பூசணிக்காயை கொண்டு அலங்காரச் செதுக்கு வேலை செய்வது எப்படி?

தேதி: June 25, 2009

4
Average: 3.7 (3 votes)

அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள், சென்ற வருடம் "எலர்ஸ்லி" என்ற மலர்க் கண்காட்சிக்கு சென்றபொழுது ஒரு பெண் அழகாக காய்கறிகளைச் செதுக்கிக் கொண்டிருப்பதை பார்த்துக் இருக்கிறார். அந்த பெண் இதற்கென்று விசேஷமான கத்தி ஒன்றைப் பயன்படுத்தி உள்ளார். ஆனால் இமா அவர்கள் சாதரணமாக சமையல் அறையில் பயன்படுத்தும் காய்கறி நறுக்கும் கத்தியை கொண்டு இதனை விளக்கியிருக்கிறார். செய்வதற்கு சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எளிமையான செய்முறை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். செய்து கைப்பழக்கம் வந்து விட்டால் சிக்கலான சித்திரங்களையும் இது போல் செதுக்கி எடுக்கலாம்.

 

ஒரு முழுப் பூசணிக்காய்
கூர்மையான கத்தி
ரப்பர் பாண்ட்

 

செதுக்கு வேலை செய்வதற்கென்று சீரான வடிவமுள்ள, காயம் படாத பூசணிக்காயாகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். செதுக்குவதற்கு 'v' வடிவமுனை உள்ள, நல்ல கூரான சிறிய கத்தியை எடுத்துக் கொள்ளவும். கத்தியின் தகடு மெல்லியதாக இருந்தால் நல்லது. (கையில் மோதிரம் அணிந்திருந்தால் கழற்றி வைத்து விடவும். இல்லையென்றால் தேவையற்ற இடங்களில் கோடுகள் வரைந்து விடும்)
முதலில் பூசணிக்காயை மெதுவாக ஒரு ஈரத்துணியால் சுத்தம் செய்து காம்பினை நறுக்கி எடுத்து விடவும். காயிலிருந்து நீர் வடிய ஆரம்பித்தால் ஒரு டிஷ்யூ கடதாசியை அந்த இடத்தில் வைத்து விடவும். நீர் வடிவது நின்றதும் அதனை எடுத்து விடலாம். காயின் அரைப் பாகத்துக்குச் சற்றுக் கீழே வருமாறு ரப்பர் பாண்ட் ஒன்றை மாட்டி விடவும்.
ரப்பர் பாண்ட் மாட்டி வைத்திருக்கும் இடத்தில் மேலும், கீழும் அழுத்தமாகக் கத்தியினால் கோடு இழுத்துக் கொள்ளவும். கவனமாக நடுவே உள்ள தோற்பகுதியை செதுக்கி எடுத்து விடவும்.
செதுக்கிய பகுதியிலிருந்து ஒரே அளவு இடைவெளி விட்டு சிறிது கீழாக இறக்கி கத்தியினால் கோடு வரைந்துக் கொள்ளவும். மீண்டும் ஒரே அளவு இடைவெளியில் கத்தியினால் இன்னுமொரு கோடு வரைந்துக் கொண்டு அதன் நடுவே உள்ள தோற்பகுதியைச் செதுக்கி எடுத்து விடவும். தேவைப்பட்டால் ரப்பர் பாண்ட் ஒன்றை மாட்டி விட்டு வரைய ஆரம்பிக்கலாம். (பூசணிக்காயின் வடிவத்தினால் எல்லா இடங்களிலும் ரப்பர் பாண்ட் தங்காது)
அடுத்து மூன்றாவது கோட்டினை வரையும்பொழுது பூசணிக்காயின் மேலே மூடி போன்று இருக்கும்படி செதுக்க வேண்டும். இதற்கு பொருத்தமான அளவிலான கத்தியை வைத்து ஆழமாக ஒரு கோடு வரைந்துக் கொள்ளவும். பிறகு முன்பு செய்ததுப் போல் இரண்டாவது கோட்டினை வரைந்து நடுவே உள்ள தோற்பகுதியை அகற்றி விடவும்.
இப்பொழுது செதுக்கிய வரிகளை மையாக வைத்து, காயில் மேல் பகுதியில் கத்தியின் கூர்முனையைக் கொண்டு இதழ் வடிவத்தினை வரைந்துக் கொள்ளவும். வரைந்த இதழ்கள் இரட்டை எண்ணிக்கையில் அமைந்திருந்தால் ஒன்று விட்டு ஒரு இதழை செதுக்கிக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் ஒற்றை எண்ணிக்கையில் இதழ்கள் இருந்தால் ஏதாவது ஓரிடத்தில் அடுத்தடுத்த இரு இதழ்கள் செதுக்கப்பட வேண்டி வரும். காயின் எந்தப் பகுதியை முன்புறமாக வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இதனைத் தீர்மானிக்க வேண்டும்.
எப்பொழுதும் காயை செதுக்க ஆரம்பிக்கையில் முதலில் கத்தியைச் செதுக்கும் மேற்பரப்புக்குச் செங்குத்தாகப் பிடித்து கோடுகளில் 2 அல்லது 3 மி.மீ ஆழம் வரை இறங்குமாறு அழுத்தி வரைந்துக் கொள்ளவும். பின்பு தேவைப்படும் இடங்களை கவனமாகச் செதுக்கி எடுக்கவும்
அடுத்து காயின் நடுப்பகுதியில் செதுக்குவதற்காக விட்டு வைத்திருக்கும் இடத்தில் படத்தில் காட்டியுள்ளபடி பூக்களையும், இலைகளையும் வரைந்துக் கொள்ளவும்.
முன்பு செய்தது போலவே முதலில் கோடுகளை ஆழமாக இழுத்துக் கொண்டு செதுக்க ஆரம்பிக்கவும்.
அடியில் செதுக்கி உள்ள இருகோடுகளுக்கும் உள்ள இடைவெளியில் சாய்வான இரட்டைக் கோடுகளாக இழுத்துக் கொள்ளவும். இதைப் போல் சுற்றிலும் சிறிது இடைவெளிவிட்டு இரட்டைகோடுகள் வரைந்துக் கொள்ளவும். பின்பு அங்கும் தேவையற்ற பகுதியைக் கவனமாகச் செதுக்கி நீக்கி விடவும்.
இந்தப் இடைவெளிப் பகுதிகளில் உங்கள் விருப்பம் போல் சிறிய அலங்கார வடிவங்களை வரைந்து செதுக்கிக் கொள்ளலாம்.
செதுக்கி முடிந்ததும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். சீரான ஆழத்தில் செதுக்கப்படாமல் இருந்தால் பூசணிக்காயின் நிற அமைப்பு ஒரே மாதிரியாக இருக்காது. பிறகு ஒரு சுத்தமான டிஷ்யூ அல்லது மெல்லிய பிரஷ் கொண்டு வெட்டுக்களில் தங்கி உள்ள துண்டுகளை நீக்கி விடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா.... எங்க இருக்கீங்க... செய்த கைக்கு ஒரு மோதரமாது போடனும். அத்தனை அழகு. நான் கண்டிப்பா செய்து பார்க்கணும். ஊருக்கு போனதும் செய்து சொல்றேன், இங்க பூசணி விக்கும் விளைக்கு நான் வாங்கி இப்படி செதுக்கிகிட்டு இருந்தா எங்காள் என்னை செதுக்கிடுவார். :D ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இமா வாவ்!!!! சொல்லவேயில்லை??? இப்படி நல்ல திறமையெல்லாம் எங்கே ஒளித்துவைத்திருக்கிறீங்க. சூப்பராக இருக்கிறது. பூசணி சீசன் வரும்போதுதானே செய்துபார்க்கமுடியும்.கட்டாயம் செய்துபார்க்கிறேன்.நன்றி.அன்புடன் அம்முலு

