பாதுஷா

பாதுஷா

தேதி: March 26, 2006

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

மைதா - கால் கிலோ
சமையல் சோடா - அரைத் தேக்கரண்டி
வனஸ்பதி - 100 கிராம்
சீனி - கால் கிலோ


 

மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு வேகவிடவும்.
வாணலியின் அளவு, எடுத்துக் கொண்டுள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் எத்தனை போட இயலுமோ அத்தனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் இலேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
அதன்மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் குறிப்பு பார்ப்பதற்கு எளிதாகவும் செய்யத்தூண்டுவதாகவும் இருக்கிறது.. ரொம்ப நன்றி. இதில் வனஸ்பதிக்கு மாற்று ஏதாவது உண்டா..

அமிழ்தினி
இந்த பாதுஷா யார் குறிப்புன்னு தெரியல, வனஸ்பதி பதில், பட்டர்,நெய், டால்டா,அசீல் எது வேண்டுமானாலும் போடலாம்.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா.

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா.

ஜலீலா அக்கா,உங்கள் பாதுஷா செய்து பார்க்க ஆசையாக உள்ளது.மாவு உருண்டைகளை மாவில் வேக வைப்பது என்றால் பொரிக்காமல் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டுமா?தேவையான எண்ணெய்யின் அளவையும் தர முடியுமா?சிரமத்திற்கு மன்னிக்கவும்.

busy has no time 4 tears

ஹாய் fazmila sabeer ஜலீலாக்கா கொஞ்ச நாள் லீவ்.அதனால் நான் பதில் சொல்கிறேன். எண்ணெயில் பொரிப்பதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க.வடை பொரிப்பது போல பொரித்து எடுங்க.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப நன்றி கவிசிவா.உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

busy has no time 4 tears

பாதுஷா
இது என் குறிப்பு கிடையாது.

ஜலீலா

Jaleelakamal