வணக்கம் தோழிகளே,
அழகு குறித்து உங்களின் கேள்விகளை இங்கே தொடரலாம்.
புதிதாய் இப்பகுதிக்கு வருவோர்,தயவுகூர்ந்து பகுதி 1 ல் பார்வையிட்டு தங்களின் சந்தேகம் ஏற்கெனவே கேட்கப்பட்டதா? பதில் அளிக்கப்பட்டுள்ளதா என கவனித்து விட்டு இங்கே வந்து மற்ற சந்தேகங்களை கேட்கவும்.இது அனைவருக்கும் பயன்படும் நோக்கம் தானே தவிர யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அழகு குறிப்புகளை எளிதில் தேட...
தோழிகளுக்கு பகுதி - 1 ஐ தேட வசதியான கீழே உள்ள லின்கை கொடுத்துளேன்.எளிதில் கண்டுபிடிக்க முடியாதோர் இதன் முலம் உள்ளே சென்று பார்வையிடுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/12454#comment-74356
மீண்டும் சந்திப்போம்
நன்றி
உமா.
அழகு குறிப்பு: தெரியுமா உங்களுக்கு!!!
தோழிகளுக்கு ஒரு சிறிய முக்கிய செய்தி:
பலர் நினைக்கின்றனர் கை,கால்களில்,shaving செய்வதால்(முடி நீக்கம்)கருத்து விடுகிறோம் என்று.ஆனால் அது ஒரு நல்ல Exfoliating treatment(தோலின் மேலுள்ள இறந்த செல்களை நீக்குதல்)என யாருக்கும் தெரியாது.Waxing
செய்வதால் தோலில் rashes ஏற்பட வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.இது சிலசமயங்களில் ஆபத்தாக அமைந்துவிடும்.Threading செய்து கொள்ளலாம்,மிகவும் எளிய முறை.
Shaving செய்யும் பொழுது முடியின் வளர்ச்சி போக்கிற்கு எதிராக,உதாரணமாக கால்களில் கீழிருந்து மேலாக செய்தல் வேண்டும்.
ஓகே,இன்று இது போதும்,இது பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் கேளுங்கள்.
மீண்டும் சந்திப்போம்
உமா.
ஹாய் உமா
ஹாய் உமா
பகுதி 2 இன்று தான் கண்ணில் பட்டது.
கை,கால்களில்,shaving செய்வதால்திருப்பி முளைக்கும்போது திக்கான முடி வளருது அது பிரச்சன இல்லையா.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
ஹாய் உமா
ஹாய் உமா
பகுதி 2 இன்று தான் கண்ணில் பட்டது.
கை,கால்களில்,shaving செய்வதால்திருப்பி முளைக்கும்போது திக்கான முடி வளருது அது பிரச்சன இல்லையா.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அழகு குறிப்பு...
ஹாய் சுகா:பொதுவாக சம்மரில் தான் அடிக்கடி செய்ய(ஷேவிங்) வேண்டியிருக்கும் இல்லயா! வெயிளின் கொடுமையில் அதிகமாக் உடுத்த முடியாததால்,சம்மரில் 2 அல்லது 3 வாரங்களுக்கொரு முறை செய்தால் போதும்.பிறகு செய்யாமல் விட்டு விட்டால் முடி தன்னாலே மென்மையாகிவிடும்.முழுவதும் கால்களை மறைப்பது போல் உடை உடுத்தும் பொழுது குளிர் காலங்களில் செய்யத்தேவையில்லை.
இதே தான் நான் சொல்லியிருப்பேன்,புருவங்கள் அடர்த்தியாக வளர,அடிக்கடி செய்தால் வளர்ந்து வரும்.
மீண்டும் சந்திப்போம்
உமா.
ஹாய் உமா
ஹாய் உமா
உங்களுடைய பதிலுக்கு நன்றி.நான் கிரீம் தான் பவிக்கிரணன் அதுக்கு நிறைய நேரம் எடுக்கும் இப்போது இது சுலபமானவழி நன்றி உமா.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
நெயில் பாலிஷ் எப்படி போடுவது?
அனைவருக்கும் என்னுடைய ஹாய்,
இன்று நகங்களில் நகப்பூச்சு போடுதல் பற்றி கூறலாம் என நினைக்கிறேன்.
1)முதலில் நெயில்பாலிஷ் ரிமூவரைக்கொண்டு பழைய பாலிஷ் நகத்தில் இருந்தால் சுத்தமான பஞ்சால் துடைத்துஎடுங்கள்.
