எங்கட செல்லங்கள் (பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ - 3

இதிலே, நீங்கள் வளர்த்த, வளர்க்கின்ற, வளர்க்கப்போகும் செல்லங்களின் சேட்டைகள், கூத்துக்கள், கொடுமைகள்:), விரும்பினால் பெயர் எல்லாம் வந்து சொல்லுங்கள். 'நானும்' சொல்கிறேன்.

அத்துடன் இதில் எழுதப்படும் கதைகளுக்கு, படிக்கும் உங்கள் மனதில், தோன்றுபவற்றைப் பின்னூட்டமாகவும் கொடுங்கள்.

இது பகுதி மூன்றாகத் தொடர்கிறது.

இதன் முதற் பகுதியைக் காண இங்கு செல்லுங்கள்...
http://www.arusuvai.com/tamil/forum/no/12514

இரண்டாம் பகுதியைக் காண இங்கு செல்லுங்கள்...
http://www.arusuvai.com/tamil/forum/no/12696

வாருங்கள் ..... தொடருங்கள்....

அதிராவுக்காக
இமா

அன்பு அதிரா,

போன முறை இழை நூற்று நாற்பத்தைந்து வரை போயிற்று. அதனால் இம்முறை நீங்கள் வரும் வரை இருக்காமல் உங்களுக்காக நான் அடுத்த பகுதியை ஆரம்பித்து வைத்திருக்கிறேன். ஆனால் வழக்கம் போல நீங்கள்தான் ட்ரைவர், நீங்கள்தான் ஓட்டப் போறீங்கள், மறந்திராதைங்கோ. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா...... எச்சரிக்கை: இதை பாத்துட்டு மறுபடியும் தலையை சுத்திக்காதீங்கோ.... இதெல்லாம் அதிரா மற்றும் மஹி மாதிரி தைரியசாலிகளுக்கு தான்...

அன்பு மஹி.......

நம்பவே முடியல........ ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு.... உண்மையாலுமே நீங்க முயல் முட்டை பார்த்ததில்லையா? இல்லை சும்மா அதிராவை வம்பிழுப்பதற்காக கேட்டீர்களா? எது எப்படியோ...... உங்களுக்காக நான் ஒரிஜினல் முயல் முட்டை (உள்ளே முயலோட) தேடி தந்திருக்கிறேன்.. கண்டு களியுங்கள்... அதிரா நீங்களும் தான்... :-)

http://flahertyfamily.typepad.com/.a/6a00e55377fc00883301156f200875970c-800wi

அப்போ கைவசம் நிறைய கதைகள் இருக்கும் போல !!! நம்பிக்கையோடு மூன்றாவது இழையையும் துவக்கிட்டீங்கள்...... நாங்களும் வருவோம் - வம்பிழுத்துக்கொண்டே பயணம் செய்வதற்கு.......

கிருஷ்ணன் அண்ட் மதுரம்... நல்ல ரசனை உங்க அப்பாக்கு... நன்றி செபா... தொடர்ந்து எழுதுங்கோ...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய்...ஹாய்...ஹாய்...எல்லாருக்கும் ஒரு ஹாய்."அதிரா அக்காவா இன்னும் காணும்"..எனக்கு நாய் குட்டினா ரொம்ப புடிக்கும்.இப்போ என்கிட்டே கோல்டன் ரிற்றீவர் எனப்படும் ப்ரீட் வளர்க்கிறேன்..அவன் பெயர் அர்ஜுன்..இப்போ அவருக்கு வயது பதினைந்து மாதம்.பண்ற சேட்டை தாங்க முடியல.வீட்டில் ஒரு பொருள் வைத்தது வைத்த இடத்தில் இருக்காது.
அவன் பிறந்து முதல் மாதத்தில் இருந்து இப்போ வரை டாய்லட் பேப்பரை பார்த்தால் அவளவு கோவம் வந்து விடும்..
கடைக்கு கூட்டி சென்றால் டெட்டி பியர் பொம்மையை பார்த்தால் உடனே அது வேணும் அவனுக்கு.நாங்கள் வேணாம்என்று சொன்னால்.. உடனே வந்து பக்கத்தில் உட்கார்ந்து நம் கன்னத்தை நக்கி(முத்தம் கொடுத்து)நமக்கு ஐஸ் வைக்க ஆரமிப்பான்.வாங்கி கொடுக்கும் வரை விட மாட்டான்.
கடைக்கு போய் எது வாங்கி வந்தாலும் முதலில் அவனிடம் தந்து விட்டு தான் நாம் வங்கி கொள்ள வேண்டும்.பைக்குள் தலையை விடு செக்க்கிங் நடக்கும் .இல்லாவிட்டால் கோவம் வந்துவிடும்..
துப்பாக்கி என்றால் கொள்ளை பிரியம் அவனுக்கு.வெளியில் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல மறக்க மாட்டான்....(நம்பினால் நம்புங்கள்:எங்கள் வீட்டில் இது வரை பதினைந்து துப்பாகிகள் உள்ளது.(பொம்மை துப்பாக்கி தான்பா..பயந்து விடாதீர்கள்)...கீழே உள்ள லிங்க்கில் போய் பாருங்கள்.

