குழந்தைகளை இடுப்பில் வைத்து தூக்குவதால் ஆபத்தா?

எனது மகளுக்கு இப்போது 2 வயதும் 3 மாதங்களாகிறது. வீட்டில் மாமியாரும் அவருடைய தங்கையும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மகளை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு தான் வேளை செய்வார்கள். காலை இருபுறம் போட்டு தான் தூக்குவார்கள். மகளும் அப்படி இருக்க விருப்பம் ஏனென்றால் சமையல் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்க. எனது பிரச்சனை என்னவென்றால் அப்படி இருபுறம் காலை போட்டு தூக்குவதால் ஏதாவது பின்விலைவுகள் ஏற்படுமா? நடையில் ஏதாவது வித்தியாசம் ஏற்படுமா?

ஹாய் லலிதா
அப்படி தூக்குவதால் பின்விளைவுகள் வருமா என்பது தெரியவில்லை..ஆனால் கண்டிப்பா அது பழக்கம் நல்லதல்ல..குறிப்பா கிச்சனில் பிள்ளைகளை வைத்து வேலை செய்வது நல்லதே அல்ல..பிள்ளைகளுக்கு அப்படி கட்டி பழக்கிவிட்டால் பிறகு அதை தான் விரும்புவார்கள்...எல்லா பிள்ளைகளும் கிச்சனில் எட்டி பார்க்க ஆசைப்படும் தொடக்கமே நோ நோ என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டால் கொஞ்ச நாள் தான் கேட்பார்கள் பிறகு மறந்து விடுவார்கள்...ஏறாளமான விபத்துகள் சமையலறையில் தான் நடக்கிறது..கவனமாக இருங்க...
என் பக்கத்து வீட்டுகாரங்க இப்படி குழந்தையை இடுப்பில் வைத்து தான் எல்லா வேலையும் செய்வார்கள் நானே பலமுறை சொல்லி பிறகு விட்டு விட்டேன்..வேலைக்கிடையில் கீழே இருக்கும் ரேக்கில் பொருட்களை எடுக்க குனிய பிள்ளையை அடிக்கடி கீழே இறக்கி விடுவார்கள்..ஒரு நாள் ஆநேரத்தில் குழந்தை கரெக்டா கதவினருகில் வந்து விளையாட பெரியவர்கள் ரேக்கில் எதையோ எடுக்க குக்கர் வெடித்து விட்டது.சீலிங்கே பிய்ந்து போகும் அளவுக்கு பலமாக வெடித்தது.மட்டுமல்ல மேலே போன குக்கர் மூடி எல்லாம் அதே வேகத்தில் கீழே விழுந்தது...அது மண்டையில் விழுந்திருந்தால்???பிள்ளை கதவு கிட்ட வந்ததால் பிழைத்தது இல்லையென்றால் என்னவாகியிருக்கும்.பெரியவர்களுக்கு தலையில் தீக்காயம் ஏற்பட்டது..அன்றோடு அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள்.
உங்களை பயப்படுத்துவதற்காக இல்லை இது மிகவும் ஆபத்தான பழக்கம் நிறுத்தி விடுங்கள்
என் மகளுக்கு 3 வயது சரியான குறும்பு வீட்டில் எல்லா பொருட்களையும் நோண்டுவாள் ஆனால் கிச்சனில் மட்டும் கதவை தாண்டி நுழைய மாட்டாள்..சின்னதில் ட்ரை பன்னுவாள் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் பெரிசானதும் அவங்களுக்கே புரிந்து விடும்.
ஒரு முறை நடக்க பழகும் வயதில் கிச்சனில் நான் கவனிக்கவில்லை மிக்சி ஜாரை இழுத்து காலில் போட்டு நகம் பிய்ந்து விட்டது..அது தான் இந்த பயம் வர காரணம்

நாங்கள் எல்லாம் பிள்ளைகளை இடுப்பில் தான் தூக்குவோம். அதனால் எந்த பின் விளைவும் இருக்காது. ஆனால் சமையலறையில் அனுமதிக்காதீர்கள் அது ஆபத்து.

