காரக்கடலை

தேதி: June 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை வேர்க்கடலை - 1 கப்
உப்பு - சுவைக்கு
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 டீஸ்பூன்


 

அனைத்தையும் நன்கு கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
மைக்ரோவேவ் பவுலில் வைத்து ஒரு நிமிடம் வைக்கவும்.
ஸ்பூனால் கிளறி விட்டு மீண்டும் ஒரு மணி நேரம் வைத்து மீண்டும் கிளறி விடவும்.
இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிளறி விட்டு சூடு ஆற விட்டு பரிமாறவும்.


மைக்ரோவேவ் அவனில் 4 நிமிடங்களில் சுலபமாக செய்யும் கராக்கடலை இது. திடீர் விருந்தினர்களுக்கு உதவும்.
சூடு குறைந்தால்தான் மொறுமொறுப்பு கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஒரு அவசரத்துக்கு போன் போட்டால் எடுப்பது இல்லை வருகிறேன் உங்க போனை எடுத்துட்டு வர! மேட்டர் பேசனும் கால் மி...

அப்புறம் உங்க வீட்டு வந்தால் 1 மணிநேரம் கெஸ்டை உட்கார வைப்பீங்களா?அம்மாடி வர பயமாயிருக்கு..மேலே இருக்கும் குறிப்பை ஒரு நிமிடம்னு போடுங்க :) 1 மனி நேரம்னா கடலை என்னாவது
சேய்துட்டு சொல்கிறேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா..மர்ழி,கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு குற்றம் கண்டு பிடித்து பதிவு போட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ்பா.:-))இதோ சரி பண்ணி விடுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஷாதிகா ஆன்டி காரக்கடலை சூப்பர் ஆக இருந்தது நன்றி .

உங்களுக்கு பதிவு போட்டதில் இருந்தே இந்த குறிப்பை பல முறை செய்துட்டேன் பதிவு இப்பதான் போட முடிந்தது ஹி ஹி ரொம்ப சூப்பர் இப்படி கேசுவிலும் செய்தேன் செமையா இருந்தது

அன்புடன்,
மர்ழியா நூஹு