அன்பு சகோதரியின் முதல் வரியை....மட்டும் நான் ஆமோதிக்கிறேன். நம்மப முடியவில்லை நான் எவ்வளவோ (எங்கள் எல்லா பார்டிகளிலும் இதற்கு தனி இடம் உண்டு) இது போல் பார்த்து இருக்கிறேன், அதற்கான ஒரு சிறப்பு ஆசிரியர் இங்கு ஒருவர் இருக்கிறார்(இதற்காக கல்லூரி வைத்து நடத்துகிறார்), அவர் செய்தது கூட இவ்வளவு சிறப்பாக இல்லை. பின் என் பட தொகுதியில் அந்த படங்களை பிறகு போடுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வாவ் சூப்பர் இமா,ரொம்ப அழகாயிருக்கு.எப்படி இப்படியெல்லாம் செய்து அசத்துறீங்க.

பூசணிக்காயில் அல்ங்காரச்செதுக்கு வேலை அழகோ அழகு. உங்கள் கைத்திறன் இன்னும் வளரட்டும்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செபா.

அழகு....அழகு...
இமா.. உங்கள் கைவேலையும் அழகு... கையும் அழகு.

இதைத்தானே இமா, உள்ளே அப்படியே குடைந்து, கலவீனுக்கு உள்ளுக்குள் லைற்/ கண்டில் வைக்கிறோம்.

படம் பார்க்க ஏதோ செய்வது சுலபம்போல் இருக்கு, ஆனால் சரியான கஸ்டம் என்ன? நல்ல அழகாகச் செய்திருக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அம்மா... எப்படி இருக்கீங்க??? எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக போகுது என்று நம்புகிறேன்... அம்மா இப்போ தான் பார்த்தேன்....

