ஹைய்யா..ஜாலி..நம்ம செல்வி பாட்டி ஆகிவிட்டார்கள்

ஸ்னேகிதி செல்வி அவர்களுக்கு சில நிமிடங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் பேரன் பிறந்து இருக்கின்றார்.வாருங்கள் அனைவரும் வாழ்த்துவோம்.
ஸாதிகா

சற்று முன் அண்ணன் தொலைபேசியில் பேரன் பிறந்து இருப்பதை தெரிவித்தார்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதிலும் சுகபிரசவம் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.தாய் சேய் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.புது பேரன் எல்லா வித நன்மைகளும் பெற்று,நீண்ட ஆயுளுடன் சிறப்பாக,வளப்பமாக, பெற்றோர் மட்டுமின்றி செல்விபாட்டியும்,இளங்கோ தாத்தாவும் மெச்சும் படி வாழ்வாங்கு வாழ இந்த சின்ன பாட்டி மனமார வாழ்த்தி பிரார்த்தனை செய்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

செல்வி அக்கா வாழ்த்துக்கள்.சுபா நல்லாஇருக்காங்களா?நல்லா பேரனைகவனித்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுதுதான் செல்வி அக்காவிடம் போன் செய்து பேசினேன்.பாட்டி,பேரன் மகள் சுபா அனைவரும் நலம்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

குட்டி பையன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். செல்வி மேம் வாழ்த்துக்கள். சுபாவுக்கும் சொல்லிடுங்க வாழ்த்தை. என் பையன் கிட்ட சொன்னா சந்தோசத்தில் புரியுதோ இல்லையோ குதிக்கிறான்.

எனக்கு சந்தோசம் தாங்கலை செல்வி மேம். சார் போன் செய்ததும் இந்த தலைப்பு தான் போடனும்னு நான் நினைச்சு ஓபன் பண்ணா ஸாதிகா மேம் அப்படியே போட்டிருக்காங்க. பாருங்க நீங்க பாட்டியானதில் எல்லோருக்கும் எவ்வளவு சந்தோஷம்னு. சுபாவை நல்லா பார்த்துக்கோங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹைய்யா செல்விமா பாட்டி ஆகிட்டீங்களா வாழ்த்துக்கள்.ரொம்ப சந்தோஷம்.குட்டிப் பையனுக்கும்,சுபாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.எந்த ஆஸ்பிட்டலில் சேர்த்திருக்கிங்க,குளுனி ஆஸ்பிட்டலா?.இந்த வாரத்தில் போன் செய்கிறேன் உங்களுக்கு.இனி நீங்க பிஸியோ பிஸி தான்.உங்க மெயில் பார்த்தேன்.ரொம்ப சந்தோஷம்.மெயிலுக்கு ரிப்ளை சீக்கிரம் செய்றேன்.

செல்விமா( பாட்டி ) வாழ்த்துக்கள்.. :-)

சுபா எப்படி இருக்காங்கமா ... பேரன் வந்த சந்தோசத்தில் எங்களை எல்லாம் மறந்துடதீங்கமா... சுபாவுக்கும் வாழ்த்தை சொல்லிடுங்கம்மா.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

குட்டி செல்லம் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள்.அக்கா சுபா எப்படி இருக்காங்க?சுபாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.இனிமே கொஞ்சம் பேரனோட பிஸி ஆகிடுவீங்க.அப்பப்ப அறுசுவைக்கும் விசிட் அடிங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

பாட்டியாக பதவி உயர்வு வாங்கிட்டீங்க... வாழ்த்துக்கள்... பாசமிக்க "யங்" கான பாட்டி தாத்தா கிடைக்கும் குழந்தைகள் குடுத்து வைத்தவர்கள்... எல்லாம் நல்லபடியா நடந்ததுல ரொம்ப சந்தோசம்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வாழ்த்துக்கள், ஏர்போர்ட்டில் தற்செயலாக பார்த்த போதுதான் தெரிந்தது, நேற்று கூட லதா இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக சொன்னார். இனிமேல்தான் லதாவிடம் சொல்லி வந்து பார்க்க சொல்கிறேன்.

மகளுக்கும், மருமகனுக்கும் என் வாழ்த்துகளை சொல்லவும். தாத்தா பாட்டி இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அக்கா உங்களுக்கும் உங்க கணவருக்கும் வாழ்த்துக்கள். பாட்டி ஆயாச்சு, தாத்தா ஆயாச்சு.
உங்க மகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரியபடுத்தவும்.
இனிமேல் இந்த பாட்டி அன்பு பேரனுக்கு தான் முதல் சலுகை எல்லாம் குடுப்பிங்க.
ம்... கலக்குங்க. பிசி பாட்டியாச்சு. வித விதமா பேரனுக்கு எல்லாம் ட்ரஸ் எல்லம் செய்து பார்த்து மகிழர ஆனந்தம் எல்லையில்லாதது.என் அம்மாவும்
பாட்டியானபோது எப்பவும் சொல்வாங்க முதலில் என் பேத்திக்கு தான் எல்லாம் என்று. அந்த நாள் நினைவு வந்தது. வாழ்த்துக்கள்..............
குட்டி பையனுக்கு நீண்ட ஆயூளோடு எல்லா சந்தோஷமும் பெற்று நீடுழி வாழ கடவுளிடம் வாழ்த்துகிறேன். என்ன பேர் எல்லாம் டைம் கிடைக்கும் போது சொல்லுங்க.

நான் நேற்றுத்தான் இவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். இன்னும் ஒரு செய்தியும் வரல அக்கா பெண்ணிற்கு குழந்தை பிறந்ததா என்ன என்று. தினமும் அறுசுவையை ஒரு பார்வை இடுவேன். உங்கள் news க்காகவே :) ரொம்ப சந்தோஷமா இருக்கிறது :)

பாப்பா யார் மாதிரி இருக்கிறார்? உங்கள் மகள் நலமாக இருக்கிறார்களா? மிகவும் விசாரித்ததாக கூறுங்கள். சீக்கிரம் பாப்பாவின் படத்தை போடுங்கள் :)

நீங்களும் உங்கள் உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்