சமைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -15, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -16 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , ESMS-4(சவூதிசெல்வி,131), கவிசிவா(123) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (16/06) முடிவடையும். புதன்கிழமை(17/06), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

சவூதிசெல்வி, ஆசியா, சுஸ்ரீ, மாலி, திருமதி ஹுசைன்,சுவர்ணலஷ்மி, விஜி, சுகா, தனிஷா, வின்னி, சுரேஜினி, ரேணுகா, சந்தனா, வனிதா, வத்சலா, கவிசிவா, ஸாதிகாஅக்கா, இமா, ஹைஷ்அண்ணன், இலா, துஷ்யந்தி அனைவருக்கும் மற்றும் வத்சலா, வாணிரமேஷ் அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(08/06) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சவூதி செல்வி,கவிசிவா குறிப்பு எல்லாரும் ரெடியாகுங்க,
சவூதி செல்வி - காலையில் பூரிகிழங்கு செய்தாச்சு,இரவு வெஜ் குருமா.நானும் அப்ப அப்ப வருவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்தவாரம் என்னுடையகுறிப்பு மற்றும் கவிசிவா அவர்களின் குறிப்புகளை செய்துபார்க்கபோகும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.என்னுடைய குறிப்பில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள் நான் சொல்கிறேன்.

கவிசிவா குறிப்புகளை பார்த்து செய்துவிட்டு மதியம் வந்து சொல்கிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

ஆசியா அக்கா முதலில் வந்துட்டீங்க,டிரைவர் நீங்க தான்,

செல்வி நீங்களும் இங்கே வந்ததில் மகிழ்ச்சி,கவியின் குறிப்போடு வாருங்கள்,

நானும் வந்திட்டேன்,செல்வியின் சுரைக்காய் கூட்டு,கவியின் ஆப்பிள் சாண்விச் இரண்டுமே சூப்பர்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நாகரீகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் போதுமா? ஆத்துக்காரர் வரப்போகிறார் சமைக்க வேண்டாமோ:)? கெதியாச் சமையுங்கோ. நான் கொஞ்ச நேரம்தான், போகப்போகிறேன்.

ஆசியா... றைவர் சீற்றைப் பிடித்திட்டீங்கள். மிக்க நன்றி. எப்போ திரும்பி வாறீங்கள்?.

சவூதி செல்வி மிக்க நன்றி. ஓடி ஓடிக் களைத்துவிடாதீங்கோ:).

ரேணுகா வந்தாச்சோ.. தொடர்வோம். எல்லோரும் வாங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வந்துட்டேன் கூப்பிட்ட குரலுக்கு வந்துட்டேன் சமையலோடு,செல்வி - பீட்ரூட் பிரியானி,கவி- முட்டை அடை,டேஸ்ட் பார்த்துட்டேன் சூப்பர்,இன்னும் சாப்பிடல,இதோ பையனை அழைக்க போறேன்,வந்ததும் 2 பேரும் சாப்பிட்டு வரோம்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்ன போட்டி போட ஆள் இல்லாமல் நான் தான் இந்த முறை பட்டம் வாங்குவேனோ,எங்கப்பா போனீங்க எல்லாரும் சீக்கரம் வாங்க,இப்படியே இருந்தா எப்படி?புதுசா வந்து அசத்துனவங்களையும் கானாம்,போட்டி போடாமல் இருங்க என்று சொன்னவங்களையும் கானாம்,எங்கள் டிரெயினுக்கு இப்படியே போனால் பட்ஜெட் கட்டுபடி ஆகாதுப்பா,வாங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா & ரேணு,

நானும் வந்திட்டேன் பார்த்திங்களா... நீங்க கூப்பிட்ட குரல் கேட்டு!

என் கணக்கை இந்த குறிப்புகளோடு ஆரம்பிங்கோ ரேணு. சவூதி செல்வி குறிப்புகள்: மசாலா ஆம்லெட், உருளை வறுவல், கீரை பருப்பு மசியல் & ஈசி கேரட் பொரியல். எல்லாமே செய்வதற்கு ஈஸி, டேஸ்ட்டும் அருமை. பின்னூட்டம், இனிதான் கொடுக்கவேண்டும்.

மீண்டும் நாளை வருகிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கவி சிவாவின் லெமன் ராகி சேமியா,சேர்த்து கொள்ளவும்.பின்னூட்டம் கொடுத்தாச்சு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆதிரா மேடம்,ரேணுகா மற்றும் தோழிகள் எப்படி இருக்கிறிர்கள்?
நான் இம்முறையும் உங்களுடன் ரெயினில் வருவதாக முடிவு பண்ணியாயிற்று இடம் கிடைக்கும் தானே?
இன்று செல்வி சமையலில் இருந்து நான் செய்தது
வெஜ் மேக்ரோனி
ஆப்பிள் மில்க்ஸேக்
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்