ஷாப்பிங் பைகளை கொண்டு பூக்கள் செய்வது எப்படி?

தேதி: May 25, 2009

5
Average: 4.1 (7 votes)

குப்பையில் வீசிவிடும் பொருட்களிலிருந்து எவ்வளவு அழகான, உபயோகமான பொருட்கள் செய்யலாம் என்பதை, அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த அழகிய ஷாப்பிங் பை பூக்களை செய்து காட்டியுள்ளார். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

ஷாப்பிங் பைகள் - பச்சை மற்றும் விரும்பிய நிறங்களில்
கபாப் குச்சிகள் (kebab sticks)
மெல்லிய கம்பி
பச்சை நிற கம் டேப்
கத்தரிக்கோல்

 

ஷாப்பிங் பைகளை சுருக்கமில்லாமல் நீவி விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். சுருக்கங்கள் குறைவாக இருக்கும் பைகளில் செய்யப்படும் பூக்கள் தான் அழகாக வரும். பைகள் தனி நிறமாக இருக்க வேண்டும் என்பதில்லை. பைகளில் உள்ள எழுத்துக்களைத் தவிர்த்து விட்டு மீதியுள்ள பேப்பரை பயன்படுத்தலாம்.
முதலில் பூக்களுக்காகத் தேர்ந்தெடுத்து வைத்துள்ள சிவப்புநிற பையிலிருந்து 3 செ.மீ x 10 செ.மீ என்ற அளவுகளில் பையை துண்டு பேப்பர்களாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய பேப்பரில் ஒரு துண்டை மட்டும் எடுத்து இரு கைகளாலும் பேப்பரை பிடித்துக் கொண்டு சாக்லெட் பேப்பரை முறுக்குவது போல் ஒரு முறை முறுக்கவும்.
முறுக்கிய பேப்பரின் நடுவில் ஒரு குச்சியின் தட்டையானப் பக்கத்தை வைத்து அந்தப் பகுதியை அப்படியே குச்சியுடன் சேர்த்து இறுக்கமாக சுற்றி விடவும்.
அதன் மேல், மேற்புறத்தில் நீட்டியிருக்கும் மீதிப் பேப்பரின் முறுக்கியப் பக்கம் விலகாமல் அப்படியே மடித்து சுற்றிக் கொள்ளவும். பிறகு அந்த பேப்பரை கம்பியினால் நன்கு இறுக்கமாக மூன்று முறை சுற்றிக் கொள்ளவும். கம்பியைக் கொண்டு சுற்றுவதனால் அதன் கட்டு தளாராமல் இருக்கும். ஒன்றிரண்டு குச்சிகளின் தலைப்பாகத்தை சிறிதாக முறித்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் எல்லாப் பூக்களும் ஒரே அளவாக அமைந்துவிடும். (இதில் கம்பியைப் பயன்படுத்துவதால் இதனை அப்படியே வைத்துவிட்டு, அடுத்து இதழை தயார் செய்யலாம். எல்லா இதழ்களையும் கட்டி முடியும் வரை கம்பியை நறுக்க வேண்டாம்.)
அடுத்து இதழ் செய்யும் பொழுது மேலே சொல்லியதுபோல் இருகைகளாலும் பேப்பரை பிடித்துக் கொண்டு முறுக்கிக் கொள்ளவும். பிறகு பெருவிரல்கள் பிடித்துள்ள இடத்தில் இதழ் குழிவாக இருக்கும். அதை அப்படியே திருப்பி மடித்து, இரு குழிவுகளையும் ஒன்றுள் ஒன்று பொருந்தி வருமாறு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.
இப்போது பிடித்துள்ள குழிவினுள் திறந்து உள்ள மேல்பகுதியைச் சேர்த்து மெதுவாக முறுக்கினாற்போல் பிடித்து விடவும். (ஆனால் முறுக்கக் கூடாது.)
இந்த அமைப்பினுள் முன்பு தயார் செய்து வைத்துள்ள குச்சியை வைத்து மூன்று முறை கம்பியால் சுற்றிக் கொள்ளவும். அடுத்த இதழை வைக்கும்பொழுது எதிர்ப்புறமாக வைக்க வேண்டும். கம்பி தெரியாதவாறு இதழ்களால் மறைத்துக் கொண்டு இதைப்போல் சுற்றிச் சுற்றி கட்டிக் கொண்டே வர வேண்டும். இதழ்களை ஒவ்வொரு முறையும் வைக்கும்போது ஒன்றிரண்டு மி.மீ அளவு கீழே இறக்கி கட்ட வேண்டும். அவ்வப்போது இதழ்கள் குழிவாக இருக்குமாறு அதன் அமைப்பைச் சரி செய்து கொண்டே போக வேண்டும்.
விரும்பிய அளவு இதழ்களை வைத்து கட்டி முடிந்ததும், அந்த கம்பியை இதழ் அடிவரை சுற்றி முடித்து கம்பியை நறுக்கி விடவும். இவ்வாறு செய்வதால் பூவின் அடிப்புறம் மொத்தமாகாமல் மெல்லியதாக இருக்கும். பிறகு பச்சை நிற கம் டேப் கொண்டு பூவின் அடிப்புறத்தின் தேவையற்ற பகுதிகளை மறைத்துச் சுற்றவும். அப்படியே தொடர்ந்து குச்சி முழுவதையும் சுற்றி மறைத்து விடவும். (கம் டேப் சுற்றும்பொழுது முடிந்தவரை சாய்வாகவும், அதேவேளை இடைவெளி இல்லாமல் சுற்றினால் தண்டு மெலிதாகவும், அழகாகவும் வரும். கம் டேப்பை மெதுவாக இழுத்துப்பிடித்துக் கொண்டும் சுற்றலாம்.)
பிறகு பச்சைநிற பையிலிருந்து 3 செ.மீ x 29 செ.மீ என்ற அளவுகளில் பைகளை துண்டு பேப்பர்களாக நறுக்கிக் கொள்ளவும். (ஒன்றிரண்டு நீளம் குறைவாக இருந்தால் நல்லது.) இதனை இதழ்கள் செய்த அதே முறையில் செய்து பேப்பரை முறுக்கி மடித்துக் கொள்ளவும்.
இவற்றை செய்து வைத்துள்ள பூக்களின் தண்டுகளோடு வைத்து கம்பியால் கட்டி, பின் கம் டேப்பால் மறைத்துச் சுற்றிக் கொள்ள வேண்டும். விரும்பினால் தனியே வேறு குச்சிகளில் இணைத்துக் கொள்ளலாம்.
அழகிய ஷாப்பிங் பை பூக்கள் தயார். இவ்வாறு செய்த பூக்களை நீங்கள் விரும்பிய பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கலாம். அலங்கரிக்கும் போது இலைகள் சிலவற்றை லேசாக கீழ் நோக்கி மடித்து விடவும். ஷாப்பிங் பையின் உட்புறத்தில் உள்ள நிறம் குறைவாக இருந்தால், இதழ்கள் மற்றும் இலைகளுக்கு பேப்பரை முறுக்கி மடிக்கும் பொழுது மேலும் கீழும் ஒரே நிறம் வருமாறும் பார்த்து மடிக்கவும். பிளாஸ்டிக் பைகள் சேர்த்து வைப்பது பற்றி வேறு ஒரு இழையில் சில சகோதரிகள் பேசினார்கள். அவர்களுக்காக இந்தக் குறிப்பு.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஷாப்பிங் பையில் இவ்வளவு அழகான பூவா,ரொம்ப அழகா செய்திருக்கிங்க.உங்க கற்பனைக்கு ஒரு சல்யூட்!!