ரொம்ப நல்லா இருக்கு.... இதை வீட்டில் சொல்லி முயற்சி பண்ணி பாக்க சொல்றேன்.... வரல என்றால் நீங்க தான் அங்க இருந்து பண்ணி பார்சல் அனுப்பணும்.. சொல்லிட்டேன்...

சரி அம்மா மீண்டும் பாக்கலாம் ...

உங்கள் அருண்

ஹாய் இமா,ரொம்ப அழகாயிருக்கிறது பூசணிக்காய் டிசைன்.மிகவும் பொருமையா செய்திருக்கிறீங்க! இது போல வேறு எந்த காய்களில் செய்திருக்கிறீர்க‌ள்? சோப்பில் செய்ய‌த்தெரியுமா? என‌க்கு ஒரு ட‌வுட் இந்த‌ பூச‌ணிக்காய் கெட்டுவிடாதா? எவ்வ‌ள‌வு நாள் வைத்திருக்க‌லாம்?
அய்ய‌ய்யோ ஒரே கேள்விக‌ளா கேட்டு த‌ள்ளிவிட்டேனா!!! கொஞ்ச‌ம் என‌க்கு க‌டைசி கேள்விக்காவ‌து ப‌தில் சொல்லுங்க‌ளேன்.

நான் கேட்ட‌ ரீசைக்கிள் பொருட்க‌ளில் ஏதாவ‌து செய்து அனுப்புக்க‌ளேன்...

ரொம்ப அழகாயிருக்கிறது...
அன்புடன்
உமா.

ஹெலோ இமா.ரொம்ப அழகா இருக்கு. Good work.Keep going.

Kalai

இமா உங்க கையும் அழகு, பூசணிக்காயும் அழகு.. நல்ல பொறுமை உங்களுக்கு !!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இமா அட்டகாசமா பண்ணி இருக்கீங்களே!!

Patience is the most beautiful prayer!!

ஹாய் இமா சூப்பரா இருக்கு.... இத நான் கட்டாயம் செய்து பார்க்கிரேன்........ பூசணிக்காய் கண்னை பரிக்கிரது......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சகோதரர் பாபு, பாப்பி, மற்றும் அறுசுவை குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எந்த அளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லத் தெரியவில்லை.
முன்பு நான் என் பாட்டில் ஏதாவது செய்துவைத்து நானே பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பேன். இங்கு என் வீட்டாரைத் தவிர யாரும் பார்ப்பதற்கு இல்லை. இப்போதோ உலகம் முழுக்க இருக்கிற எத்தனையோ பேர் பார்க்கிறார்கள். பின்னூட்டம் எல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

என் திறமைகளை வெளி உலகுக்குக் காட்ட உதவிய அறுசுவைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மீண்டும் நன்றிகள். கூடவே, என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எனது அன்பு அன்னை, பாசமான என் பிள்ளைகள், மற்றும் பிரியமான அறுசுவை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.

இமா

பி.கு
அட்மின், நான் அனுப்பிய படங்களை விட இவை நன்றாக இருக்கின்றன. எப்படி?? :)

‍- இமா க்றிஸ்

இமா.. இமா
இப்படியே இந்தச் சந்தோஷத்தோடயே கொஞ்சம் சமைத்துச் சொல்லலாமோன்னோ:)?. நீங்கள் அனுப்பிய படங்களை அட்மின் நனைந்துவிட்டதென்று மொட்டைமாடியிலே காய வைத்தார்:) அது இன்னும் நல்ல கலராக வந்துவிட்டதுபோலும்....

கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடித்தவர்களும் என்ற பிரிவில் இதை கின்னஸில் இணைக்கலாமெல்லோ? இனி அனுப்பும் படங்களை கொஞ்சம் நனைத்துப்போட்டு அனுப்புங்கோ இமா அப்பத்தான் அழகா வரும்:).

அது சரி எல்லாம் ஓகே:) அது யார் "அம்மா"...? ஒரே கொன்பியூஸாகவே இருக்கு, இன்று எனக்கு எல்லாமே:):).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் இமா அக்கா,
பூசணிக்காயை அழகு படுத்தி பார்பவர் கண்ணுக்கு குளிர்ச்சி தந்த இமா அக்காவிற்க்கு மிக்க நன்றி. "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்பது போல உங்கள் கையோடு இனைந்த பூசணிக்காயும் அழகாயிற்று. வாழ்த்துக்கள்.

ஹாய் இமா அக்கா,
பூசணிக்காயை அழகு படுத்தி பார்பவர் கண்ணுக்கு குளிர்ச்சி தந்த இமா அக்காவிற்க்கு மிக்க நன்றி. "பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்பது போல உங்கள் கையோடு இனைந்த பூசணிக்காயும் அழகாயிற்று. வாழ்த்துக்கள்.

