ஓட்டு போட வாங்கோ

தோழிகளே... சில இழை ஆரம்பிக்கும் முன் உங்க கருத்தை கேட்டுட்டு ஆரம்பிக்கலாம்'னு தான் இந்த ஓட்டெடுப்பு. :D அப்பறம் ஆளே இல்லாத டீ கடையில் ஈ ஓட்டின மாதிரி வனி முழிக்க கூடாது இல்லையா.... எப்படி??? நம்மலாம் உஷாராக்கும். :)

முதல் கேள்வி:

நம்ம சமைத்து அசத்தலாமுக்கு ஜூன் மாதத்துடன் லீவு விட போறதா நம்ம அதிரா, ரேணு சொல்லி இருக்காங்க. அப்படி விட்டதும் இதுவரைக்கும் இதை சிறப்பா நடத்தி வந்த அவங்க இருவரது குறிப்பையும் 1 வாரம் செய்து இங்கு வந்து சொல்லலாமா?? அதை "சிறப்பு சமைத்து அசத்தலாம்" பகுதியா நடத்தலாமா??? அதுக்கு ரைவர் இவங்க இல்லை.. ;) நம்ம குழல் புட்டு ராணிகள் இலா, இமா மாதிரி யாரையாவது போட்டுடலாம்... காரணம் 1 குறிப்பு செய்தாலும் தவறாம எல்லா பகுதியிலும் பங்கு கொண்டதை பாராட்டவே.
(காரணம் சொல்லனுமே... சமைத்து அசத்தலாம் பகுதியை அதிரா துவக்கிய பின் பலருடைய கிடப்பில் இருந்த குறிப்புகள் பார்வைக்கு வந்தது. பலரையும் இது உர்சாக படுத்தியது. இதனால் பலரும் அவர்கள் குறிப்பும் விரைவில் இந்த பகுதிக்கு வர வேண்டும் என்று நிறைய குறிப்புகள் தந்தார்கள், அறுசுவை நிரம்பியது. இப்படி அவங்க பண்ண விஷயம் பல நல்ல விஷயத்துக்கு காரணமா இருந்திருக்கு. இதுக்கு அவங்களை கவுரவ படுத்தும் வகையில் தான் இந்த சிறப்பு சமைத்து அசத்தலாம் பகுதி.)

இரண்டாவது கேள்வி:

நம்ம அறுசுவை புதிய தளம் எப்ப வருமோ தெரியல.... :( கேட்டா அண்ணா அடிப்பார் (அதுக்குன்னா கண்ணில் படாம சிரியாவில உட்கார்ந்திருக்கேன்). அதனால் நம்ம பட்டி மன்றத்தை புது பொலிவுடன் புதிய தலைப்பு ஒன்றை துடங்குவோமா?? சரின்னா, நடுவரை தேர்வு செய்யுங்கோ. இதுவரை நடுவரா இல்லாத யாரையாவது சொல்லுங்கோ. நடுவரே தலைப்பை தேர்வு செய்யட்டும்.

என்ன இரண்டு கேள்வியும் விளக்கமா இருக்கு தானே??? பதில் சொல்லுங்கோ... இந்த வாக்கெடுப்பு இன்னும் சில நாட்கள் இருக்கும். வரும் புதன் அன்று இதன் முடிவை பார்த்து நம்ம புது இழை ஆரம்பிக்கலாம். :) நாட்டில் நடக்கும் வாக்கெடுப்புக்கு போகாட்டாலும், அறுசுவை வாக்கெடுப்புக்கு அவசியம் வந்துட வேணும் என்பது தோழிகளுக்கு எனது அன்பு வேண்டுகோள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா ஒருத்தரும் ஓட்டு போடல.... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினிதா.. ஒஹ் ஸாரி ஸாரி வனிதா :-) நான் ரெண்டுக்குமே சம்மதிக்கிறேன்.. ஆனா சமைத்து அசத்தலாம் ல பங்கு பெற முடியுமான்னு தெரியல.. முடிஞ்சா கண்டிப்பா கலந்துக்கறேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா வாக்கெடுப்பு..
உங்கட முதலாவது கேள்வி சரியானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சிலபேருக்கு கோபம் வந்தாலும் வரும். ரேணுகாவினுடையது நிட்சயம் தொடர்ந்துவரும் நாட்களில் செய்வோம்தானே... இறங்குவரிசையில் போகிறபோது கூட்டாஞ்சோறில் இருப்பதால் நிட்சயம் செய்வோம்.