http://picasaweb.google.com/ammujan24/Madhu#

போய் பார்த்து விட்டு எனது செல்லம் எப்படி இருக்கிறன் என்று கூறுங்கள்.
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

செல்லங்கள் பற்றிய மூன்றாவது இழையை ஆரம்பித்தமைக்கு எனது நன்றிகள்.
செபா.

திருமணம் முடிந்து மாமி வீட்டிலிருந்து திரும்ப எங்கள் வீட்டிற்கு வருகையில் அங்கிருந்த முயல்கையும் என்னுடையவற்றோடு சேர்த்து நானே கொண்டு வந்து விட்டேன்.

பின்புதான் வீட்டுக்கு வெளியே பெரிதாகக் கூடு அடித்தோம். முயல்கள் வளை தோண்டிக் கொண்டு தப்பிவிடக் கூடாது என்பதற்காக ஆழமாகத் தோண்டி ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைத் தாட்டு வைத்தோம். முயல்கள் எல்லோரும் நன்றாக இருந்தார்கள்.

வளைகள் வாயில் மிகச் சிறிதாகத் தெரிந்தாலும், எல்லாம் ஆழமாக இருக்கும். நடுவே ஒரு மூன்று நாள் தொடர் மழை பொழிந்த போதுதான் வளைகள் நிரம்பி உள்ளே இருந்த குட்டிகள் எல்லாம் இறந்து போயிற்று.

முயல்கள் எண்ணிக்கை அதிகரித்த போது சாப்பாடு போடுவது சிரமமாக இருந்தது. தினமும் காலையும் மாலையும் குழை உடைத்துப் போட வேண்டும். எனக்கு தூரப் பிரதேசப் பாடசாலையில் முதல் நியமனம், வீட்டுக்குச் சமீபமாக, 10 நிமிட நடையில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றால் மினிபஸ் 'புட்போட்'டில்தான் பயணம் செய்யக் கிடைக்கும். அதைத் தவிர்ப்பதற்காக எதிர்த் திசையில், நான்கு தரிப்புகள் முன்பாக, கொஞ்சம் தூரமாக இருந்த பஸ்தரிப்புக்குச் சென்று விடுவேன். குறுக்கு வழியில் போவதானாலும் 20 நிமிடம் எடுத்துவிடும். அநேகம் எனக்கு முயல்களைப் பார்த்து உதவியது என் தாயார்தான்.

முயல்கள் முள்முருக்கம் பட்டைகள், முள்ளுகள் எல்லாவற்றையும் விடாமல் சாப்பிட்டு விடுவார்கள். வீட்டில் பெரியதொரு புளியமரம் இருந்தது, இவர்களுக்குப் புளியமிலையும் நல்ல விருப்பம்.