அன்பு வனிதா,
உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. :) நன்றி.
செய்து பாருங்கள், இதில் வீணாவது எதுவும் இல்லை. பயிற்சிக்காகச் செய்தால், பின்னால் சமையலுக்குப் பயன் படுத்தலாம்.
விருந்துக்கென்று செய்வதானால் மூடிப் பகுதியைக் கவனமாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே உள்ள விதைகளையும் சமையலுக்கு உதவாத பகுதிகளையும் சுரண்டி அகற்றி விடுங்கள். பின்பு சதைப் பாகத்தைச் சுரண்டி எடுத்து சமையலுக்குப் பயன் படுத்தலாம். சமைத்த உணவைப் பூசணிக்காய்ப் பாத்திரத்திலேயே மேசையில் எடுத்து வைக்கலாம். (உணவு சுவையாக இராது போனாலும் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். :) )
எங்கள் வீட்டிலும் சமையலுக்காக முழுப் பூசணிக்காயாக வாங்குவது கிடையாது. அந்த அளவு தேவைப்படுவது இல்லை. இது என் தோட்டத்தில் விளைந்தது.

ஹாய் ப்ரியா,
நீங்கள் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. :) கட்டாயம் செய்து பாருங்கள் ப்ரியா.

சகோதரர் ஹைஷ்,
உங்கள் பாராட்டு, மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. :) எதிர்பார்க்கவில்லை, மிக்க நன்றி.
பார்வைக்குச் சிக்கலாகத் தோன்றினால் யாரும் செய்ய முயற்சிக்க மாட்டார்கள் என்று தோன்றிற்று. மேலும் பத்துப் படிகளுக்குள் குறிப்பினை அடக்கிவிட வேண்டும் என்பதும் மனதில் இருந்தது. படங்கள் எடுப்பதற்கும் எனக்கு உதவி கிடைப்பதில்லை. நானேதான் எடுக்கிறேன். இந்த மூன்று காரணங்களால்தான் எளிமையாக முடித்து விட்டேன். படங்களை அங்கு இணைத்ததும், இங்கு அதற்கான 'லிங்க்' கொடுப்பீர்கள்தானே! முறையாகப் பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் எதுவும் எனக்கு அமைந்ததில்லை. படங்கள் பார்க்க ஆவலாக இருக்கிறேன். உதவியாக இருக்கும். மீண்டும் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

இமா, மிகவும் அழகாக இருக்கு. பூசனிக்காய், டிசைன்ஸ் எல்லாம் கொள்ளை அழகு. உங்கள் பொறுமை வாழ்க!!!
வாணி

மிக்க நன்றி மேனகா. :) நலம்தானே? உங்கள் பாராட்டுகள் அடிக்கடி குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

என் மதிப்பிற்குரிய செபா அவர்களுக்கு,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆசீர்வாதங்கள் எனக்கு எப்பொழுதும் வேண்டும், ஆசீர்வதியுங்கள். வெறும் பாராட்டுகளோடு விட்டு விடாமல் குறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என் அன்பு என்றும்.

அன்பு அதிரா,
ஹலோவீனுக்கு வெட்டும் போது ஆழமாக வெட்ட வேணும் அதிரா. இது பச்சை நிறம் நீங்கி சதைப் பகுதி தெரிகிற மாதிரி இருந்தால் போதும்.
எனக்கு எதுக்கு நன்றி சொல்லி இருக்கிறீங்கள் என்று விளங்கேல்ல. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும். :)

‍- இமா க்றிஸ்

அன்பு மகன் அருண்,

நான் இங்கு அருணிடமிருந்து பதிவு எதிர்பார்க்கவில்லை. :) சந்தோஷம். :) நான் நலம். ஒரு வரியில் 'ரொம்ப நல்லா இருக்கு.' என்று சொன்னால் போதாது. :) குறைகளையும் விமர்சிக்க வேண்டும் அருண். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். //வீட்டில் சொல்லி முயற்சி பண்ணி பாக்க சொல்றேன்..// :) அதெல்லாம் வேண்டாம். :( நான் இந்தியா வரும் போது சிவகாசி வர வேண்டாமா!!! :))

அன்பின் உமா,

நலமா? நீங்கள் எல்லாம் இங்கு வந்து பாராட்டுவது சந்தோஷம். :) நன்றி.

'இதே மாதிரி' என்றால் மெலன், சுரைக்காய் மாதிரிப் பெரிய காய்களில் செய்யலாம். ஆப்பிள், பெயார்ஸ் பழங்களிலும் செய்யலாம். வேறு விதமாச் செய்வதானால் கிழங்கு, காரட், பீட்ரூட் எந்தக் காயானாலும் செய்யலாம், தன்மையைப் பொறுத்து செதுக்கும் அலங்காரத்தைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். நிறைய செய்திருக்கிறேன். பின்பு நானே சாப்பிட்டு விடுவேன். :)

சோப் வடிவங்கள் (மீன்கள், செம்மறி, பறவைகள், பூக்கள்) இலங்கையில் நிறைய செய்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கை வேலை அது.