இமா, மிக அருமையாகச் செய்து காட்டியிருக்கிறீங்கள். கொள்ளை அழகாக இருக்கு. எனக்குப் பிளாஸ்ரிக் பூக்கள் என்றாலே ஒரு பைத்தியம். அம்மா ஏசுவா, அதிகம் வாங்கி, வீட்டைக் கடைபோல ஆக்காதே என்று.

ஆறுதலாக வாசித்து, இதன்படி செய்ய முயற்சிக்கப்போகிறேன். நானும்,அறுசுவைக்கு அனுப்பப் போகிறேன் என்று, என் கணவரைப் பாடாய்ப்படுத்தி, கடைதேடிக்கண்டுபிடித்து, கொஞ்சம் பப்றிக் பெயிண்டிங் வாங்கினேன்.... கவனிக்கவும் வாங்கினேன் அவ்வளவுதான் கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டது... இன்னும் தொடவேயில்லை.
"டச்சு விட்டுப்போச்சு".... எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு.:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இமா கலக்கிட்டீங்க(டீ இல்லை) போங்க!எப்படியிருக்கிரீர்கள்?,ரொம்ப அழகாயிருக்கிறது உங்க பூக்கள்.
எனக்கு இது மாதிரி ரீசைக்கில் செய்யக்கூடிய பொருட்களில் செய்வதானால் ரொம்ப பிடிக்கும்.உங்க திறமைகளை இன்னும் நிறைய அள்ளிவிடுங்க.

அன்புடன்
உமா.

நன்றி மேனகா. நலமா? உங்களுக்காக முன்பு ஒரு ஆந்தை, பாதி செய்தது போல் இருக்கிறது. :) செய்து முடித்து அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன், நினைக்கிறேன், நினைத்துக் கொண்டே இருக்கிறேன். :(

அன்பு அதிரா, எப்பிடி இருக்கிறீங்கள்? அதெப்படி எல்லாருக்கும் ஒன்றாக 'டச்சு விடும்'? இது 'ஐயய்யோ'வுக்குப் பழி வாங்குற மாதிரி இருக்கு. :)
கெதியா பெய்ன்ட் பண்ணி அனுப்புங்கோ. இல்லாட்டி பெய்ன்ட் போத்தலோட காய்ஞ்சு போகப் போகுது. பிறகு வீட்டில என்ன பாடாய்ப் படுத்தினாலும் வாங்கித் தர மாட்டினம். :)
பாராட்டுக்கு நன்றி அதிரா. முயற்சிக்க வேணாம். செய்திட்டுப் படம் எடுத்து அனுப்புங்கோ. (மீன் கதை பாதியில நிக்குது. என்னை ஏசிக்கொண்டு இருக்கிறீங்களோ தெரியாது. கெதியா வாறன்.)

ஹாய் உமா, நலமா? உங்களை விடவா கலக்குறன்? பாராட்டுக்கு நன்றி. நிச்சயம் நேரம் கிடைக்கிற போது செய்து அனுப்புறன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா,
குப்பையில் போடும் பைகளில் இவ்வளவு அழகான பூக்கள் செய்துள்ள உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
செபா.

செபா.....,
நீங்கள் செய்வது நன்றாகவே இல்லை. :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள் இமா.மேலும் உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள்.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

நன்றி ரமீஸா. மகிழ்ச்சி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

செபா,
"நீங்களும் ரொம்ப நன்றி அம்மா என்று சொல்ல வேண்டியதுதானே!!" என்று என் குட்டிப் பெண் கொஞ்சம் முன்னால் கேட்டார். அதனால் சொல்கிறேன்,

"ரொம்ப நன்றி அம்மா.." :-) :-)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Romba nallaa irukku ima shopping bag flowers.

பாராட்டுக்கு நன்றி தனு. நீங்களும் செய்து பாருங்களேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta