மறைபொருள் ரகசியங்கள் பகுதி 4

அருட்பேராற்றலே நான் எனக்கு துன்பம் கொடுத்தவர்களை மன்னித்தது போல் நான் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பங்களை மன்னிப்பாயாக!

-செயின் பிரான்ஸிஸ் (அஸிஸி)

**********************

மறைபொருள் பகுதி 1,2,3 தொடர்புகள் வரிசையாக கொடுக்கபட்டு உள்ளது.
http://www.arusuvai.com/tamil/
forum/no/12198

http://www.arusuvai.com/tamil/
forum/no/12522

http://www.arusuvai.com/tamil/
forum/no/12826

மறைபொருள் பகுதி 1,2,3,4 விளக்கப் படங்களின் தொகுதி தொடர்புகள்

http://picasaweb.google.co.in/
haish12

என் அன்பு சகோதரிகள் அதிரா, இமா முனைந்து காவல் காக்கும் போதும், அயர்ந்து தூங்க்கும் போதும் அவர்களுக்கு தெரியாமல் எங்கட செல்ல பிராணிகளின் இழையில் இருந்து சுட்ட கோழி, மீன் மற்றும் ஆமை. ஸ்டாப்....கற்பனை குதிரையை தட்டி விடாதீர்கள் கார்டூன் படங்களின் தொடர்பில் கொடுத்து இருக்கும் கோழிகள் பார்க்கும் “Horror Film” படத்தில் வரும் சுட்டது இல்லை இது. சொல்ல போனா நம்ம வடிவேலு ஸ்டைலில் அன்பு தங்கை அதிரா, இமாவுக்கு தெரியாம “ஆட்டை” போட்டு இங்கே கொண்டு வந்தது.

இப்போது இந்த கோழி, மீன் மற்றும் ஆமைகளுக்கு நன்கு பயிற்சி அளித்து அதற்கு குரு பட்டம் கொடுத்து, திருமதி கோழி, திரு/திருமதி மீன் மற்றும் திருமதி ஆமை அவர்களை அருசுவை அன்பு சகோதரிகளுக்கு தீட்சை கொடுக்க சொன்னால் எப்படி கொடுப்பார்கள் என்று பார்போம். யாரோ விஷமமாக சிரிப்பது போ....ல்....தெரிகிறது. பீ சீரியஸ் நவ்! (ரொம்ப சிரிச்சா பல்லு சுளுக்கி கொள்ளும்)

கோழி தீட்சை: என்பது கோழி முட்டை மீது உட்கார்ந்து அதன் உடல் சூட்டினால் அடைகாத்து குஞ்சு பொரிப்பது (புது உயிர் உருவாக்குவது-ஆன்மாவை உணர்வது) ”ஸ்பரிச” தீட்சை அதாவது குரு சிடனை தொட்டு தன் அலை அதிர்வுகளால் தீட்சை அளிப்பது. கோழியும் நிலத்தில் முட்டையும் நிலத்தில் உள்ளது. அதாவது இருவரும் ஒரே பரிமாணத்தில் இருப்பது. பஞ்ச பூதத்தில் நிலம்- குறைந்த அலையதிர்வுகள் கொண்டது.

மீன் தீட்சை: மீன் நீரில் முட்டையிட்டு அதன் அருகில் பார்வையால் பாதுகாத்து நீந்திக்கொண்டு இருக்கும். அதன் பார்வையினால் அடைகாத்து குஞ்சு பொரிப்பது. ”நயன” தீட்சை என்பது. இதில் குருவானவர் சீடனுக்கு பார்வையாலே தீட்சை அளிப்பது. நிலத்தை விட நீரின் அலை அதிர்வுகள் அதிகம். குருவும் சீடனும் உயர்ந்த அலையதிர்வில், மற்றும் உயர்ந்த பரிமாணத்தில் இருந்தால் மட்டுமே இந்த தீட்சை கொடுக்க முடியும்.

