எப்ப தலைக்கு தண்ணி ஊத்தாலம் ????

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்!!

சிரமம் பார்க்காமல் உதவி செய்யும் தோழிகளுக்கு முன் கூட்டியே நன்றியை தெரிவிக்கின்றேன் . ( உதவி செய்வீங்க என்ற
நம்பிக்கையில் தான் ;-))

என்னுடைய அன்பு தோழி குழந்தைக்காக ஒரு வருடமாக காத்திருக்கிறாள் .

எனது தோழிக்கு இந்த மாதம் 25ம் திகதி பீரியட் வரனும் ஆனால் என்னும் வரல.... நேத்து ஹோம் டெஸ்ட் பண்ணி பார்த்தாள் ... Positive என்று வந்ததென்று சொன்னாள்.அவள் மிகவும் சந்தோசமாக இருக்கிறாள்.வருகிற மாதம் 10 ம் திகதி டாக்டர் கிட்ட போகிறாள்.....

அவளுடைய கேள்வி என்னெவென்றாள்..... யாரோ சொன்னாங்களாம் தலைக்கு தண்ணி ஊத்தினாள் மென்சஸ் வந்திடும் என்று .... அவளுக்கு தலையில் சொடுகு இருக்கு தலை குளிச்சு 10 நாள் ஆகுது தலை கடிக்குது எப்ப தலைக்கு தண்ணி ஊத்தலாம் ???? என்று கேக்கிறாள்... எனக்கு இது பற்றி தெரியல ..... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் !!!!!

நன்றி !!!

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்!!

சிரமம் பார்க்காமல் உதவி செய்யும் தோழிகளுக்கு முன் கூட்டியே நன்றியை தெரிவிக்கின்றேன் . ( உதவி செய்வீங்க என்ற
நம்பிக்கையில் தான் ;-))

என்னுடைய அன்பு தோழி குழந்தைக்காக ஒரு வருடமாக காத்திருக்கிறாள் .

எனது தோழிக்கு இந்த மாதம் 25ம் திகதி பீரியட் வரனும் ஆனால் என்னும் வரல.... நேத்து ஹோம் டெஸ்ட் பண்ணி பார்த்தாள் ... Positive என்று வந்ததென்று சொன்னாள்.அவள் மிகவும் சந்தோசமாக இருக்கிறாள்.வருகிற மாதம் 10 ம் திகதி டாக்டர் கிட்ட போகிறாள்.....

அவளுடைய கேள்வி என்னெவென்றாள்..... யாரோ சொன்னாங்களாம் தலைக்கு தண்ணி ஊத்தினாள் மென்சஸ் வந்திடும் என்று .... அவளுக்கு தலையில் சொடுகு இருக்கு தலை குளிச்சு 10 நாள் ஆகுது தலை கடிக்குது எப்ப தலைக்கு தண்ணி ஊத்தலாம் ???? என்று கேக்கிறாள்... எனக்கு இது பற்றி தெரியல ..... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் !!!!!

நன்றி !!!

என்ன சர்மி இது இவ்வளவு நாளா தலைக்கு குளிக்காமல் இருக்காங்களா?? பாவம். முதல்ல அவங்களுக்கு வாழ்த்துக்கள். அவங்களை தலைக்கு குளிக்க சொல்லுங்க. அதால எல்லாம் பெரிசா ஒன்றும் நடந்துடாது. முதல்ல இந்த மனப் பயத்தைப் போக்கச் சொல்லுங்க. ஆனால் நீண்ட நேரமா நீராடிக்கிட்டு இருக்காமல் சீக்கிரமாவே குளிச்சு முடிக்க சொல்லுங்க. நீண்ட நேரமா தண்ணியில உடம்பு நனைஞ்சா உடம்பு இளகி அப்படி ஆகும் என்று சொல்லுவாங்க. அதுக்காகப் பயந்துகிட்டு இப்படிக் கஸ்டப் படத் தேவையில்லை. தலைக்கு மட்டும் இல்ல, சாதாரணமாக் குளிக்கும்போதும் நீண்ட நேரம் எடுக்காமல் கொஞ்ச நேரத்திலேயே குளித்து முடிக்கச் சொல்லுங்க. கடினமான வேலை எதுவும் செய்ய வேண்டாம் மற்றும் மாடிப்படி (அடிக்கடி) ஏறி இறங்க வேண்டாம் என்று அவங்களிடம் சொல்லுங்க. ஏனைய (மிகவும் அனுபவம் உள்ள) தோழிகளும் வந்து இதற்கு சரியான விளக்கம் கொடுப்பார்கள். பொறுத்திருங்கள்.