என்னுடையது யாரும் சமைக்கலாமில்தானே கொஞ்சம் இருக்கு, அதனால் பின்னர், முடிந்தால் மொத்தமாக ஒரு தலைப்புத் தொடங்கி(எல்லோருடையதையும்) யாரும் சமைக்கலாமுக்கும் மரியாதை கொடுக்கலாம் என்பது என் முந்திய யோசனை. இத் தொடர் முடிந்தபின்னர்.

இனி உங்கள் விருப்பம், ஆனால் எல்லோருக்கும் விடுமுறை தேவைப்படுமல்லவா சமையலில். விடுமுறை விட்டபின்னர், அப்பாடா இனித்தான் நிம்மதி என, நிறையப்பேர் தலைகாட்டுவார்களோ என்னவோ அறுசுவைக்குள்:).

பட்டிமன்றம் ஆரம்பிப்பது நல்லதே. இனி அடுத்த தலைவர் மனோகரி அக்காதான் என ஏற்கனவே தீர்மானித்துள்ளோம் தானே.(உங்களுக்குத் தெரியாதென நினைக்கிறேன்), அவரையே அழைக்கலாம்/ அல்லது கேட்டுவிட்டுச் செய்யலாம். ஆனால் எனக்கும் கொஞ்சநாள் விடுமுறை தேவை. ஸ்கூல் வக்கேசன் வருகிற கிழமையோடு ஆரம்பம். இடையில் இடைக்கிடை வருவேன்.

நீங்களும் வக்கேஷன் எடுக்கப்போவதாக பி பி ஸி மியூசிக்:) சனலில் சொன்னார்கள் உண்மையோ:)?.

இருந்தாலும் வனிதா, இப்படி ஒரு நல்ல அபிப்பிராயம் உங்களுக்கு, எம்மைப் பற்றி எழுந்திருக்கிறதே அதுக்கு மிக்க மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

யாருப்பா அது இங்கையும் என் பேரை கொலை பண்ணுறது??!! வெறும் 3 எழுத்து... வனிதா. ஒழுங்கா சொல்லோனும். நல்ல பிள்ளையா வந்து ஓட்டு போட்டதுக்கு நன்றி சந்தனா. :) சமைக்க ஆரம்பிச்சதும் உங்களை விடாம பிடிச்சிட்டு வந்துடுவோம். சமத்து சந்தனான்னு பேரு வாங்கணும்.

அதிரா நீங்க சொன்ன மாதிரி நினைக்கிறாங்களா இல்லை சமைக்க ஆசை படறாங்களான்னு கேட்க தானே வாக்கெடுப்பே... அதனால் கவலை வேண்டாம், விருப்பம் இல்லைன்னு நிறைய பேர் சொன்னா விட்டுடலாம். :) முன்ன் சொன்னதையே தான் சொல்றேன், உங்க யாரும் சமைக்கலாம் குறிப்புகளை படம் இல்லாமல் காப்பி பண்ணி கூட்டாஞ்சோறு பகுதியிலும் சேருங்கோ ப்ளீஸ். எனக்கு யாரும் சமைக்கலாம் ஓப்பன் ஆகவே மாட்டங்குது. மனோஹரி மேடமா ... சரி சரி எனக்கு தெரியாது அதிரா முடிவு பண்ணி இருந்தது. :) அவரையும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம், நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்த்துடுவோம் முதலில். நானும் வெக்கேஷனில் போறேன், ஆனா அறுசுவைக்கு தவ்றாம வருவேன். கவலையே வேன்டாம்... விட மாட்டேன் உங்களை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா
நான் இரண்டு தலைப்புக்கும் சம்மதிகிரன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் வனிதா,