மாமியார் என்பதால் நான் சொல்வதை ஏற்க மாட்டார்கள். நாங்களும் பிள்ளைகள் வளர்த்திருக்கிறோம். எங்களுக்கு தெரியாதா என்று கேற்பார்கள். நானும் நிறைய தடவை சொல்லிவிட்டேன். அவர்கள் வேலையை செய்வதற்காக தூக்கிக்கொண்டே செய்வார்கள். நான் சொல்வேன் அவளுக்கு ஏதாவது விளையாட கொடுத்துவிட்டு இடைக்கிடை பார்த்துக்கொள்ளுங்கள் என்று. but நான் office வந்த பிறகு அவர்கள் அதையே செய்கிறார்கள்.

Lalitha

லலிதா,
என் மனம் கேட்பதாயில்லை, அதுதான் இப்பதில் போடுகிறேன். குழந்தையை இடுப்பில் தூக்குவதால் எந்தப் பிரச்சனையுமில்லையென்றால், அதற்கு மேல் அதிகம் எதுவும் சொல்லாதீர்கள். ஏனெனில் குழந்தையைத் தாயில்லாதபோது பராமரிப்பதென்பது ஈசியான வேலையில்லை. உங்கள் குழந்தையைத் தூக்கி அன்பாகக் கவனிக்கிறார்களே அதுதானே முக்கியம். அதை எண்ணிப் பெருமைப்படுங்கள்.

மாமி என்பதால் என் கதையைக் கேக்கிறாரில்லை என மனவருத்தப் படவேண்டாம். அவவுக்கு அது, தன் பேரக்குழந்தைதானே, அப்போ பாசம் அதிகம் இருக்குமல்லவா. எனவே மனவருத்தப்பட்டு வார்த்தைகளில் காட்டிடாதீங்கோ.

சொல்வார்கள் ஒரு குழந்தை கிடைத்தபின்னர்தான் குடும்பத்தில் விரிசல்கள் ஆரம்பமாகுமென்று. இப்படிச் சின்ன சின்னச் சர்ச்சைகளால் மனதில் வெறுப்பு ஏற்பட்டு பின்னர் அது பெரிதாகிவிடும். மருத்துவ ரீதியாக குழந்தைக்கு செய்யக்கூடாத ஒன்றைச் செய்கிறார்கள் என்றால் நிட்சயம் கதைக்கத்தான் வேண்டும். இது சமைக்கும்போது சமையலறையில் வைத்திருக்கிறார்களென்றால் அது நல்லதல்லத்தான். அதுக்காக ஐயையோ கூடவே கூடாது என்று எப்படிச் சொல்வது. அடுப்புக்கு பக்கத்தில் கொண்டுபோகாதீங்கோ என்று மட்டும் சொல்லலாம். மற்றும்படி மாமியும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர்தானே, அவருக்கு நாம் புதிதாகச் சொன்னால் கோபம் வரத்தான் செய்யும்.

இப்படியும் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேலைக்குச் சென்றபின், குழந்தைக்கு ஒரு அடி கொடுத்து வரப்படாது கிச்சினுக்குள் என்றால், குழந்தை அழுதுகொண்டிருந்தால், அதை உங்களால் தாங்க முடியுமா. எத்தனைபேர் day care il விட்டுவிட்டு வேலைக்குப் போய் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு அவர்கள் அன்பாகத் தூக்கி வைத்துப் பார்க்கிறார்களே, அதைப் பெருமையாகச் சொல்லுங்கள் அப்போ மாமியின் மனம் இன்னும் குளிரும்.

உங்களை நான் தப்பாகச் சொல்லவில்லை. ஆனால் மாமியின் இடத்திலிருந்தும் நாம் சிந்திக்க வேண்டும். ஒரு தாயாக மட்டுமிருந்து சிந்திக்கக்கூடாது. அதோடு இப்படிச் செய்யக்கூடாது அப்படிச் செய்யக்கூடாதென்றால், நாம் வீட்டிலிருந்துதான் குழந்தையைக் கவனிக்க வேண்டும்.

