please advise

என் குழந்தைக்கு ஒரு வயதாகிறாது அவள் எதுவும் ஒழுங்காக சாப்பிடுவது இல்லை. காய்கறீ, முட்டை,செரிலாக், எது கொடுத்தாலும் சாப்பிடமாட்டாள். தினமும் இரவில் மட்டும் பால் பவுடர் நாண் (150ம்ல்) மூன்று முறையும் குடிப்பாள், ப்கலில் செரிலக் இரண்டு முறையும் சாப்பிடுவாள், பிறந்த முதல் மாதம் மட்டும் தாய்ப்பால் குடித்தாள். இப்பொழுது செரிலாக் மட்டும் சங்கில் ஊட்டுகிறேன் அதுவும் மிகுந்த அழுகையுடந்தான் உண்கிறாள். அதையும் சில சமயம் வாந்தியும் எடுத்துவிடுகிறாள். மிகவும் ஒல்லியாகயிருக்கிறாள். அவளுடைய எடை 9 கிலோ. அவளுக்கு என்ன கொடுப்பது, எப்படிகொடுப்பது? வழிச்சொல்லுங்கள் தோழிகளே!

குழந்தை பிறந்தபொழுது எடை என்ன?பாலை அதிகளவில் குடித்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு பசி தெரியாது..ஒரு நாளைக்கு தேவையான அளவில் தான் குடிக்கிறதா என்று பாருங்கள்..1 வயதாகிவிட்டதால் தினம் பகலில் 3 வேளை பால் போதும் .அதையும் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து கொடுங்கள்..செரெலேக் அல்லாத வீட்டில் தயாரிக்கும் உணவுகளை கொடுத்து பார்த்தீர்களா?தட்டில் எதையாவது வைத்து கொடுத்து பாருங்கள் தானாக எடுத்து இரண்டு வாய் உள்ளே போடுகிறதா என்று..நல்ல சாப்பிடும் ஒத்த வயதுடைய குழந்தையை காட்டுங்கள் அதை கண்டு சாப்பிட ஆசை வரலாம்.
வேற என்ன சொல்வதுன்னு தெரியல.அழுக அழுக ஊட்டி பழகிவிட்டால் கட்டாயம் போக போக ஆர்வம் குறைந்து கொண்டே வரும்..நல்ல பசியெடுக்கும்பொழுது மட்டும் சாப்பிட கொடுங்கள்..ஒரே நேரமாக கொடுக்காமல் ஒரு முறைக்கு 3 ஸ்பூன் வீதம் கொடுத்து பாருங்கள்..அழுக அழுக கொடுத்தால் சாப்பாடு என்றாலே வெறுப்பு வரும்.

குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை வாரத்திற்கு 155 - 241 கிராம் எடை கூடுவார்கள் அடுத்த இரண்டு மாததில் 92 - 126 கிராம் அதுக்கடுத்த ஆறு மாததில் 50 - 80 கிராம் கூடுவார்கள். ஒரு வருடத்தில் தாய் பால் குடிக்கும் குழந்தை பிறந்த இடையிலிருந்து 21/2 - 3 மடங்கு இருப்பார்கள். இது கட்டாயம் இல்லை....ஒரு அளவுகோல் அவ்வுளவுதான்.

நீங்கள் அவளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மருத்தவரிடம் செல்வீர்கள் அல்லவா?? மருத்துவர் என்ன கூறினார்.....அவர் ஒரு வளர்ச்சி அட்டவணை பார்த்து உங்கள் குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளது அல்லது சரியில்லை என்று கூறியிருப்பார் அல்லவா???? அப்படி அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால் எல்லாம் நார்மல் தான்......

உடல் ஒல்லியாக இருபது ஒரு பிரச்சனையனையே அல்ல....அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்...உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுகிறார்களா......செட்டை செய்கிறார்கள......ஒரு வயதில் அவர்கள்....நடக்க ஆரம்பிக்க வேண்டும்.....ஒரு பொருளை தங்களின் இரண்டு விரல்களால் எடுப்பார்கள்......புதிது புதியதாய் விளையாட ஆரம்பிப்பார்கள்....