இப்பதான் பார்த்தேன், நல்ல த்ரெட் வனி. அதிலும் நீங்க நம்ம அதிரா, ரேணுவின் 'சமைத்து அசத்தலாம் ட்ரெயின் சேவை'யை பற்றி கூறியது முற்றிலும் உண்மை. ஏராளமான நல்ல நல்ல குறிப்புகளை பலரும் அறியச்செய்தது இந்த தொடரே... என்னைப்போன்ற வெரைட்டியா (எடை கூடாத அளவுக்குதான்! :)) சமைக்க ஆசைப்படுகிற‌ மக்களுக்கு நிறைய புது விஷயங்கள், செய்முறைகள் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. நன்றி!

சரி, இப்ப 'ஓட்டு' விஷ‌யத்துக்கு வருவோம். நீங்க கேட்டிருக்கிற இரண்டு விஷயமுமே ஒக்கேதான் வனி. என்ன? அதிரா சொன்னமாதிரி, நானும் அடுத்த வாரம் முதல் கொஞ்சம் வெக்கேஷனில் பிஸியா இருப்பேன். முடியும்போது முடிந்த அளவு, கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா, எப்படி இருக்கீங்க? நீங்க 200 குறிப்புகளை கொடுத்துள்ளதை இன்றுதான் கவனித்தேன். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதிரா, ரேணு இவர்களின் குறிப்புகளை சமைக்க என்னும் உங்கள் நல்லெண்ணத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள். ரேணு இப்போ ஊருக்கு போகிறார் போல இருக்கே. அவர் இருக்கும்போது சமைத்தால்தானே நன்றாக இருக்கும். அதனால் அதிரா சொல்வது போல் இறங்கு வரிசையில் அவர் முறை( ரேணு வந்த பிறகு) சீக்கிரமே வரும் என நினைக்கிறேன். இல்லை ரேணு வந்தபின் செய்யலாம்.அதிராவின் குறிப்பை செய்வதில் ப்ரச்சனையில்லை. யாரும் சமைக்கலாமில் தேடுவதுதான் ப்ரச்சனை .ஹி.ஹி..:-)

பட்டிமன்றத்தை புது தளத்தில் ஆரம்பிக்கும்படி அட்மின் தான் கூறினார். அவரிடம் கேட்டுவிட்டு ஆரம்பியுங்களேன்

வனிதா உங்கள் திறம்பட யோசிக்கும் திறனுக்கு பாராட்டுக்கள்.யாராவது இப்படி எடுத்துப்பிடித்தால் தான் சில விஷயங்கள் தெளிவாகும்.என்னைப்பொருத்தவரை அதிரா ரேணுவுக்கும் ,அறுசுவை அபிமானிகளுக்கும் மாற்றம் தேவை என்று நினைத்தால் மாற்றாக பட்டிமன்றம் திரும்ப ஆரம்பிக்கலாம்,அதற்கு தலைப்புக்களும் ரெடி,நடுவர் தான் வந்து அந்த இழையை ஆரம்பிக்க வேண்டும்,ஏற்கனவே முடிவு எடுத்தது போல் மனோகரி மேடம் வரட்டும்.தலைப்பும் அறுசுவை நேயர்கள் கொடுத்த தலைப்பில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுப்பதாக சொல்லிருக்காங்க.மற்ற தோழிகள் கருத்தையும் கேட்போமே.
இப்படியும் செய்யலாம் ஒரு முறை பட்டிமன்றம்,மறுமுறை சமைத்து அசத்தலாம் என்று கூட நடத்தலாம்,மூத்த உறுப்பினர்கள் வந்து கருத்தை தெரிவிக்கட்டுமே.
நல்ல முடிவு எடுப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஓ ஓ நல்ல யோசனை நடத்துங்கோ நடத்துங்கோ.........கண்டிப்பா நானும் கலந்து கொள்வேன் 2 லும்.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்