ஆமை தீட்சை: கடலில் வாழும் ஆமை பல ஆயிரம் மைல்கள் நீந்தி கடந்து கரையில் முட்டையிட்டு மணலால் முடிவிட்டு திரும்ப வந்த இடத்திற்கே சென்று பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்து மனதாலே நினைத்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும். இது ”மானச” தீட்சை எனப்படும். இதில் குருவானவர் மிக அதிக அலையதிர்வில், உயர்ந்த நிலையில் இருப்பவர்.அதாவது குரு நீரிலும் சீடன் நிலதிலும் இருக்கிறார்கள். மேலும் குருவானவர் ரசவாதம் அறிந்தவர் தாழ்த்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்ற தெரிந்தவர். தன் மன அலையதிர்வால் சீடனுக்கு மானச தீட்சை கொடுப்பார். இருவரும் வெவ்வேறு பரிணாமத்தில் உள்ளனர்.

இந்த தீட்சையில் இன்னும் பல சூட்சமங்களும், ரகசியங்களும் உள்ளது. தற்சமயம் L.K.G யில் படித்துக் கொண்டு இருப்பதால் இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியவில்லை.

கி.பி /கி.மு போல் ஸ்பரிச தீட்சை கொடுப்பதற்கு முன், கொடுத்த பின் சீடனின் மூளையின் அலையதிர்வு மாற்றங்களை மருத்துவ நிபுணர்கள் (EEG – Electro Encephalo Graph) ஆராய்ந்த போது எடுத்த சில படங்களை தலைப்பில் உள்ள தொடர்பில் மறைபொருள் பட தொகுதி மூன்றில் உள்ளது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி இலா: பயிற்சி 1, 2 எங்கு வேண்டுமானலும் செய்யலாம். பயிற்சி முடிந்ததும் எந்த வேலை வேண்டுமானலும் செய்யலாம். குளிப்பது மட்டும் 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

பி.கு: குளித்த பின் செய்வது சிறந்தது.

அன்பு சகோதரி ஆயிஸ்ரீ: வாழ்கை என்பது என் அன்பு தங்கைகள் அதிரா, ரேணுகா ஓட்டும் ட்ரெயின் போன்றதுதான். ஆனால் வாழ்கை என்னும் ட்ரெயினில் புறப்படும் இடம் (பிறப்பு) போய் சேரும் இடம் (இறப்பு). சமைத்து அசத்தாலாம் ட்ரெயின் இந்த திங்கட் கிழமை ஆரம்பித்து அடுத்த செவ்வாய் கிழமை முடியும் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் உள்ள சக பிரயாணிகள், அவர்கள் அடிக்கும் லூட்டிகள், லொள்ளுகள், சீண்டல், சிணுங்கல், விசாரிப்பு, அனுசரணை (ஜூஸ், டீ) போன்ற உணர்வு கலந்த அருசுவைதான் வாழ்கையும். அதனால் நம் வாழ்க்கை எனும் இந்த ட்ரெயினை வேகமாக சேருமிடத்தை நோக்கி ஓட்டகூடாது. வழியில் உள்ளவைகளை அணு அணுவாக ரசித்து தேவைப்பட்டால் ட்ரெயினை நிறுத்தி வாழ்கையை அனுபவித்து பயணிக்க வேண்டும் நாமே விரும்பவில்லை என்றாலும் நம் பயணத்தை இயற்கையே முடித்து வைக்கும் அல்லவா?

அதில் நம் முதல் கடமை நாம் நம் வாழ்கை பயணத்தில் யாருக்கும் பாரம் இல்லாமல் பயணிக்க வேண்டும். “சுவர் வேண்டும் சித்திரம் வரைய” அதற்கு நம் உடல் நலம் காப்பதே நம் முதல் கடமை! அதனால் கணவர், மனவி, பிள்ளைகள் நலம் நம் நலத்தை அடுத்துதான். இதில் நம் சுயநலமில்லை நாம் அடுத்தவருக்கு தொல்லை கொடுக்கவேண்டாம் என்ற எண்ணம் தான் பிரதானமாக இருக்க வேண்டும்.