ஒரு வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 500 ml பாலுக்கு மேல் கொடுக்க வேண்டாம். பால் கான்ஸ்டிபேஷன்...ஆகையால் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்கலாம்....பிரட் போன்ற உணவுகளை நிறைய சேர்த்து கொள்ளவும்....அரிசி உணவு கொஞ்சம் கொடுத்து காய்கறிகள் நிறைய கொடுக்கவும்....அவர்களையே சாப்பிட செய்யவும்....அவர்களுக்கு தாங்களாகவே சாப்பிட ரொம்ப பிடிக்கும்....அப்படி அவர்கள் நான்கு வாய் சாபிடாலும் போதும்....காலையில் எழுந்ததும் பல் தேய்த்துவிட்டு (இல்லைஎன்றாலும் தேய்க்கணும்) பால், அப்புறம் சிற்றுண்டி, மதிய உணவு கொடுக்கும் முன்பு பழங்கள் அல்லது சூப் கொடுங்கள், மதியம் தூங்கி எழுந்ததும் பால் பின்பு பழம் அல்லது வேகவைத்த காய்கறி, இரவு உணவு என்று உணவு நடுவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எதாவது கொடுங்கள்..... தினம் ஒரே உணவை கொடுக்காதீர்கள்.....

வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழத்துண்டுகள் இவ்வற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் இட்டு ஸ்பூன் போட்டு அவர்களிடன் கொடுத்து பாருங்கள்....ஒருவெள்ளை சாப்பிடலாம்......யூடுபில் குழந்தைகள் சாப்பிடும் மாதிரி நிறைய வீடியோ இருக்கிறது அதை அவர்களுக்கு போட்டு காண்பியுங்கள்.....

அறுசுவையில் குழந்தைகளுக்கான ரேசிபே ஏராளமாக உள்ளது.

குழந்தைகளை எதற்குமே கட்டாயப்படுத்த கூடாது.....அவர்களின் போக்கிலே விட்டு பிடிங்க....

Mrs. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய்,தாளிகா அக்கா,என் மகள் தினமும் 450ml பால் குடிக்கிறாள்.பழங்கள்,காயிகறி,ப்ரெஅட்,எதுவும் அவள் சாப்பிடுவதில்லை.அப்படி தானாக சாப்பிட்டலும் 2 வாயிக்கு மேல் சாப்பிடுவதில்லை.அவளுக்கு சத்து மாவு குடுக்கலமா? எப்படி வீட்டிலே தயார் செய்வது?நன்றி

ummu aaliya

1 வயது குழந்தைக்கு எத்தனையோ வகை வகையா கொடுக்கலாமே குழந்தைகள் பகுதி மன்றத்தில் பார்வையிட்டால் உங்களுக்கு நிறைய கிடைக்கும் .நீங்கள் வீட்டில் சமைக்கும் எல்லாமும் கொடுக்கலாம் சத்து மாவும் கொடுக்கலாம்

Hi Aaliya
This is udhaya.Plz bring your child to anytime playing mode.gave her what ever she likes.every kid should like the orange juice in hotwater.plz try that or Satthumavu kali after cooked that you can put some sugar and ghee on that kali.I have an kiddy on 1yrs and six mnths.me also had that problem but now its cured.She gains 2kgs in 1 month.

Regards
Udhaya

Regards
Udhaya

Dear ummu aaliya,

Please don't force feed the kid... this will mke her hate food & lead to bad food habits even as they grow up...let her play well & be active throughout the day... if she refuses to take one or two meal, just leave her... She'll automatically ask for food when she feels hungry... try to give her all home cooked food... at first they eat only one or 2 mouthfuls... as days pass by, they'll start eating more...as she's alread one yr old, u can give her finger food(like long pieces of boiled carrots,potatoes etc) so that she can try to eat it herself... avoid giving her bisuits,cakes etc... you can also tear chapathis,dosas into small pieces & give it to her in a plate... at first they'll mash up everything & waste it but then it helps them learn to eat... U can also give her puffed rice(pori) to make her learn to eat on her own...it's much less messier than other food...while she's playing with the food, u can try to feed her side by side but don't interfere in her play...but whatever food u give, u have to be by her side & moniter her(but don't interfere her when she makes a little mess trying to eat) coz there's always the chance of choking & also they might put the food in their nose...

if nothing of this works, u can chk with ur pediatrician...they'll prescribe some medicines if need be... My homeopath says tht some kids might have slight cold(like nenju sali) for a long time which we might not be aware of & that'll supress their hunger too... my SIl's kid had this problme & she now eats well after a course of medication for cold which bought out all the mucus...

மேலும் சில பதிவுகள்