உடனடி பதில் தேவை pls ------- humidifier

உடனடி பதில் தேவை

தோழிகளே எனக்கு உடனடி பதில் தேவை..மகளுக்கு 2 வாரமாக சளி இருமல்..மாறும் திரும்வ வரும் ஸ்கூளுக்கு போய் திரும்ப வரும்பொழுது தலை முழுக்க வியர்த்து ஈரமாகியிருக்கும் அதனாலோ என்னவோ மாறுவதில்லை..இதற்கு முன் டாக்டரிடம் காட்டி மௌர்ந்து கொடுத்தால் சீக்கிரம் மாறிவிடும்
இது 1 வாரம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டும் மாறவில்லை...இன்னொரு வாரமும் மருந்து கொடுக்க வேண்டும்...தொடர்ந்து இருமல் வந்துகொண்டே இருக்கு இரவில் ரொம்ம்ப கூடுதல்
இதற்கு மருத்துவர்கள் மருந்து தருகிறார்கள் இருந்தாலும் நான் ப்ரவுஸ் பன்னி பார்த்ததில் ஹியூமிடிஃபையர் உபயோகித்தால் பலம் தெரியும் எஙிறார்கள்..நான் வாங்கிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் யூ ஏ ஈ யில் வசிக்கிறேன் இங்கு நல்ல சுட்டெரிக்கும் வெயில் தான்..இந்த ஊர் க்லைமேட்டுக்கு ஏற்றது எது?
கோல்ட் ,ஹாட் என்று இரண்டு வகை உண்டு எது பலன் தரும்??அல்லது குளிர் ப்ரதேசங்களில் தான் இது பலன் தருமா....சீக்கிரம் உங்கள் பதில் தேவை ப்லீஸ்

உடனடி பதில் தேவை ப்லீஸ்...என் மகளை மருத்துவரிடமெல்லாம் காட்ட ரொம்ம்ப கஷ்டம் ...ஒரு வாயை திறக்க வைக்கவே ஆடி புரண்டு மிதித்து அட்டஹாசம் பன்னி விடுவாள் அதான் அடுத்தொரு முறை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்

தளிகா, ஸ்கூல் போகத் தொடங்கினால் எல்லா நோயும் வரும். எனது மகனுக்கு 2 வாரமா ஒரே சளியும், இருமலும். நீங்கள் 2 features உம் இருக்கின்ற humidifier வாங்குங்கள். உங்கள் வசதிற்கேற்ப மாற்றி போட்டு பார்கலாம்.warm வெதர் என்றால் கூல் மிஸ்ட் என்று செட்டிங் விட்டு மகளின் கட்டில் அருகே வைத்து விடுங்கள்.
வாணி

It does not matter. Try for cool mist for your weather. We used warm mist for our daughter during winter and it helped us a lot. Hope your daughter gets well soon.

Ishani

அன்புடன்,
இஷானி

appu ஹாய் தாலிக்கா,இந்த வெளிநாடு பொருத்தவரைக்கும் சளியும்,infectionum இருக்கதாங்க செய்யுது.எனக்கு மூன்று குழந்தைங்க இருக்காங்க.ஒருத்தர் மாற்றி ஒருத்தர் சளியோடுதான் இருப்பாங்க.அனுபவத்தில் சொல்றேன்,இங்கிலீஷ் மருந்தை 5 நாளைக்கு மேல் கொடுக்காதீங்க.அடிக்கடி மூச்சு விட திணறுகின்றானா எனப்பாருங்கள்.வாய் வழியாக மூச்சு விட்டுக்கொண்டு இருந்தால் நெஞ்சு சளி இருக்குன்னு அர்த்தம்.இதுப்போல் இருப்பதற்க்கு,பெஸ்ட் என்ன தெரியுமா?nebulaiser என்ற கருவி இருக்குது.(ஹாஸ்பிட்டலில் நீங்க அதை பார்த்திருப்பீங்கஎன்று நினைக்கிறேன்.)இல்லையென்றால் மெடிக்கலில் கேட்டால் தெரியும்.அதை நாம் வீட்டில் வாங்கி வைதுக்கொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.அதன் செயல் முறை விளக்கம் வாங்கும் இடத்திலேயே சொல்லித்தருவார்கள்.அதை அதிக சளி இருக்கும்போது குழந்தையின் மூக்கில் 10 நிமிடம் வைத்தால் நன்றாக கேட்க்கும்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

cold irundha neenga sudacare or vicks plugins kidaikkum...adhai plugin panna adhila irundhu varum vapour kuzhaindhaikku idhama irukkum...steam inhalation panna effect irukkum...