பிருந்தா

பிருந்தா சொல்வது ரொம்ப சரி. நான் எனக்கு டெஸ்ட் பண்ணின அன்னிக்கே குளிச்சேன். சீக்கிரமா குளிச்சிட்டு வந்துடனும். வாய்க்கால், ஆற்றில் குளிப்பவர்களுக்கு இதெல்லாம். நமக்கெல்லாம் இந்த பயம் தேவையில்லைப்பா. பாத்டப்பில் ரொம்ப நேரம் ஊறிக் கொண்டு இருக்க கூடாது. நான் ட்ரீட்மெண்ட் எடுத்துதான் கன்சீவானேன். நாம எந்த அளவு தைரியமாக இருக்கோமோ அதுதான் நமக்கு பாதுகாப்பு. தோழியை ஹார்ட் ஒர்க் எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க. எல்லாம் கடவுள் அருளால் நல்ல படியாக நடக்கும். வாழ்த்துக்கள் உங்க தோழிக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Sharmi
Ask your friend to take quick warm( not too hot not too cold) showers. Dont sit in hot bath tub at all . Be very careful when you are taking showers. take precaution against sliping

If she wants to rest ask her to lie down all times except when she is doign something.

Dont sit or stand for too long. Do not do antyhign that will require you to work for extended period of time.

Drink plenty of liquids and eat fresh fruits and veggies.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

om sakthi thunai அன்புத் தோழிகலே! வணக்கம், எனக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதங்கல் ஆகிரது,திருமணம் முடிந்து மருமாதமே,நான் கருவுற்றேன்,ஆனால் அது முத்துப்பில்லை என்று சொல்லி 3 மாதத்தில் எனக்கு அபார்சன் செய்துவிட்டார்கல்,ஆனால்,அதன் பிரகு,நான் உன்டாகவே இல்லை, நான் ச்சைனாவில் இருப்பதால்,ஜனவரியில் இந்தியா சென்று டாக்டரை பார்த்தேன்,அவர்,எனக்கு யுஎஸ்பி எக்ஸ்ரே எடுத்து பார்த்தார்,எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி folicacid tablet ,evion tablet இரண்டும் கொடுத்து தொடர்ந்து எடுக்க சொன்னார்,ஆனால்,நான் இப்போ ச்சைனா வந்துவிட்டேன்,அதன் பிறகு நான் தொடர்ந்து 30 வது நாள் பீரியட்ஸ் ஆகிவிடுவேன்,கடைசியாக மே 2 பீரியட்ஸ் ஆனேன்,இப்போ இன்று ஜூன் 2 , 32 நாள் ஆகிரது இன்னும் பீரியட்ஸ் வரவில்லை,நான் எத்தனையாவது நாள் டாக்டரிடம் போகவேன்டும் நான் கன்டிப்பாக உண்டாகி இருப்பேனா,எனக்கு உதவுங்கல் தோழிகலே

om sakthi thunai

கேட்டவுடன் உதவிய தோழிகள் Ocean , தனீசா & இலாவுக்கும் மிக்க நன்றி !!

நான் எனது தோழியிடம் சொன்னேன் அவள் தலைக்கு தண்ணி ஊத்தினாள்.... ஒன்னும் ஆவல.... அவள் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிட சொன்னாள்....

அவளுக்கு இப்ப காலையில் ரொம்ப தலைச்சுற்று இருக்கு..... ஏதும் வேலை செய்தால் கூடுதலான தலை சுற்று இருப்பதாக சொன்னாள் . அடிவயிற்றில் வலியும் இருப்பதாக சொன்னாள்.

வாந்தி எத்தின மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்று கேக்க சொன்னாள்....

எனக்கெல்லாம் இரண்டாம மாதத்தில் இருந்து வாந்தி இருந்திச்சு...... அது 4 மாதம் முடிய வாந்தி இல்லை.... நான் நினைக்கிறன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரின்னு .,....

நீங்க என்ன சொல்லுறீங்க தோழிகளே ? உங்களுக்கு எத்தனையாவது மாதத்தில் மசக்கை வாந்தி வந்திச்ச்சு என்பதை அனுபவித்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே ?

