குழந்தைகளை எப்படி தாய்மொழியில் பேசவைப்பது?

நான் என் குழந்தையிடம் தாய்மொழியில் தான் பேசுகிறேன், ஆனால் அவள் அதிகம் ஆங்கிலமும் மிகக்குறைவாக தாய்மொழியும் பேசுகிறாள். அவளின் வயது 2 1/2. அவள் ஆங்கிலதில் பேசும்பொழுது தாய்மொழியில் சொல செய்கிரென், அது தவறா , கட்டாயபடுதினால் எதிர்மறை விளைவு ஆகிடுமா. உதவுங்கள் தோழிகளே.

தீபா நீங்க சொல்லுவது வித்தியசமா எனக்கு இருக்கு,பிள்ளையிடம் கட்டாய படுத்தி சொல்ல சொல்லாதீங்க,கோபம் தான் அவர்களுக்கு வரும்,என் பிள்ளையிடம் நான் ஓ.கே என்று இங்கிலிஷில் சொன்னால் கோபம் வரும்,தமிழில் சொல்லு என்பான்,ஆனால் சில் சமயம் அவன் இங்கிலிஷ்சில் பேசுவான்,அப்படியே நானும் அவனோடு சேர்ந்து கொள்ளுவேன்,எதும் கட்டாயபடுத்தினால் நிச்சயம் எதிர்மறையாக தான் அமையும்,நீங்கள் தமிழில் குழந்தை பாடல்கள் போட்டு விடுங்கள்,வீட்டில் அனைவரும் தமிழில் பேசுங்கள்,அவளும் பேசுவாள் சில விஷயங்களில் விளையாட்டாக சொன்னால் கேட்பார்கள்,நீங்கள் சில வார்த்தைகளை தமிழில் சொல்லி எனக்கு இங்கிலிஷ் தெரியாது என்ன அர்த்தம் என்று சொல்லி கொடுக்க சொல்லுங்கள்,அதே போல் நீங்கள் அவளிடம் கேளுங்கள் இதுக்கு அர்த்தம் தமிழில் சொல்லு என்று,நிறையா கதை சொல்லுங்கள்,நிச்சயம் பலன் கிடைக்கும்,

ஆனால் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் ஈசியாக ஆங்கிலம் கற்றுவிடுவார்கள்,தாய் மொழி பேசுவார்கள் ஆனால் குறைந்துவிடும்,அதனால் நாம் கொஞ்சி விளையாடி கற்று தந்தால் போதும்,தாய் மொழியில் ஆர்வம் வர வையுங்கள்,நிறையா கதை சொல்லுங்கள் நமக்கு எந்த மாதிரி கதை வேனுமோ அதுக்கு தகுந்தது போல் கற்பனை செய்து சொன்னால் போதும்,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வீட்டில் தமிழ் பேசுங்கள். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல். சுட்டி டி.வி. பார்த்தால் போதும், அதுவும் அந்த டோரா பார்த்தாலே தமிழ் சரளமாக வரும். என் மகன் அதைப் பார்த்து, நான் ஆங்கில வார்த்தைகள் உபயோகித்தால், என்னையே திருத்துவான்.

don't pressurize him. Try this method, appreciate him to somebody that he is talking in tamil and its so nice and he is good at it.

வீட்டில் எதை கேட்கிறார்களோ அதை தான் பிள்ளைகள் பேசுவார்கள் அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும் என நீங்கள் தமிழிலேயே பதில் சொல்லுங்கள்..புரிந்தால் கூடபோதும் திருப்பி பேச வேண்டுமா இல்லையா என்பது குழந்தையின் விருப்பம் போல் அமையட்டும்.
எனது நீஸ் சுட்டி டிவி பார்த்து நல்ல தமிழ் பேசுகிறாள் அவங்க வீட்டில் மற்ற யாருக்கும் தமிழ் தெரியாது

மேலும் சில பதிவுகள்