ஹாய் வாணி
உங்கள் பதிலுக்கு நன்றி...எபடி தான் சமாளிக்கிறதோ இப்படி ஒரு இருமல் நான் முதன்முறை பார்க்கிறேன்.இது எப்ப தான் மாறுமோ.இந்த ஸ்கூள் போன பின் வரும் இந்த மாதிரி ப்ரச்சனைகள் பிள்ளைகளுடன் ஒத்துவந்து எதிர்ப்பு ஷக்தி கெடைக்க எத்தனை மாதம் எடுக்கும்?

ஹாய் இஷானி
நான் நேற்று பார்த்ததில் சிக்கோ வார்ம் ஹியுமிடிஃபையர் பார்த்தேன் அதனால் வாங்கலை..இன்று போய் கோல்ட் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
மற்றுமொரு சந்தேகம் வீட்டின் ஹியுமிடிடியை எப்படி கண்டுபிடிப்பது?
ஹாய் அப்சரா
உங்க பதில் ஆசுவாசமா இருக்கு..எப்படி மூன்று பேரையும் மாறி மாறி சமாளிக்கறீங்க?எனக்கு ஒரு பிள்ளைக்கு வந்தே மண்டைய பிச்சுகிட்டு ஓடலாம் போல இருக்கு.
மூக்கெல்லாம் அடைஞ்சு மூச்சு விடும் சத்தம் கேட்க தான் செய்யுது..நேற்று ஹாஸ்பிடலில் நெபுலைசெர் போட சொன்னாங்க அதுக்கு போய் வந்தபின் தான் இந்த பதிவு...கைய்யை காலை புடிச்சு தலையை புடிசு அதை போடுறதுக்குள் படாத பாடு பட்டுட்டேன் இன்னமும் எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது அவளை புடிச்சு..இப்படி அழுக அழுக போட்டா பலனில்லைன்னு நர்ஸ் திருப்பி அனுப்பிட்டாங்க அவளுக்கு அதை முதன்முதலில் காண்பதால் பயம்..வீட்டில் வாங்கி வைக்கும் அளவுக்கு அது உபயோகப்படுமா விலை நாமே வாங்கும் அளவுக்கு தான் வருமா?
ஆனால் என்னை பொறுத்தவரை இங்கு தான் மகளுக்கு அவ்வளவு சீக்கிரம் எதுவும் வராது ஊருக்கு போனால் முதலில் வருவது வாந்தி டயோரியா அந்த கொடுமை பெரும்கொடுமை.ஆனால் இங்கு இதுவரை மூன்று முறை காய்ச்சல் வந்துள்ளது இரு முறை சளி ஆனால் அது ஒரு வாரம் தான்..இப்படி 15 நாளா இருமல் கண்டிப்பா ஸ்கூளுக்கு போன பின் வந்தது தான்...பஸ்ஸில் திரும்பி வர்ரப்ப அப்படியே முடியெல்லாம் வியர்வையால் நனஞ்சு போய் வருவா...பத்தாததுக்கு தண்ணி காலையிலிருந்து மதியம் வரை 1 சிப் தான் குடிச்சிருப்பா அதோட வியர்வையும்..எல்லாம் போக போக பழகும் போல,,.

ஹாய் நித்யா
இப்ப தான் ஹியுமிடிஃபையர் வாங்கினேன்...ரெண்டு ஆப்ஷனும் உள்ள ஹியுமிடிஃபையர் தான் வாங்கியிருக்கிறேன் இப்ப 1 மணிநேரமா ஓடுது இப்பவே கொஞ்சம் இருமல் குறைஞ்ச மாதிரி இருக்கு அது அது சமயத்துக்கு குறஞ்சதா இல்ல ஹியுமிடிஃபையரின் மகிமையான்னு தெரியல:-D
.

appu எப்படி இருக்கீங்க தலிக்கா?நீங்க சொல்றது சரிதான்.முதல் தடவை அதைப்பார்த்தாலே கத்தி ஆர்ப்பாட்டம் பன்ணிடுவாங்க. ஆறு,ஏழு வயதை தாண்டுரவரைக்கும் நாம ரொம்ப கஷ்டப்படணும்.உங்க குழந்தைக்கு இப்ப எத்தனை வயசுங்க.அடுத்தது எப்போங்க?

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்