எங்கள் வீட்டிலே நான் பிள்ளைகளை அம்மாவோடு விட்டுவிட்டு வெளியே போவதென்றால், சொல்வேன் இப்படிச் செய்யவேண்டாம், அப்படிச் செய்ய வேண்டாம் என்று. அதுக்கு அம்மா சிரித்துக்கொண்டே சொல்லுவா. உன் சட்டங்களை நீ நிற்கும்போது வை. நான் பார்க்கும்போது என் முறைப்படிதான் பார்ப்பேன் என்று. அது உண்மைதான். அதனால் மனம் வருந்தாதீர்கள். குழந்தை சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம். கவனமாகப் பார்க்க அவர்களுக்குத் தெரியும்தானே.

அவர்கள் தூக்கி வைத்திருக்காமல் வெளியே விளையாட விடும்போது தப்பித்தவறி குழந்தை எதிலாவது ஏறி விழலாம், எதையாவது வாய்க்குள் வைக்கலாம் இப்படியும் நடக்கலாம்தானே, அதுக்கும் சொல்வோம் கவனமில்லாமல் பிள்ளையைத் தனியே விட்டுத்தான் இப்படி ஆகிவிட்டதென்று.

நான் ஏன் இதை எழுதினேன் என்றால், ஐயையோ அப்படி விடாதீங்கோ என்றால் உங்களுக்கு இன்னும் கோபம் அதிகமாகி வீட்டில் பிரச்சனையும் இதனால் வந்துவிடும், எனவேதான் இருபக்கமும் சிந்திக்கச் சொல்கிறேன். என் மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன் தவறாக எடுத்திட வேண்டாம். கவலைப்படமல் இருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்படி தூக்கி வைப்பதால் சில குழந்தைகளுக்கு விலகி இருக்கும் இடுப்பு மூட்டு கூட சரியாகிடும்.. நம்ம அன்பான ஒரு பழக்க வழக்கத்தின் ஸ்பெஷாலிட்டி இது என்று கேள்விபட்டிருக்கிறேன்...எனவே கவலை வேண்டாம்...

நம்மையும் இப்படி தான் தூக்கி வளர்த்திருப்பார்கள்... நாம் தான் இப்போது ஸ்த்ரொல்லர் க்கு பழகி விட்டோம்... அது தான் இது வித்தியாசமாக தெரிகிறது உங்களுக்கு....

ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் சமையலறை என்றால் மிக்க கவனம் தேவை..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அதிரா. பெற்றவர்களின் பாசத்தைவிட தாத்தா, பாட்டி பாசம் மிக அதிகம். பல பிள்ளைகள் வளர்த்த அவர்களுக்குத் தெரியாத‌தா? ஒருவேளை அறியாமையால் செய்கிறார்கள் என்றால் பதமாகச் சொல்லவேண்டும்.

எப்படியாகிலும், லலிதா, வேலைக்குச் செல்லும் உங்களின் குழந்தையை உங்கள் குடும்பத்தாரே பார்த்துக் கொள்கிறார்கள் என்ற வகையில் கொடுத்து வைத்தவர். நேற்று "அவள் விகடனில்" ஒரு கட்டுரை படித்தேன், வேலை பார்ப்பவர்கள் யாரும் பார்ப்பதற்கு இல்லாத்தால் வீட்டில் தனியே விட்டு கதவைப் பூட்டிவிட்டு செல்வதைப் படித்து இன்னும் எனக்கு மனம் ஆறவில்லை.

மேலும், நீங்கள் சொல்லும் முறையில்தான் எங்கள் ஊரில் காலம்காலமாகத் தூக்கிவைத்துக் கொள்வோம். என் மாமியார் 4 மாததிலேயே அப்படித் தூக்கி வக்கச் சொல்வார்கள். அப்பதான் குறுக்கெலும்பு பலப்படும் என்றார்கள்.