நன்றி !!

வணக்கம் தோழி bujji, உங்களுக்கு இன்றுடன் 32 வது நாளுன்னா நீங்க Home Pregnancy Test எடுத்து பார்க்கலாமே ? நீங்கள் 40 வது நாள் போகலாம் டாக்டர் கிட்ட போகலாம்ன்னு நினைக்கிறன்.

உங்களுக்கு எதாவது அறிகுறிகள் தெரியுதா ? இதையும் கவனியுங்கள். உங்களுக்கு ரெகுலர் பீரியட் தானே சோ கவலைப்பட வேண்டாம்.

வணக்கம் சர்மி,
எல்லோருடைய உடல்வாசிகளும் ஒரே மாதிரி இல்லை. சிலருக்கு வாந்தியே வராது. அதனால் உண்டாகி இருந்தால் வாந்தி கண்டிப்பாக வரணும் என்று இல்லை. அதனால் வாந்தி எடுப்பதைப் பற்றி சிந்திப்பதை விட்டு அவருக்குப் பிடித்தமான/சத்தான உணவுகளை உண்ணச் சொல்லுங்கள் வயிற்றுவலி கடுமையாக இருந்தால் உடனே டாக்டரிடம் போவது நல்லது. இல்லாவிடிலும் வயிற்றுவலி தொடர்ந்து இருந்தால் எதற்கும் ஒருதடவை டாக்டரிடம் சென்று காட்டும்படி உங்கள் தோழியிடம் கூறுங்கள். எவ்வித மனப் பயமும் இன்றி சாதாரணமாக அவரால் இயன்ற வேலைகளைச் செய்து கொண்டு (கடினமான வேலைகளை தவிர்க்கவும்) மனதை சந்தோஷமாக வச்சிருக்க சொல்லுங்க. எதற்கும் பயந்து கொண்டு இருப்பது நல்லதல்ல.

அன்புடன் பிருந்தா

அடடே நான் இந்த தலைக்கு தண்ணி ஊத்திற பிரச்சனையை இப்போதான் பாக்கிறன்.உண்மையை சொன்னால் இது ஒரு சித்திரவதை.எனக்கும் இதே மாதிரி சொன்னாங்கோ.ஆனாலும் எனக்கு 2 நாளுக்கு ஒருக்கா தலைக்கு குளிக்காமல் இருக்கவே முடியாது.ஆனால் தலைக்கு குளிக்கவும் பயம் குளிக்காமல் இருக்கவும் அருவருப்பு.
அப்போ நான் தலையை மட்டும் ஷம்போ போட்டு எவ்ளோ குறுகிய நேரத்தில் முடியுமோ அவ்ளோ நேரத்தில் கழுவி விடுவேன்.பிறகு தலை நல்லா காய்ந்து நோமலுக்கு வந்ததும் டவல் பாத் எடுத்துக்கொள்வேன்.
சர்மி பயம் என்றால் இப்பிடி செய்யச்சொல்லுங்கோ.ஏனெண்டா சோ எண்டு வழக்கம் போல ஊறவிட்டு கெண்டிஷனர் எல்லாம் போட்டு தண்ணீக்குள்ள படுத்திருந்து புத்தகம் வாசிச்சு இதெல்லாம் உண்மையில் ஆபத்து.என் நண்பிக்கு இதே மாதிரி ஒருமுறை செய்து பொசிட்டிவ் க்கு பின் பீரியட் வந்துட்டுது.ஆனா டாக்டர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை அப்பிடியெண்டா அபோஷன் செய்ய வேணுமெண்டா கொஸ்பிடல் போகாமல் ஸ்விம்மிங்க்பூல் போய் நாள் முழுக்க விளாண்டினா போதுமா எண்டு கேட்டவராம்.
சுரேஜினி

om sakthi thunai ரொம்ப நன்றி சர்மி,எனக்கு உங்கல் பதில் பார்த்து ரொம்ப சந்தோஷம், எனக்கு ரெகுலர் பீரியட்ஸ்தான்,ஆனால் home pregnancy test எப்படி செய்வது என்று எனக்கு சொல்ல முடியுமா please,அப்புரம் நானும் 2 வாரமாக தலைக்கு ஊத்தலை,ஊத்தலாமா?

om sakthi thunai

மேலும் சில பதிவுகள்