குழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்?

பச்சையாக எது கொடுக்கலாம்? வேக வைத்து எது கொடுக்கலாம்?என் குழந்தைக்கு ஆறரை மாதங்கள் ஆகின்றது.வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம்? டாக்டர் சொல்வதை கேட்பதைவிட அனுபவமிக்க இந்திய தாய்மார்கள் சொல்வதை கேட்கவேண்டும் என நினைக்கிறேன்.இந்தியாவிலிருந்து cerelac வாங்கி வைத்துள்ளேன்.cerelac என்ன varieties கொடுக்கலாம்?

நங்கள் சுத்த சைவம்.

NewMom நீங்கள்குழந்தைக்கு கொடுக்கவிரும்பும் எல்லா உணவுகளையும் குழந்தையின் ஒரு வயதிற்குள் கொடுத்து பழக்கிவிடுங்கள் இல்லாவிட்டால் அதன் பின்பு அவற்றை கொடுத்து பழக்குவது கடினம். அத்துடன் ஃப்ரஸ்ஸான சிறிய துண்டுபழங்களை உடனுக்குடன் கிரைண்டரில்(மிக்ஸியில்) அடித்து சிறிதளவு நீர் அல்லது குழந்தை குடிக்கும் பால் விட்டு அடித்து கொடுக்கலாம்,அதனை ஒன்றவிட்ட ஒருநாள் கொடுக்கவும்,அத்துடன் எல்லாவகை உணவுகளையும் சமைத்தபின்பு அதனை நன்றாக கிரைண்டரில் அடித்து விட்டுஅதனை சிறியகரண்டியால் ஊட்டலாம் அல்லது யூஸ் மாதிரி செய்து கொடுக்கலாம் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

உங்கள் குழந்தைக்கு நன்கு பழுத்த வாழைப்பழம் பாலில் மசித்து கொடுங்கள்..ஆப்பில்,பியர்சை இட்லி பானையில் வேக வைத்து மசித்து கொடுங்கள்,
சாம்பாரில் போடும் நல்ல வெந்த காய்கறிகளை எடுத்து ஊட்டி விடுங்கள்
பப்பாளிப்பழம் நங்கு பழுத்தது ஒரு குட்டி துண்டு மசித்து கொடுக்கலாம்.உருளை கிழங்கையும் வேக வைத்து மசித்து கொடுக்கலாம்..சிலர் சீசுடன் மசித்து கொடுப்பார்கள்.
சர்க்கரை வள்ளி கிழங்கை நங்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம்
ஆர்ஞ் ஜூசை சிறிது தண்ணீர் கலக்கி கொடுக்கலாம்.அவகடோ பழத்தை பாலில் மசித்து கொடுக்கலாம்
ஒரு 7.5 மாதம் ஆகும்போது கைய்யில் குட்டி குட்டி வாயில் சிக்காத வகை பழங்களை கொடுங்க...ஆரஞ் சுளை,மாம்பழ துண்டு,சீட்லெஸ் க்ரேப்ஸின் ஒரு துண்டு, ஆப்பிலை மெல்லியதாக நறுக்கிய துண்டு ,சிறு துண்டு பழம் போன்றவை..அப்படியே கைய்யில் பிடித்து சாப்பிட பழகும் கீழேயெல்லாம் ஜூஸ் ஒழுகும் அதனால் ஹை சேரில் உக்கார வைத்து பழக்குங்கள்..இப்பொழுதே சாப்பிடும்பொழுது அதனை மட்டும் செய்ய்மாறு பழக்குங்கள்..சீக்கிரம் வேலையை முடிக்க டிவி காட்டி பழக்கினால் போக போக சாப்பாடு மேல் இன்டெரெஸ்ட் குறையும்..முடிந்தவரை ஒரு 7 மாதம் போனால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தினாலும் சில வாய தானாக சாப்பிட பழக்குங்கள்.

இட்லி எந்த மாதம் கொடுக்கலாம்? துவரம் பருப்பு எந்த மாதத்திலிருந்து கொடுக்கலாம்? சாதம் எப்போ மசித்து கொடுக்கலாம்?மாம்பழம் கொடுக்கலாமா? பப்பாளி, வள்ளி கிழங்கு, பட்டாணி, காரட், வாழை பழம் மசித்து கொடுத்து உள்ளேன்.

குழந்தைக்கு 10 மாதத்திலிருந்து இட்லி மற்றும் பருப்பு சாதம் கொடுக்கலாம். எல்லா வகையான பழமும் கொடுக்கலாம். மாம்பழம் சூடு அதனால் நிறைய கொடுக்க வேண்டாம். ஒரு சிறு துண்டு மட்டும் கொடுக்கலாம். நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுபவராக இருந்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் எல்லாம் கொடுக்கலாம்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கும் இதை பற்றி அதிகம் தெரியாது. நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். :) எனது குழந்தைக்கு இப்பொழுது 8.5 மாதங்கள். நான் 4 மாதத்திலிருந்து சிங்கிள் கிரெய்ன் சீரியல் கொடுக்கிறேன்.