இந்தக் காயைக் கொடியிலிருந்து பிடுங்கியது மாசி மாதம் என்று நினைவு. செதுக்கியும் நாளாகிறது. இன்று வரை மேசையில் அப்படியே இருக்கிறது. :) மூத்தவர் 'பம்கின் சூப்' செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்காக விட்டு வைத்திருக்கிறேன். எத்தனை நாள் இருக்கிறது என்று பிறகு வந்து சொல்கிறேன். :)
// ரீசைக்கிள் பொருட்க‌ளில்...// விடுமுறையில் கட்டாயம் முயற்சிக்கிறேன்.

சந்தனா நன்றி, மகிழ்ச்சி. அட்மின் பூசணிக்காய் குறிப்பு மட்டும்தான் போட்டிருக்கிறார். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் கலா, எப்படி இருக்கிறீர்கள்? உங்களோடு முன்பு கதைத்திருப்பதாக நினைவில்லை. பாராட்டுக்கு நன்றி. இப்படியே போய்விடாமல் ஒரு முறை செய்து பாருங்களேன். :)

பாராட்டுக்கு மிக்க நன்றி உத்ரா. நலமா?

அன்புத் தங்கை பிரபா,

என்ன, 'அக்கா'வைக் காணோம்!!! :) பயந்துபோய் விட்டீர்களா? சொன்னது நானில்லை, எனக்கு எதிராகச் சதி செய்கிற ஆட்கள் செய்கிற வேலை அது. :) நான் 'மேடம்' சொன்னால் மட்டும்தான் போர்க்கொடி தூக்குவேன். :) பாராட்டுக்கு நன்றி பிரபா. சந்தோஷம். முடிந்தால் செய்து பாருங்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

யோசிக்காதைங்கோ அதிரா, அதெல்லாம் 'குழாய்ப்பிட்டு' கிடைக்காத விதமாச் சமையல் நடந்திருக்கு. :) கணக்குக் காட்ட காலையில வாறன்.

மிக்க நன்றி சுபா. :)

ஹாய் வாணி, நலமா? பாராட்டுக்கு நன்றி. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா, உங்க பூசணிக்காய் மிகவும் அழகு. உங்களுடைய பொறுமை இதிலிருந்து தெரிகிறது. ஹாலோவீனுக்கு செய்யலாம் போல் இருக்கே! பாராட்ட வார்த்தைகள் இல்லை!

நான் அறுசுவைக்கு புதிது.You hav a nice artistic skill,grow it up by doing more like this.I'll surely try this if i get this full size poosinikaai.

Kalai

உங்களுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும் மட்டுமல்ல எனது ஆசீர்வாதமும் என்றும் உண்டு. குறைகள் காணும் போது நிச்சயம் எடுத்துக் காட்டுவேன்.

மிகவும் அழகாக இருக்கிறது. கண்ணை பறிக்கிறது. வாழ்த்துகள்

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

உங்களின் அழகான வேலைப்பாட்டில்...எங்கள் உள்ளங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்.....
உங்களின் கலைத்திறனை மென்மேலும் எங்களுக்கு காட்டி உங்கள் திறமையையும் வளர்த்து எங்களுக்கும் நிறைய கற்று கொடுங்கள்....நமக்கு தெரிந்ததை
மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதும் ஆனந்தம்தானே......வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் மாலி,

நலமா? செய்து பாருங்கள். ஹாலோவீனுக்கு 'jack-o'-lanterns' மட்டும்தான் செய்வார்கள் என்று நினைத்தேன், இல்லையா? உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, சந்தோஷம்.

நன்றி செபா & கலா.

வாழ்த்துக்களுக்கு நன்றி இளவரசி & ஸ்வர்ணா. :) நிச்சயம் முடிகிற போது குறிப்புகள் கொடுக்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இங்கு உள்ள தொடர்பில் காய்கறிகளும், மணலால் ஆன படைப்புகளும் என்ற பட தொகுதியில் இருக்கு

http://picasaweb.google.co.in/haish12/

அங்கு சொல்லிதருவதை விட உங்கள் கைவண்ணம் பற்றி பாராட்டியதன் அர்தம் இப்போது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ்,
படங்கள் பார்த்தேன். அழகாக இருக்கின்றன. உங்கள் வேலைகளுக்கு மத்தியிலும் தொடர்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

‍- இமா க்றிஸ்

ஹாய் உமா,
உங்கள் கேள்விக்குப் பதில் போடாது விட்டது இப்போதுதான் நினைவு வந்தது. மன்னிக்க வேண்டும். செதுக்கிய காய் ஒரு வாரம் இருந்தது. பிறகு வெட்டிச் சமைத்தாய் விட்டது. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த பூசணிக்காய் செதுக்கு வேலையின் படம்

<img src="files/pictures/pusanikai-craft.jpg" alt="picture" />

ஒண்ணுமே புரியல்ல உலகத்தில:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆஹா.... அட்மின் வெளியிட்டாச்சோ.... மிக்க நன்றி. இது சரி..... இதுக்கு முன் அனுப்பின 2 ??? இமா'கு அனுப்பியாச்சோ???