அன்பு சகோதரர் ஜஸ்டின் மைக்கேல் ராஜ்: குரு தட்சணையை ஏற்றுக்கொண்டேன், ஆனால் முக்கியமான சினத்தை தற மறந்துவிட்டீர்களா? இல்லை பதுக்கி வைத்து இருக்கிறீகளா? அதையும் கொடுத்தால்தான் அடுத்த பயிற்சி பழகலாம்! (கருப்பு மின்னஞ்சல்)

அன்பு சகோதரி அழகி: “தொட்டு காட்டாத வர்மம் சுட்டு போட்டாலும் வராது” என்பது முதுமொழி. சில வர்ம புள்ளிகள் தொட்டு காட்டாமலும் வேலை செய்யக் கூடியதைதான் நான் இங்கு எழுதுகிறேன். உருமி, ஆமைக் காலம் என்னும் வர்ம புள்ளிகளை வர்ம வைத்தியர் அல்லது வர்ம ஞானி இடம் நேரடியாக சென்றுதான் கற்று கொள்ள வேண்டும். அதில் உருமிகாலம் மட்டுமே தானாக செய்து கொள்ள கூடிய புள்ளி. ஆமைக் காலம் வைத்தியர் அல்லது ஞானிதான் செய்யவேண்டும். அதனால் தாங்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் ஏதாவது வர்ம சிகிச்சை நிலையம் இருந்தால் சென்று வைத்தியம் செய்து கொள்ளவும். இது மிக நல்ல பலன் அளிக்கும். என் மனவியும் கடந்த இரு வருடமாக செய்து கொள்கிறார்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஐயையோ பட்டப்பகலில் களவு:)
ஓடிவாங்கோ ஓடிவாங்கோ எங்கட ஆமை, மீன், கோழி எல்லாம் பகலிலே களவு போகிறது...:) இமா... ஓடிவாங்கோ...:)..,

ஓ..... மன்னிக்கவும், ஹைஷ் அண்ணன் நீங்களே:), நான் என்னவோ ஏதோ என்று பயத்தில் கத்திவிட்டேன்:).

வேறொன்றுமில்லை என் பக்கம் வரட்டும் என்று இப்பதிவு போடுகிறேன். மிக அழகாக குருவையும் சீடரையும் கோழி, மீன், ஆமைக்கு ஒப்பிட்டு எழுதியிருக்கிறீங்கள் அழகாக இருக்கு. புரியவும் இலகுவாக இருக்கு.

இதோடு சம்பந்தமில்லாத கேள்விதான் இருப்பினும், தாமதமாகவென்றாலும் பதில் சொல்லுங்கோ.

1)அதாவது பொழுதுபட்டபின் சில பொருட்கள் வெளியே யாருக்கும் கொடுக்கக்கூடாது... ஊசி, முட்டை... இப்படியானவை.
2)செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, போட்ட ஆடை வெட்டக்கூடாது, வெளியே எறியக்கூடாது, பொன் பணம் யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது.

இன்னும் இருக்கு மனதில் நினைவிலுள்ளது இவை மட்டும்தான்.... இப்படியான விஷயங்களைக் கடைப்பிடிப்பது நல்லதோ? தவறோ?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைஷ்,

நான் தூர நிண்டு வாசிச்சிட்டுப் போகலாம் எண்டாலும் விடுறீங்கள் இல்லை. :) அயர்ந்த தூக்கத்தில விழிப்பு வந்தது இதனால்தான் போல.

இங்க ஒருவரும் விஷமமா சிரிக்க இல்லை. நீங்கள் எழுதிறது எல்லாம் ஸீரியஸா வாசிக்கிறன். அதிலையும் இப்பிடி தலைப்பும் போட்டு ஃபிரான்சிஸ் ஆஃப் ஆஸிஸி வசனங்களையும் எழுதி வச்சால் கட்டாயம் வாசிக்கச் சொல்லுது. :)

இதில நிறைய விஷயங்கள் 'இமா' வுக்கு அப்பாற்பட்டதா இருக்கு. ஆனால் நீங்கள் எழுதிறதில இருந்து என்னால ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்கள எடுத்துக் கொள்ளுறன்.