லலிதா பாசம் நேசம் எல்லாம் கிச்சனுக்கு வெளியே போதும்..அதை நைசாக சொல்லி புரிய வைத்து விடுங்கள்.விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுங்கள் பிள்ளைக்கு அதனை மாமியாரிடம் விளையாட கொடுக்க சொல்லுங்கள்...இரு பெண்கள் இருப்பதால் ஒருவர் வெளி வேலை பார்க்க அருகில் விளையாட விட்டு மற்றவர் கிச்சனில் சமைக்கலாம்..ஒற்றை ஆளாக தான் கஷ்டம் இருந்தும் இங்கு நான் என்றும் இடுப்பில் வைத்துக் கொண்டு சமைத்ததில்லை.
இடுப்பில் வைத்து வேலை செய்வது என்றால் என்ன??சமையலே தான்.மற்றவை அப்படி சுலபமாக செய்ய முடியாது.
நான் அதை கற்றுக் கொண்டது என் அம்மாவிடம் தான் மகள் பிறந்ததும் முதலில் சொன்னது அது தான் என்ன தான் அழுது புரண்டாலும் சமைக்க வேண்டாம் என்று ஒத்திப் போடலாமே தவிற இடுப்பில் வைத்து சமைக்கலாம் என்று ஒரு போதும் பழக்காதே அது நல்ல பழக்கமே அல்ல என்று.
மற்றபடி மற்ற நேரத்தில் பாட்டி தாத்தா தூக்கி வைத்துக் கொண்டு பேரப்பிள்ளையை கொஞ்சுவதைக் கண்டால் சந்தோஷப்படாத அம்மாக்கள் யாருமே இல்லை

அணைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. உண்மையில் எனக்கும் மன ஆறுதல் குழந்தையை அவர்கள் பார்த்துக்கொள்வது. இருந்தாலும் குழந்தையின் நடையில் மாற்றம் கண்டதால் தான் அதை தெளிவு படுத்த விரும்பினேன். இருந்தாலும் நீங்கள் அணைவரும் சொல்வது போல அவர்கள் அன்பாக கவனிப்பதே ஆருதல் தான்.

Lalitha

அன்புடன் லலிதா எனக்கு அனுபவ ரீதியாக எதுவுமே தெரியாது.ஆனால் இப்போது பெற்றோர்களுக்கான நிறைய புத்தகங்கள் ஓடர் பண்ணி வாசித்து வருகிறேன்.அதில் இருக்கும் சிலதை பகிர்ந்து கொள்கிறேன் தேவையானதை உள்வாங்கிக்கொள்ளுங்கோ.

1.கிச்சனுக்குள் குழந்தைகளை நிச்சயமாக அனுமதிக்க வேண்டும்.
எப்போது? - புரிதல்,தன்னிச்சையாக நடத்தல் செயலாற்றல் என்பவற்றை ஒரு குழந்தை ஆரம்பித்த பின்னர். [2வயதுக்கு மேல்]

சமையலின் ஆயத்த நேரங்களில் குட்டி குட்டி வேலைகளை அவர்களிடம் கொடுத்து உதாரணமாக கேக் செய்யும் போது மாவை கப்பில் எடுத்து அவர்களின் கையில் கொடுத்து பாத்திரத்துக்குள் போடச்சொல்வது போன்றவை செய்யக்கொடுத்து அவர்களையும் உற்சாகப்படுத்தும்போது உணவில் ஆர்வமும் ,தாங்களும் ஏதோ பெரிய வேலை எல்லாம் செய்ய்யத்தொடங்கியதுபோல் திருப்தியும்,பங்களித்த பெருமையும் ,நேர்த்தியையும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்களாம்.

அடுத்து நாங்கள் அடுப்பை பற்றவைக்கும் போதும் அவனை ஒன் செய்யும் போதோ ,கிரைண்டரை இயக்கும் போதோ அதாவது சமையலின் பின்னிலைகளில் குழந்தையை பாதுகாப்பு கருதி கிச்சனுக்கு வெளியே அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் நீங்கள் குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு சமையலில் செலவு செய்யும் நேரம் குறைவடைவதால்[அதுதான் குழந்தையுடன் சேர்ந்து ஆயத்தம் செய்து வைத்துவிட்டீர்களே] அந்த குழந்தையும் சலித்துக்கொள்ளாமல் இந்த சூழ்நிலைக்கு பழக்கப்பட்டுவிடும்.