இமா.... படம் வந்துட்டுதா??? இல்லைன்னா நான் அனுப்பறேன்... ஆனா உங்க மெயில் ஐடி என்கிட்ட இல்லையே.... :( முதல்ல அனுப்பின 2 படம் நீங்க செய்த மாதிரியே செய்தது. இது அதையே ஓட்டை விழ செதுக்கி உள்ளே விளக்கு வைத்தது.

அதிரா..... எங்க வந்து விளையாடுறது??!! ;) என்ன புரியல??? என்னை வம்பிழுக்காட்டா, இமா'வை வம்பிழுக்காட்டா, அதிரா'கு தூக்கமே வாரதில்லை போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி... வனி... வனிதா... சத்தியமாக நான் நினைத்தேன், மஞ்சள் பூசணிக்காயில் கொடி வடிவம் செய்து, அதைக் கறுப்புப்பேப்பரில் வைத்து படமெடுத்துப்போட்டிருக்கிறீங்கள் என்று, தெளிவாச் சொன்னாத்தானே அதிராக்குப் புரியும்:). இப்ப பார்க்கத்தான் அழகாக இருக்கு, இமாவுடையதைவிட...

இப்போ புரிஞ்சுபோச்சு... நல்லவேளை இமா வருவதற்குள் நான் தெளிவாகிவிட்டேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி அட்மின். பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. :)

அதிரா ஒரு வரியில பதிவு போட மாட்டாங்களே!!!
ஓ!! இப்ப விளங்குது.. இரண்டாவது வரி //நன்றி,// மூன்றாவது வரி //எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்// :)))

வனி,மிக்க மகிழ்ச்சி, நன்றி. அழகாக இருக்கிறது உங்கள் கைவண்ணம். (நான் இதற்குப் பிரதி உபகாரம் ஏதாவது செய்ய வேண்டுமே!! என்ன செய்யலாம்?!! ம்ம்.. யோசிக்கிறேன்.

ஒரு விஷயம் சொன்ன மாதிரியே செய்து காட்டி விட்டீர்கள். //ஊருக்கு போனதும் செய்து சொல்றேன்//
அப்படியே இரண்டாவதையும் நடத்திக் காட்டினால் சந்தோஷப்படுவேன். //செய்த கைக்கு ஒரு மோதரமாது போடனும்.// :)

நீங்க போடும் பதிவு எல்லாவற்றிலும் கேட்டுக் கொண்டே இருந்தால் அட்மின் போடாமல் விட முடியுமோ? சந்தோஷத்தில அட்மினுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லத் தோன்றவில்லை போல. :) //இதுக்கு முன் அனுப்பின 2 ??? இமா'கு அனுப்பியாச்சோ???// பாவம் அவங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கு, கரைச்சல் கொடுக்க வேண்டாம். ஜீ-மெய்லில் நான் இமா.. imimmaஅட்gmail.com :)

என்னை வம்பிழுக்காட்டா, வனிதாவை வம்பிழுக்காட்டா, அதிராவுக்குத் தூக்கமே வாறதில்லை. சரியாச் சொன்னீங்கள் வனிதா. :)))))))))))

// இமாவுடையதைவிட...// நான் புகையவில்லை.. சந்தோஷமாக, மிகச் சந்தோஷமாக, மிக மிகச் சந்தோஷமாக இருக்கிறேன். புகையிறது யார் எண்டு விளங்குதேல்லோ வனி, அவவ மின்சாரப் புகையிரதத்துக்கு மாறச் சொல்லுங்கோ, புகைக்காது. :)

பி.கு
தேன்மொழி, மேலே உள்ள ஏதாவது விளங்காவிட்டால் கேட்டுவிட வேண்டும். மனதுக்குள் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தால் எனக்கு விக்கல் எடுக்கும். :)

இமா

‍- இமா க்றிஸ்

தனக்குத் தனக்கெண்டால்... சுழகு...
படக்குப் படக்கெண்ணுமாம்... இதை இரண்டாவது தடவையாக அறுசுவையில் சொல்ல வச்சிட்டீங்கள்...:), தன்ர தலைப்பென்றால்... பென்னாம்பெரிய பதிவு... எங்கடயேதுமென்றால்... ஒருவரிப்பதில்:).... இதைப் போய் யாரிடம் சொல்லி அழுவது நான்?:) என் சோகம் என்னோடு போகட்டும்:)..

///அதிரா ஒரு வரியில பதிவு போட மாட்டாங்களே!!!/// புரியாவிட்டால் எப்படி நிறைய எழுதுவது:)...? (அதிரா தான் போடுவா:) மற்றவை போட்டால்தான் அவவுக்கு பிடிப்பதில்லை:).... எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமோ??? இனிக் குறைக்கப்பர்க்கிறேன்:)).