மனதின் ஆழத்தில்போய்த் தங்கி (மங்கிப் போய்) விட்ட சில நல்ல விஷயங்கள் உங்கள் பதிவுகள் படித்த பின்பு மேலே வந்திருக்கின்றன. சில விடயங்கள் நான் நினைப்பது போல் இருக்கும், சிலது என்னைச் சிந்திக்க வைக்கின்றன, பலது புரியவில்லை. :) புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை, தலைப்பிலேயே மறை பொருள் (ஒரு) 'ரகசியம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்தவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் இமா

பி.கு
கோழியோ, மீனோ, ஆமையோ, முட்டை இடுவது எதுவானாலும் இமாவும் தன் மன அலையதிர்வால் மானச தீட்சை கொடுப்பார். :)

‍- இமா க்றிஸ்

தீட்சை பற்றி எங்களுக்கு புரியும்படி நல்ல தெளிவாக எளிமையா நகைசுவையாக செல்ல பிராணிகளை வைத்து சொல்லியிருக்கீங்க.பாவம் அதிராவும், ரேணுவும் அவங்கபாட்டுக்கு டிரயின் ஓட்டிட்டு இருக்காங்க. அவங்களை வம்புக்கு இழுக்குறீங்களே! பரவாயில்லை,அதிரா ரொம்ப நல்ல பொண்ணு. கோவிச்சுக்க மாட்டாங்க. அவங்ககிட்டருந்து பயப்படாம எத வேணா ஆட்டைய போடலாம்(பதிவுல இருந்து மட்டும் தான் அதிரா).

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உங்களுடைய கார்டூன் படம் பார்த்து நானும், என் கணவரும் விழுந்து விழுந்து சிரித்தோம் (பல்லு சுளுக்கு விழாமல் + வீட்டில் குழி தோண்டாமல்) நன்றி.

எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் தருகிறீர்கள் அதனால் எப்போது தூங்குவீர்கள் என்று கேட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

-----தூக்கம் என்றால் என்ன? அது ஏன் தேவைப்படுகிறது? தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கும்? இவற்றிக்கு எல்லாம் விடையை தேடி வையுங்கள் வந்ததும் சொல்கிறேன்-----

ஒரு மனிதருக்கு ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
இதுவரை எனக்கு தெரியும் மற்றவை நீங்களே கூறவும்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

குருவே நமக...நீங்கள் எப்ப வருவீங்கன்னு வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். பொதுவாக யாரிடமும் நான் கோபம் கொள்வது கிடையாது, அதனால் மறந்துவிட்டேன். பாரதியார் கூறியது போல 'ரௌத்திறம் பழகு' தான் என் பாலிசி. அதுவும் ஒரு தவறான செயல் தான். இந்த கணம் நான் கோபத்தை குரு தட்சனையாக தருகிறேன். 3வது பயிற்ச்சிக்கு Entrance Ticket கிடைக்குமா :) :)

அன்பு நண்பன்
ஜஸ்டின் மைக்கேல் ராஜ்

மேலே இருக்கும் படங்களின் தொடர்பில் மருத்துவ தொகுதியில் படம் 3, 4, 5 ஐ பார்க்கவும்.

அறிகுறிகள் இதில் ஏதோ ஒன்றோ அல்லது சில/பல அறிகுறிகள் இருக்கலாம்:

1. துர்நாற்றம் வீசும் மூச்சு காற்று.
2. இருமல்
3. மூக்கால் மூச்சு விடுவதில் சிரமம்.
4. சோர்வு
5. அதிகமான உடல் வெப்பம்
6. மூக்கடைப்பு, பச்சை கலந்த மஞ்சள் நிறமான சளி.
7. குமட்டல்
8. கண்களை சுற்றி, மூக்கு அருகில், காது அருகில், தாடை அருகில்,உச்சந்தலை, காதுக்கு பின்பக்க தலைப் பகுதியில் வலி.
9. சைனஸ் பைகளின் மேல் புறம் சிவந்து இருத்தல்.
10. வாசமும், சுவை அறியும் தன்மை குறைந்து விடல்.

காரணம்: வாரண நாடி பாதிப்பாலும், திரிதோஷ பாதிப்பாலும் ஏற்படுகிறது.

மருந்து :நல்லெண்ணையில் (50 மி.லி.) ஓரு தேக்கரண்டி மஞ்சள் தூள், மாவிலை கொழுந்து ஒன்று, சித்தரத்தை தூள் ஒரு தேக்கரண்டி, கசகசா ஒரு தேக்கரண்டி போட்டு எண்ணை கொதிக்காமல் சுடு பண்ணி அதை பொருக்கும் அளவு சூட்டில் வலி உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, ஆவி பிடிக்கவேண்டும் (தண்ணீரில் எதும் போடாமல்). சூரியன் மறைந்த பின் செய்தால் (மாலை அல்லது இரவில்) நல்ல பலன் கிடைக்கும்.