இது மற்றவர்களுக்கு எவ்வளவு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை.அனால் என் அக்கா குழந்தைகள் இப்படித்தான் ஆயத்தம் செய்யும்போது போது வந்து எல்லாம் செய்து தந்துவிட்டு[அதுதான் தமிழில் வெங்காயம் 1 எடு என்றூ சொன்னால் உள்ளியை எடுத்துத்தாறது போன்ற உபத்திரவங்கள்]சமைக்கும் நேரம் தாங்களாகவே ஓடி விடுவார்கள்.

அடுத்து எனது அபிப்பிராயம் நாங்கள் சமைக்கும் போது தலையில் மணம் பிடித்துக்கொல்ளாமல் தொப்பி எல்லாம் போடுறோமே ஆனால் குழந்தைகளை அவர்கள் போட்டிருக்கும் அதே உடுப்புடன் பொரியல் வறுவல் செய்தால் அவர்கள் உடைகளில் மணம்பிடித்துக்கொள்ளாதா?தலைமுடியில் மாற்றம் வராதா?

அடுத்து நேரடியாக உங்கள் சந்தேகத்துக்கு வருகிறேன்.இதை 2 அம்மம்மாக்களிடம் கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்கொண்டேன்.
அதாவது காலை இருபுறமும் போட்டுத்தூக்குவதால் ஒரு பாதிப்பும் இல்லையாம்.பேரக்குழந்தைக்கு செய்யும் இதே விளையாட்டைத்தானே உங்களூக்கும் உங்கள் கணவருக்கும் இதே அம்மாக்கள் செய்திருப்பினம்.அப்போ உங்கள் நடையில் மாற்றம் வந்ததா?[என் சொந்தக்கேள்வி அல்ல]அல்லது எம் அம்மாக்கள் கூடுதலானவர்கள் இதேமாதிரி இடுப்பில் குழந்தையும் அடுப்பில் கறியும் என்றூதானே வாழ்ந்தார்கள் அப்போ இதற்கு முந்திய சந்ததிகளின் நடையில் மாற்றம் இருக்கிறதா?இதெல்லாம் பிரம்மை லலிதா.விட்டு விடுங்கள்.

சுரேஜினி

ஆமாம் சுரேஜினி நானும் அப்படி தான் என் மகளுக்கு சின்ன வேலை கொடுத்துக் கொண்டே வேலை செய்வேன்...நான் அன்று சமைக்கும் காய்கறிகளை ஒரு பெரிய டப்பில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டு கொடுத்து கழுக சொல்லுவேன் கழுகோ கழுகோ என்று கழுகுவாள்.
பின்ன ப்ரெட்டில் ஜாம்,னட்டெல்ல தடவும் வேலை..பீன்ஸுக்கு இரு பக்கமும் ஒடிக்கும் வேலை,அது போன்ற வேலைகள் கொடுப்பேன் அப்பொழுதும் கிச்சனுக்குள் நோ நோ விடவே மாட்டேன் ஒருக்க நான் எண்ணையில் எதுவோ வறுக்க தான் எண்ணை காயவைத்திருந்தேன் கிச்சன்கிட்ட ஓடி வந்து கைய்யிலுள்ள ஒரு டாயை தூக்கி எறிய அது எண்ணையிலேயே விழுந்து எண்ணை முழுக்க தெரித்தது என் மேல் சில துளி தான் பட்டது அவள் வெளியே இருந்ததால் ஒன்னும் ஆகவில்லை...அவங்களுக்கு வேலை கொடுத்தாலும் கண் அவங்க மேலயே இருக்கனும் குறிப்பா ரொம்ப ஒரு நிமிஷம் சும்மா இருக்காத பிள்ளைகளை ரொம்ப கவனிக்கனும்..எதையாவது எறிந்து விடுவார்கள்.

மேலும் சில பதிவுகள்