கற்கண்டு சாதம்

தேதி: May 19, 2009

பரிமாறும் அளவு: 3 பேருக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1/2 கப்
தூள் செய்த கற்கண்டு - ஒரு கப்
பாதாம் பருப்பு - 3
முந்திரிப் பருப்பு - 7
திராட்சை - 5
குங்குமப்பூ - ஒரு பின்ச்(optional)
ஏலக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தேங்காய் மூடி (அல்லது)கொப்பரைத்துருவல் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை


 

அரிசியை களைந்து துணியில் உலர்த்தவும்.
பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு தோலை உரித்து நீளமாக கட் பண்ணி கொள்ளவும்.
முந்திரியை உடைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு பருப்பு, திராட்சையை வறுத்துக் கொண்டு பின்பு அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அரிசியை குழைவாக வடித்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு, கற்கண்டு தூளைப் போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடவும்.
சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.
சாதம் கொதிக்கும் சமயம் குங்குமப்பூ, உப்பு, ஏலப்பொடி, முந்திரி, பாதாம், திராட்சை, வறுத்த தேங்காய், மீதம் உள்ள நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
கற்கண்டை பாகு காய்ச்சாமல் லேசாக கரைந்ததும் சாதத்தில் போட்டும் பண்ணலாம்.


மேலும் சில குறிப்புகள்