5 மாதமளவில் புரோக்லி, கரட், பீஸ், பீன்ஸ், ஸ்குவாஷ், ஸ்வீட் பொடேடோ அவித்து மசித்து சல்லடையில் வடித்து (கூழ் போல வரும். சங்க்ஸ் இருக்காது) தனித்தனியே கொடுத்து வந்தேன்.

7 மாதத்திலிருந்து எல்லா மரக்கறிகளையும் ( புரோக்லி, கரட், பீஸ், பீன்ஸ், ஸ்குவாஷ், ஸ்வீட் பொடேடோ, லீக்ஸ், கபேஜ்) மைசூர் பருப்புடன் சேர்த்து அவியவிட்டு பின் அரைத்து மதியம் மட்டும் கொடுத்து வருகிறேன். வடிப்பதில்லை. மிகவும் சிறிய துண்டுகள் இருந்தால் பரவாயில்லை.

பழங்களில் அவகாடோ, வாழைப்பழம், அப்பிள் கொடுக்கிறேன். சிலவேளைகளில் துவரம் பருப்பும் கொடுப்பதுண்டு. எனது டாக்டர் ஆரஞ்சு, பொட்டேடோ இப்ப கொடுக்க வேண்டாம் என்றார். மல்டி கிரெய்ன் சீரியலும் கொடுக்கலாம். நான் 8 மாத்மளவில்தான் மல்டி கிரெய்ன் சீரியல் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். அதுவை சிங்கிள் கிரெய்ன் சீரியல் கொடுக்கலாம்.

சிலவேளை நான் சாப்பிடும் போது இடியப்பம், பிட்டு, சோறு, பிரெட் சிறு துண்டு கயில் வைத்து நசித்து ஊட்டிவிடுவேன்.

பல்லு முளைக்கும் வேளயில் கொடுப்பதெற்கென்று இங்கு சில குக்கிஸ் கிடைக்கிறது. அதையும் கொடுக்கலாம் என டாக்டர் சொன்னார். அல்லது நட்ஸ், சாக்லெட் சேராத எமது குக்கீஸும் சிறிய துண்டு கொடுக்கலாம் என்றார். நான் இன்னும் கொடுக்க தொடங்கவில்லை. இனிமேல்தான் கொடுக்க வேண்டும்.

எனக்கும் எவ்வளவு உணவு, எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என தெரியாது. நான் காலை மற்றும் இரவு சீரியல், 11 மணி போல சூப், மதியம் ம்ரக்கறி கலந்த பருப்பு (இதில் வடிக்கும் தண்ணிதான் சூப்) மாலையில் ஏதாவது ஒரு பழம் அல்லது கரட் அல்லது புரோக்லி. இது தவிர தாய்ப்பால், இடையிடையே தண்ணிர். இதுதான் எனது குழந்தையின் மெனு.:)

உணவின் அளவைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்களோ அவ்வளவு கொடுக்கலாம் என டாக்டர் சொன்னார். நாங்கள் திணிக்காதவரை அவர்கள் வேண்டுமட்டும் சாப்பிடலாம் என்றார்.

இது உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.
-நர்மதா :)

என் குழந்தைக்கு இப்போது ஒன்றரை வயது ஆகிறது. நான் அவளுக்கு செய்ததை உங்களுக்கு சொல்கிறேன்.
நீங்கள் ஆவியில் வேக வைத்த ஆப்பிள், மசித்த உருளை கிழங்கு, அவித்த காரட் இவற்றை போதிய இடைவெளியில் கொடுக்கலாம். ஒரு உணவை புதிதாக கொடுத்த பின் ஒரு வாரம் கழித்து அடுத்த உணவை முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு 6 மாதமே ஆகி இருப்பதால் இப்போதைக்கு இது போதும். ஆனால் தாய்பால் மட்டும் அடிக்கடி கொடுங்கள்.
இந்த உணவுகளை பழகிய பின் பருப்பு இட்லி கொடுக்கலாம்.
cerelac-க்கு பதிலாக புழுங்கல் அரிசி பொடி , பொட்டு கடலை பொடி 3:1 என்ற விகிதத்தில் கலந்து காய்ச்சி கூழ் போன்று கொடுக்கலாம். இது இயற்கை உணவாக இருக்கும். கூழில் உப்பு இனிப்பு எதுவும் சேர்க்காதீர்கள்.

