசு வரலை.
சிறுகீரை தண்டை நசுக்கி, சீரகம், மிளகு, பூண்டு நசுக்கி சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டியதும் குடித்தால் நன்கு பலன் கிடைக்கும்.
பார்லி வாட்டர், சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, முருங்கைத்தண்டு சூப், சிறுகீரை, சீரக கசாயம் நல்ல மருந்து. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

You take too much of water. It is release to கால் விக்கம்.

Hai friend Use Pillow for legs while sleeping.

மேலும் சில பதிவுகள்