சாப்பிட வேண்டிய உணவு வகைகள்:

1. தண்ணீர், பழச்சாறு, மூலிகை டீ அதிகம் குடிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக marshmallow, licorice, and slippery elm இந்த உட்பொருட்கள் உள்ள டீ குடித்தால் சைனஸ் பையில் உள்ள சளியை இளக்கி வெளியே கொண்டு வரும். அதனால் விரைவில் குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
2. முற்றிய அல்லது மிகவும் முற்றிய ”பெரி- Berry“ ஜூஸ் குடிக்கல்லாம். அது வைரஸ் பரவலை தடுக்கும்.
3. மீன் மற்றும் Flaxseed சாப்பிட்டால் மென் தசையின் வீக்கம் குறைக்கும்.
4. காய்கறி பழவகைகளில் பேரி, பைன் ஆப்பிள், சாத்துகுடி, ஆரஞ்சு, எலுமிச்சை, பூண்டு, வெங்காயம், இஞ்சி வகைகளை வலி உள்ள நேரத்தில் மட்டும் உணவில அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
5. சிவப்பு முள்ளங்கி துறுவி ½ அல்லது 1 தேக்கரண்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிடவும். (ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடகூடாது)

நோய் உள்ள போது மட்டும் சாப்பிட கூடாத உணவு வகைகள்:

1. எந்த வகையான மது பானமும் அருந்தக் கூடாது
2. பால் பொருட்கள் சாப்பிட கூடாது (பால், தயிர், மோர், வெண்ணை, நெய், பாலடைகட்டி)
3. உப்பு குறைத்து சாப்பிட வேண்டும்.
4. சர்கரை குறைத்து சாப்பிடவேண்டும்.

வாழ்கை முறை மாற்றங்கள்:

1. புகை பிடிக்க கூடாது, அதேபோல் புகை பிடிப்பவர் அருக்கில் நிற்க கூடாது.
2. வாசனை திரவியங்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
3. ஏசி உபயோகிப்பதை தவிர்க்கவும், இல்லை என்றால் அந்த அறையில் ½ வாளி தண்ணீர் வைக்கவும்.
4. 5 சொட்டு “லெமன் கிராஸ்” எசன்ஸ் போட்டு வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்கவும்.
5. முடிந்தால் வர்ம்ம வைத்தியம் செய்து கொள்ளலாம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு தங்கை அதிரா: முதல் பதிவுக்கும் ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி.

/// 1)அதாவது பொழுதுபட்டபின் சில பொருட்கள் வெளியே யாருக்கும் கொடுக்கக்கூடாது... ஊசி, முட்டை... இப்படியானவை./// பழங்காலத்தில் இரவில் மின் விளக்கு கிடையாது அதனால் இருட்டில் கரடுமுரடான சாலைகளில் எடுத்து போகும் போது கீழே போட்டுவிட வாய்புகள் அதிகம். அதனால் இந்த பொருட்கள் அவருக்கும், நமக்கும் பயன் படாமல் போகும் என்பதை தவிற வேறு இல்லை!

///2)செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, போட்ட ஆடை வெட்டக்கூடாது, வெளியே எறியக்கூடாது, பொன் பணம் யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது./// இந்த கிழமைகள் மட்டும் அல்ல பிறந்த கிழமைகளில் கூட முடி அல்லது நகம் வெட்ட கூடாது. புத்தாடைகள் புதன் கிழமையில் மட்டுமே அணியவேண்டும். ஏன் என்றெல்லாம் இப்போது விள்க்கம் அளிக்க முடியாது. அதே போல் கடன் சுமையில் உள்ளவர்கள் செவ்வாய் கிழமையில் கடனை திருப்பி அடைத்தால் (ஓரு பகுதி அடைத்தால் கூட) அதற்கு பிறகு அவர்கள் கடனாளியாக மாட்டார்கள். டிரை பண்ணிப் பாருக்ங்கள் பலன் தெரியும்.

