கர்ப்பம்- உணவு - வ்தவி

நான் எழு வாரம் கர்ப்பம். என்ன வுணவு வகைகளை நுகர்ந்தாலும் பார்த்தாலும் குமட்டுகிறது, என்ன செய்வது? வயிறு குமென்று இருப்பது போலவே வுள்ளது.
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் நல்லது என்று என் தோழி சொன்னால், சாப்பிடலாமா? யாரவது என்ன வுணவு வகைகளை சாப்பிடலாம்.

sorry, I forgot to say that this is my 2nd pregnancy. During my first pregnancy, first 3 months was good, no problem at all. But this time, when I came to know I am pregnant I am feeling very tired, vomitting sense, hating food etc. Please help me.

http://www.arusuvai.com/tamil/forum/no/9520 இந்த சைட் பாருங்க உங்களுக்கு உதவுனாலும் உதவும் பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஷ்ரீதேவி
பழங்கள் காய்கறிகள் அது போல் எது பிடிக்குதோ கொஞ்சமாவது அதை மட்டுமாவது சாப்பிட முயற்ச்சி செய்யுங்க..வயிற்றை காலியாக விட வேண்டாம்..சாப்பிட்டு முடித்ததும் ஜீரகத்தை வறுத்து தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு அந்த தண்ணீர் ஒரு கப் குடித்தால் இந்த வயிறு கும்மென்று இருப்பது குறையும் வாயு தொல்லை குறையும்.
எல்லாம் சரியாகிவிடும்

திருமதி சோனியா மற்றும் திருமதி தாளிகா பதில்களுக்கு மிக்க நன்றி.
சோனியா, நீங்கள் கொடுத்துள்ள லிங்க் நான் தேடி கிடைக்காதா லிங்க். நான் என் கேள்வியை போஸ்ட் செய்வதற்கு முன் யாரவது இது போல் கேள்வி கேட்டு இருப்பார்கள், நம் அறுசுவை தோழிகள் அக்கறையுடன் பதில் போட்டிருப்பார்கள் என்று தேடினேன். கர்பிணிப்பெண்கள் பகுதியில் ஒவ்வொரு கேள்வியையும் படிக்க ஆரம்பித்து, நான் தேடியது கிடைக்காமல் ஆர்வமிகுதியால் திரும்பவும் இந்த கேள்வியை போஸ்ட் செய்துவிட்டேன். எனக்கு பதினைந்து நிமிடம் மேல் ஸ்க்ரீன் பார்த்தல் கண் வலிக்கும், பிறகு மெல்ல தலை வலிக்கும். கிட்டதட்ட ஐந்து நாட்களுக்கு மேல் தேடி கிடைக்காமல் போஸ்ட் செய்தேன். உடனே பதில் போட்டதற்கு மிக்க நன்றி.
தளிகா சொல்வது போல் சீராக தண்ணீர் ட்ரை செய்கிறேன்.
மீண்டும் நம் அறுசுவை தோழிகளுக்கு நன்றி. (அந்த லிங்கில் பதில் எழுதிய அனைவருக்கும்)
திருமதி செல்வி சொன்ன google-tamil பயன்படுத்தி தமிழில் டைப் பண்ண வசதியாக உள்ளது. நான் ஒவ்வொரு முறை தமிழில் டைப் செய்யும் போதும் அவர்களை நினைத்துக் கொள்வேன். நன்றி செல்வி.

மேலும் சில பதிவுகள்