இட்லி மஞ்சுரியன்-1

தேதி: June 12, 2009

பரிமாறும் அளவு: 3-4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1)இட்லி - 5
2) கடலை மாவு - சிறிதளவு
3)மிளகாய்த் தூள் - சிறிதளவு
4)பெரிய வெங்காயம் - 1
5) தக்காளி - 1
6) சோம்பு - சிறிதளவு
7) இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
8) உப்பு - சுவைக்கேற்ப
9) எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
10) கொத்தமல்லித் தழை - சிறிதளவு (அலங்கரிக்க)


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
தக்காளியை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவையும் மிளகாய்த் தூளையும் நீர் சேர்க்காமல் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் இட்லி துண்டுகளை போட்டு புரட்டி எடுக்கவும். எண்ணையில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
பிறகு வேறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சிறிது உப்பு சேர்க்கவும்.
அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஜெயராஜி,

என் பெண் நேற்று இந்தக் குறிப்பைப் பார்த்து செய்தார், மிகவும் நன்றாக இருந்தது என்று சொன்னார்.

நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி