ஆனியன் பக்கோடா

தேதி: May 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரியவெங்காயம் -2
கடலைமாவு -1/2கப்
சமயல்சோடா -1சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
மிளகாய்தூள் -காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை -சிறிது
எண்ணை - சுடுவதற்கு


 

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக பொடியாக நறுக்கவும்.கறிவேப்பிலை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,சமயல்சோடா,உப்பு,மிளகாய்தூள் சேர்த்து சிறிது தண்ணிர் தெளித்து பிசையவும்.பிசைந்தமாவுடன் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய வெங்காயத்தை உதிரியாக போட்டு வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.


குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி உங்களுடைய குறிப்பில் இருந்த ஆனியன் பக்கோடா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ரொம்ப நன்றி துஷ்யந்தி.

சவுதி செல்வி

சவுதி செல்வி