ஒரு முறை எல்லா முயல்களுக்கும் கண், மூக்கு, காது எல்லாம் தோசை மாவை அப்பிக் காய வைத்த மாதிரி நோய் வந்தது. காது மடிந்து தொங்கும், மூக்கு நுனி தனியே ஆடும். :) க்ரீம் வாங்கி ஒவ்வொரு ஆளாகப் பிடித்துப் பூசி விடுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். ஒரு மாதிரி சுகமாக்கி எடுத்தேன். ஒரு முறை கண் நோய், பேசாமல் எங்கள் 'ஐ ஓயின்மன்ட்' வாங்கிப் போட்டு விட்டேன். சரிவந்து விட்டது.

கஷ்டங்களுக்கு நடுவேயும் 7 வருடங்கள் முயல்களை வளர்த்திருக்கிறேன். பிறகு இரண்டாவது மகன் பிறக்கு முன், கேட்டவர்களுக்கு ஆளுக்கு ஒரு சோடி என்று கொடுத்து அனுப்பி விட்டேன். அனுப்பிய சில நாட்களில் அவற்றில் இரு வீடுகளுக்குப் போக நேர்ந்தது. இரு இடங்களிலும் ஆறு, ஆறு குட்டிகள் கூட இருந்தார்கள்.

‍- இமா க்றிஸ்

//"அதிரா அக்காவ இன்னும் காணும்"//
எங்க போய்டீங்க அதிரா?

சந்தனா, முயல் முட்டைக் கோது பார்த்தேன். :)

செபா... தொடர்ந்து எழுதுங்கோ.. :)) நன்றிக்கு நன்றிகள்.

அர்ஜுன் கியூட் அம்மு. தூங்குகிற படம் அழகாக இருக்கிறது.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நல்ல இழை.ஆரம்பித்த அதிராவுக்கு வாழ்த்துக்கள். பகுதி-1 இன்னும் படிக்கலை.இனிமே தான் படிக்கனும்.உங்களுடைய அனுபவங்கள் ரொம்ப நல்லா இருக்கு.செல்லங்களை பற்றி படிக்க படிக்க ஆர்வம் அதிகமாயிட்டு இருக்கு.

இமா நீங்க முயல் எல்லாம் வளர்த்திருக்கீங்களா.முயல்கள் பார்க்க எத்தனை அழகு.எனக்கு முயல்கள் ரொம்ப பிடிக்கும்.ஆனா அவற்றை வளர்க்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கலை.

அம்மு உங்க அர்ஜுன் அழகா இருக்கார்.தூங்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு.டெடிய வைச்சிட்டு இருக்கிறது, நாற்காலில உட்கார்ந்திருக்கறதும் அழகா இருக்கு.குட்டி அர்ஜூன் ரொம்ப அழகு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நன்றி இமா...
சந்தனா சொன்னதுபோல் நல்ல தைரியம் வந்துவிட்டதுபோலும்... எல்லோரும் எழுதுங்கோ நான் எதையும் இன்னும் படிக்கவில்லை.

இமா, சந்தனா, அம்மு, செபா, திவ்யா அனைவருக்கும் பதில் தருகிறேன் இப்போ போகப்போகிறேன்.

இங்கே குறிப்புக்கள் பற்றியும் ஒரு தலைப்பு பார்த்து ஆச்சரியமாகிவிட்டேன்.. தொடரவேண்டாம் என பத்மா அவர்கள் சொல்லியுள்ளதால் அத் தலைப்பில் தலையிடவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எல்லோருக்கும் நல்ல கொண்டாட்டமாப்போச்சு:)
அதிரா இல்லையென்று கன்போம் ஆனதும்:) என்னைப்பற்றி எல்லோரும் பயமில்லாமல் முயல் முட்டை என்றெல்லாம்... கதைக்கினம்...:).

மகிஅருண் பறவாயில்லை... அப்பப்ப இப்படியான டவுட் எனக்கு வாறதாலதானே... உங்களைப்போன்றவர்கள் எட்டிப் பார்க்கிறீங்க.

