குடமிளகாய் தொக்கு

தேதி: June 12, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1)குடமிளகாய் - 250 gms
2)தக்காளி - 2
3)பெரிய வெங்கயம் - 1 (சிறியது)
4)இஞ்சி - சிறிய துண்டு
5)பூண்டு - 5 பல்
6)மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
7)கடுகு, வறுத்து பொடித்த வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்
8)எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
9)உப்பு - தேவையான அளவு


 

குடமிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
பின் பொடித்த வெந்தயம், மிளகாய்த் தூள் , உப்பு சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கெட்டியாக கிளறி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

படிக்கவே நாவில் எச்சில் ஊருது.ஆனால் எதனுடன் உன்பது?ஊறுகாய் போன்றா?
Anbe Sivam

Anbe Sivam

தோழி preethi அவர்களுக்கு, இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

அன்பு நிறைந்த சகோதரி!
இன்று இரவு உணவிற்கு செய்த இளவரசியின் ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பத்திற்கு பக்க உணவாக உங்கள் குறிப்பில் உள்ள குடைமிளகாய் தொக்கு செய்திருந்தேன். ருசியை சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன். அப்படி ஒரு சுவை. வறுத்தரைத்த கடுகு, வெந்தய பொடி சேர்த்தமையால் தொக்கு கிளறிமுடிய வீடுமுழுவதும் அப்படி ஒரு வாசனை. (மிக சிறிய அளவு பெருங்காயப்பவுடரும் சேர்த்தேன்) நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

மிக்க நன்றி இளமதி அக்கா.