/////செய்த கைக்கு ஒரு மோதரமாது போடனும்.// :)/// கடவுளே அப்போ நான் சங்கிலி போடவேண்டி வருமோ??:)

///பாவம் அவங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கு, கரைச்சல் கொடுக்க வேண்டாம்//// ஆ... எனக்குப் புல்லரிக்கிறதே... எவ்வளவு பெரிய மனசு உங்களுக்கு.....:), சிடியில பாட்டும் டிவிடியில படமும் பார்க்கிறதென்றால் "எவ்வளவு பெரிய வேலை" தான்... கரச்சல் கொடுக்கப்படாது.... கடவுளே எனக்கெதுக்கு ஊர்வம்பு:).

///// இமாவுடையதைவிட...// நான் புகையவில்லை.. ////////////////சந்தோஷமாக, மிகச் சந்தோஷமாக, மிக மிகச் சந்தோஷமாக இருக்கிறேன்/////////////// இதைக் கேட்கிறபோதே தெரியுது... எவ்வளவு சந்தோஷம் என்று:).... வச்ச தண்ணி கொதித்திருக்குமே.. சூட்டில்:)...

///அவவ மின்சாரப் புகையிரதத்துக்கு மாறச் சொல்லுங்கோ, புகைக்காது. :)/// இப்ப புகைக்கேல்லை ஆனால் கறண்ட் அடிக்குது:).

///(நான் இதற்குப் பிரதி உபகாரம் ஏதாவது செய்ய வேண்டுமே!! என்ன செய்யலாம்?!! ம்ம்.. யோசிக்கிறேன்.//// இதில என்ன இருக்கு யோசிக்க?:) பூனைக்குப் பிடித்த, மட்டின் ரோலும் செய்து படமெடுத்திட்டாப்போச்சு:)... கடவுளே எனக்குக் காலம் கூடாது... சொன்னாலும் வாய் கேட்பதாயில்லை... என்னை எப்படியும் காப்பாற்றிப்போடப்பா:):)..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தலைப்பைப் பார்க்கவே படக்குப் படக்கெண்டுது. :)

//நான் சங்கிலி போடவேண்டி வருமோ??// நோக்கமே அதுதானே, அலைவரிசை நல்லா வேலை செய்யுது அதிரா. :))))

அதிரா... இந்த விளையாட்டுக்கு நான் வரேல்ல. பிறகு நான் அனுப்புற குறிப்பெல்லாம் அறுசுவையில போடாமல் விட்டால் நான் என்ன செய்கிறது!!

நான் மரக்கறி. மட்டன் பற்றி என்னட்ட கதைக்கக் கூடாது அதிரா. (முற்றுப்புள்ளி பெரிதாகத் தெரிகிறதா!!! :) )

கடவுளே!! கடவுளை அதிராட்ட இருந்து காப்பாற்றிப்போடப்பா:):)..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இமா

‍- இமா க்றிஸ்

அம்மாடியோ..... நான் அனுப்பின தம்மாதுண்டு பூசணிக்காய் வச்சிகிட்டு இவிங்க இரண்டு பேரும் என்னா பேச்சு பேசுறாய்ங்க.... :((

இமா... என்ன இப்படி கேட்டுபுட்டீங்க.... அட்மினுக்கு நன்றி சொல்லாமல் நம்ம என்னைக்கு பதிவை போட்டோம்??!! பாருங்கோ.... இருக்கு. மோதிரம்???? மோதிரம்!!!! மோதிரம்.... ஹிஹிஹீ..... மோதிரம். :D
நம்ம அட்மின் ரொம்ப வேலையா இருப்பாங்கன்னு தெரியும்... அதான் உங்க கிட்ட மெயில் ஐடி கேட்டேன். அனுப்பிட்டேன் பாருங்க.

அதிரா..... இமா'கு (மோதிரத்துக்கு) என்ன பதில் சொல்லறது??!!! புரியலயே...... மேலே இமா'கு சொன்ன பதில் உங்களுக்கு புரிஞ்சிதல்லோ??? ;) அது மஞ்சள் பூசணி தான்.... இருங்கோ உங்களுக்கும் அனுப்பறேன் அந்த படத்தை.

கடவுளே.... கடவுளே.... மோதிரத்துட்ட இருந்து காப்பாற்றிபோடப்பா :):)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரண்டுமே அழகாக இருக்கிறது வனிதா.
கடைசியில் மெழுகு வர்த்தியோடு இருக்கும் முழுப் பூசணிக்காய் மிக அழகு.
அனுப்பியதற்கு நன்றி. :)

சரி, மோதிரம் எங்கே? உங்கள் கையில் இருக்கிறதா!! :)

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

இரண்டோ இமா? ஓ நீங்கள் மோதிரத்தைச் சொன்னனீங்களோ? அது வனிதாக்குத்தான் அளவாம்... உங்களுக்கு செய்யச்சொல்லி சொல்லியிருக்காம்... எத்தனை பவுணில இமா வேணும்?:).