இமா அதுக்குள்ள ஈஸ்ரருக்கும் போயிற்றா. முயல் குட்டிபோடும் அக்குட்டியைத் தானே சாப்பிட்டும் விடும் என்றெல்லாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பால் குடுக்குமென்று நான் யோசிக்கவில்லை... தப்புத்தான்.. அனுபவமில்லை:).. டொல்பின் பால் குடுக்குமென்று அதிராக்குக் கரெக்ட்டாத் தெரியும்:). நான் பார்த்தபோது முயலெதுவும் பால் கொடுக்கவில்லை... இது என்னுடைய தப்போ?...

இமா என்னால சிரிப்பை அடக்கவே முடியேல்லை... மிதக்கிற ball தான் போடவேண்டுமோ:)... தெளிவாக் கதைச்சாத்தானே அதிராக்குப் புரியும்:).

செபா---, கிருஸ்ணன், மதுரம் சூப்பர் பெயர்கள். சரி நான் இதுவரை கதைத்தது பகுதி -2 பற்றி. இனி 3 பற்றிக் கதைப்போம்.

சந்தனா முயல் முட்டை பாருங்கோ என்று சொல்லிப்போட்டு.. மாறி, ஆட்டுமுட்டைப்படம் போட்டிருக்கிறீங்கள் போல இருக்கே:).

அம்மு உங்கள் அர்ஜூன் அழகாக இருக்கிறார். ஸ்னோவிலும் படுத்திருக்கிறாரே. 15 மாதத்தில் நல்ல வளர்த்தி. எங்கள் அக்காக்காளும் இப்போ நாய் வாங்கியிருக்கிறார்கள். சமருக்கு வெளியே தோட்டம் செய்வார்கள். இம்முறை எந்தப் பயிரும் வைக்க முடியாமல் இருக்காம். செம்பரத்தை, ரோஜா எல்லாம், நட்டுப்போட்டுப்போக, பின்னாலே இழுத்துக்கொண்டுபோய் தன் ரூமில் வைக்கிறாராம். இப்போ தோட்டம் செய்யும் இடத்துக்கு உயரமாக பலகை வேலி போடப்போகிறார்களாம். அது white labrador இனம். உங்களுடையது என்ன சாதி. கிட்டத்தட்ட அவர்களுடையதைப் பார்த்தமாதிரி இருக்கு.

இமா எனக்கும் புளியம் இலைக்குருத்து என்றால் சரியான விருப்பம். பிடுங்கிச் சாப்பிடுவேன்:).

திவ்யா அருண் உங்களுக்கும் செல்லங்கள் வளர்த்த அனுபவம் இருந்தால் எழுதுங்கோ. எல்லாப் பதிவுகளையும் நேரமுள்ளபோது வாசியுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நாங்கள் வசிப்பது தொடர் மாடிக் கட்டடம். வீட்டின் பின்னால் பெரிய புற்றரை உள்ளது. விடிந்ததும் புறாக்கள் வந்து விடுவார்கள். உணவு கொடுக்கும் வரை அசையவே மாட்டார்கள். ஓட்ஸ், அரிசி, அல்லது பாண் துண்டுகள் போடும் வரை அடம் பிடிப்பார்கள். இதனால் நான் ஏதாவது தயாராக வைத்திருப்பேன். ஆண் புறா மற்றவர்களைக் கொத்தித் துரத்தியபடி சாப்பிடுவார். மற்றவை இவரோடு போட்டி போட்டுத் தாங்களும் சாப்பிடுவார்கள். ஒரு நாள் ஆண் புறா வரவில்லை. இறந்து போய் விட்டது என நினைத்துக் கொண்டிருந்தபோது நொண்டிக்கொண்டே வந்தார். பரிதாபமாக இருந்தது. கணுக்காலில் இருந்து பாதம் முழுவதையும் காணவில்லை. பக்கத்து வீட்டுப் பூனையார் சாப்பிட்டு விட்டார். நொண்டியபடி வந்து போனவர் சடுதியாக வருவது வருவது நின்று விட்டது. மற்றையவை இன்றும் வருகின்றன. நொண்டிப்புறாவை எப்படி மறப்பது?

மேலும் சில பதிவுகள்