புடலங்காய் கோளா உருண்டை

தேதி: June 13, 2009

பரிமாறும் அளவு: 10-12 உருண்டைகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1)பிஞ்சு புடலங்காய் - 250 GMS
2)சின்ன வெங்காயம் - 7
3)பச்சை மிளகாய் - 3
4)மல்லித் தழை - ஒரு கைப்பிடி
5)சோம்பு - 1 டீஸ்பூன்
6)பொட்டுக்கடலை - 1 கப்
7)உப்பு - தேவையான அளவு
8)எண்ணெய் - தேவையான அளவு


 

புடலங்காயை கழுவி பொடி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை, சோம்பு - அனைத்தையும் கலந்து நற நறவென்று அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையை பொடி செய்து கொள்ளவும்.
10 நிமிடத்தில் புடலங்காயில் தண்ணீர் விட்டு விடும். அதன் நீரை ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.
இத்துடன், அரைத்த கலவை, பொட்டுக்கடலை பொடி, துளி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து, பிசைந்த கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகப் பொட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.


அரைக்கும் போது தண்ணீர் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும். இல்லாவிடில் கலவை பதம் மாறி, பொரிக்கும் போது காய் தனியாக பிரிந்து விடும். புடலங்காயில் முதலிலேயே உப்பு சேர்த்ததால் கலவை பிசிறும் போது, துளி உப்பு போட்டால் போதும்.

மேலும் சில குறிப்புகள்