சமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -14, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -15 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , திருமதி வாணிரமேஷ்(138), திருமதி வத்சலா நற்குணம்(82) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (02/06) முடிவடையும். புதன்கிழமை(03/06), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

அம்முலு, தனிஷா, சந்தனா, திருமதிஹுசைன், ரேணுகா, சாதிகா அக்கா, வத்சலா, வின்னி, வாணி, சுரேஜினி, ஆசியா, மாலி, இமா, சவூதிசெல்வி, மனோஅக்கா, செபா, மேனகா, சைனாமஹா, துஷ்யந்தி, ஜலிலாக்கா, விஜி, ஜுலைகா அனைவருக்கும் மற்றும் நர்மதா, ரஸியா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(25/05) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாணி ரமேஷ்,வத்சலா நற்குணம் இருவரின் குறிப்புக்கள் தானே ! நிச்சயம் முடிந்தவற்றை செய்து அப்ப அப்ப வந்து சொல்கிறேன்.சரிதானே?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை.... நான் காத்திருப்பேன்... உங்கள் வரவை எதிர்பார்த்திருப்பேன்....

ஆசியா மிக்க மிக்க நன்றி. உங்கள் உற்சாகமான பங்களிப்புக்கு எப்படிப் பரிசளிப்பதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.....

எங்கே போயிட்டீங்கள் வாங்கோ.... எனக்குத் தெரியும் மெதுவா என்றாலும் எல்லோரும் வருவீங்கள் என்று. ஆரம்பித்தபோதே நினைத்தேன்... நான் மட்டும்தானோ தெரியேல்லை என்று... ஆனால் எல்லோரும் வந்து அதிர வைத்துவிட்டீங்கள்... போனதடவையும் ஸ்லோவாகப் போனாலும் 23 பேர் பங்கெடுத்தது மிகப் பெரிய வெற்றியே... அனைவருக்கும் நன்றி. அதிகம் செய்ய முடியவிட்டாலும் பறவாயில்லை... 2 குறிப்புக்களாவது செய்து சொல்லுங்கோ... (அப்பத்தானே அதிராக்கு பட்டம் கிடைக்கும்:)...).

அனைவரும் வாங்கோ... இடையிலே தலைப்பை மற்றியும்(சகோதர சகோதரிகளே....) ஒண்ணும் பிரியோசனமில்லைப்போல கிடக்குது:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, இந்த முறையும் பட்டம் எனக்கே கிடைத்துவிடும் என்பது உறுதி!! யாரையும் இன்னும் காணோமே??

அன்பார்ந்த சகோதரிகளே, தோழிகளே, சென்ற முறை போல இந்த முறையும் ஓட்டுப் போட வராமல் இருந்து என்னை வெற்றியடையச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!! நன்றி! நன்றி!!

அதிரா, போட்டி உங்களுக்கும் எனக்கும்தான் என்று நினைக்கிறேன். ஒரு கை பாத்துடலாமா? இந்த முறை நான் ஜெயிச்சா, "ராணி" பட்டமெல்லாம் வேண்டாம். "மஹாராணி" பட்டம்தான் தரணும்!!

என் கணக்கை மாலை தொடங்குகிறேன் (நல்ல நேரம் பாத்துதானே வேட்புமனு தாக்கல் செய்யணும்?!!)

நான் இந்தமுறை முதலிலேயே வந்துவிட்டேன்.
என்னுடைய கணக்கு வாணிரமேஷ் -முட்டைதோசை,சுரைக்காய்பருப்பு.