2)பேஸ் கோட்(கலர் ஃபிரீ)முதலில் போட்டு பிறகு தேவையான கலரை 2 அல்லது 3 கோட்டிங் கொடுங்கள்.ஒன்றன்பின் ஒன்றாக சிறிது இடைவெளி நேரம் விட்டு அப்ளை செய்யுங்கள்.
3)இதன் மேல் ஒவர் கோட் அல்லது குயிக் ட்ரை அப்ளை செய்யுங்கள்.இது பலப்பலப்பாகவோ இல்லை ப்லைனாகவோ இருக்கலாம்.
இந்த முறை பொதுவாக விசேஷ காலத்தில் 2 அல்லது மூன்று நாட்களுக்கு சிறிதும் அழியாமலிருக்கும்.இதில் மிகவும் எளிய முறையில் பெயின்ட்டிங் செய்து கொள்ளலாம்.
அவரசரக்காலத்தில் சுத்தமான நகங்களில் நெயில்பாலிஷ் போட்டு பின் குயிக் ட்ரை கொடுத்தாலே போதும்.ஆனால் இது பேஸ் எதுவும் இலாமலிருப்பதால் எளிதில் உரிந்துவிடும்.
சாதாரண நேரங்களில் கூட நகங்களில் பேஸ்(கலர் ஃபிரீ அல்லது பலப்பலப்பானது)போடலாம்,நகங்கள் ஷைனிங்காக இருக்கும்.
பொதுவாக வீட்டில் வேலைகள் செய்யும் போது,முக்கியமாக பாத்திரங்கள் தேய்த்தால் நகங்கள் மிகவும் பாதிக்கபடும்.அவ்வப்போது நெயில் பாலிஷ் போடுதல் நல்லது.
நகங்கள்,விரலின் தன்மை(நீளம்.குட்டை)பொருத்து எப்படி இருக்க வேண்டும்?,ஷேப் எப்படியெல்லாம் செய்தால் நன்றாக தோற்றமளிக்கும்? ஈசியாக எப்படி பெய்ன்ட்டிங் செய்யலாம்? என பல உள்ளது.
தற்போது,நேரமின்மையால் இன்று இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
உமா.
ஹாய் உமா
ஹாய் உமா
எப்படி இருக்கிறிர்கள்?
நகப்பூச்சு பற்றிய உங்கள் குறிப்பு நல்லா பயனுள்ளதாக இருக்கு நன்றி
நான் நகப்பூச்சு போடுவதில்லை நிகம் பளுதபோடும் எண்டு எங்காவது விசேசத்துக்கு போனால் மட்டும் தான் போடுவது நிங்கள் நல்லது எண்டு சொன்னபடியால் எனி அட்டிகடி போடலாம் நன்றி உமா
என் மகளுக்கு நாலு வயது அவவுக்கு நகப்பூச்சு போடா நல்லா விருப்பம் அப்படி அடிகடி பொட்டல் பிரய்சனாய் இல்லையா?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
உமா இந்த
உமா
இந்த பதிவை இந்த இழை என்னுடைய பதிவுகளில் வருவதற்காக போடுகிறேன்... கேள்விகளை மெதுவாக கேட்கிறேன்...
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
நெயில் பாலீஷால்...
ஹாய் சுகா,
நெயில் பாலிஷில் எதுவும் பயங்கரமானதில்லை.அதனால் தாராளமாக உபயோகப்படுத்தலாம்.பாலிஷ் போடுவதால் நகங்களுக்கு சில நன்மைகளும் உண்டு.
வலது கையில் போடும் போது ஸ்பூனால் சாப்பிடுதல் நல்லது.எளிதில் உரியாவண்ணம் போடுதலும் நல்லது.
இது பற்றி நான் ஏற்கெனவே கூறியது போல் நிறைய தெரிந்து கொள்ளவேண்டியது இருக்கிறது.
நான் இன்றைய பதிவுகளை கொடுத்துவிட்டு போக வந்தேன்.அளவுக்கதிகமான வேலைகளிருப்பதால் ஏதேனும் சந்தேகமானால் கேளுங்கள்,மற்றபடி நேரமிருக்கும் பொழுது வேறு விவரங்கள் தொகுத்து கொடுக்கிறேன்.
தொடர்ந்து ஆதரவளித்துவரும் உங்களுக்கு
என் நன்றிகள்,
உமா.