தேதி: June 18, 2009
அலுமினிய கம்பி (கோல்டு கலர்) - 15
கோல்டு நிற இலைகள்
மணிகள்
சலங்கைகள்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எல்லா அலுமினிய கம்பியையும் ஒன்றாக சேர்த்து மேலும், கீழும் சமமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். அவற்றை இரண்டாக மடித்துக் கொள்ளவும். மடித்த இடத்திலிருந்து ஒரு இன்ச் அளவு விட்டு ஓவல் வடிவத்தில் கம்பியை முறுக்கிக் கொள்ளவும்.

மடித்த கம்பியை மூன்று அல்லது நான்கு முறை முறுக்கிக் கொள்ளவும்.

ஒவல் வடிவத்தில் இருக்கும் பகுதியை அடியில் சமமாக வைத்துவிட்டு மற்ற கம்பிகளை நேராக நிமிர்த்திக் கொள்ளவும். நிமிர்த்தி வைத்திருக்கும் கம்பிகளிலிருந்து வலது புறத்தில் இரண்டு கம்பிகளையும் மற்றும் இடது புறத்தில் இரண்டு கம்பிகளையும் தனியாக பிரித்து விடவும்

வலது புறத்தில் பிரித்து வைத்திருக்கும் கம்பியை மட்டும் ஐந்து முறை முறுக்கவும்.

பிறகு ஐந்து முறை முறுக்கிய ஒரு கம்பியில் கோல்டன் இலையை கோர்க்கவும். கோர்த்த கம்பியை உள் வழியாக மடக்கி இலையை பிடித்துக் கொண்டு கம்பியை மட்டும் மூன்று முறை திருகி விடவும். இப்போது இரண்டு கம்பியையும் சேர்த்து ஐந்து முறை முறுக்கி விடவும்

இப்பொழுது கோர்த்த இலையின் எதிர் புறத்தில் பெரியதாக உள்ள கம்பியில் மற்றொரு இலையை கோர்த்து இதேப் போல் மடக்கி மூன்று முறை திருகி விடவும்.

இரண்டு இலை கோர்த்த பிறகு பெரிய கம்பியில் மணியை கோர்த்து மடக்கி மூன்று முறை திருகிக் கொள்ளவும்.

இதே போல் கம்பி முழுவதும் இலை மற்றும் மணியை கோர்த்துக் கொள்ளவும். கடைசியில் பெரிய கம்பியில் மட்டும் சலங்கையை கோர்த்து மடக்கி மூன்று முறை திருகிக் கொள்ளவும்.

கடைசியில் இரண்டு கம்பியையும் ஒன்றாக சேர்த்து அதில் மணியை கோர்த்து நுனியில் கம்பியை மடக்கி திருகிக் கொள்ளவும்.

இதே போல் இடது புறத்திலும் இலைகள், மணிகள் மற்றும் சலங்கைகள் வைத்து கோர்த்து திருகிக் கொள்ளவும். ஒவ்வொரு முறை இரண்டு கிளைகள் செய்யும் பொழுது நடுவில் உள்ள எல்லா கம்பிகளையும் சேர்த்து மூன்று முறை திருகிக் கொள்ளவும்.

அதன் பின்னர் முன்பு பிரித்து எடுத்த கிளைகள் போல் அதன் எதிர் திசையில் இரண்டிரண்டு கம்பிகளை பிரித்து எடுக்கவும். பிரித்த கம்பிகளில் இதேப் போல் இலைகள், மணிகள், சலங்கைகள் வைத்துக் கோர்த்துக் கொள்ளவும்.

படத்தில் காட்டியுள்ளபடி கம்பிகளின் அடியிலிருந்து நுனிவரை இதேப் போல் இலைகள், மணிகள் மற்றும் சலங்கைகள் போன்றவற்றை கோர்த்து கொள்ளவும். அடியில் முறுக்கி வைத்திருக்கும் கம்பியை இரண்டு இரண்டு கம்பியாக வட்டமாக விரித்துவிடவும். பார்ப்பதற்கு பூ போல இருக்கும்.

தகதகவென ஜொலிக்கும் அழகிய கோல்டன் ட்ரீ ரெடி. இதை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

Comments
pavi
where we can get those things ?
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta