கர்ப்பிணி பெண்களின் உணவு -ஓட்ஸ் ?

தோழிகளே,
கர்ப்பிணி பெண்கள் ஓட்ஸ் குடிக்கலாமா? நான் 7 வாரம் கர்பமாக இருக்கிறேன். கர்ப்பத்திற்கு முன்பிருந்தே ஓட்ஸ் தான் எனது காலை உணவு. நான் தொடர்ந்து ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாமா?சொல்லுங்கள் தோழிகளே.
நன்றி.

வாசு

வாசு! ஓட்ஸ் கொஞ்சம் உடல் சூடுன்னு எனக்கு முன்பு யாரோ ( Selvimaa??) சொன்ன நினைவு. உங்களுக்கு மசக்கை பிரச்சனை இல்லைன்னா. காலையில் நல்லா பழம் பால் பிரெட்/முட்டை / கார்ன் ஃப்ளேக்ஸ் இந்தமாதிரி நல்ல உணவாக சாப்பிடுங்க. ரொம்ப ஓட்ஸ் விருப்பம் எனில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டுக்கோங்க. கர்ப்பகாலத்தில் ஹார்மோன்கள் மாறுவதால் இயல்பாகவே உடல் சூடு இருக்கும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா.நான் இந்தியாவில் இருக்கும் போது வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இங்கு வந்த பிறகு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் மட்டுமே. அதனால் எனது வெயிட் அப்படியே ஏறாம பாத்துக்க ஓட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சேன். மத்தபடி எனக்கு ஓட்ஸ் விருப்பம் எல்லாம் இல்லை. எனக்கு மசக்கை பிரச்னை இல்லை இதுவரைக்கும். நான் நீங்க சொன்ன மாதிரி பழம் /பிரெட்/கார்ன் ஃப்ளேக்ஸ் இது மாதிரி சாப்பிடறேன்.
once again Thanks.

வாசு

Vasu

மேலும் சில பதிவுகள்