என் மருத்துவரிடம் இதை கொடுக்கலாமா அதை கொடுக்கலாமா என்றால் சொல்லுவார் நீங்கள் திட உணவு ஆரம்பித்து விட்டால் பிறகு மருத்துவரை விட அம்மாவுக்கு தான் எதை கொடுக்க வேண்டும் என்று தெரியும்..ஏனென்றால் பிள்ளையுடன் நீங்கள் தான் இருக்கிறீர்கள் வயிற்றுக்கு ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பதை மட்டும் பார்த்தால் போதும் மத்தபடி எதை வேண்டுமானாலும் ஒரு வார இடைவெளி விட்டு கவனித்து கொடுக்கலாம் என்பார்..அதனாலேயே எனக்கும் தைரியம் வந்து எல்லாம் கொடுப்பேன்.
8 மாதம் போல் கேரளா நேந்தரன் வாழைப்பழம் பழுத்தது வாங்கி அவிய விட்டு பால் கலந்து மசித்து கொடுக்கலாம்..பிள்ளைகளுக்கு அது அருமையான பழம்
இட்லி சாபார் குழந்தைக்கு ரொம்ப ரொம்ப பெஸ்ட் உணவு...அதை ஒரு 7 மாதம் போல் ஆரம்பிங்க..எதையும் முதன்முறை 3 ஸ்பூனுக்கு மேல் கொடுக்க வேண்டாம்...சிறிது கவனித்து ப்ரச்சனை இல்லையென்றால் அளவை அதிகரித்து கொடுக்கலாம்...வயிற்று வலி போலோ அல்லது மோஷன் சம்மந்தப்பட்ட ப்ரச்சனை போலோ சந்தேகம் இருந்தால் ஒரு 3 வாரம் பொறுத்திருந்து மற்படி அதனை குறித்து வைத்து கொடுத்து பார்க்கலாம்..அதே வகையான அசவுகரியங்கள் குழந்தைக்கு தோன்றுமாயின் பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு கொடுத்து பார்க்கலாம்.
முக்கியமாக திட உணவுடன் தண்ணீர் கொடுக்க வேண்டும்..பால் போதும் என்று நினைத்தால் என்னை போல பின்னால் தண்ணி குடிக்க வைக்க பெரும்பாடு பட வேண்டி வரும்
ஒரு வேளை கொடுத்த உணவை அடுத்த வேளை அதே நாளில் கொடுக்காமல் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும்..ஒரு 8 மாதத்திலெல்லாம் தினசரி 5 வகையான காய்கறிகள் மற்றும் 5 வகையான பழங்கள் சிறிய அளவில் கொடுத்து பழக்கினால் மிக மிக நல்லது.
முட்டை கொடுக்க விரும்பினால் 1 வயது வரை வேக வைத்த முட்டையின் மஞ்சள் மட்டும் கொடுக்கவும்.அதன் பிறகு அலர்ஜி இல்லையென்றால் வெள்ளையும் கொடுக்கலாம்.
11 மாதத்தில் ஃபார்முலாவிலிருந்து பசும்பாலுக்கு மாற்ற மெல்ல முயற்சியுங்கள்.

இப்போதைக்குப்பச்சையாக எதுவும் கொடுக்க வேண்டாம்(6 1/2 மாதமென்பதால்)
காய்கறி சூப் சிறந்தது(எப்படி செய்வது என தெரியுமென நினைக்கிறேன்)
வேகவைத்து கொடுக்க:ஆப்பிள் உகந்தது.கேரட் வேகவைத்து dilute பண்ணி கொடுக்கலாம்.
orange juice (1tspkku 5tsp water add pannikodukkalaam)
cerelacle(rice,wheat,dates,veg,fruits )ena ella flavourm irukiradhu
miluppa/gerber/hero -brand foods ingu qatarl kidaikiradhu...angum kidaithaal kodukkavum.

oats கஞ்சி ட்ர்ய் பன்னவும்.
ஒரு tbs oats +milk+ water mix panni னங்கு கொதிக்கவைத்து ஆறியப்பின் நீர்க்க கொடுக்கவும். கொடுக்கவும்.
ராகி கஞ்சியும் இதே முறையில் கொடுக்கலாம்.
கிட்ஸ்க்குன்னு யொகுர்ட்ச் அங்கே கிடைக்குமென நினைகிகிறேன்.அதுவும் கொடுக்கலாம்.
மற்றொரு விசயம் ஒரு புதிய ஃபூட் கொடுத்தால் 2/3 நாட்கள் விட்டு அடுத்தது கொடுக்கவும்.
ஒரெ சமயத்த்ல் ரெண்டு மூன்று புதியது கொடுத்தால்
எது ஒத்துகொள்ளவில்லை/எது ஒத்து கொள்கிறது என அறிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.
மேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் எழுதவும்
அன்புடன்
elu

change is the unchanging thing in the changing world

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

காலை - vegetable puree with 1/2 spoon cereals and 1 spoon formula
மதியம் - சாதம் + பச்சை பருப்பு + 1 காய்கறி சேர்த்து வேக வைத்து கொடுக்கிறேன்
மாலை - ஒரு பழம்

naduvil thaipal

மேலும் சில பதிவுகள்