வனிதா எனக்கென்னவோ முழுசாக இருக்கிறதுதான் நல்ல அழகாக இருக்கு. மெழுகுவர்த்தியைவிட.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இமா, அதிரா..... பூசணிக்காய் பிடிச்சா சரி. :) எப்படி இருக்கிறது பிடிச்சிருந்தாலும் எனக்கு சந்தோஷமே. முதலில் இமா செய்தது போலே செய்து வைத்திருந்தேன். பின்னே இரவு நேரத்தில் அதை தோண்டி போட வேணும்'னு ஒரு குரங்கு ஆசை பட்டுது (நம்ம மனசு தான்), சரி அது ஆசையை ஏன் கெடுப்பானே.... நம்ம ஆசைக்கு இத்தனை நேரம் முழுசா வைத்து பார்த்தாச்சுன்னு, தோன்டி எடுத்து விளக்கு வைத்தும் பார்த்துட்டேன்.

மோதிரமா??? என்ன மோதிரம்??? ஏது மோதிரம்??? ஒன்னுமே புரியல எனக்கு...... யாருக்காது புரிஞ்சிதா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா.. மோதிரத்தை நினைத்தே நித்திரை போச்சோ?:)
ஏன் இன்னும் நித்திரை வரவில்லையோ? உங்களுக்கு விஷயமே தெரியாதோ? மோதிரம் என்றால்... சாப்பிடுவமே... பயறு, தேங்காப்பூ சீனி எல்லாம் வைத்து.... அதுதான், இரண்டாவது செய்து அட்மினுக்கு அனுப்பினால் பழுதாகமுன்பு இமாவுக்கு அனுப்பிப்போடுவார்:). இப்ப சரிதானே இமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனி, அதிரா,

மோதிரம் ,,,;(

ரெண்டு பேரும் என்னை வச்சு விளையாடுறியள். சரி, பாப்பம். :)
சந்தோஷமாக இருங்கோ, நான் வேலைக்குப் போய்ட்டு வாறன்.

வனி, என்ட கையிலேயே போட்டு விடுங்கோ, மோதிரத்தை.

மோதகமோ அதிரா, கிரிசாம்பாளுக்குக் கிடச்ச மாதிரி அதுக்குள்ளே மோதிரம் இருக்கும் எண்டுறியள் போல. :)

இமா

‍- இமா க்றிஸ்

///மோதகமோ அதிரா, கிரிசாம்பாளுக்குக் கிடச்ச மாதிரி அதுக்குள்ளே மோதிரம் இருக்கும் எண்டுறியள் போல. :)..இமா/// சிலபேருக்கு தாங்களும் கிரிசாம்பாள் என்ற நினைப்பு...:).

கழுத்துப்பிடிப்பு சுகமோ இமா? நல்லபடி போய் வாங்கோ.

கடவுளே!!! இமாவின் வகுப்புப் பிள்ளைகளைக் காப்பாற்றிப்போடப்பா........:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

sorry...:(

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதோ உங்களுக்காக இந்த லிங்க்

http://picasaweb.google.co.in/haish12/bnNnOJ#

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,
எல்லாமே அழகு. இப்படி ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். அனுப்பியதற்கு மிக்க நன்றி. அதிராவின் 'பக்' பார்த்தீர்களா?

‍- இமா க்றிஸ்

இதை பார்க்கும் போது உங்கள் நினைவுதான் வந்தது வேலைகள் அதிகம் இருந்ததால் உடனே அப்லோட் செய்யமுடியவில்லை. உங்களுக்கு ஒரு நவரத்தின பரிசு அனுப்பி இருந்தேனே கிடைத்தா? உங்களுக்கு பூக்கள் பிடிக்குமா? எனக்கு பிடிக்கும் ஒரு 20,000 விதவிதமான பூக்கள் சேர்த்துவைத்து இருக்கிறேன்.

அன்பு சகோதரி அதிராவின் பக் பார்த்தேன், முதல் முயற்சிக்கு நன்றாக செய்து இருக்கிறார். கூடவே நீல சட்டை போட்ட வண்டை போய் "மான்" (Deer)என்கிறார், அதுதான் எனக்கு ஏதும் புரியவில்லை.

மிகவும் நன்றி.

மனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா...
:))))))))))
அதுவா.. எதிர்ப் பால், 'லேடன்' என்பதை நாங்கள் 'மேன்' என்று எழுத மாட்டோம். 'மான்' தான் - man. :)))))
'லார்ட் பக்' / 'ஜென்டில்மான் பக்'
எனக்கு 'பக் பக்' என்று சிரிப்பு வருது. :))))))
இமா

‍- இமா க்றிஸ்