என்மகளுக்கு நேற்று கட்டு பிரித்துவிட்டோம்.டாக்டர் எலும்பு கூடிவிட்டது இனிமேல் கவலையில்லை என்று கூறிவிட்டார்.இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு.
மருபடியும் நாளை வருகிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

ஹாய் அதிரா மேடம்
உங்களுடைய சமைத்து அசத்தலாம் பகுதியில் நானும் இம்முறை இணையலாம் எண்டு நினைக்கிறேன்.உங்களுடன் போட்டிபோடமுடியாது பங்களிப்பு தான் செய்ய முடியும் முயற்சி செய்து பார்கிறேன்.
எனக்கு ஒரு உதவி தேவை எப்படி இவர்களுடைய குறிப்பை தேடுவது என்று சொல்ல முடியுமா ப்ளீஸ்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

கூட்டாஞ்சோறுவை கிளிக் செய்தால் பங்கு பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் இருக்கும்,அதில் வாணி ரமேஷ்,வத்சலா நற்குணம் பெயரை கிளிக் செய்தால் அவர்கள் பக்கம் கொடுத்த குறிப்புகளோடு வரும்.அதில் விரும்பும் குறிப்பை கிளிக் செய்து குறிப்புக்களை செய்து பார்த்து கருத்து தெரிவிக்கவும்.பின்பு சமைத்து அசத்தலாம் 15 ஓப்பன் செய்து தாங்கள் செய்து பார்த்த குறிப்பின் பெயரை தெரிவிக்கவும்.அறுசுவை தோழிகள் யார் வேண்டுமானாலும் உதவலாம் தானே,அதிராவும் வந்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்வார்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வத்சலா நற்குணம் அவர்கள் குறிப்பிலிருந்து- வெனிலா மில்க் ஷேக்,கொத்தமல்லி இலை ரசம்,முட்டை சம்பல்.அதிரா,ரேணு குறித்து கொள்ளவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வணக்கம் ஆசியா உமர்.
ரொம்ப நன்றி உங்கள் உடன் பதிலுக்கு.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஆகா மிக்க நன்றி...
ரெயின் பழையபடி களைகட்டத்தொடங்கிவிட்டது... இனியென்ன, இனிமேல்தான் முறையான போட்டியே ஆரம்பமாகப்போகுது:).

மிஸிஸ் ஹூசைன் மிக்க நன்றி. இன்னும் நல்லநேரம் ஆரம்பிக்கவில்லையா:), நல்ல நேரத்துக்காகக் காவலிருந்து, எங்கட ரெயினைக் கோட்டை விட்டிடாதீங்கோ:). வந்து ஜெயித்துக் காட்டுங்கள் மகாராணியென்ன பெரிய மகாராணி?:) அதுக்கு மேலேயே பட்டம் தருகிறோம்... நானும் ரெடி ஒரு கை பார்த்திடலாம்... ரேணுகா ரேணுகா இன்று என்னால் முடிந்தது பத்துக் குறிப்புக்கள் மட்டுமே... கவனமாகக் குறிச்சுக்கொள்ளுங்கோ:) முடிவில் சொல்கிறேன்.

சவூதி செல்வி மிக்க நன்றி. மகளுக்கு எலும்பு சேர்ந்துவிட்டதெனக் கேட்க சந்தோஷமாக இருக்கு. இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

சுகா வந்து இணைந்து கொள்ளுங்கோ மிக்க நன்றி. நல்லவேளை ஆசியா உடனேயே பதில் தந்திட்டார். என்னால் இப்போதான் பார்க்க முடிந்தது. நன்றி ஆசியா. சுகா இப்போ புரிந்துவிட்டதுதானே புரியவில்லையாயின் மீண்டும் கேளுங்கோ சொல்கிறோம். வரும் செவ்வாய்க் கிழமைக்குள் செய்து செய்து சொல்லவேண்டும். தலைப்பை நன்கு வாசியுங்கோ.

ஆசியா மிக்க நன்றி.

எல்லோரும் வாங்கோ... இன்னும் செய்யுங்கோ.
எங்கே ரேணுகாவைக் காணவில்லையே? ரேணுகா இன்று என் கணக்கில் வாணியின் கார்லிக் மட்டின், வத்சலாவின் - மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய்க் கறி. கணக்கில் சேருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்