பாசுமதி கீர்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பால் - ஒரு லிட்டர்
பாசுமதி அரிசி - 300 கிராம்
சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம்
ஏலக்காய் - 2 ரூபாய்
முந்திரி பருப்பு - 5
பாதாம் பருப்பு - சிறிது
சர்க்கரை - அரை கிலோ


 

பாலை கனமான பாத்திரத்தில் பொங்கும் வரை காய்ச்சவும். பாசுமதி அரிசியை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்கு களைந்து, பொங்கிய பாலில் போட்டு கிண்டி கொண்டே இருக்கவும். அடுப்பின் தீயைக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி வெந்ததும் கோவாவை சேர்த்து கிண்டிக் கொண்டே இருக்கவேண்டும்.
கோவா நன்கு கலந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கிண்டிக்கொண்டே பொடி செய்த முந்திரி, பாதாம் சேர்த்து, பின் ஏலக்காய் தூள் போட்டு இறக்கவும். அரிசி நன்றாக வெந்து இருக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கோவா என்றால் என்ன என்பதை கோவப்படாமல் தெரியப்படுத்துங்கள். எனக்கு தெரிந்ததெல்லாம் பால்கோவா, மல்கோவா இதுதவிர கோவா என்ற ஊர்.

தங்கள் ஊரில் இரண்டு ரூபாய்க்கு எத்தனை ஏலக்காய் கொடுப்பார்கள் என்பதையும் தெரியப்படுத்தவும்.

நன்றி.

நண்பருக்கு,

நாகையில் நாங்கள் நடத்திய சமையல் போட்டியில் இடம்பெற்ற ஒரு இனிப்பின் செய்முறைக் குறிப்பு இது. இதனை கொடுத்தவர் உங்களின் கேள்வியை பார்த்து, அதற்கு பதில் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இங்கு வெளியாகி உள்ள அவரின் இந்த குறிப்பையே அவர் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக நான் பதில் அளிக்கின்றேன்.

நீங்கள் அறிந்த பால்கோவாவைதான் கோவா என்றும் அழைப்பார்கள். பொதுவாக பால்கோவா என்று அழைக்கப்படும் இனிப்பு பாலுடன் சீனி சேர்த்து (சிறிது நெய்யும்) சுண்டக் காய்ச்சி தயாரிக்கப்படுகின்றது. இதை அப்படியே சாப்பிடலாம்.

இனிப்பு, அதாவது சீனி சேர்க்காமலும் கோவா தயாரிக்கப்படுகின்றது. இந்த வகை கோவாவை கொண்டு பால் இனிப்புகள் (Milk sweets) தயாரிக்கின்றார்கள். நீங்கள் இனிப்பகங்களில் பார்க்கும், வாங்கி சுவைக்கும் பெரும்பாலான இனிப்புகள் இந்த கோவாவைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. வழக்கத்தில், கோவா என்பது இனிப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படும் கோவாவை குறிக்கின்றது.

எங்கள் ஊரில் (நாகப்பட்டினத்தில்) இரண்டு ரூபாய்க்கு எவ்வளவு ஏலக்காய் கிடைக்கும் என்று ஆராய்ந்து பார்த்தேன். கிடைத்த ஒரு மூன்று ரூபாய் பாக்கெட்டில் சிறியதாக பத்து ஏலக்காய்கள் இருந்தது. அதில் இருந்து 3.33 ஏலக்காய்களை கழித்து விடுங்கள். கணக்கு சரியா?