///......... பட்டப்பகலில் களவு:)/// கோடிட்ட வார்தையை நான் டைப் செய்ய விரும்பவில்லை. அது தேவையில்லாத எதிர்மறை அலைஅதிர்வுகளை கொடுக்கும் ( அது எமதருமரின் மனைவியின் பெயர்) தவிர்பது நல்லது. ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டு இருந்தேன் இன்று சொல்லிவிட்டேன். கோபித்து கொள்ளாதீர்கள்.

அன்பு சகோதரி இமா: முதலில் என் மனமார்ந்த நன்றிகள் பல! (காணாமல் போனவர்கள் இழையில் வாழ்த்தியதற்கு) நான் எடுத்து சென்ற கொள்கை திட்ட ஆய்வு அறிக்கையும் பரிந்துரைகளையும் (அடுத்த 50 ஆண்டுகளுக்கான) ஒரு சொல் மாற்றமில்லாமல் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு உங்களின் வாழ்த்தும் ஒரு காரணம்.

நான் லார்ட்ஸ் ப்ரேயர் கற்று கொண்ட பின் தான் தெரியும் அது “கபலா” தியானத்தின் சுருக்கிய வடிவம் என்று. மறக்காமல் இரவு ஒரு நாள் கபலா மறுநாள் லார்ட்ஸ் ப்ரேயர் செய்யாமல் தூங்கமாட்டேன். (யாரவது தூக்கத்தைப் பற்றி துரத்தி துரத்தி கேள்வி கேட்க போகிறார்கள் என்ற பயமும் உண்டு)

நான் பல குருக்களிடம் பயிற்சி பெற்று இருக்கிறேன் ஆனால் அனைவருமே ஒன்று மட்டும் மறக்காமல் சொல்வார்கள். ”என்னை நம்பாதே....” நீயே நேரடி அனுபவத்தில் உணர்வதை மட்டும் நம்பு என்றுதான். அதையேதான் நானும் அருசுவையிலும் சொல்வது. யாரும் என்னை நம்பவேண்டாம் என்று.

அன்பு சகோதரி திவ்யா அருண்: மிகவும் நன்றி. இன்று உஙகள் பதிவு ரொம்பவும் சிறியதாகிவிட்டது.

அன்பு சகோதரி சுவர்ணலட்சுமி: ”யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக” என்றுதான் நான் ரசித்த கார்டூன்ஸ் அதில் போட்டேன். என் தூக்கத்தை பற்றி இழை 1, 2 எங்கோ எழுதிவிட்ட ஞாபகம். ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

அன்பு சகோதரர் ஜஸ்டின் மைக்கேல் ராஜ்: நான் வெறும் தபால்காரந்தான். எனக்கு வரும் கடித்தை உரியவரிடம் சேர்பது மட்டும்தான் என் வேலை. அதனால் அந்த கடித்தில் என்ன உள்ளது என்று எனக்கு தெரியாது. இந்த இழையை படிப்பவரின் மனதை பொருத்து பொருள் அமையும். “நான் குருவல்ல”

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹி ஹி வழக்கமா சொல்லற எக்ஸ்க்யூஸ் தான்.. இன்னமும் போன இழையையே படிச்சு முடிக்கலை.. அதுல நிறைய நல்ல பயிற்ச்சி விஷயங்கள் இருக்குன்னு நினைக்கிறேன்.. எனக்கு ஒரு கெட்ட பழக்கம்.. வாழ்க்கையில ஏதாச்சும் stress ஏற்ப்படும் போது தான் இந்த மாதிரி நல்ல விஷயம் பக்கமெல்லாம் எட்டி பார்க்கறது... மத்தபடி நல்லாயிருந்தா என் மனம் இதை கண்டு கொள்ள மறுக்கிறது.. என்ன செய்ய.. கூடிய சீக்கிரம் வந்து எட்டிப்பார்ப்பென்னு நினைக்கிறேன்.. :-) அதுவரைக்கும் இந்த இழை என்னோட பதிவுகள்ள வரணும்.. அதேன்..

வழக்கம் போல வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - உங்களுக்கு...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்