அறுசுவை பற்றி

அறுசுவைக்கு ஒரு பாராட்டு
கிரீடம்…இளவரசியிடமிருந்து..
நீ….அறுசுவையில்லை…..பல்சுவை!!!

அன்புள்ள அறுசுவைக்கு……
உரிமையோடு உனக்கு ….
ஒரு பெயர்த்திருத்தம்…….
உன்னிடம் இருப்பது …
ஆறுசுவையா…நிச்சயம்
நம்ப மாட்டேன்…………….!
எச்சுவையில்லை…..உன்னிடம்..
முக்கனி சாற்றின்
சுவையுண்டு….
தேமதுர முத்தமிழோசை …..
எங்கள் செவிகளில் தேனாய்..
பாய்கிறது…….பல்வேறு
திசையிலிருந்து….
அறுசுவை இணையத்தளத்தில்
உள்ளங்கள் பேசும்..ஆனால்
முகங்களின் முகவரியில்லை
கருத்துக்கள்
உரசும்…ஆனால்
வலியில்லை…காயங்களில்லை
உடனே உதவிக்கரங்கள்
இலவசமாய்..
நீளும்
ஆனால்…….எதிர்பார்ப்பில்லை….
இங்கே
வழங்கப்படும்…..எல்லாமே
விலைமதிப்பில்லா
வைரமுத்துக்கள்
முத்தெடுக்கும்
உள்ளங்கள்….கொடுக்கும்
ஒரே விலை……
நன்றிதான்…அதுவும்
இலவசம்தான்..
ஓராயிரம் சுவையை உன்னுள்
அடக்கி கொண்டு
அடக்கமாய் புன்னகைக்கும்
அருசுவையே…
……நீ நிச்சயமாய்
அறுசுவையில்லை…பல்சுவைதான்
உன் புகழை நானும்
பார்ப்பவரிடமெல்லாம்
பரப்பி வருகிறேன்….
உன் சேவை ….எங்களுக்கு
எப்போதும் தேவை..
நீ வளர்க பல்லாண்டு..வையகம்
உள்ளவரை

படித்தேன்,,, ரசித்தேன்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நன்றி சந்தனா......நல்ல விசயங்களை நாம பண்ணனும்...இல்லைன்னா...பண்ணறவங்களை பாரட்டணும்....அது யாராய் இருந்தாலும்...இந்த ரெண்டாவது விசயம்தான் நான் பண்ணியிருக்கிறேன்..
உங்கள் பெயர் அழகாக இருக்கிறது...உங்கள் பெற்றோர்க்கு நல்ல ரசனை...வாழ்க..
நன்றி.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி இளவரசி.. இது புனைப்பெயர் .... எனவே உங்கள் பாராட்டு எனக்கே எனக்கு :-) என் இயற் பெயர் சில காரணங்களால் இங்கு சொல்லியதில்லை... அறுசுவை பற்றி ஏற்க்கனவே ஒரு இழை மன்றத்தில் தனிஷா துவங்கி இருந்தார்... அங்கு நாங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறோம்... (இது போல் கவிதை எல்லாம் வடிக்கவில்லை :-) )

http://www.arusuvai.com/tamil/forum/no/12139

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ரொம்ப நல்லா இருக்கு இளவரசி.

Archana

Archana

நாம ரெண்டு பேரும் பார்த்துக்கறத்தூரத்திலதான் இருக்குமில்லியா....அது நினைத்து சந்தோசம் எனக்கு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அறுசுவை பற்றிய அழகான கவிதை. சும்மா நச்சுனு எழுதியிருக்கீங்க.உண்மையை எழுதியிருக்கீங்க. சுஹைனாவுக்கு இன்னோரு ஜோடியா வாழ்த்துக்கள். கலக்குங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஏற்கனவெ நிறைய பேர் அறுசுவை பற்றி எழுதியிருக்காங்க போல...நான் அறுசுவைக்கு புதிது என்பதால் திருமதி.சேகர் சொல்லிதான் அதுபற்றி தெரியும்.
முன்பே தெரிந்திருந்தால் அந்த த்ரட்டிலேயே போட்டிருப்பேன்.உங்கள் ரசனைக்கு நன்றி..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆமாம் பா, நானும் அதை நினைத்து சந்தோஷபட்டேன். நீங்கwork panurengala பா?
Archana

Archana

இல்லப்பா..நான் வொர்க் பண்ணலை...முன்னாடிதான்
வொர்க் பண்ணிட்டுருந்தேன்....

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஒ! அப்படியா, நல்லது
Archana

Archana

மேலும் சில பதிவுகள்